Popular Posts

Saturday 23 April 2016

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனிதமிக்க உடலை திருட முயன்ற யூதர்களின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்ட நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம் அனைவர்களும் அறிய வேண்டிய அற்புத பதிவு!

எஹூதிகளும் வஹாபிகளும்
 *********************************************
 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனிதமிக்க உடலை திருட முயன்ற யூதர்களின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்ட நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம் அனைவர்களும் அறிய வேண்டிய அற்புத பதிவு!
 ****************************************************************************

 உலக முஸ்லிம்களின் காவலர் ''சுல்தான் நூருத்தீன் ஸங்கி'' அவர்களின் காலத்தில் நிகழ்ந்தது.
 .
 டமஸ்கஸ் நகரம் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது கி.பி.1162-ஆம் ஆண்டு எங்கும் அமைதி தஹஜ்ஜத் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் ''சுல்தான் நூருத்தீன் ஸங்கி' அவர்கள் உறங்க ஆயத்தமானார்கள். அவர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த சமயம் அவர்களின் கனவில் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ''ரவ்லா ஷரீப்'' காண்பிக்கப்பட்டது . அருகில் நீல நிற கண்களையுடைய இரண்டு மனிதர்கள் நின்றார்கள் .
 .
 பளிச்சென்ற ஒளி மிளிர ஒரு மாமனிதர் தோன்றி என்னை இவர்களை விட்டும் பாதுகாப்பாயாக ..! பாதுகாப்பாயாக ...!! எனக்கூறியது போல அசரீரி ஒலிக்க சுல்தான் அவர்கள் திடுக்கிட்டு எழுந்து ஒளு செய்து விட்டு, இரண்டு ரகாஅத் நபில் தொழுது விட்டு, திரும்பவும் படுக்கைக்கு சென்றார்கள் .
 .
 முதலில் கண்ட கனவு போலவே மீண்டும் சுல்தான் அவர்கள் கண்டார்கள் . பின்னர் எழுந்து ஒளு செய்துவிட்டு உறங்கச் சென்றார்கள்.
 .
 கனவை நினைத்து மனம் கலங்கமடைந்து, அமைதி இழந்த சுல்தான் அவர்கள் தனது ஆலோசகர் ஜமாலுத்தீன் அவர்களிடம் தாம் கண்ட கனவைப்பற்றி கூறினார். அதைக் கேட்டதும் ஜமாலுத்தீன் அவர்கள் உடனே நீங்கள் மதினா செல்லவேண்டும் ஆயத்தமாகுங்கள் என பணித்தார் . உடன் பயணம் மேற்கொண்டு பதினாறு நாட்களில் தன் சஹாக்களுடன் சுல்தான் அவர்கள் மதினா வந்து சேர்ந்தார்கள்.
 .
 சுல்தான் அவர்களை மதீனாவில் உள்ள அறிஞர்களும், பெரியோர்களும் வரவேற்றார்கள். சுல்தான் மஸ்ஜிதுன் நபவிக்கு சென்று 'தக்யத்துல் மஸ்ஜித்' தொழுகையை நிறைவேற்றினார்கள். மறுநாள் மதினாவில் உள்ள அனைவர்களுக்கும் விருந்திற்கு ஏற்பாடுகள் செய்திருந்தார்கள் .
 .
 அனைவரும் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது சுல்தான் அவர்களின் உத்தரவு. அனைவர்களும் கலந்துகொண்டார்கள். வந்தவர்கள் அனைவரையும் மிக கூர்மையாக சுல்தான் அவர்கள் கவனித்தார்கள். ஆனால் கனவில் காண்பித்த நீல நிற கண்களையுடைய இருவர்கள் பங்கேற்கவில்லை. இது சுல்தான் அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. அங்கு இருப்பவர்களிடம் எல்லோரும் விருந்தில் கலந்து கொண்டார்களா? என்று சுல்தான் கேட்டார்கள்.
 .
 அப்போது அங்கே வந்த ஒருவர், சுல்தான் அவர்களே! வெளியூரைச் சேர்ந்த இருவர் வந்துள்ளனர். அவர்கள் சிறந்த வணக்கவாளிகளாய் இருக்கிறார்கள், ரவ்லா ஷரீபின் அருகில் தான் இருக்கிறார்கள். பொது நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்வதும் இல்லை எனவும் விவரித்தார். கேட்டது தான் தாமதம் உடனே சுல்தான் அவர்கள் இருவரையும் காண விரைந்தார்கள் .
 .
 என்ன ஆச்சர்யம் ..! கனவில் கண்ட நீல நிற கண்களை உடைய அதே நபர்கள் பார்க்க சாலிஹானவர்களைப் போன்று தோன்றினர். ரவ்லா ஷரீபிற்கு அருகாமையில் பக்திபூர்வமாக நின்றுகொண்டிருந்தார்கள். இவர்களின் நடவடிக்கை சுல்தான் அவர்களுக்கு யாதொரு சந்தேகத்திற்கும் வழி வகுக்கவில்லை ,
 .
 சுல்தான் அவர்கள் மறுநாள் ரவ்லாவின் பக்கம் உலாவ சென்றார்கள். அங்கு தொழுகை விரிப்பு காணப்பட்டது. அருகே சென்று தொழுகை விரிப்பை அகற்றியதும் அங்கு சந்தேகத்திற்கு இடமாக பலகை ஒன்றிருந்தது அதை அகற்றியதும் சுல்தான் நூருத்தீன் ஸங்கி அவர்களுக்கு உடல் நடுநடுங்கி போனது. அங்கே அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அடக்கஸ்தலம் நோக்கி சுரங்கப்பாதை வெட்டப்பட்டுள்ளது தெரிந்தது,
 .
 உடனே சுல்தான் இருவர்களையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டார்கள். அப்போது அந்த நீல நிற கண்கள் உடையவர்கள் இருவரும், "நாங்கள் ஐரோப்பாவிலிருந்து வந்துள்ளோம். நபிகள் நாயத்தின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் திரு உடலை திருடிக்கொண்டு செல்ல வத்திகானிலிருந்து எங்களை அனுப்பிவைத்தார்கள்" என உளவாளிகள் இருவரும் வாக்குமூலம் அளித்தார்கள் .
 .
 பின்னர் அவர்கள் இருவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது .
 .
 நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ரவ்லா ஷரீபை சுற்றிலும் ஆழமான அகழ்கள் வெட்டும்படியும், செம்பினால் ஆன தடுப்பு பாதுகாப்பு சுவர்களை வைக்கும்படியும் சுல்தான் அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள். அன்றுமுதல் இன்று வரை சுல்தான் அவர்கள் அமைத்த பாதுகாப்பு செப்புச்சுவர் அரணாக அமைந்து இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 .
 சவூதி அரேபியாவின் காஷிம் பல்கலைகழகத்தின் பேராசிரியரும் ஷெய்க் ஸாலிஹ் அல் உத்தைமின் அவர்களின் மாணவரும் ஆன டாக்டர் ஸாலிஹ் அல் ஸாலிஹ் என்பவர் சுல்தான் நூருத்தீன் ஸங்கி அவர்களின் வாழ்வில் நடந்த இச்சம்பவ நிகழ்வை பதிவு செய்திருக்கின்றார்கள்.
 .
 எஹூதிகளின் சூழ்ச்சி முறியடிக்கபட்டதுபோல் தற்போதைய எஹூதிகளைவிட மிக மோசமான முறையில் சிந்திக்கக்கூடிய குறைமதிவாளர்கள், குழப்பவாதிகளின் அதை இடிப்போம், இதை உடைப்போம் எனும் ஓலங்களை நினைக்கும்போது அந்த கால கலிபாக்களின் ஆட்சி இல்லையே..! என ஏங்கும் நிலை ஏற்படுகிறது .
 .
 எல்லாம் வல்ல அல்லாஹ் தன் இல்லமான கஃபாவை அழிக்க வந்தவர்களை சின்னாப் பின்னம் ஆக்கியது போல இவர்களின் எண்ணங்களையும் சின்னாப் பின்னம் ஆக்கி நபிமார்களின் இல்லங்களையும் வலிமார்கள் வாழும் இல்லங்களையும் என்றென்றும் காத்தருள்வானாகவும். ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்...!!!**
 .
 நன்றி - ரபிக் அஹமது ஃபைஜி
 .
 பின் குறிப்பு - இன்று சியோனிஸ்ட்டுகள் வஹாபிகள் என்ற பெயரில் முஸ்லிம் என்ற வேடம் அணிந்து இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்ற தீய எண்ணம் கொண்டு வஹாபிசம் என்னும் ஒரு தீவிரவாத கொள்கையை உருவாக்கி உள்ளார்கள்.
 .
 இன்று இந்த வஹாபிகள் மூலம் இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை இல்லாதொழித்து, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனித பச்சை குப்பாவை இடிக்க வேண்டும்.
 .
 இஸ்லாமிய பெரியார்களான இறைநேசர்களின் கப்ருகளை உடைக்க வேண்டும் என்று சதி திட்டம் தீட்டி இருக்கிறார்கள். இதை அறியாத அப்பாவி இளைஞர்கள், பெண்களை மூளை சலவை செய்து அவர்களின் மாய வலையில் சிக்க வைத்து உள்ளார்கள்.
 .
 இஸ்லாமிய மக்களை இந்த ஸியோனிச கைக்கூலிகளை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன்!!
 .

No comments:

Post a Comment