Popular Posts

Tuesday 5 January 2016

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் யார்?


அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் யார்?


சுன்னத் வல் ஜமாஅத்திலிருந்து பிரிந்து போன பல்வேறு மாறுபட்ட புதுக் கொள்கைக்காரர்கள் தாங்களே உண்மையான சுன்னத்த வல் ஜமாஅத்தினர் என்றும் மற்றவர்கள் எல்லோரும் பித்அத்வாதிகள், ஷிர்க்கைச் செய்பவர்கள் என்றும் வாதிடுகின்றனர். ஷரீஅத்தின் ஆதாரங்கள் அனைத்தும் தங்களுக்கே சாதகமாக இருக்கிறது என்றும் சாதிக்கின்றனர். இத்தகைய புதுக் கொள்கைக்காரர்கள் குர்ஆன் ஆயத்துக்களுக்கும், நபி பெருமானாரின் ஹதீதுகளுக்கும் சுய அபிப்பிராயப்படி பொருள் கொடுத்து பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள். இந்நிலையில் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் யார்? என்பதை அலசிப் பார்ப்பதும், உண்மையைக் கண்டுபிடிப்பதும் அவசியமாயிற்று.

பெயர் வந்த வரலாறு

ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் அபுல் ஹஸன் அஷ்அரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தமது ஆசிரியர் அபூ அலிய்யில் ஜுப்பாயி என்ற முஃதஸிலி (மாற்றுக் கொள்கைக்காரர்) தலைவருடன் வாதாடி அவருடைய கொள்கைக் கருத்துக்களை முறியடித்துவிட்டு சுன்னத் என்னும் நபி வழியையும், ஜமாஅத் என்னும் ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத்தாபியீன்கள், நான்கு மத்ஹபுகளின் இமாம்கள் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோரது வழிமுறைகளைப் பின்பற்றி நடக்கத் துவங்கினார்கள்.

அதற்குப்பின் ஆயிரத்திற்கும் மேலான வருஷங்களாக இமாம் அஷ்அரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய சீடர்களுக்கும் அவர்களுடைய கொள்கையை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் 'அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயர் வழங்கப்படலாயிற்று.

பெயர் விளக்கம்

சுன்னத் என்ற அரபிச் சொல்லுக்கு வழிமுறை, ஆச்சாரம் என்பது அகராதிப் பொருள். இதனுடைய மரபுப் பொருள் 'நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி லஸல்லம் அவர்கள் மொழிந்த சொற்கள், செய்த செயல்கள், மௌன அனுமதிகள் என்பதாகும்.

(பத்ஹுல் பாரி 3.17)

ஜமாஅத் என்ற அரபிச் சொல்லுக்கு கூட்டம் என்பது அகராதிப் பொருள்.

'முஸ்லிம் ஜமாஅத்தினரையும் அவர்களின் இமாமையும் பற்றிப் பிடியுங்கள்'

(புகாரி பாகம் 1 பக்கம் 509)

இந்த ஹதீதுகளிலிருந்து தான் சுன்னத் வல் ஜமாஅத் என்பதிலுள்ள 'ஜமாஅத்' என்ற பதம் எடுக்கப்பட்டுள்ளது.

(பைளுல் பாரி ஷரஹுல் புகாரி பாகம் 4, பக்கம் 581)


சங்கைமிகு சஹாபாக்கள், மேன்மைமிக்க இமாம்கள் ஆகியோரையே ஜமாஅத் என்பதின் மரபுப் பொருளாக கருதப்படுகிறது.

(நிப்ராஸ் சரஹு சரஹி அகாயிதின் நஸபீ பக்கம் 22)

எனவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்திற்கு ஸஹாபா பெருமக்களும், இமாம்களும் எவ்வாறு விளக்கம் அளித்து கருத்துக் கூறினார்களோ அம்முறையை நம்பி ஏற்றுக் கொண்டவர்களுக்கு சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று சொல்லப்படுகிறது.

சுன்னத்தும் பித்அத்தும்

சுன்னத் என்பதின் எதிர்பதம்தான் பித்அத் என்பதாகும். 'பித்அத்' என்ற அரபிச் சொல்லுக்கு 'புதியதாய்த் தோன்றியது' என்பது அகராதிப் பொருள். இஸ்லாமிய ஆதாரங்களுக்கெதிராக பெருமானாரின் காலத்திற்கு பின் புதிதாகத் தோன்றியவைகளுக்கு 'பித்அத' என்று சொல்வது ஹதீதுக்கலை இமாம்களின் மரபு.

(பத்ஹுல் பாரி 9-17)



இமாம் ஷhபியீ ரலியல்லாஹு அன்ஹு இதனை இன்னும் சற்று தெளிவாக விளக்குகிறார்கள்:-

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்திற்குப்பின் தோன்றிய குர்ஆன், ஹதீது, இஜ்மாஉ, அஸர் (ஸஹாபாக்களின் நடைமுறை) ஆகியவற்றிற்கு எதிரான கொள்கை செயல்களுக்குத்தான் வழிகெட்ட பித்அத் என்று கூறப்படுகிறது'
(ரிஸாலா)

குர்ஆனுக்கும் ஹதீதுக்கும் ஸஹாபாக்ள், இமாம் எவ்வாறு வியாக்கியானம் செய்தார்களோ அவ்வாறன்றி அதற்கு மாற்றமாக விசுவாம் கொள்பவர்களுக்கு பித்அத்வாதிகள் என்று சொல்லப்படும்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்குப் பின் மேன்மைமிகக் கலீபாக்கள் பல்வேறு நாடுகளை இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள். அங்கெல்லாம் இஸ்லாமிய சட்டங்களை செயல்படுத்தினார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புனித குர்ஆனுக்கு எவ்வாறு வியாக்கியானம் சொன்னார்களோ அதன் விளக்கமாக எப்படி நடந்து காட்டினார்களோ அவைகள்தான் ஸஹாபாக்களிடம் சட்டங்களாக இருந்தன. இந்தச் சட்டங்களில் ஒரு துளியும் மாற்றமின்றி தாங்கள் ஆண்ட பகுதிகளில் செயல்படுத்தினார்கள். (பெருமானாரின் 23 ஆண்டு கால வாழ்வு முழுவதும் திருக்குர்ஆனுக்கு தெளிவான விளக்கமாகமாகவே இருந்தது என்பது யாவரும் அறிந்ததே) தங்களுக்கு கீழ்வந்த நாடுகளில் ஸஹாபாக்கள் எந்த சட்டத்தை அமல்படுத்தினார்களோ அதுவே இஸ்லாமிய சட்டமாகும். அன்றை நீதிபதிகள் எதனைத் தீர்ப்பாக அளித்தார்களோ அதுவே இஸ்லமிய தீர்ப்பாகும். அன்று நாடுகளை எவ்வாறு ஆண்டார்களோ அதுவே இஸ்லாமிய ஆட்சிமுறை. அவர்கள் தந்த கலாச்சாரமே இஸ்லாமியக் கலாச்சாரம். இவற்றைத்தான் மேதைகளான இமாம்' அபூஹனீபா, இமாம் ஷhபியீ, இமாம் மாலிக், இமாம் அஹ்மது, இமாம் அஷ;அரீ, இமாம் மாதுரீதி என்போர் முறையே சட்டங்களாகவும், கொள்கைகளாகவும் பகுத்து தந்தனர்.

நான்கு இமாம்கள் போதித்த மத்ஹபுகளும், பின்னிரண்டு இமாம்கள் காட்டித் தந்த கொள்கை வழிகளும் அருமை ஸஹாபாக்களின் வழிமுறையேயாகும். இது இவ்விமாம்களின் நூல்களை ஊன்றி படிப்பவர்களுக்கு வெள்ளிடை மலை போல வெளிப்படும்.

தக்லீது - இமாம்களை பின்பற்றுதல்.

தக்லீது என்பதற்கு 'கழுத்தில் மாலையிடுதல்' என்பது பதப் பொருள். 'ஒருவரை நமப்p அவர் சொல்லை ஆதாரம் கேட்காமல் பின்பற்றுவது' அதன் மரபுப் பொருள். கவனிக்க! தக்லீது என்பது ஒருவர் சொல்லை ஆதாரம் இல்லாமல் பின்பற்றுதல் அல்ல. ஆதாரம் கேட்காமல் பின்பற்றுவதற்குப் பெயராகும்.

இப்படி ஆதாரம் கேட்காமல் தக்லீது செய்வதற்கு ஆதாரம் இருக்கின்றதா? இருக்கிறது. ஸஹாபாக்கள் மார்க்கச் சட்ட விளக்கம் கூறும் பொழுதெல்லாம் அதன் ஆதாரங்களையும் சேர்த்தே கூறியதற்கு ஹதீஸ் சாட்சியங்கள் இல்லை. சில சமயம் ஆதாரம் ஏதும் கூறாமல் வெறும் சட்ட விளக்கம் மட்டும் செய்துள்ளனர்.


'முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (மதப்)போதகராக(வும்), மதக்கட்டளைகளை ஏவக் கூடியவராக(வும்) எங்கள் எமன் தேசத்திற்கு வந்தார்கள். அப்போது நாங்கள் அவரிடம் 'ஒரு மகளையும், ஒரு சகோதரியையும் விட்டுவிட்டு இறந்துவிட்ட ஒரு மனிதரைப்ப ற்றி (அவரின் சொத்து பங்கீடு விகிதம் பற்றி) கேட்டோம். விட்டுச் சென்ற சொத்தில் ஒரு பாதி மகளுக்கும் மறுபாதி சகோதரிக்கும் என்று தீர்ப்பளித்தார்கள்.

முஅத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்தத் தீர்ப்பு ரஸூலுல்லாஹி ஸல்'லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஜீவிய காலத்தில் வழங்கப்பட்டதாகும்.

புகாரி பாகம் இரண்டு
அறிப்பவர்: அஸ்லது இப்னு யஸீது ரலியல்லாஹு அன்ஹு.
(பக்கம் 998)

இந்த ஹதீதிலிருந்து தெரிய வரும் உண்மைகளாவன:


1.தக்லீது ரஸூலுல்லாஹ்வுடைய காலத்திலும் இருந்திருக்கிறது.

2.குர்ஆன் ஹதீஸை ஆராய்ந்து அதிலுள்ள சட்டங்களை சுயமாக விளங்கமுடியாதவர்கள் மார்க்க ஞானமுள்ளவர்களிடம் கேட்டு அவர்கள் சொல்வதைப் பின்பற்ற வேண்டும்.

3.சட்டம் சொல்பவர் நம்பிக்கைக்குரியவராக இருப்பின் அவரிடம் அதற்காகன ஆதாரம் கேட்காமலும் அவர் மேலுள்ள நம்பிக்கையில் அவரின் சொல்லைப் பின்பற்றலாம்.

கவனிக்க:

ஹழரத் முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நேர்மையின் மேலுள்ள நம்பிக்கையால் அவரது தீர்ப்பை எமன்வாசிகள் அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். இதைத்தான் தக்லீது என்று சொல்கிறோம். முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தீர்ப்பை எமன்வாசிகள் அப்படியே பின்பற்றியதை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறுக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து விளங்கும் இன்னொரு விஷயம்:- குர்ஆன், ஹதீஸை ஆராய்ந்து அதிலுள்ள சட்டங்களை சுயமாக விளங்க எல்லோராலும் முடியாது. அப்படி முடியும் என்றிருந்தால் எமன் வாசிகள் ஹழரத் முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. சுயமாக தாங்களே குர்ஆன், ஹதீஸைப் பார்த்துப் புரிந்திருக்கலாம்!

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவாகள் ஹழரத் முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஒரு போதகராக மார்க்கத் தீர்ப்பு வழங்கும் ஒரு நீதிபதியாக எமன் தேசத்திற்கு அனுப்பி வைத்தார்கள். இதன் அர்த்தமென்ன? யன் வாசிகள் யாவரும் மார்க்கப் பிரச்சனை ஒவ்வொன்றிலும் முஆதிடம் கேட்டு அவர் சொல்வதைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதுதானே! மார்க்க விஷயத்தில் குறிப்பிட்ட ஒருவரையே (அதாவது நான்கு இமாம்களில் ஒருவரையே ) கூட பின்பற்றலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் சிறந்த சான்றாகும்.


மேலும், ஒரு விசயம் குறித்து அபூமூஸல் அஷ;அரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்) பின்னர் அதே கேள்வி ஹழரத் இப்னு மஸ்ஊது ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வினவப்பட்டது. அப்போது அவருக்கு அபூமூஸாவுடைய பதிலையும் தெரிவிக்கப்பட்டது. இப்னு மஸ்ஊத் அவர்கள் அபூமூஸா சொன்னதற்கு மாற்றமான பதிலைச் சொன்னார்கள். இவ்விஷயம் அபூமூஸாவுக்குத் திரும்பத் தெரிவிக்கப்பட்டபோது அபூமூஸா அவர்கள் சொன்னார்கள்:

'இந்த வல்லுநர்(இப்னு மஸ்ஊத்) இருக்கும் போது என்னிடம் எதையும் கேட்டு வராதீர்கள்.'
அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இக்கூற்றிற்கு பொருள் என்ன? மார்க்க விஷயத்தில் எந்தக் கேள்வி எடுத்தாலும் அதை இனிமேல் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமே கேட்டுத் தெரிந்து அதன்படியே நடந்து கொள்ளுங்கள். வேறு யாரிடமும் திரும்ப அதைப் பற்றி கேட்க வேண்டாம் என்பதுதானே. இது தனிநபரை தக்லீது செய்வது கூடும் என்பதற்கான தெளிவான ஆதாரமாயிருக்கிறது.

மேலும் முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை எமன் தேசத்து ஆளுனராக நியமித்து அனுப்பிய சமயத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட கேள்விகளும், முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய பதில்களும் குறிப்பிடத்தக்கவை:

பெருமானார் கேட்டார்கள்: முஆதே! (உங்களிடம் வழக்கு வருகிறபோது) நீங்கள் எதை வைத்து தீர்ப்பு சொல்வீர்கள்?

முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்: அல்லாஹ்வின் வேதத்தைப் பார்த்து (தீர்ப்புச் செய்வேன்)

பெருமானார்: அதில் (நீங்கள் தேடும் விஷயம்) உங்களுக்குக் கிடைக்கவில்லையாயின்?



முஆத்: அல்லாஹ்வின் தூதருடைய சுன்னத்தின்படி(தீர்ப்புச் செய்வேன்)


பெருமானார்: அதிலும் கிடைக்க வில்லை எனில்?


முஆத்: (அப்படியெனில், என் ஆய்வுப்படி)த் தீர்ப்புச் சொல்வேன்.


அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (முஆதைப் பாராட்டும் விதமாக) சொன்னார்கள்' தனது தூதருக்கும், தூதருடைய தூதர் (முஆத்)துக்கும் (நேரிய வழியைக் காட்டி) தௌபீக் செய்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்'!

(திர்மிதி, அபூதாவூத்)


இந்த ஹதீஸிலிருந்து தெரிய வரும் உண்மைகள்:

1. குர்ஆனிலோ, ஹதீஸிலோ நமக்குப் புலப்படாத ஒரு விஷயத்திற்கு அவை இரண்டையம் அடிப்படையாகக் கொண்டு ஆய்ந்து அதிலுள்ள விஷயங்களை ஒப்பு நோக்கி (கியாஸ் செய்து) அது மாதிரியான விஷயங்களுக்கு என்ன தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து தீர்ப்பு வழங்கலாம்.

2. அப்படிச் செய்வது வரவேற்கத்தக்கதும் பெருமானாரின் ஆசியைப் பெறுவதுமாகும்.

3. அப்படி ஆய்வு செய்து சொல்லப்படுகிற விஷயங்களை பின்பற்றுவது கூடும் என்பது மட்டுமல்ல, பின்'பற்றுவது அவசியமுமாகும்.
தக்லீது பற்றி நாம் சொல்லும்போது இன்று சிலர்தக்லீது தனிமனித வழிபாடு, எந்த வித ஆதாரமுமின்றி கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுதல் என்று திரித்துப் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த மேற்கத்திய பாணிக் குற்றச்சாட்டு கண்மூடித்தனமானது, ஆதாரமற்றது.

அவர்களது வசீகரமான ஆனால் குழப்பமான ஒரு கருத்தை சிந்திப்போம்.


சமீபகாலமாக குர்ஆன், ஹதீஸை பின்பற்றவேண்டும், குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றவேண்டும் எனும் கோஷம் மகி உரத்த குரலில் ஒலிக்கக் கேட்கிறோம். இப்படிச் சொல்பவர்கள் தங்களின் கோஷத்திற்கு என்ன அர்த்தம்? அதன் விளைவு என்ன? என்பதை கூடத் தெரியாமல் இருக்கிறார்கள்.


குர்ஆன், ஹதீஸஸைப் பின்பற்ற வேண்டும் என்றால், அதன் அர்த்தம் என்ன? குர்ஆன் ஹதீஸைக் கற்றறிந்து அதிலுலுள்ள சட்ட நுணுக்கங்களை சுயமாகக் கண்டறிந்து அதன்படி நடப்பதா?

அல்லது கற்றறிந்த அறிஞர்கள் குர்ஆன், ஹதீஸ் ஆதாரப்படி சொல்வதை ஏற்று அதன்படி நடப்பதா?

முந்தைய அர்த்தப்படி குர்ஆன், ஹதீஸ் ஆதாரப்படி(?) எழுதுகிறோம் எனச் சொல்லிக் கொண்டு அவர்கள் எழுதுவதை, அது சரிதானா? அப்படிக் குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளதா? என்றுகூடத் தெரியாமல் அப்படியே அந்த புதியக் கோஷக்காரர்களைப் பின்பற்றுபவர்களும் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றியவர்களாக மாட்டார்கள் என்பது தெளிவு. ஏனெனில் அவர்கள் சுயமாக எதையும் கண்டறியவில்லை.

இரண்டாவது அர்த்தப்படி நமக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. ஏனெனில் நாம் இமாம்கள் சொல்வதை ஏற்கிறோம். அவர்கள் நவீனவாதிகள் சொல்வதை ஏற்கிறார்கள். ஆனால் ஒரு வித்தியாசமுண்டு. நமக்கு குர்ஆன்,ஹதீஸ் ஆதாரப்படி சட்டங்களை பகுத்துத் தருபவர்கள் அறிவு ஜீவிகள். குர்ஆன்,ஹதீஸின் ஆழிய ஞானமும், அல்லாஹ்வின் மீது அபரிதமான பயபக்தியும் பொது வாழ்வில் தூய்மையம் நேர்மையும் கொண்ட இமாம்கள்.

அவர்களுக்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரப்படி(?) சட்டங்களைச் சொல்லித் தரும் நபர்கள் யார்? அரைகுறை ஞானமும், காசுக்காக சந்தர்ப்பவாதம் பேசும் கொள்கையற்ற கூட்டத்தினர். இந்நிலையில் யாருடைய சொல்லையாவது ஏற்கணும் என்று வருகிறபோது, இமாம்களின் சொல்லை ஏற்பதுதான் புத்திசாலித்தனம்.


இவர்கள்


No comments:

Post a Comment