Popular Posts

Monday 25 April 2016

நம் ரசூல் நாயகத்தின் பார்வைக்கு தனி ஆற்றல் உண்டு !

நம் ரசூல் நாயகத்தின் பார்வைக்கு தனி ஆற்றல் உண்டு !

 பக்கத்தில் உள்ளதையே கண்ணாடி போட்டு பார்க்கும் நம் பார்வை போன்றதல்ல அவர்களின் முபாரக்கான பார்வை !

 சல்மான் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு ஒருநாள் சஹாபாக்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் !

 நாயகதிருமேனி அவ்விடம் வருகை தரவே பேச்சை நிறுத்திவிட்டு அமைதியாக இருக்கிறார்கள் !

 பெருமான் நாயகம் கேட்டார்கள் "நான் வந்ததும் பேச்சை நிறுத்தி விட்டீர்களே ,என்ன காரணம் ?

 சல்மான் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு சொல்வார்கள் "நாயகமே நீங்கள் வந்ததால் உங்களுக்கு கண்ணியம் கொடுக்கும் பொருட்டு பேச்சை நிறுத்தினோம் " என்று !

 ரஸூலுல்லாஹ் சொன்னார்கள் "நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது "ரஹ்மத் " இறங்குவதை நான் பார்த்தேன் !
 ஆதலால் உங்களோடு சேர்ந்து அந்த ரஹ்மத்தில் நனைந்து கொள்ள ஆசைப்பட்டேன் "
 என்கிறார்கள் !

 ரஹ்மத் இறங்குவதை கூட பார்க்கும் ஆற்றல் நம் பெருமான் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு உண்டு என்ற உண்மை இந்த ஹதீஸின் மூலம் விளங்குகிறது !

 நம்மை போன்ற மனிதர் என்று நினைத்தால் நாம்மில் யாரவது ஒருவர் ரஹ்மத் இறங்குவதை பார்த்து இருக்க வரலாறு உண்டா ?

 பார்க்க முடியுமா ?

 அதேபோல் காய்ச்சல் கூட கண்மணி ரஸூலுல்லாஹ்விடம் அனுமதி கேட்டு வந்து இருக்கிறது !

 காய்ச்சல் என்ற நோயை கண்ணால் யாராவது பார்த்து பேசியதாக வரலாறு உண்டா ?

 எந்த மருத்துவ சிகாமணியான வல்லுனராவது பார்த்ததுண்டா ?

 குபா எனும் ஊரிலே காய்ச்சல் நுழைவதற்கு முன் பெருமானாரிடம் அனுமதி கேட்டதாக ஹதீஸ்கள் சொல்கிறது !

 உன் பணி என்ன ? என்று கேட்ட ரஸூலுல்லாஹ் நாயகத்திடம் காய்ச்சல் சொன்னது " ரத்தத்தை உறிஞ்சி கொள்ளுவேன் .
 சதைதுண்டுகளை கசக்குவேன் .
 இதுதான் என் வேலை "என்றது காய்ச்சல் !

 இதனால் என் உம்மத்துக்கு என்ன கிடைக்கும் ?

 காய்ச்சல் சொன்னது "உம்முடைய உம்மத்துக்கு பாவங்கள் மன்னிக்கப்படும் !
 என்றது !

 பாவங்கள் மன்னிக்கப்படுவது நல்லது தானே ..என அனுமதி கொடுக்கவே ..ஊர் முழுக்க காய்ச்சல் தொற்றியதாக ஹதீஸ் சொல்கிறது !

 குபா வாசிகள் எல்லாம் வந்து நாயகத்திடம் முறையிட ...இப்படி ஒட்டுவாரொட்டி நோய் ஒன்று எங்களை வேதனை படுத்துகிறது சரி செய்யுங்கள் என்று ....

 நான் துஆ செய்தால் உடனே சுகம் கிடைத்து விடும்...சுகம் வேண்டுமா ?

 உங்கள் பாவங்கள் மன்னிக்க பட வேண்டுமா ?

 என கேட்க்க ..

 எங்கள் பாவங்கள் மன்னிக்க பட வேண்டும் நாயகமே ..என்று ஒருமித்து சொல்கிறார்கள் !

 அப்படியானால் காய்ச்சலை சகித்து பொறுமையைக் இருங்கள் ..என அனுப்பி வைக்கிறார்கள் !

 அப்படியானால் பெருமானாரின் பார்வையின் ஆற்றலின் அலாதி தான் என்ன ?

 உணருங்கள் ..திருந்துங்கள் !

 நம்மைப்போன்றவர் என்ற என்னத்தை விட்டு அகலுங்கள் !

 சொல்லுங்கள் ஸலவாத் ..சங்கையுடன் என்றும் !

No comments:

Post a Comment