Popular Posts

Monday 9 May 2016

வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில் விளக்கே தேவையில்லை ஏந்தல் நபிகள் இருக்கும் இடத்தில் இரவே வருவதில்லை

வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில் விளக்கே தேவையில்லை
 ஏந்தல் நபிகள் இருக்கும் இடத்தில் இரவே வருவதில்லை

 திங்கள் நபிகள் உலவும் தெருவில் தென்றல் நடப்பதில்லை
 சங்கை நபியின் அங்கம் முன்னே தங்கம் ஜொலிப்பதில்லை
 அண்ணல் நபிகள் அருகே இருந்தால் அத்தர் மனப்பதில்லை
 கன்னல் நபியின் கருத்தை சுவைத்தால் கரும்பும் இனிப்பதில்லை

 பூமான் நபிகள் பொன் மொழி முன்னே புத்தகம் நயப்பதில்லை
 கோமான் நபிகள் கூட நடந்தால் குடையும் தேவையில்லை
 ஏகன் தூதர் குரலை கேட்டோர் !
 ஏகன் தூதர் குரலை கேட்டோர் இசையை ரசிப்பதில்லை
 தாஹா நபியிடம் பழகிய குழந்தை தாயிடம் செல்வதில்லை

 மன்னர் நபிகள் வசிக்கும் பேறை மாளிகை பெறவில்லை
 தண்டோடிருக்க ஏழ்மையை தவிர வசதியை விட வில்லை
 பெருமான் நபிகள் எழுதும் பேறை பேனா பெறவில்லை
 உண்மை நபிகள் படிக்கும் பாக்கியம் நூற்கள் பெறவில்லை

 வள்ளல் நபிகள் வணங்கும் நேரம் வான் மழை பெய்வதில்லை
 அள்ளிக் கொடுத்த கரத்தைப் பார்த்து ஆகாயம் சிவப்பதில்லை
 பாச நபியின் வயிற்றை முழுதாய் உணவே பார்த்ததில்லை
 காசிம் நபியின் வீட்டில் இருக்க காசுக்கு தகுதியில்லை

வஹாபிகளுக்கு இமாம் ஆனவர் ஷைகு அப்துல் வாஹ்ஹாப் நஜ்தி என்பவர்

வஹாபிகளுக்கு இமாம் ஆனவர் ஷைகு அப்துல் வாஹ்ஹாப் நஜ்தி என்பவர்.இவருக்கு முன்பே அந்த நவீன கொள்கைகளை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்தியவர் இப்னு தைமியா என்பவர்.
 இவரின் முழுப் பெயர் அஹ்மது இப்னு அப்துல் ஹலீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு அபி அல் காஸிம் இப்னு தைமியா, தகியத்தீன் அபு அல் அப்பாஸ் இப்னு ஷிஹாப்பத்தீன் இப்னு மஜ்த் அல் தீன் அல் ஹர்ரனி அல் திமிஷ்கி அல் ஹன்பலீ (661-728).
 இவர் ஹிஜ்ரி ஏழாம் நூற்றண்டு தம்மை ஹன்பலீ மத்ஹபுடையவர் என்று சொல்லிக் கொண்டு வெளிப்பட்டார் .ஆரம்ப காலத்தில் மார்க்க ஞானங்கள் கற்று கல்வியில் தேர்ந்த அவர் காலத்தின் சூரியன் என்று புகழப்பட்டார் . ஆனால் காலம் செல்ல செல்ல மார்க்க கொள்கைகளில் தடம்புரண்டார்.அகக் கண் குருடரானார். இறைவனால் இதயத்திலும் செவியிலும் முத்திரையிடப்பட்டார்.
 இவர் இயற்றிய பல நூல்களில் "சிராத்துல் முஸ்தகீம்" என்பதும் ஒன்று. இதில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்,அஹ்லெ பைத்துகள்,சஹாபாக்கள்,இமாமே முஜ்தஹித்,வலிமார்கள் போன்றோரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து இருக்கிறார். இமாம்களின் இஜ்மாவுக்கு முரணாக மார்க்கச் சட்டங்களை இயற்றியுள்ளார்.
 இதுபற்றி இவரை கண்டனம் செய்தும்,சபித்தும் அவரது சமகால உலமாக்களான ஷைகுல் இமாம் முஹம்மது பாஸீ, குத்வத்துல் முஹத்திஸீன் ஷைகு இப்னு ஹஜர் மக்கி,ஷைகுல் முஹத்திஸீன் இஜ்ஜு
 த்தீன் ஜமா,ஷாரிஹ் சஹீஹ் புஹாரி,ஷைகுல் மஷாயிக் அஹமத் கஸ்த்தலானி ,ஷைகுல் இஸ்லாம் தகியுத்தீன் சுப்கீ ரஹீமஹுல்லாஹு
 போன்றோரும்,இன்னும் பல பெரியோர்களும் எழுதியுள்ளார்கள்.
 இவரது வரம்பு மீறிய அநியாயத்தை பொறுக்க முடியாத மிஸ்ரு அரசாங்கம் இவரை பலமுறை சிறையில் அடைத்தது.முடிவில் ஷாம் தேச அரசு இவரை கைது செய்து ,திமிஷ்க் சிறையில் சாகும் வரை அடைத்தது .இவர் ஹிஜ்ரி 728ல் இறந்தார்.

 வலிமார்களின் கப்ருகளை தரைமட்டமாக்க வேண்டும் என கூப்பாடு போடும் வஹாபிகள் தங்களின் வஹ்ஹாபிய மூல குருவான இப்னு தைமியாவின் கப்ர் இருக்கும் நிலையை மேலே உள்ள படத்தில் காணலாம் . இப்னு தைமியாவின் கப்ர் பராம்கெஹ் நகர் அருகில் டமாஸ்கஸ் பல்கலைக்கழகம் வளாகத்தில் சில நிர்வாக கட்டிடங்களுக்கு இடையில் புதர்களுக்கும் குப்பைகளுக்கும் இடையில் உள்ளது

வஹ்ஹாபிகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்!

வஹ்ஹாபிகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்!

 ஆக்கம் : மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ

 இஸ்லாத்தை அதன் தூயவடிவில் எடுத்துக் காட்டுகிறோம் என்று பாமர மக்கள் மத்தியில் தங்களை அலங்கரித்து, இஸ்லாமியன் என்று உடை அணிந்து, இஸ்லாமியர்கள் வாழும் இடங்களில் தங்களது குடியிருப்புக்களையும் அமைத்துக் கொண்டு இஸ்லாத்தின் அடிப்படை ஆணிவேர் கொள்கைகளை சிதைக்க யூத, காபிர்களால் மறைமுகமாக நிறுவப்பட்ட கொள்கையே “வஹ்ஹாபிஸம்” என்ற ஓர் கொள்கையாகும். இதைப் பின்பற்றுவோரை “வஹ்ஹாபியர்கள்” என்று நாம் சொல்கின்றோம்.

 இக்கொள்கை ஹிஜ்ரி 661ல் பிறந்த இப்னுதைமிய்யா என்பவனால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் ஹிஜ்ரி 1111ல் பிறந்து தன்னை இஸ்லாமியன் எனக் காட்டிக் கொண்ட முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவனால் வளர்க்கப்பட்டு பிரபல்யமாகத் தொடங்கியதனால் அந்த அயோக்கியனின் முழுப்பெயரில் உள்ள “வஹ்ஹாப்” என்ற பெயரை மையமாகக் வைத்துக் கொண்டு இக்கொள்கை “வஹ்ஹாபிஸம்” என்றும் இக் கொள்கையைப் பின்பற்றுவோர் “வஹ்ஹாபியர்கள்” என்றும் அழைக்கப்படுகின்றனர்.

 இப்பெயர் இவர்களுக்குப் பொருத்தமானதா?

 இஸ்லாம் என்ற பெயரில் இஸ்லாத்தை சீரழிக்கும் நற்பேறு அற்ற இந்த வேஷதாரிகளுக்கு “வஹ்ஹாபியர்கள்” என்று சொல்வது பொருத்தமற்றதாகும்.

 ஏனெனில், “வஹ்ஹாப்” என்ற பெயர் அல்லாஹுத்தஆலாவின் தொண்ணூற்று ஒன்பது திருநாமங்களில் ஒன்றாகும். “வஹ்ஹாப்” என்றால் – அதிக அருள்வளம் உடையவன் என்று அர்த்தமாகும்.

 எனவே, இக்கண்ணியம் பொதிந்த புண்ணிய நாமத்தை அல்லாஹ்தஆலாவின் அருளிலிருந்து மிக தூரமான, ஏன் இஸ்லாத்தை விட்டே வெளியேறிய முர்தத், காபிர்களுக்கு பயன்படுத்துவது பொருத்தமற்றதாகும்.

 எனவே, சுன்னத் வல் ஜமாஅத்தினரான நாம் இப்பெயரை இவர்களுக்கு உபயோகிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தெரியாதவர்களுக்கும் இவ்விளக்கத்தை கூறி அவர்களையும் விழிப்படையச் செய்ய வேண்டும்.

 பிறகு எப்பெயர் இவர்களுக்குப் பொருத்தமானது?

 இவர்களுக்குப் பொருத்தமான ஏற்றமான பெயரை 1400 வருடங்களுக்கு முன்பதாகவே உயிரிலும் மேலான கண்மனி நாயகம் றசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் சூட்டியிருக்கிறார்கள். அப் பெயர் கொண்டு இவர்களை அழைப்பது நபிவழியாகும்.

 அப்பெயர் என்னவெனில்

 1037 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ الحَسَنِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا، وَفِي يَمَنِنَا» قَالَ: قَالُوا: وَفِي نَجْدِنَا؟ قَالَ: قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا» قَالَ: قَالُوا: وَفِي نَجْدِنَا؟ قَالَ: قَالَ: «هُنَاكَ الزَّلاَزِلُ وَالفِتَنُ، وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ»

 அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அவர்கள் அறிவிக்கறார்கள். நபிய்யுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ஒரு முறை “யா அல்லாஹ் எங்கள் ஷாம் தேசத்தில் எங்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்துவாயாக! இன்னும் எங்கள் யமன் தேசத்திலும் சுபீட்சத்தை ஏற்படுத்துவாயாக!” எனப் பிராத்தனை செய்தார்கள். அப்போது அங்கிருந்த மக்களில் சிலர் அல்லாஹ்வுடைய ரசூலே! எங்கள் “நஜ்த்” பகுதியிலும் சுபீட்சத்தை ஏற்பட வேண்டி பிராத்தனை புரியுங்கள் என்று கேட்க அவர்களின் சொல்லை செவியேற்காதது போன்று நபிய்யுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் மீண்டும், “யா அல்லாஹ்! எங்கள் ஷாம் தேசத்தில் எங்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்துவாயாக! இன்னும் எங்கள் யமன் தேசத்திலும் சுபீட்சத்தை ஏற்படுத்துவாயாக!” என்றே பிராத்தித்தார்கள்.

 மீண்டும் அங்கிருந்த மக்கள் அல்லாஹ்வுடைய ரசூலே! எங்கள் “நஜ்த்” பகுதியிலும் சுபீட்சம் ஏற்படவேண்டி பிராத்தனை செய்யுங்களேன் என்று கேட்டனர். அப்போது நபிய்யுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் - அந்த “நஜ்த்” என்ற பிரதேசத்தில்தான் நிலநடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும். அங்குதான் ஷைதானுடைய கொம்பு உதயமாகும் என்று கூறினார்கள்.
 நூல் - ஸஹீஹுல் புஹாரி
 ஹதீஸ் எண் – 1037

 இந்த ஹதீதில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நஜ்த் என்ற இடத்தில் “ஷைதானுடைய கொம்பு” உதயமாகும் என்று முன்னறிவிப்பாகக் கூறியது முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாபையேயாகும் என்று அதிகமான அறிஞர் பெருமக்கள் கூறியுள்ளார்கள்.

 ஏனெனில், முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் நஜ்த் என்ற இடத்தில் பிறந்து அங்கேயே இஸ்லாத்திற்கு எதிரான தன் நச்சுக்கருத்துக்களை பரப்பியவன் ஆவான்.

 மேலும் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மேற்கூறப்பட்ட ஹதீதில் வழிகேடர்களின் தந்தையான முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாபை “ஷைதானின் கொம்பு” என வர்ணித்து கூறியதற்கிணங்க அவனின் அடிவருடிகளையும் “ஷைதானின் கொம்புகள்” என்று அழைக்கப்படுவதே சரியானதும் சிறந்ததுமாகும்.

 அறபியில் சொல்ல வேண்டுமாயின் قُرُوْنُ الشًّيْطَانِ “ஷைதானின் கொம்புகள்” என்றும் வெறுமனே சொல்ல வேண்டுமாயின் قَرْنِيُّوْنَ “கர்னிகள்” என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

 ஹதீதில் “கொம்பு” என்ற சொல் இவர்களுக்கு பாவிக்கப்பட்டது எதற்காக?

 பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இக்கூட்டத்தினரைப் பற்றி குறிப்பாக “கொம்பு” என்ற சொல் கொண்டு குறிப்பிடக் காரணம் என்னவெனில் – கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இக் கூட்டத்தினரை மறைமுகமாக மிருகங்களுக்கு ஒப்பாகக் கருதி கூறியள்ளார்கள். ஏனெனில் மிருகங்களுக்குத்தானே “கொம்புகள்” இருக்கின்றன.

 எனவே அன்புக்குரியவர்களே!
 உண்மையை அறிந்து கொள்ளுங்கள்! பொய்மையைத் தவிர்ந்து கொள்ளுங்கள்! நன்மையை அள்ளிக் கொள்ளுங்கள்! சத்தியத்தை நிலை நாட்ட எழுந்து வாருங்கள்! அசத்தியத்தை தவிடு பொடியாக்க கை கோருங்கள்! அல்லாஹ் தஆலா உங்கள் மீது ஈருலகிலும் அவனது அருள் மழை எனும் அடைமழையைக் கொட்டச் செய்வானாக!

 ஆமின் யாரப்பல் ஆலமீன்

வலிமார்களிடம் நேரடியாக உதவி தேடுவது கூடுமா?

அரிய மார்க்கம் அறிவோம்

 கேள்வி : வலிமார்களிடம் நேரடியாக உதவி தேடுவது கூடுமா?

 பதில் : கூடும்

 அவ்லியாக்களான இறைநேசச் செல்வர்களிடம் நேரடியாக உதவி தேடலாம். இது குர்ஆன் – ஹதீஸ் படி மார்;க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட செயலாகும்.

 குர்ஆன் கூறுகிறது:

 فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ

 உங்களுக்கு தெரியாதவைகளை திக்ரை உடையவர்களிடம் (அவ்லியாக்களிடம்) கேளுங்கள்' –அல்குர்ஆன் 16:43
 இவ்வசனம், உங்களுக்கு எவ்விஷயம் நடக்க வேண்டுமோ, எந்த காரியம் கைகூட வேண்டுமோ, அத்துணை விஷயங்களையும் அதாவது உங்களுக்கு தெரியாத விஷயங்களை நல்லபடியாக முடிந்துவிட வேண்டும் என வலிமார்களான அவ்லியாக்களிடம் துஆ கேளுங்கள் என்பதை மிகத் தெளிவாகவே விளக்குகிறது.

 'அஹ்லுத் திக்ர்' என்பவர்கள் அவ்லியாக்கள்தான். அவர்கள் அதிகமான திக்ரின் மூலம் தன் நிலையை மறந்து இறைவனின் அளவில் சேர்ந்தார்க்ள. 'தான்' என்ற அகங்காரத் தன்மையை நீக்கி 'அல்லாஹ் மட்டும் தான்' என்ற உயர் நிலையில் தம்மை ஆக்கிக் கொண்டார்கள். இவர்களைப் பற்றி சுபச் செய்தி கூறும் முகமாக அல்லாஹ் கூறியதாக நபிகளார் கூறினார்கள்.

 'அல்லாஹ்வை அதிகமாக நேசித்ததால் அந்த அடியாரின் பார்வையாகவும், செவிப்புலனாகவும் கரமாகவும், காலாகவும் அல்லாஹ் ஆகிவிடுகிறான்' (ஹதீது குத்ஸி புகாரி)

 அதாவது திக்ரின் மூலம் தன்னை இறைவன் அளவில் சேர்த்த அவ்லியாக்களின் மூலம் இறைவனின் சக்தி வெளிப்படுகிறது. இறைநேசர்கள் அல்லாஹ்வின் சக்தி வெளியாகும் தலமாக மாறி விடுகின்றார்கள். இதனால்தான் அல்லாஹ்வின் சக்தி வெளியாகும் ஸ்தலத்தில் கேட்பது எதார்த்தத்தில் அல்லாஹ்விடம் கேட்பதுதான். மாறாக அல்லாஹ் அல்லாதவர்களிடத்தில் கேட்பதாக ஆகாது.
 நமக்கு உடல்நிலை சரியில்லையென்றால், மருத்துவரிடம் செல்கிறோம். மருந்து கொடுக்கிறார். நோய் குணமடைகிறது. இதில் நோயை குணப்படுத்தியது அல்லாஹ்தான். ஆனால் நாம் சென்றது மருத்துவரிடத்தில். இதுபோலத்தான் நம்முடைய தேவைகள் நிறைவேற வேண்டுமெனில் நாம் செல்ல வேண்டியது வலிமார்களிடத்தில். அவர்களின் மூலம் நமக்கு உதவுவது அல்லாஹ்தான். எனவே வலிமார்களிடத்தில் கேட்பதில் எவ்விதத் தவறுமில்லை.

 ஹதீஸ்களின் பார்வையில்:

 1. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹஜ்ரத் அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

 اطلبوا الحوائج الي ذوي الرحمة من امتي

 'என்னுடைய ரஹ்மத்தான கூட்டத்தார்களிடத்தில் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளுங்கள்.' (ஆதாரம்: பைஹக்கீ, தப்ரானீ, ஷரஹ் ஜாமிவுஸ்ஸகீர்.)

 2. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

 اذا تحيرتم في الامور فاستعينوا باهل القبور

 'நீங்கள் காரியங்களில் திகைப்படைந்தால் கப்ரு உடையவர்களை (வலிமார்களை)க் கொண்டு உதவி தேடவும்'

 அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு ஆதாரம்: தப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் 5.

 3. நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பகர்ந்துள்ளார்கள்.

 ان اراد عونا فليقل يا عبادالله اعينوني يا عبادالله اعينوني يا عبادالله اعينوني

 எவருக்காவது உதவி தேவைப்படுமானால் அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவுங்கள்' என்று மூன்று முறை கூறவும். (ஆதாரம்: தப்ரானி, ஹிஸ்னுல் ஹஸீன்)

 பற் பல ஹதீஸ்களின் மூலம் நல்லடியார்களான வலிமார்களிடத்தில் உதவி தேடுங்கள் என்பதை நபிகளார் நமக்கு கட்டளையிடுகிறார்கள். உதவி தேடுவதற்கு அவர்கள் நம் கண்ணுக்குத் தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை. காரணம் தனது நப்ஸை இறைவனின் பாதையில் போரிட்டு வெற்றி கண்ட அவர்கள் என்றும் ஜீவிதம் உடையவர்கள் அல்லாஹ் அவர்களுக்கு உணவளிக்கிறான். (3:168) வலிமார்களை இறந்தவர்கள் எனக் கூறக் கூடாது (2:153)என்பது இறைவனின் கட்டளையாகும்.
 வலிமார்கள் என்றும் உயிருடனே இருக்கிறார்கள். அவர்களிடம் உதவி தேடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.

 கேள்வி : நபிமார்களையும், வலிமார்களையும் 'யா' என்ற பதம் கொண்டு அழைப்பது குர்ஆன் ஹதீஸ்படி ஆகுமா? .

 பதில் ; நபிமார்களையும், வலிமார்களையும் 'யா' என்ற பதம் கொண்டு அழைப்பது குர்ஆன் ஹதீஸ்படி ஆகுமான செயலாகும்.
 இதை மறுப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே 'யாரஸூலல்லாஹ், யா முஹ்யத்தீன்' என அழைப்பதில் எவ்விதத் தவறுமில்லை.
 குர்ஆன் தரும் ஆதாரம்:

 அல்லாஹ் குர்ஆனின் பல இடங்களில் யா அய்யுஹல்லதீன ஆமனூ (ஓ! ஈமான் கொண்ட விசுவாசிகளே!) யா அய்யுஹன்னாசு (ஓ! மனிதர்களே!) என்பதாக பலரையும் பலவாறு அழைத்திருக்கின்றான். அரபி இலக்கணத்தில் 'யா' என்ற பதம் அருகில் இருப்பவர்களையும், தூரத்தில் இருப்பவர்களையும் அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அழைக்கப்படுவதற்கு அவர்கள் நம் முன்னே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. காரணம் அல்லாஹ் குர்ஆனில் யா அய்யுஹல்லதீன ஆமனூ (ஓ! விசுவாசிகளே!) என அழைத்தது நபிகளார் காலத்தில் வாழ்ந்த முஃமின்களை மட்டுமல்ல மாறாக யுக முடிவு நாள் வரையுள்ள எல்லா முஃமின்களையும் எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் 'யா' என்ற பதம் கொண்டு அழைப்பதற்கு அவர்கள் நம் முன்னே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்பது புலனாகிறது. குர்ஆனின் ஆதாரப்படி 'யா' என்ற பதம் கொண்டு அழைப்பதில் எவ்விதத் தவறுமில்லை.

 ஹதீஸ் தரும் ஆதாரம்:

 பத்ருப் போர்க்களத்தில் அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வெற்றியை அளித்த போது போர்க்களத்தில் மரணித்தவர்களை காண்பதற்காக நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்றார்கள். அப்போது அம்மைதானத்தில் மாண்டு கிடந்த அபூஜஹ்ல், உத்பா போன்ற காபிர்களை நோக்கி,

 'ஓ! அபூ ஜஹ்லே , உத்பாவே எனக்கு வாக்களிக்கப்பட்டதை இன்று நான் பெற்றுக் கொண்டேன். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதை நீங்கள் பெற்றுக் கொண்டீர்களா?' என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட போது, அருகிலிருந்த உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'யாரசூலல்லாஹ்! இறந்தவர்கள் எப்படி கேட்பார்கள்? என கேள்வி எழுப்பினார்கள். அப்போது இந்த சந்தேகத்தை தீர்க்கும் வண்ணமாக நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , இறந்தவர்கள் உம்மை விட நன்றாக கேட்பார்கள். உம் காலடி பாதத்தின் சப்தத்தைக் கூட உணர்கின்றார்கள்' என தெளிவாகவே பதிலளித்தார்கள்.

 இதன் மூலம் இரு விஷயங்கள் நமக்கு விளங்குகின்றன.

 1. 'யா' என்ற பதத்தைக் கொண்டு இறந்தவர்களையும் அழைக்கலாம்.
 2. மரணித்தவர்கள் மறைந்து இருக்கின்றார்களே தவிர அழிந்து விடவில்லை.

 இதனால் தான் கப்ருஸ்தானுக்கு சென்றால் இறந்தவர்களுக்கு ஸலாம் கூறுங்கள் என்பதாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்மை ஏவியுள்ளார்கள்.

 முக்கிய குறிப்பு: மரணம் என்பது 'ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்வதுதான். (அதாவது) அழியக் கூடிய இடத்தில் இருந்து அழியாத உலகிற்கு செல்வது) ஒருவன் இறந்தான் என்றால் நம் கண் பார்வையிலிருந்து மறைந்தான் என்றுதான் அர்த்தம். மாறாக அழிந்து விட்டான் என்று அர்த்தம் அல்ல. ஆக குர்ஆன்-ஹதீஸ் மூலம் யா என்ற பதத்தைக் கொண்டு தூரத்தில் இருப்பவர்களையும், நம் பார்வையிலிருந்து மறைந்து வாழ்பவர்களையும் அழைக்கலாம் என்பது தெளிவாகிறது. வலிமார்களையும், நபிமார்களையும் அழைப்பது எவ்விதத்திலும் தவறில்லை.

 ஈமான் உள்ள சீமான்களே!

 வலிமார்களை ஜியாரத் செய்வதும், அவர்களின் பேரில் கொடியேற்றுவதும், நேர்ச்சை செய்வதும், உதவி கேட்பதும் அவர்களை 'யா' என்ற பதம் கொண்டு அழைப்பதும், உரூஸ் நடத்துவதும் இவையனைத்தும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே ஆகும்.

 அல்லாஹ் நம்மை நேர்வழியில் ஆக்குவானாக. ஆமீன்.

மௌலித் என்பது பித்அத்தாகுமா?

மௌலித் என்பது பித்அத்தாகுமா? அனைத்து பித்அத்துகளும் வழிகேடாகுமா?
 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் இல்லாத அல்லது செய்யாத கந்தூரிகளை, கத்தமுல் குர்ஆன் எனும் ஈஸால் ஸவாப் மற்றும் ஸியாரதுல் குபூர் மற்றும் ஏராளமாக உள்ள தரீக்கா வழிமுறைகளை எவ்வாறு நாம் செய்யலாம்? அது பித்அத்தான செயல்பாடுகள்தானே, பித்அத்கள் எல்லாம் நரகத்திற்கு இட்டுச்செல்வதாக நபிமொழி கூறுகிறதே? நபி ﷺ செய்யாத நல்ல விடயங்களை செய்யலாமா?
 ஆம், இருள் நிறைந்த பாதையில் செல்லவேண்டுமெனில் அங்கு வெளிச்சம் தேவைப்படும். அவ்வாறு வெளிச்சம் இன்றேல் அவன் பாதையில் வழி தவற நேரிடும். இது போலவே மார்க்கச்சட்ட விளக்கங்களைப் பெறும்போது சரியாக அறிந்தவர்களிடம் கேட்டு உரிய விளக்கங்களை பெறவேண்டும். இமாம்களை புறக்கணித்து சுயபுத்தியைக் கொண்டு குர்ஆன், ஹதீஸை ஆராய்வது தடியெடுத்தவன் வேட்டைக்காரன் என்பதற்கு ஒப்பானதொன்றாக காணப்படுகிறது. பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன போன்ற விடயங்களுக்கு எமது இமாம்கள் கூறிய விளக்கங்களையும், பித்அத்தை வாதமாக கொண்டு ஸுன்னத்தான வழிமுறைகளையும், ஸஹாபாக்கள் முதல் நல்லடியார்கள் வரை மார்க்கத்தின் பெயரால் தோற்றுவித்த நற்செயல் முறைகள், காலத்தின் தேவைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்ட நல்ல வழிமுறைகளை எதிர்த்து நிற்கும் சகோதரர்களின் வாதங்களுக்கான தெளிவை அறிந்து வைப்பது ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். அந்த வகையில் பித்அத் எனும் நூதன வழிமுறை பற்றிய விளக்கத்தை கீழே காணலாம்.
 பித்அத்தை (புதிதாக உருவாக்கப்பட்டது) இரண்டு வகையாக பிரிக்கலாம்.
 * பித்அதுல் ஹஸனிய்யா (அழகான நூதனம்)
 * பித்அதுல் ஸய்யிஆ (கெட்ட நூதனம்)
 1. பித்அதுல் ஹஸனிய்யா (அழகான நூதனம்)
 எல்லா பித்அத்தும் வழிகேடு என்ற விளக்கம் எந்தவொரு இமாமாலும் கூறப்படவில்லை. இமாம்களின் விளக்கப்படி பித்அத்தை இரண்டு வகையாக பிரித்து அதில் பித்அதுல் ஹஸனிய்யா என்ற அழகிய வழிமுறைகளை செய்வது ஆகும். என்றும் அதற்கு நன்மையுண்டு. எனவும் இமாம்கள் ஆராய்ந்து தீர்ப்பளித்துள்ளார்கள். மௌலித் என்பதும், கத்முல் குர்ஆன், தரீக்கா வழிமுறைகள் அனைத்தும் இந்த பகுதியில்தான் உள்ளடக்கப்படும், இவைகள் ஏன் உருவாக்கப்பட்டன, எதற்காக உருவாக்கப்பட்டன, அதில் நடக்கின்ற விடயங்கள்தான் என்ன என்று பார்த்த பின்புதான் எதிர்க்க முற்படவேண்டும். வெறுமனே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்தார்களா இல்லையா என்ற விடயத்தை மட்டும் பார்த்தோமானால் அது சரியான அணுகுமுறையாக இருக்காது. ஏனெனில் அவ்வாறு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் செய்தால் அல்லது சொன்னால் மாத்திரம் செய்ய வேண்டுமெனில் இன்று காணப்படும் தர்ஜுமதுல் குர்ஆனையோ, ஸஹீஹுல் புஹாரியையோ பின்பற்ற முடியாமல் போய்விடும். சரியான செய்தியை அறிய புஹாரியைத்தான் பார்க்க வேண்டும் என்றோ ஹதீஸ்களின் ஸஹீஹ், லஹீப் தரம் பற்றியோ எதுவும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குறிப்பிட்டார்களா? இல்லை. அவ்வாறாயின் இவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஸுன்னாவிற்கு வரைவிலக்கணத்தை சரியாக புரியாததனால் வந்த கோளாராகவே கருத முடியும். ஸுன்னா என்றால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சொல், அன்னவர்களின் செயல், அன்னவர்கள் மார்க்க விடயமாயினும், ஏனைய விடயங்களாயினும் ஸஹாபாக்கள் நடந்து கொண்ட முறைகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம், என்றால் எப்படி ஸஹாபாக்களின் நடைமுறை பிழையாக முடியும்? கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை பற்றி நாயகத்தோழர்கள் ஓதிய மவ்லிதுகளை சற்று பாருங்கள்.
 ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) ‘நபியே நாயகமே! உங்களைப் போன்ற அழகான எந்த ஒரு மனிதரையும் எனது இந்த இரு கண்களும் கண்டதேயில்லை. உங்களைபோன்ற ஒரு அழகான ஒருவரை எந்தப் பெண்ணும் பெறவுமில்லை எனப் பாடியுள்ளார்கள்.’ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு பள்ளியில் மேடை போட்டுக் கொடுத்தார்கள். அம்மேடையில் ஸஹாபி அவர்கள் ஏறிநின்ற வண்ணம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை புகழ்ந்து பாடுவார்கள். இன்னும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை முஷ்ரிகீன்கள் இகழ்வதை தனது பாடல்களினால் முறியடிப்பார்கள். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குப் புகழும் காலமெல்லாம் (முஷ்ரிகீன்களின் வசை மொழிகளை தனது பாடலைக்கொண்டு முறியடிக்கும் காலமெல்லாம் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) மூலம் ஹஸ்ஸான் இப்னு தாபிதிற்கு உதவி செய்வாயாக! எனப்பிரார்த்தித்தார்கள்.
 அறிவிப்பவர் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) நூல் - புகாரி எண் 453, முஸ்லிம் 4545. மிஷ்காத்
 இதே ஸஹாபியின் மற்றொரு சம்பவத்தில், இறைமறுப்பாளர்களே! முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைக் குறைவுப்படுத்தி கவி பாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அன்னவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடம் உண்டு. ஹதீஸ் தொடர் நீண்டுசெல்வதால் சுருக்கிக்கொள்கிறேன். தேவையெனில் பார்க்கவும்
 (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) நூல்: முஸ்லிம் எண்: 4545 கஃப் இப்னு ஜுஹைர் (ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓதிய மவ்லித் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது பார்க்கவும். (நூல்: ஹாகிம் எண்: 6558)
 மதீனாவுக்கு செல்லும்போது சிறுவர், சிறுமிகளால் தலஅல் பத்ரு கஸீதா படித்து கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் வரவேற்கப்பட்டார்கள். இது போன்று இன்னும் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றதை அன்னவர்களின் வரலாற்றிலே காணலாம். இவைகளுக்கு இந்த வழிகேடர்கள் என்ன பெயர்கொண்டு அழைக்கப் போகிறார்கள். இது பற்றி என்ன தீர்ப்பு கூறப்போகிறார்கள்.
 எனவே அன்பின் வாலிபர்களே! நிகழ்வுகளின் வடிவங்கள் வேண்டுமானால் வேறுபட்டிருக்கலாம். ஆனால் அடிப்படை எல்லாம் ஒன்றென்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அன்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தன்னை புகழ்ந்து பாடுவதற்காக மேடை போட்டு கொடுத்தார்கள். ஆனால் இன்று அது புகழ்மாலைகளாக கோர்வை செய்யப்பட்டும், அவர்களின் சரிதைகள் தொகுக்கப்பட்டும் மௌலித் என்ற பெயரில் இன்று அது நடைமுறைப் படுத்தப்படுகின்றது. இதில் என்ன தவறு இருக்கின்றது? ஒரு வகையில்இது ஒரு ஸுன்னத்தான வழிமுறையாக இருக்கும் போது ஏன் இவைகளை பிரச்சினையான ஒரு விடயமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்? என்பது தான் புரியாமல் இருக்கின்றது. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் காலத்தில் ஏன் அப்படி கந்தூரி ஓதவில்லை, அவர்களின் சிறப்புகளை புத்தகங்களில் எழுதி ஏன் வாசிக்கவில்லை என்று கேள்வி கேட்கிறார்கள். என்றால் அது அவர்களின் அறிவீனத்தை உலகுக்கு காட்சிப்படுத்தும் விடயமாகவே கருத வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கதாநாயகன் நேரடியாகவே மக்களோடு வாழும் போது கதாநாயகனின் சிறப்புகளை புத்தகம் எழுதித்தான் வாசிக்கவேண்டும். என்ற அவசியம் கிடையாது, கதாநாயகன் வாழும் போது சிறப்புகளை பாக்களாக இயற்றி, மெட்டுக்களை போட்டுத்தான் பாடவேண்டும். என்ற அவசியமும் கிடையாது. ஏனெனில் ஸஹாபாக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் நினைவுபடுத்துவார்கள். அன்னவர்களை புகழ்ந்து படிப்பார்கள். அதற்கு நன்மையுண்டு உண்டு. இது போன்ற கவிகளை ஸஹாபாக்கள் படித்தும் இருக்கிறார்கள் என்பதை மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களின் வாயிலாக அறிகின்றோம். அப்படியானால் இது போன்ற விடயங்களுக்கு அங்கீகாரம் உண்டா இல்லையா என்று பார்க்கவே கூடாது என்ற முடிவுக்கு வரமுடியும். மேலே குறிப்பிட்ட ஸஹாபாக்கள் மூலம் இவைபோன்ற விடயங்களை அனுமதித்திருக்கும் பொழுது எதற்காகத்தான் இந்த வஹாபிகள் அடம்பிடிக்கிரார்கள் என்பதுதான் திகைப்பாக இருக்கிறது.
 2. பித்அதுல் ஸய்யிஆ (கெட்ட நூதனம்)
 இரண்டாம் வகை பித்அத் என்பதுதான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டித்த கெட்ட வழிமுறையாகும். இந்த பித்அத்துதான் நரகில் கொண்டுபோய்ச்சேர்க்கும். உதாரணம் ஓர் மதுபானசாலையை உருவாக்குதல், போதை தரக்கூடிய பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தல், வட்டி கலந்த நிறுவனங்களை அமைத்தல், மார்க்கத்தின் பெயரால் முஸ்லிம் உம்மத்தை கூறுபோட்டு பிரித்தல், இதன் மூலம் ஏப்பம் விடும் ஸியோனிஸ்ட்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தல், இப்னு தைமியாவினால் உருவாக்கப்பட்டு முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபினால் வார்த்தெடுக்கப்பட்ட வஹ்ஹாபிக்கொள்கை போன்ற ஏராளமான பாவம் கிட்டக்கூடிய அம்சங்களே இவ்வகை பித்அத்தை சாரும். மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களால் பெரும்பாவங்கள் எனக்கூறப்பட்ட வட்டி, மதுபானம், சூது, கொலை போன்ற பாவப்பட்டியல்களில் கூட மௌலித், மற்றும் மேலே கூறப்பட்ட எவ்வழிமுறையும் இல்லை. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களால் கூறப்பட்ட இறுதிநாள் அடையாளங்கள் ஏராளம் இருக்க அதில் எங்கேயும், அஹ்லுஸ்ஸுன்னா வழிமுறைகளான கத்தமுள் குர்ஆன், மௌலித் வைபவங்கள் போன்றவைகளை குறித்துக்காட்டி இவ்வழிமுறைகளிலிருந்து சமூகத்தை எச்சரிக்கைப்படுத்தப்படவுமில்லை. இல்லை நாம் ‘ஷிர்க் வைக்கிறோம் என்று கூறும் வஹ்ஹாபிகளின் பிரதான குற்றச்சாட்டை எடுத்து நோக்கினால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: எனது உம்மத் ‘ஷிர்க் வைப்பார்கள்’ என்பதை நான் பயப்படவில்லை. நான் பயப்படுவதேல்லாம் ரியா என்ற முகஸ்துதியும், அல்குர்ஆனுக்கு சொந்தக்கருத்து கூறுவதையும் தான் என தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அல்குர்ஆனுக்கு சொந்த கருத்து கூறுபவர்களும் இதே வஹ்ஹாபிகள்தான் இதனை வேறு தலைப்பில் விரிவாக அறிந்து கொள்ளலாம். உங்களுக்கு தேவையானால் இது பற்றிய மேலதிக விபரங்களை அப்துல் பாரி ஆலிம் அவர்களின் (இஸ்லாத்தை அழிக்கும் வஹ்ஹாபிகள், அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் வஹ்ஹாபிகள் என்ற தலைப்புகளில் பேசிய பயான்களை) www abdulbary.tk என்ற இணையத்தளத்தில் போய்ப்பார்க்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். மேலும் வஹ்ஹாபிகள் குல்லு பித்அதின் ழலாளா என்பதற்கு எல்லாம் என்று தான் பொருள் கொடுக்கவேண்டும் என்றுகூட வைத்துக்கொண்டாலும் விளைவு விபரீதத்தில் கொண்டு போய்ச்சேர்க்கும்.
 * முதலாம் கலீபா அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலத்திலே அல்குர்ஆனை ஒன்று திரட்டி நூலுருப்படுத்தினார்கள்.
 * உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் காலத்தில் ஜமாஅத்தாக செய்யாத தராவிஹ் தொழுகையை முதன் முதலில் அறிமுகம்செய்து ஆரம்பித்து வைத்தார்கள்.
 * உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலத்தில் ஜும்மாவுக்கு முன் சிறு அதான் சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
 அன்பின் வாலிபர்களே! மேலே குறிப்பிட்ட மூன்று விடயங்களும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் காலத்தில் செய்யாத அல்லது சொல்லாத விடயங்களை மூன்று முக்கிய ஸஹாபாக்கள் புதிதாக ஏற்படுத்தி இஸ்லாமிய நடைமுறைக்கு கொண்டு வந்திருப்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அத்தோடு இந்த ஸஹாபாக்கள் மேற்படி விடயங்களை ஏற்படுத்தியதன் காரணத்தால் இம்மார்க்கம் பூர்த்தியாக்கப்பட்டது என்ற நாயகத்தின் வாக்கும், அல்குர்ஆனின் அறிவிப்புக்கும் மாற்றமாக அமையாது அப்படி மாற்றமாக இருக்குமானால் ஸஹாபாக்கள் செய்யவும் மாட்டார்கள். அத்துடன் குல்லு பித்அதின் ழலாளா என்ற ஹதீஸ் வாசகத்திற்கு எல்லா பித்அத்துகளும் என்று வியாக்கியானம் சொல்வதானால் இதனை விட ஆபத்தான ஒரு முடிவை எடுக்கவும் நிர்பந்திக்கப்பட வேண்டியிருக்கும்.
 நிச்சயமாக அல்லாஹ் எல்லா வஸ்துவின் மீதும் சக்தி படைத்தவன்’ அப்படியானால் இந்த இடத்தில் குல்லு என்ற சொல்லுக்கு எல்லாம் என்ற பொருளைத்தான் எடுக்க வேண்டுமெனில் அல்லாஹ் அவனின் ஸாத்திலும் (ஸிபத்து அல்லது அவனின் பண்புகள்) சக்தி படைத்தவனாக முடியுமா? உதாரணமாக அல்லாஹ்வுக்கு அடக்கியாளும் வல்லமையுடையவன் என்ற தன்மை காணப்படுகிறது. இங்கே அல்லாஹ்வுக்கு அல்லாஹ்வை அடக்கியாள முடியுமா? இது போலவே எல்லா வஸ்துவின் மீதும் சக்தி படைத்தவன் என்றால் அல்லாஹ்வின் சக்தியிலும் அல்லாஹ் சக்திபடைத்தவனாக முடியுமா? முடியாது இந்த இடத்தில் இதற்கான விளக்கம் மனித சக்திக்கும், கற்பனைக்கும், அறிவிற்கும் உட்பட்ட வஸ்து படைப்பினங்களில் அவனின் வஸ்துவைத் தவிரவுள்ள கற்பனை அறிவுகளுக்கு உட்படாத வஸ்து என்பதுதான் இதற்கான பொருளாகும்.
 அல்குர்ஆனின் மேலும் ஒரு வசனத்தில் ‘குல்லு நப்ஸின் தாஇகதுல் மௌத்’ எல்லா ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும் என குறிப்பிடுகின்றது. மற்றுமொரு இடத்தில் சூரா மாஇதா 116 வது வசனம் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் கேட்கிறார்கள் ‘இறைவனே! நீ என்னுடைய நப்ஸில் (உள்ளத்தில்) உள்ளவற்றை எல்லாம் அறிகின்றாய். ஆனால் எனக்கோ உன் நப்சில் இருக்கும் விடயத்தை அறிய முடியாதவனாய் இருக்கிறேன். மேலும் மறைவான விடயங்கள் அனைத்தையும் நீதான் அறிந்தவன்.’ என கூறினார்கள். எனவே இங்கே இறைவனுக்கும் நப்ஸ் ஒன்று உண்டு என பார்க்கிறோம். அவ்வாறெனில் மேலுள்ள குர்ஆன் வசனத்திற்கு குல்லு நப்ஸ் எல்லா நப்ஸும்தான் என்று கருத்தெடுத்தால் இறைவனின் நப்ஸ் (ஆத்மாவும்) மரணிக்கும் என்ற ஆபத்தான முடிவை எடுக்க நேரிடும் என்பதை வஹ்ஹாபிகளால் ஏன் இன்னும் உணர்ந்துக்கொள்ள முடியவில்லை. தௌஹீத் என்று வெறுமனே பெயரை வைத்துக்கொண்டு பித்அத் என்ற வாதத்தில் இறைவனுக்கே மரணம் உண்டு என்பதை கூறும் தனது கொள்கையின் குப்ரியத்தான அல்லது இறைவனுக்கே இணைவைக்கும் இந்த விபரீதங்களை ஏன் இன்னும் அக்கொள்கையிலுள்ள சகோதரர்கள் அறியாமல் இருக்கிறார்கள்?
 சற்று சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே!
 மேலே பித்அத் பற்றிய போதிய விளக்கத்தையும் அது தொடர்பான ஆதாரங்களையெல்லாம் மேலே குறிப்பிட்டேன். அத்தோடு மௌலித் கந்தூரி வைபவங்களில் நடைபெறுவதென்ன எனப்பார்த்தால் அங்கே அல்குர்ஆன் வசனங்கள் ஓதப்படுகின்றன, நபிமார்கள், வலிமார்களின் சரிதைகள் வாசிக்கப்படுகின்றன. அவர்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் செய்த சேவைகள் போற்றப்படுகின்றன. அவர்களை பாக்கலாகவும், கவிதைகளாகவும் பாராட்டி பாடப்படுகின்றன. அவர்கள் மூலம் வஸீலா தேடப்படுகின்றன. ஸலவாத், திக்ர்கள் செய்யப்படுகின்றன. உணவு பரிமாற்றம் செய்கின்றனர். இவைகள்போன்ற நல்ல விடயங்களை கூட்டாக உருவாக்கி செய்வது எப்படி தவறாக முடியும்? இவைகளுக்கு இஸ்லாத்தில் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இதற்கு அங்கீகாரமும் வழங்கியுள்ளனர்.
 கதீஜா நாயகியவர்கள் தனக்கு ஹிரா மலைக்கு உணவு கொண்டு வந்து கொடுத்த நிகழ்வு மற்றும் வஹி இறக்கப்பட்டு முதன் முதலில் கதீஜா நாயகியவர்களிடம் ஓடோடிப்போய் என்னைப் “போர்த்துங்கள் என்னைப் போர்த்துங்கள்” என்று உதவிகேட்டதையும் அவர்களின் நற்குணங்களையும் இஸ்லாத்திற்கு செய்த சேவைகளையும் அடிக்கடி சொல்வார்கள். சில சந்தர்ப்பங்களில் கதீஜா நாயகியவர்களை ஞாபகம் செய்துவிட்டு அன்னாரின் பெயரால் ஆடுகளை வாங்கி அறுத்து அதன் மாமிசங்களை கதீஜா நாயகியின் தோழியர்களுக்கு அனுப்பியும் வைப்பார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா. நூல்: புஹாரி) என்ற ஹதீஸ் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களே கதீஜா நாயகியவர்களுக்கு மௌலித் ஓதி சாப்பாடு பரிமாரியிருக்கிரார்கள். என்பதைப் பார்க்கிறோம். எனவே மேலே கூறப்பட்ட மௌலித் மற்றும் கந்தூரி மஜ்லிஸ்களில் பாவம் விளைகிறதா? நன்மை விளைகிறதா? எனப்பாருங்கள் இல்லை இல்லை கந்தூரி ஓதுவதைவிட குர்ஆன் ஓதினால் நன்மைதானே மௌலித் ஓதுவதற்கு நன்மை கிடையாதே எனக்கூறுவோர் அல்குர்ஆனின் இந்த வசனத்திற்கு என்ன கூறப்போகின்றார்கள்? ‘யார் ஓர் அணுவளவு நன்மை செய்கின்றாரோ அவர் அதற்கான கூலியையும் கண்டு கொள்வார், யார் அணுவளவு பாவம் செய்கின்றாரோ அவர் அதற்கான கூலியும் கண்டுகொள்வார்’ (அல்குர்ஆன்)
 எனவே இறைவன்தான் யாவற்றுக்கும் கூலிவழங்குபவனாவான், எனவே இறைவன் நாடியவர்களுக்கு நன்மையை வழங்குவான். இதைத்தீர்மானிக்க எந்த ஒரு அடியானாலும் முடியாது. இறைவனின் தீர்ப்புகளிலும் இறைவன் அடியார்களுக்கு வழங்கும் அருட்கொடைகளில் எந்தவொரு அடியானும் இறைவனோடு கூட்டுச்சேர்ந்து வரையறை போடவும் முடியாது. இவற்றுக்கு நன்மையுண்டு என்பதை ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் சம்பவம் (முஸ்லிம் எண் 4545) என்ற ஹதீஸ் மூலம் நிரூபனமாவதால் இதற்கு போதுமான ஆதாரமாக உள்ளது.
 அது மாத்திரமல்ல இஸ்லாத்தில் ஜினாயத் என்ற குற்றப்பரிகார தண்டனைகளை எடுத்து நோக்கினால் மதுபானம் அருந்தியவனுக்கு இத்தனை கசையடி என்றும் விபச்சாரம் புரிந்தவனுக்கு இத்தனை கசையடிகள் என்றும் கொலைக்கு இன்ன தண்டனை என்றெல்லாம் குறிப்பிட்ட இஸ்லாம் ஏன் மௌலித்கள் கந்தூரிகளுக்கு குறிப்பிடவில்லை. அப்படியாயின் நன்மை தீமைகளை பதியும் மலக்குமார்கள் இதன் கூலியை எங்கு பதிவர்கள் வலப்பக்கமா? இடப்பக்கமா? எனவே இணைவைத்தலுக்கோ, பித்அத்துக்கோ தெளிவான ஆதாரமோ விளக்கமோ இல்லாத போது தௌஹீத் என்று பெயரை மாத்திரம் வைப்பதனால் அவன் உண்மையான ஏகத்துவ வாதியாக முடியுமா? விதண்டாவாதங்களை விடுத்து பித்அத்வாதங்களை முடித்து ஸுன்னத்தை எடுத்து நடந்து ஈருலகிலும் ஜெயம்பெற்ற அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்திலே வாழ்ந்து மரணிப்பதற்கு எல்லாம் வல்ல ரைவன் நல்லருள்பாலிப்பானாக ஆமீன்.
 இறுதியாக பின்வரும் கூற்றுக்களை வாசித்து வஹ்ஹாபிகளால் இக்கேள்விக்கு என்ன பதில் தரப்போகின்றார்கள் என்பதை அன்பின் வாலிபர்களே உங்களின் போலித்தௌஹீத் நண்பர்களிடமும் கேட்டு ஒரு முடிவுக்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 * பித்அத் என்ற மார்க்கத்தில் புதியன ஏற்படுத்தல் என்பதில் இரண்டு விடயங்கள் இருக்கலாமா? அல்லது குல்லு என்ற வசனத்திற்கு எல்லா பித்அத்தும் என்றுதான் பொருள் எடுக்க வேண்டுமா?
 * நல்ல புதியவழிமுறைகள் பல்வேறுபட்ட துறைகளிலும் ஆரம்பிக்கலாம் எனில் அதே நல்ல நூதன வழிமுறைகளில் மௌலித் போன்றவைகளில் சேர்க்காமலிருப்பதன் காரணமென்ன?
 * கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் காலத்தில் செய்த நபி மீது புகழ்பாடுதல், அவர்களின் சிறப்புக்கள் கூறும் மஜ்லிஸுகள் கதீஜா நாயகி மீது நடத்திய நினைவு மஜ்லிஸுகள் போன்றவற்றை என்ன பெயர் கொண்டு அழைக்கலாம்? அதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?
 * கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள், வலிமார்கள் போன்றோரின் சரிதைகளை வாசிக்க கூடாது என்பதற்கு பித்அத் என்பதைத் தவிரவுள்ள ஆதாரங்கள் யாவை?
 * உண்மையில் பித்அத் என்ற வாதத்தைத்தான் முன்வைக்கின்றீர்கள் என்றால் மேலே பித்அத்துக்கள் பல செய்த ஸஹாபாக்கள் நரகவாதிகள் என குறிப்பிடுவீர்களா?
 * மேலும் எல்லா நூதனமும் என்ற பொருளைத்தான் எடுக்க வேண்டுமென்றால் இறைவனின் விடயத்தில் வரும் குல்லு என்ற சொல்லுக்கும் அப்படித்தான் பொருள் எடுக்க வேண்டுமா? அப்படி அதற்கு முடியாது என்றால் ஏன் இந்த விடயத்திலும் அவ்விதி பொருந்தாமல் இருப்பது?
 * இது போன்ற மௌலிதுகள், கந்தூரிகள் மற்றுமுள்ள தரீக்கா வழிமுறைகளை செய்வதனால் இஸ்லாமிய தண்டனை முறையில் கிடைக்கும் தண்டனை யாது?
 * அல்குர்ஆனோ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களோ தெளிவாக குறிப்பிடாத இணைவைத்தல், கெட்ட பித்அத் போன்ற மிகப்பெரிய பாவங்களை ஏற்படுத்தக்கூடிய காரணிகளில் எவ்வாறு மௌலித், கந்தூரிகளை குறிப்பிட்டு தீர்ப்பு சொல்வது? இதற்கான அடிப்படை எங்கிருந்து பெறப்பட்டது?
 * உலகில் பல்வேறுபட்ட பிரதேசங்களிலும் பிரபலமான இமாம்கள், வலிமார்கள் ஹதீஸ்களை அறிஞர்கள் குறிப்பாக புர்தாவை இயற்றிய இமாம் பூஸரி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் போன்றவர்களின் நிலை என்ன? வஹ்ஹாபிகளின் பார்வையில் இவர்கள் பித்அத்து செய்தார்கள் என்றால் இவர்களும் நரகம்தான் செல்வார்களா?
 * கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கதீஜா நாயகியின் பெயரால் ஆட்டை அறுத்து மாமிசத்தை தர்மம் செய்தது போல் முஸ்லிம்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்

 பெயரிலும், ஸஹாபாக்கள், வலிமார்கள் பெயரிலும் பிராணிகளை அறுத்து உணவளிக்கும் முறையிலும் ஏதும் வேறுபாடுகள் காணப்படுகின்றதா

முஹ்யித்தீன் மௌலித் பிஜெயின் தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள் 03

Risny Hassan with Umar Ali and 48 others.

முஹ்யித்தீன் மௌலித்
 பிஜெயின் தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள் 03

 விமர்சனம் 3
 அப்துல் காதிர் ஜீலானி எப்படி அறிந்து கொண்டார்? அவருக்கு வஹி ஏதும் வந்ததா?

 விளக்கம்
 வந்தவர் மலக்குதான் என்று வஹீ வாந்தால்தான் அவரை மலக்கு என்று நம்ப முடியும் என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல. இம்ரான் ரலியல்லாஹ_ அன்ஹ_ அவர்களின் சம்பவம் அவரது வாதத்திற்கு மறுப்பாக அமைந்துள்ளது. வஹீ வராமலேயே அவர்கள் மலக்குகளை புரிந்து கொண்டார்கள்.

 மேலும் ஜீப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்த நிகழ்சியை குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.
 “நபியே) இவ்வேதத்தில் மர்யமைப்பற்றி நினைவு கூர்வீர்களாக! தமது குடும்பத்தை விட்டு கிழக்கிலுள்ள ஒர் இடத்திற்கு அவர் ஒதுங்கிச் சென்ற போது அவர்களை விட்டும் (மறைப்பதற்காக) ஒரு திரையை அவர் ஆக்கிக் கொண்டார். அப்போது அவரிடம் நம்முடைய ரூஹை(ஜீப்ரிலை) நாம் அனுப்பினோம். அவருக்க நிறைவான ஒரு மனிதராக அவர் தோற்றமளித்தார். (ஜீப்ரீலைக் கண்டவுடன்) நிச்சயமாக நாம் உம்மை விட்டு அர்ரஹ்மானிடம் உதவி தேடுகிறேன்.நீர் பயபக்தியுள்ளவராக இருந்தால் (இங்கிருந்து சென்று விடும்)என்ற அவர் கூறினார்.

 (அதற்கு)நிச்சயமாக நான் பரிசுத்தமான ஒரு ஆன் குழந்தையை உங்களுக்கு கொடையாக அளிப்பதற்காக (வந்துள்ள)உம் ரப்பின் தூதர்தன் என்று கூறினார் மர்யம்:17-18-19
 நபி அல்லாதவரான மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்த ஜீப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஒரு நபி வந்து இவர் ஜீப்ரீல்தான் என்று கூறி அறிமுகப்படுத்தி வைக்க காத்திருக்காமல் அவர்கள் அல்லாஹ்வின் த}தரான மலக்கு என்று அவர்களின் கூற்றைக் கொண்டே உறுதி செய்கிறார்கள் மரயம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
 ஸஹாபாக்கள் மலக்குகளை அறிய மாட்டார்கள் நபி மூலம்தான் மலக்கை அறிய முடியும்? என்ற விமர்சகரின் வாதம் தவறானது என்பதை மறுத்ததுரைக்கின்றன

உயிருடன் இருக்கிற மூமின்களின் பிரார்த்தனையால் ,தான தர்மத்தாலும் மரணித்து விட்ட மூமின்களுக்குப் பிரயோஜனம் கிடைக்கிறது .அதில் சந்தேகம் இல்லை !

உயிருடன் இருக்கிற மூமின்களின் பிரார்த்தனையால் ,தான தர்மத்தாலும் மரணித்து விட்ட மூமின்களுக்குப் பிரயோஜனம் கிடைக்கிறது .அதில் சந்தேகம் இல்லை !
 மூமினாக மரணித்தவர் வேதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தாலும் சரி வேதனைக்கு உட்படுத்தப் படமலிருந்தாலும் சரி
 உயிருடன் இருக்கிற மூமின்களுடைய பிரார்த்தனையாலும் , தான தர்மத்தாலும் மரணித்து விட்ட மூமின்களுக்குப் பிரயோஜனம் ஏற்படுகிறது .
 இப்போது நாம் சொல்லுகிற ஹதீஸ்கள் மரணித்தவர்களுக்கு உயிருடன் இருப்பவர்கள் பிரார்த்தனை புரிவதால் ஏற்படும் நன்மைகளைக் குறிக்கின்ற ஹதீஸ்கள் ---
 ஹதீஸ் ஆதாரம் ===: 1 :::::::
 حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ ، أَخْبَرَنَا سَلَّامُ بْنُ أَبِي مُطِيعٍ ، عَنْ أَيُّوبَ ، عَنْأَبِي قِلَابَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ رَضِيعِ عَائِشَةَ ، عَنْ عَائِشَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " مَا مِنْ مَيِّتٍ تُصَلِّي عَلَيْهِ أُمَّةٌ مِنَ الْمُسْلِمِينَ يَبْلُغُونَ مِائَةً ، كُلُّهُمْ يَشْفَعُونَ لَهُ إِلَّا شُفِّعُوا فِيهِ " ، قَالَ : فَحَدَّثْتُ بِهِ شُعَيْبَ بْنَ الْحَبْحَابِ ، فَقَالَ : حَدَّثَنِي بِهِ أَنَسُ بْنُ مَالِكٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .
 நூறு முஸ்லிம்கள் ஒரு மையத்திற்காக ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றி , அவருக்காக சிபாரிசு செய்வார்களாயின் அவர்களது சிபாரிஷை அல்லாஹூ தாலா அங்கீகரிக்கிறான் " என்பதாக நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கிறார்கள் .
 ஹதீஸ் ஆதாரம் : 2
 ذلك عن عبد الله بن عباس رضي الله تعالى سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما من رجل مسلم يموت فيقوم على جنازته أربعون رجلاً لا يشركون بالله شيئاً إلا شفعهم فيه
 முஷ்ரிக்காக இல்லாத நார்பது பேர்கள் மரணித்தவருக்காக ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றினால் அவர்களது இந்த சிபாரிஷை அல்லாஹூ தாலா அங்கிகரிக்கிறான் " என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கிறார்கள் .
 மேலே நாம் கூறிய இவ்விரு ஹதீஸ்களையும் இமாம் முஸ்லிம் - ரஹ்மத் துல்லாஹி அலைஹி அவர்கள் ரிவாயத்துச் செய்திருக்கிறார்கள்
 " எனது உம்மத்துக்கு அல்லாஹ் பெரும் கிருபை ஞெய்துள்ளான் .கப்ரில் பாவிகளாக பிரவேசிப்பவர்கள் முஸ்லிம்களது துஆ ,இஸ்திஃபார்களின் காரணமாக கப்ரைவிட்டு பாவமற்றவரகளாகி வெளியேறுவார்கள் " என்று நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருப்பதாக இமாம் தப்ரானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறி இருக்கிறார்கள்

"மய்யித்தை அடக்கி முடிந்தவுடன் கபுரின் மீது தண்ணீர் ஊற்றுவதற்கு ஆதாரம் உண்டா"¶?

 "மய்யித்தை அடக்கி முடிந்தவுடன் கபுரின் மீது தண்ணீர் ஊற்றுவதற்கு ஆதாரம் உண்டா"¶?

 1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாங்களின் மகனார் இப்றாஹீம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கபுரின் மீது தண்ணீர் தெளித்தார்கள். மேலும் அதன் மீது பொடிக்கற்களை வைத்தார்கள் என்று ஜஃபர் இப்னு முஹம்மத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(மிஷ்காத் பக்கம் 148 ஹதீது எண் 1708 பாபு தப்னில் மைய்யித்தி, ஷரஹுஸ்ஸுன்னா பாகம் 5 பக்கம் 401 ஹதீது எண் 1515)

 2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்களை (அடக்கம் செய்வதற்காக கொண்டு வரப்படும் பலகையிலிருந்து) மெதுவாக எடுத்தார்கள். மேலும் அவர்களின் கபுரின் மேல் தண்ணீரைத் தெளித்தார்கள் என்று அபூராபிஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(இப்னுமாஜா ஹதீது எண் 1551 பாபு மா ஜாஅ பீ இத்காலில் மய்யித்தி அல் கப்ர கிதாபுல் ஜனாயிஸ், மிஷ்காத் ஹதீது எண் 1719 பாபு தப்னில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ்)

 3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கபுருக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருக்கு தோல் துருத்தியின் மூலம் தண்ணீர் ஊற்றியவர்கள் பிலால் பின் ரபாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களாகும். தலைமாட்டிலிருந்து துவங்கி கால்மாடு முடியும்வரை ஊற்றினார்கள்.(பைஹக்கி, மிஷ்காத் ஹதீது எண் 1710 பக்கம் 149 பாபுல் புக்காஜ் அலல் மய்யித்தி)

 கேள்வி:
 மய்யித்தை அடக்கி முடிந்தவுடன் கபுரின் மீது தண்ணீர் ஊற்றுவதால் என்ன பயன்?

 பதில்:
 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கபுருக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது ஸஹாபாக்கள் யாவரும் அதை நன்மை என்று கருதிய காரணத்தினாலாகும். மற்றவர்களின் கபுருக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு காரணம் என்னn வன்றால் ரஹ்மத் இறங்க வேண்டும், குற்றங்கள் கழுவப் பட வேண்டும், பாவங்கள் பொறுக்கப்பட வேண்டும் என்று ஆதரவு வைத்தலாகும். அத்துடன் கபுரின் மேலுள்ள மண் பரந்து செல்லாமல் தடுக்கப்பட வேண்டும் என்று நாடுவதுமாகும் என்று மிஷ்காத் பக்கம் 149 ல் உள்ள இரண்டாவது ஓரக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே கபுரின் மீது தண்ணீர் ஊற்றுவதால் மேற்கூறப்பட்ட நன்மைகள் கிடைப்பதுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் சுன்னத்தைப் பேணிய நன்மையும் கிடைக்கும் என்பதையும் அறிந்து செயல்படுவோமாக! எல்லாம் வல்ல நாயன் எம் அனைவருக்கும் நேரான பாதையை காட்டியருள்வானாக !
 ஆமீன்.

மந்திரித்தலும் , தாயத்துக் கட்டுதலும் ..... மார்க்கத்தில் உள்ளவையே !

மந்திரித்தலும் , தாயத்துக் கட்டுதலும் ..... மார்க்கத்தில் உள்ளவையே !

தொடர் கட்டுரை மந்திரித்தலும் , தாயத்துக் கட்டுதலும் ..... மார்க்கத்தில் உள்ளவையே ! தொடர் - 01.....யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால், அல்லது யாராவது ஷெய்த்தான், பேய், பிசாசு, ஜின் முதலானவற்றைக் கண்டோ அல்லது இனம் தெரியாத பயங்கர சத்தங்களைக் கேட்டோ பயந்தால் அதற்காக மந்திரித்தல், அல்லது ஊதிப் பார்த்தல், தண்ணீர் ஓதிக் கொடுத்தல், தாயத் – இஸ்ம் கட்டுதல் போன்றவை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையா? இல்லையா? என்ற விபரங்களை இத்தலைப்பில் எழுதுகின்றேன். மேற்கண்ட வேலைகள் செய்வதற்கு அறபு மொழியில் “ தல்ஸமாத் ” َطًْْلَََْسَمَاتْ எனப்படும். நான் இத்தலைப்பில் எழுதக் காரணம் வஹ்ஹாபிகளின் நடவடிக்கையே ஆகும். இவர்கள் மேற்கண்ட விடயங்கள் குப்ர், ஷிர்க், ஹராம் என்று தமது நூல்களில் எழுதியும், பிரச்சாரம் செய்தும் வருகிறார்கள். தமது இக்கொள்கையை பொதுமக்களின் உள்ளத்தில் பதித்துவிட தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். நோய், பேய், கண் திருஷ்டி நீங்குவதற்கு தாயத்து கட்டுதல், ஊதிப்பார்த்தல், தண்ணீர் ஓதுதல் போன்ற வழக்கம் முஸ்லிம்களிடமும், மற்ற மதத்தவர்களிடமும் தொன்றுதொட்டு இருந்து வருகின்ற ஒரு வழக்கமாகும். இந்த வழக்கம் இன்று வரை உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் இருந்தே வருகின்றது. இவை ஷிர்க் – இணைவைத்தலான விடயமென்றும், பாவமான விடயமென்றும் கண்ணையும், கல்பையும் மூடிக் கொண்டு கூச்சலிடுகின்ற வஹ்ஹாபிகள் செறிந்து வாழும் ஸஊதி அறபிய்யஹ்வில் கூட சில நல்லடியார்கள் இன்றுவரை “ தல் ஸமாத் ” வேலை செய்து கொண்டிருப்பதும், அங்குள்ள முப்திகளும் இதைக்கண்டும் காணாதவர்கள் போல் இருப்பதும் விந்தையான விடயமேயாகும். கண்திருஷ்டி கண்திருஷ்டி அல்லது கண்ணூறு என்பது உண்மையான விடயமேயாகும். இதற்கு திருக்குர்ஆனிலும். திருநபியின் நிறைமொழியிலும் ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் சிலதை மட்டும் இங்கு எழுதுகின்றேன். அல்குர்ஆனின் வசனம் நபீ யஃகூப் (அலை) அவர்களுக்கு பன்னிரண்டு ஆண்மக்கள் இருந்தனர். அவர்கள் அனைவருமே அழகுமிக்கவர்கள். கடைசி மகன் நபீ யூஸுப் (அலை) அவர்கள் ஏனைய சகோதரர்களைவிட மிக அழகானவர்கள். இவர்கள் அனைவரும் ஒன்றாகச் செல்லும் போது பார்ப்பவர்கள் வியந்து விடுவார்கள். ஒருநாள் நபீ யஃகூப் (அலை) அவர்கள் தமது பன்னிரண்டு மக்களிடமும் பின்வருமாறு கூறினார்கள். َوَقَالَ يَابَنِيَّ لََا تَدْ خُلُوْا مِنْ بَابٍ واحِدٍ وادْ خُلُوا مِنْ أبْوَابٍ مُتَََفَرِّ قََةٍ “ நீங்கள் அனைவரும் ஒரே வாயலால் நுழையாமல் பல வாயல்களால் நுழையுங்கள். ( அல்குர்ஆன் ) ஆரம்ப காலத்தில் “ மிஸ்ர் ” நாட்டில் நுழைவதற்கு நான்கு வாயல்கள் அல்லது வழிகள் இருந்தன. நபீ யஃகூப் (அலை) அவர்களின் மக்கள் மிஸ்ர் நாட்டுக்குச் சென்ற சமயம் மேற்கண்டவாறு நபீ யஃகூப் (அலை) அவர்கள் உபதேசித்து அனுப்பி வைத்தார்கள். தந்தை யஃகூப் (அலை) அவர்கள் இவ்வாறு சொல்லக் காரணம், கண்திருஷ்டி, உண்மையான விடயமாயிருப்பதால் தமது பிள்ளைகளுக்கு அது ஏற்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயந்ததேயாகும். இவ்வாறு மேற்கண்ட வசனத்திற்கு திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர் இப்னு அப்பாஸ் (றழி) அவர்களும் இமாம் முஜாஹித், இமாம் கதாதஹ் போன்ற ஏனைய விரிவுரையாளர்களும் கூறியுள்ளார்கள். கண்திருஷ்டி உண்டு, அது உண்மை என்பதற்கும், அது ஏற்படும் வழியை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதற்கும், மேற்கண்ட மறை வசனம் மறுக்க முடியாத ஆதாரமாகும். கண்திருஷ்டி உண்டு என்பதை உறுதி செய்யக்கூடிய ஆதாரங்களிற் சிலதை இங்கு தருகின்றேன். ஆதாரம் – 01 ஸஹ்ல் இப்னு ஹனீப் எனும் ஸஹாபி மிக அழகானவர்கள். ஒரு நாள் அவர் குளித்துக் கொண்டிருந்த சமயம் ஆமிர் இப்னு றபீஆஹ் என்ற ஸஹாபீ அவரின் உடலைக்கண்டு வியந்து இது என்னே உடல் என்று கூறினார். அக்கணமே குளித்துக் கொண்டிருந்த ஸஹாபீ மயங்கிக் கீழே விழுந்தார். நபீ (ஸல்) அவர்களிடம் இச்செய்தி சொல்லப்பட்ட பொழுது நபீ (ஸல்) அவர்கள் அவரின் விடயத்தில் யாரைச் சந்தேகிக்கின்றீர்கள். என்று சொன்னவர்களிடம் கேட்டார்கள். ஆமிர் இப்னு றபீஆஹ்வைச் சந்தேகிக்கின்றோம் என்று கூறினார்கள். நபீ (ஸல்) அவர்கள் அந்த ஸஹாபியை அழைத்து சற்றுக் கோபப்பட்டவர்களாக உங்களில் ஒருவன் தனது சகோதரனைக் கொலை செய்வதேன் ? என்று கேட்டுவிட்டு அவருக்காக நீ குளிக்க வேண்டும் என்று அவரைப் பணித்தார்கள். அவர் ஒரு பாத்திரத்தில் தனது முகம், கை, முழங்கால், கால் ஓரம், காலின் உட்பகுதி போன்றவற்றைக் கழுவிக் கொடுத்தார். அந்த நீர் மயக்கத்தில் இருந்த ஸஹாபியின் மீது தெளிக்கப்பட்டது. அவர் மயக்கம் நீங்கி எழுந்து சென்றார். (ஆதாரம் – ஷர்ஹுஸ் ஸுன்னத் முவத்தா – மிஷ்காத்) ஆதாரம் – 02 கண்ணூறுக்காக மந்திரிக்குமாறு நபீ (ஸல்) அவர்கள் பணித்தார்கள். (ஆதாரம் – புஹாரி) ஆதாரம் – 03 உம்மு ஸல்மஹ் (றழி) அவர்களின் வீட்டில் நபீ (ஸல்) அவர்கள் ஓர் அடிமைப் பெண்ணைக் கண்டார்கள். அவளின் முகத்தில் மஞ்சள் நிறம் காணப்பட்டது. நபீ (ஸல்) அவர்கள் இவளுக்கு கண்திருஷ்டி உண்டு. ஆகையால் இவளுக்கு மந்திரம் சொல்லுங்கள் என்று கூறினார்கள். (ஆதாரம் – மிஷ்காத்) ஆதாரம் – 04 கண்திருஷ்டிக்காகவும்,விஷக்கடிக்காகவும், பொக்களிப்பானுக்காகவும் மந்திரிக்க வேண்டும் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் – முஸ்லிம்) ஆதாரம் – 05 நபீ (ஸல்) அவர்கள் தங்களின் மரண வருத்தத்தின் போது “ முஅவ்விததைன் ” எனப்படும் குல் அஊது பிறப்பில் பலக், குல் அஊது பிறப்பின்னாஸ் என்ற இரு அத்தியாயங்களையும் ஓதி தங்களின் கையில் ஊதி உடலெல்லாம் தடவிக் கொள்வார்கள். நபீ (ஸல்) அவர்கள் மந்திரம் சொல்வதைத் தடை செய்தார்கள். அம்றுப்னு ஹம்ஸ் என்பவரின் சந்ததிகள் நபீ (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் றஸுலே ! எங்களிடம் ஒரு மந்திரம் இருந்தது. தேள் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்தால் நாங்கள் அது கொண்டு மந்திரிப்போம். எனினும் நாயகமே ! மந்திரிக்க வேண்டாம் என்று நீங்கள் தடை செய்துள்ளீர்கள். நாங்கள் என்ன செய்வது ? என்று கேட்டார்கள். அதற்கு நபீ (ஸல்) அவர்கள் நீங்கள் சொல்லும் மந்திரத்தைச் சொல்லிக் காட்டுங்கள் என்றார்கள். அவர்கள் சொல்லிக் காட்டினார்கள். அதைக் கேட்ட நபீ (ஸல்) அவர்கள் அதில் குற்றமில்லை என்று கூறிவிட்டு உங்களில் யாராவது தனது சகோதரனுக்கு நன்மை செய்ய நாடினால் அவர் செய்யட்டும் என்று கூறினார்கள். (ஆதாரம் – முஸ்லிம்) ஆதாரம் – 06 இஸ்லாத்துக்கு முன் “ அய்யாமுல் ஜாஹிலிய்யஹ் ” காலத்தில் நாங்கள் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தோம். அது பற்றி உங்களின் அபிப்பிராயம் என்ன நாயகமே என்று சிலர் கேட்டார்கள். அதற்கு நபீ (ஸல்) அவர்கள் உங்களின் மந்திரத்தைச் சொல்லிக் காட்டுங்கள் என்றார்கள். அவர்கள் சொல்லிக் காட்டியவுடன் சரி நீங்கள் செய்யலாம் என்று கூறிய நபீ (ஸல்) அவர்கள் மந்திரத்தில் “ ஷிர்க் ” ஆன விடயம் ஒன்றும் இல்லா விட்டால் மந்திரம் சொல்வதில் குற்றமில்லை என்று சொன்னார்கள். ஆதாரம் – 07 உங்களில் யாராவது நித்திரையில் பயந்தால், أََََعُوْذُُُ ُ ِبِكَلِمَاتِ اللهِ التََّامََّاتِّ مِنْ غَضَبِِهِِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشََّيَاطِيْنِ وَعَنْ يَحْضُرُوْنَ என்று ஓதிக் கொண்டால் அவருக்கு எத்தீங்கும் ஏற்படமாட்டாதென்று நபீ (ஸல்) அவர்க்ள கூறினார்கள். (ஆதாரம் – அபூ தாஊத்) இந்த துஆவின் பொருள் ;- “ அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷெய்தான்களின் ஊசலாட்டத்தையும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் சம்பூரணமான வார்த்தைகளைக் கொண்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன் ” என்பதாகும். ஆதாரம் – 08 அப்துல்லாஹ் இப்னு அம்று (றழி) அவர்கள் தங்களின் சிறிய மக்களுக்கும், பெரிய மக்களுக்கும் இந்த துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள். அதை ஒரு தோலில் எழுதி தங்களின் கழுத்திலும் கட்டிக் கொண்டார்கள். (ஆதாரம் – துர்முதீ – நஸயீ) ஆதாரம் - 09 தாயத் கட்டுதல் “ஷிர்க்” இணைவைத்தலாகும் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள். தாயத் கட்டுதல் மட்டும் “ஷிர்க்” ஆகிவிடாது. தாயத் ஆகுமான வார்த்தைகள் கொண்டதாக இருக்குமாயின் அது ஆகும். “ஷிர்க்” ஆன வார்த்தைகள் கொண்டதாக இருக்குமாயின் அது ஆகாது. (ஆதாரம் – முக்னீ – இஆனஹ்) ஆதாரம் - 10 நபீ (ஸல்) அவர்கள் தங்களின் பேரர்களான ஹஸன், ஹுஸைன் (றழி) இருவருக்கும், أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ كُلِّ شَيْطَانٍ وهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَا مَّةٍُ என்று ஓதி அவ்விருவரிலும் ஊதிவிட்டு உங்கள் தந்தை இப்றாஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீலுக்கு ஊதினார்கள் என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம் – புஹாரி) இந்த துஆவின் பொருள் ;- “கண்திருஷ்டியையும், ஆந்தை பக்கிளுடைய தீமைகளையும், ஷெய்த்தானுடைய தீமையையும் விட்டும் அல்லாஹ்வின் சம்பூரண வார்த்தைகள் கொண்டு நான் காவல் தேடுகின்றேன்.” என்பதாகும். ஆதாரம் - 11 உங்களின் பிள்ளைகளுக்கு “ அஸ்ஹாபுல் கஹ்ப் ” குகைவாசிகளின் பெயர்களைக் கற்றுக் கொடுங்கள். ஏனெனில் அவர்களின் பெயர்கள் ஒரு வீட்டின் வாயலில் எழுதப்பட்டால் அந்த வீடு தீயினால் பாதிக்கப்படாது. ஒரு பொருளில் எழுதினால் அது திருடப்படமாட்டாது. ஒரு வாகனத்தில் எழுதினால் அது விபத்துக்குள்ளாகாது. என்று ஞான மகான்கள் கூறியிருப்பதாக அஷ்ஷெய்கு அஹ்மத் ஸாவீ (றஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் – தப்ஸீர்ஸாவீ) ஆதாரம் – 12 குகைவாசிகளின் பெயர்கள் ஒன்பது விடயங்களுக்கு பிரயோசனம் செய்யுமென்று இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறியுள்ளார்கள். காணாமல் போன பொருளைக் கண்டு பிடிக்க, விரோதிகள் விரண்டோட, தீயணைக்க, (அதாவது ஒரு துணியில்அப்பெயர்களை எழுதி எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எறிந்தால் நெருப்பு அணைந்து விடும்.), சிறுபிள்ளைகளின் அழுகையை நிறுத்த, மூன்றாம் முறைக் காய்ச்சலை நிறுத்த, தலையிடியைப் போக்க இம் மூன்று விடயங்களுக்கும் அப்பெயர்களை ஒரு தாளில் எழுதி வலது கையில் கட்டிக் கொள்ளுதல் வேண்டும். கடலிலும் கரையிலும் பிரயாணம் செய்பவர்களுக்கு, சொத்துக்களைப் பாதுகாக்க, புத்தி வளர்ச்சிக்கு (மூளை வளர்ச்சிக்கு) மேற்கண்ட ஒன்பது விடயங்களுக்கும் குகைவாசிகளின் பெயர்கள் பயன்படும். (ஆதாரம் – தப்ஸீர்ஸாவீ)இதுவரை நான் எழுதிக் காட்டியுள்ள ஆதாரங்களுக்கும் கண்திருஷ்டி உண்டு என்பதையும் அதற்காக மந்திரிக்கலாம் என்பதையும் தெளிவாக விளக்குகின்றன.

பெருமானர் மீது மவுலித் எழுதிய சீன பேரரசர்

பெருமானர் மீது மவுலித் எழுதிய சீன பேரரசர் - The hundred word eulogy
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 கிபி 1398 - ஹாங்-வு (அவரது கொடுக்கப்பட்ட பெயர் Zhu Yuánzhāng அறியப்பட்டது) 1368 இடையே சீனாவின் பேரரசர் இருந்தது. அவர் நாட்டின் வெற்றி, மங்கோலியப் தலைமையிலான யுவான் விட்டு தோற்கடித்து படையைத் தலைமை, மிங் வம்சம் முதல் பேரரசாக இருந்தது.
 ஒரு முஸ்லீம் அல்லாதவராக இருந்த -போதிலும், ஹாங்-வு நான்ஜிங், யுன்னான், குவாங்டாங் மற்றும் புஜியான் பல மசூதிகள் கட்டுமான உத்தரவிட்டார். அவர் நான்ஜிங் Jinjue மசூதி மற்றும் ஹுய் அதிக எண்ணிக்கையில் மீண்டும் கட்டப்படும் போது (முஸ்லீம் சீன) மக்கள் அவரது ஆட்சியின் போது அந்நகரம் சென்றார்.
 அவர் படையில் பத்திற்கும் அதிகமான இசுலாமிய தளபதிகள் சாங் Yuchun, லேன் யூ, டிங் Dexing, மு யிங், ஃபெங் ஷெங் மற்றும் ஹு Dahai உட்பட, தனது படையில் முஸ்லீம் தளபதிகள் இருந்தது. கூடுதலாக, ஹாங்-வூ மனைவி, பேரரசி மா, பக்கபலமாக இருந்த அவர்கள் முற்காலத்தில் இசலாமிய வம்சாவழியினராக குவோ Zhixin தலைமையில் கிளர்ச்சி குழு ஒன்றில் தங்களை இணைந்திருந்தனர் .
 பேரரசர் ஹாங்-வு இஸ்லாமியம் /அல்லாஹ் / ரஸூல் மீது கொண்ட காதல் ஒப்பற்றது . அதை வெளிப்படுத்தும் விதமாக 100 வார்த்தை புகழ்ச்சி மாலை (the hundred word eulogy ) ஒன்றை எழுதினார்.
 புகழ்ச்சி மாலை 4 வார்த்தைகள் (எழுத்துக்கள்) மற்றும் 4 அசைகள் கொண்ட ஒவ்வொரு வசனத்தின் வடிவாய் கவியாய் உள்ளது. நான் கீழே அதை ஆங்கில மொழிப்பெயர்ப்பில் 4 அடியில் வருவது போல் முயற்ச்சித்திருக்கிறேன். அப்புகழ்மாலை தான் கட்டுமானம் செய்யும் அனைத்து பள்ளிவாயில்களிலும் தொங்கவிடும்படி உத்தரவிட்டார். அன்னாருக்கு அல்லாஹ் மேன்மையான கூலியை வழங்குவானாக .

 The One-Hundred Word Eulogy:
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 Since the creation of the Universe,
 God had decreed to appoint,
 This great faith-preaching man,
 From the West he was born,
 He received the Holy Scripture,
 A Book of thirty parts,
 To guide all creation,
 Master of all Rulers,
 Leader of Holy Ones,
 With Support from Above,
 To Protect His Nation,
 With five daily prayers,
 Silently hoping for peace,
 His heart towards Allah,
 Empowering the poor,
 Saving them from calamity,
 Seeing through the darkness,
 Pulling souls and spirits,
 Away from all wrongdoings,
 A Mercy to the Worlds,
 Traversing the ancient majestic path,
 Vanquishing away all evil,
 His Religion Pure and True,
 Muhammad,
 The Noble & Great one.

 ஆங்கில மொழியாக்கம் : Sh. Musa Cerantonio

 அஷ்ஷேய்க் ஜிப்ரியீல் பவுத் ஹத்தாத் தாமத் பரக்காத்தஹூ தளத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்படுகிறது
 - முஹம்மத் ரியாஸ்

பெருநாள் தொழுகையை தொழுகும் முறை ஹனபி :-

பெருநாள் தொழுகையை தொழுகும் முறை ஹனபி :-

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

 தொழுகைக்கான நிய்யத்து சொல்லும் முறை :-

 ஈதுல் அள்ஹா உடைய பெருநாள் தொழுகை வாஜிபான இரண்டு ரக்அத் அதிகப்படியான ஆறு தக்பீர்களுடன் இந்த இமாமை பின் தொடர்ந்து கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ் விற்காக தொழுகிறேன் - என்று நிய்யது செய்து தக்பீர் கட்டிக்கொள்ள வேண்டும் .

 இரண்டு ரக்அத்தில் செய்ய வேண்டிய தொழுகை முறை :-

 முதல் ரகத்தில் :-

 இமாம் அவர்கள் முதல் ரகத்தில் தக்பீர் கட்டி " ஸனா " ஓதுவார் அது போன்று நாமும் தக்பீர் கூறி கையை கட்டி " ஸனா " ஓத வேண்டும் .
 பிறகு இமாம் அவர்கள் - சூரத்துல் பாதிஹா ,மற்றும் துணை சூரா ஓதுவதற்கு முன்பு . தக்பீர் கட்டிய கையை அவிழ்த்து கையக உயர்த்தி அல்லாஹூ அக்பர் என்று மூன்று முறை தக்பீர் கூறி , மூன்றாவது தக்பீர் கையை கட்டிக் கொள்வார். அது போன்று இமாமை பின் தொடர்ந்து நாமூம் தக்பீர் கூறி கையை கட்டிக் கொள்ள வேண்டும் .

 இரண்டாவது ரக அத்தில் :-

 இமாம் அவர்கள் சூரத்துல் பாதிஹா மற்றும் துணை சூரா ஓதுவார் ஓதியபிறகு ருகூவிற்கு முன்பு கட்டிய கையை அவிழ்த்து கையை உயர்த்தி அல்லாஹூ அக்பர் . என்று மூன்று முறை தக்பீர் சொல்லி நான்காவது தக்பீரில் ருகூவிற்கு செல்வார்,பிறகு இரண்டு சுஜூது செய்து பெருநாள் தொழுகையை முடிப்பார் அது போன்று நாமும் செய்து தொழுகையை முடிக்க வேண்டும் .

 [ நூல் = ஹிதாயா ]

 ஞாபகம் வைத்து அதிகப்படியான தக்பீர்களை கூறி முறையாக தொழுகையை முடிக்க வல்ல ரஹ்மான் நமக்கெள்ளாம் அருள் புறிவானாக !

பெருநாள் தொழுகையை தொழுகும் முறை ஷாஃபி :-

பெருநாள் தொழுகையை தொழுகும் முறை ஷாஃபி :-

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

 தொழுகைக்கான நிய்யத்து சொல்லும் முறை :-

 ஈதுல் அள்ஹா உடைய பெருநாள் தொழுகை வாஜிபான இரண்டு ரக்அத் அதிகப்படியான 12 - தக்பீர்களுடன் இந்த இமாமை பின் தொடர்ந்து கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ் விற்காக தொழுகிறேன் - என்று நிய்யது செய்து தக்பீர் கட்டிக்கொள்ள வேண்டும் .

 இரண்டு ரக்அத்தில் செய்ய வேண்டிய தொழுகை முறை :-

 முதல் ரகஅத்தில் :-

 இமாம் அவர்கள் தக்பீர் கட்டி " வஜ்ஜஹத்து " ஓதுவார் அது போன்று நாமும் தக்பீர் கட்டி " வஜ்ஜஹத்து " ஓத வேண்டும் .இமாம் அவர்கள் சூரத்துல் பாதிஹா , துணை சூரா ஓதுவதற்க்கு முன்பு கட்டிய கையை அவிழ்த்து ஏழு ( 7 ) முறை கையை உயர்த்தி தக்பீர் கூறி பிறகு கையை கட்டிக் கொள்வார் நாமும் அது போன்று இமாமை பின் தொடர்ந்து செய்து தக்பீர் கூறி கையை கட்டிக்கொள்ள வேண்டும் .

 இரண்டாவது ரக்அத்தில் :-

 இமாம் அவர்கள் நிலைக்கு வந்த உடனே கையை அவிழ்த்து அதிகப்படியான ஐந்து ( 5 ) - தக்பீர்களை
 கூறி கையை கட்டுவார். அதே போன்று நாமும் தக்பீர் கூறி கையை கட்டிக் கொள்ள வேண்டும் .பின்பு பாதிஹா சூரா மற்றும் துணை சுரா ஓதி தொழுகையை முடிப்பார் . இமாமை பின் தொடர்ந்து நாமும் தொழுகையை முடிக்க வேண்டும் .

 [ நூல் = பத்ஹூல் முயீன் ]

பெண் பேசும் போது ஸலவாத் ஒதுவது சுன்னத்தாகும்

பெண் பேசும் போது ஹம்து ஸலவாத் ஓதுதல்...!
 பெண் பேசும் போது ஸலவாத் ஒதுவது சுன்னத்தாகும். இமாம் நவவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தமது அத்கார் எனும் நூலில் கூறினார்கள் : “பெண் பேசும் மாப்பிள்ளை வீட்டார் பெண் பேசும் நேரத்தில் ஹம்து, ஸலவாத், இரண்டு ஷஹாதத் கலிமாக்கள் ஆகியவற்றை ஓதியபின் ‘இன்னாருக்காக இன்னவளை பெண் பேசுகிறோம்’ என்று பேச்சினைத் தொடங்குவது சுன்னத்தாகும்”. மேலும் இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்கள் கூறினார்கள் : “நிச்சயமாக அல்லாஹ் உங்களது நபியைப்பற்றி புகழ்ந்துரைக்கிறான். அவர்களுக்காக ‘மஃக்பிரத்’ எனும் அருள் புரிகிறான். அவர்களுக்காக இஸ்திஃக்ஃபார் செய்யும் படி அவனது மலக்குகளையும் ஏவினான். ஆகவே நீங்களும் உங்கள் தொழுகையிலும், பள்ளிவாசலிலும், (நன்மையான) இடங்களிலும், பெண் பேசும் நேரத்திலும் உங்களது நபியின் புகழைக் கூறுங்கள். மறந்துவிடாதீர்கள்!”
 நூல் – அல்கவ்லுல் பதீஃ, ஜலாவுல் அப்ஹாம்
 இப்னு உமர் رضي الله عنه அவர்களை எவருக்காவது பெண் பேசுவதற்காக அழைத்திருந்தால் இப்னு உமர் رضي الله عنه அவர்கள் ஹம்து, ஸலவாத் எல்லாம் ஓதிய பின்பே “இன்னவருக்காக நாங்கள் பெண் பேச வந்திருக்கிறோம். அவருக்கு மணமுடித்துக் கொடுக்கச் சம்மதித்தால் அல்ஹம்து லில்லாஹ் – சம்மதிக்காவிட்டாலும் சுப்ஹானல்லாஹ்!” என்று (சபையில்) கூறுபவர்களாக இருந்தார்கள். மேலும் இரண்டாம் உமராகிய உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைப் பெண் பேசிய நேரத்தில் “பெருமைக்கும், கௌரவத்திற்குமுரிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், இறுதித் தூதரான நபி (ﷺ) அவர்கள் மீது அல்லாஹ் ஸலவாத் சொல்வானாக!” என்ற ஹம்தும் ஸலவாத்தும் ஓதிய பின்பே பெண் பேசும் பேச்சினைத் துவங்கினார்கள்.
 நூல் – கவ்லுல்பதீஃ லிஸ்ஸகாவீ

பூரண ஈமானையும் நிறைந்த இறையச்சத்தையும் பெற்றவர்களே இறைநேசர்கள்.

பூரண ஈமானையும் நிறைந்த இறையச்சத்தையும் பெற்றவர்களே இறைநேசர்கள். அவர்களைக் காணும் போது இறைவனைப் பற்றிய நினைவு வரும். இருண்ட உள்ளங்களுக்கு ஒளி கிடைக்கும். அத்தகைய சீரிய குணங்களுக்கு சொந்தக்காரர்கள் தான் வலிமார்கள்.
 இறைவன் கூறுகிறான்:
 அறிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக இறைநேசர்கள் எனும் வலிமார்களுக்கு எவ்வித பயமுமில்லை. அவர்கள் துக்கம்கொள்ளவும் மாட்டார்கள். முழுமையான ஈமானையும் இறையச்சத்தையும் அவர்கள் பெற்றிருப்பார்கள். (அல்குர்ஆன் - 10:62,63)
 உங்களில் நல்லோர்கள் யார் என்பதை அறிவிக்கட்டுமா? இறைதூதர் صلى الله عليه وسلم அவர்கள் கேட்டபோது, அறிவித்து தாருங்கள் என அருமைத் தோழர்கள் மறுமொழி பகர்ந்தனர். இறைதூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: யாரை பார்க்கும்போது இறைவனைப் பற்றிய நினைவு உங்களுக்கு ஏற்படுகிறதோ அவர்களே உங்களில் சிறந்தவர்கள். அறிவிப்பாளர்: அஸ்மா பின்த் ஸயீத் رضي الله عنه நூல்: இப்னுமாஜா-4109, அஹ்மத்-26319
 வலிமார்கள் யாரென வினா எழுப்பப்பட்ட சமயத்தில் இறைதூதர் صلى الله عليه وسلم அவர்கள் பதிலுரைத்தார்கள்: யாரை பார்க்கும்போது இறைவனின் நினைவு உங்களுக்கு வருகிறதோ அத்தகையவர்களே வலிமார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் رضي الله عنه நூல்: நசாயீ (சுனன் குப்ரா) – 11235, பஜ்ஜார் – 5034
 சஹாபா பெருமக்கள் ஒரு ஜனாஸாவை புகழ்ந்து பேசியபோது, அந்த ஜனாஸாவிற்கு சொர்க்கம் கடைமையாகி விட்டதென கூறிய இறைதூதர் صلى الله عليه وسلم அவர்கள் மேலும் சொன்னார்கள்: இறைநம்பிக்கையாளர்(களான முஃமின்)கள் இந்த மண்ணுலகில் அல்லாஹுவின் சாட்சியாளர்கள். (அறிவிப்பாளர்: அனஸ் رضي الله عنه, நூல்: புகாரி – 2642 (2448), முஸ்லிம் – 1578
 கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ, அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கை யாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.
 அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
 புகாரி 6502
 நல்லோர்களுடன் நட்பு வைப்பது, தோழமை உறவு கொள்வது, திருமணம் செய்வது மற்றும் அவர்களுக்கு உணவளிப்பது போன்ற ஆணைகளை இஸ்லாமிய மார்க்கம் பிறப்பிக்கிறது. நல்லோர்கள் யாரென்று நம்மால் அடையாளம் காண இயலாதென்றால் மேற்கண்ட நற்செயல்களை நிறைவேற்ற முடியாதென்பதுடன் மார்க்கத்தின் கட்டளைகளும் அர்த்தமற்றதாகவுமல்லவா ஆகிவிடும்.
 இறைதூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: அல்லாஹுவின் திக்ரை திறந்துவிடும் திறவு கோள்களாக மனிதர்களில் சிலர் உள்ளனர். அவர்களை நீங்கள் கண்டால் இறைவனைப் பற்றிய நினைவு வரும். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் رضي الله عنه நூல்: தபரானி (கபீர்) – 10325, பைஹகீ (ஷீஅபுல் ஈமான்) – 718)
 வலிமார்கள் யாரென்று இப்பாருலகில் நம்மால் அடையாளம் கண்டு கொள்ள இயலுமென்பதை பல்வேறு ஹதீத்கள் அறிவித்துக் காட்டுகின்றன.
 இறைவன் (ஹதீஸ் குத்ஸிய்யில்) கூறியதாக இறைதூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: எனது நேசரை பகைத்துக் கொள்பவர்களிடம் யுத்தப் பிரகடனம் செய்கிறேன். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா رضي الله عنه நூல்: புஹாரி – 6502, 6021)
 வலிமார்களை பகைத்துக் கொள்வது இறைவனுடன் போர் புரிவதற்கு சமமென்று தெளிவுபடுத்திய மேற்கண்ட ஹதீத் அத்தகைய தகாத செயலை அறவே செய்யக் கூடாதென வலியுறுத்தவும் செய்கிறது. இறைநேசர்கள் யாரென்று நமக்கு தெரிந்தால்தான், அவர்களை பகைத்துக் கொள்ளக் கூடாதென்ற இறைகட்டளையை அமுல்படுத்த முடியும். குர்ஆன்-ஹதீஸை புரியாத சிலர் கூறுவது போன்று இறைநேசர்களை அடையாளம் காண முடியாது என்பதே சரியென்றிருந்தால், நம்மால் செய்ய இயலாததை இறைவன் சட்டமாக்கியுள்ளான் என்றாகி விடும். இது கீழ்க்காணும் குர்ஆன் வசனத்திற்கு முரணாகும். இறைவன் கூறுகிறான்: எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு உட்பட்டே தவிர பொறுப்பை இறைவன் சுமத்தமாட்டான். (அல்குர்ஆன் - 2:286) மேலும், நல்லோர்களுடன் நட்பு வைப்பது, தோழமை உறவு கொள்வது, திருமணம் செய்வது மற்றும் அவர்களுக்கு உணவளிப்பது போன்ற ஆணைகளை இஸ்லாமிய மார்க்கம் பிறப்பிக்கிறது. நல்லோர்கள் யாரென்று நம்மால் அடையாளம் காண இயலாதென்றால் மேற்கண்ட நற்செயல்களை நிறைவேற்ற முடியாதென்பதுடன் மார்க்கத்தின் கட்டளைகளும் அர்த்தமற்றதாகவுமல்லவா ஆகிவிடும். இறைவன் கூறுகிறான்: இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹுவை அஞ்சிங்கள்! மேலும், உண்மையாளர்களுடன் இருங்கள்! (அல்குர்ஆன் – 9:119)
 இறைதூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர்களுடன் தோழமை வைத்துக் கொள்! இறையச்சமுள்ளவர்களுக்கு உணவளி! (அறிவிப்பாளர்: அபூஸயீத் رضي الله عنه நூல்: அபூதாவூத் – 4192, திர்மிதீ – 2318, அஹ்மத் – 10909)
 கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: “நபிமார்களை ஞாபகம் பண்ணுவது வணக்கமாகும். ஸாலிஹீன்களை ஞாபகம் பண்ணுவது பாவபரிகாரமாகும்”.
 அல் ஜாமிஉஸ் ஸகீர் 2 – 299
 இறையச்சமென்பது உள்ளம் சம்பந்தப்பட்டதே. எனினும், ஒருவரின் நடைமுறைகள், நற்குணங்கள் மற்றும் பழக்க வழக்கங்களைக் கொண்டு அவர் இறையச்சமுள்ளவரா? இல்லையா? என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆகவேதான், இறையச்சமுள்ளவருக்கு உணவளியுங்கள் என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
 இறையச்சமுள்ளவரை அறிந்து கொள்ள இயலாதென எவராவது வாதித்தால் நடைமுறைப்படுத்த சாத்தியமற்ற ஒன்றை இறைதூதர் صلى الله عليه وسلم அவர்கள் செய்ய சொல்லியிருக்கிறார்கள் என்ற தவறான கருத்து ஏற்பட்டுவிடும். இறைவன் நம்மை பாதுகாப்பானாக! இறையச்சமென்பது இங்குதான் உள்ளது என்று தன் நெஞ்சை சுட்டிக்காட்டிய பெருமானார் صلى الله عليه وسلم அவர்கள்தான் நல்லோர்களை அடையாளம் கண்டு கொள்ள இயலுமென்பதையும் அறிவித்துள்ளார்கள். மறுதலிக்கும் வஹ்ஹாபிகள் இதை புரிந்துகொள்வது அவர்களுக்கு நல்லது.

"கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமான ரவ்ழாவும் அதன் பச்சை நிற குப்பா கட்டிடமும்"¶

¶"கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம்) அவர்களின் புனிதமான ரவ்ழாவும்
 அதன் பச்சை நிற குப்பா கட்டிடமும்"¶
 அன்றிலிருந்து இன்று வரையுள்ள
 மஸ்ஜிதுன்னபவியில் உள்ள பச்சை குப்பா
 பார்ப்பதற்கு அழகாகவும் நபி (ஸல்லல்லாஹு
 அலைஹி வஸல்லம்) அவர்களின்
 கண்ணியத்தையும், மரியாதையையும் உரக்க
 எடுத்துச் சொல்லக் கூடியதாகவும் இருந்து
 கொண்டிருக்கிறது.
 அதுமட்டுமல்லாமல்பச்சை குப்பா பெருமான்
 (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
 அவர்களோடு இணைக்கப்பட்டு பல
 நூற்றாண்டுகளை கடந்துவிட்டது இதற்கு
 பிறகு பச்சை குப்பாவை பற்றி குறைமதியில்
 கூட பார்க்க கூடாது.காரணம் இன்று
 உலகளவில் கண்ணியத்தின் சவாலாக
 இருக்கின்றது.
 இமாம் காளி இயாள் (ரஹ்மதுல்லஹி
 அலைஹி) அவர்கள் மற்றும் முள்ள மார்க்க
 அறிஞர்கள் பெரும்பாண்மையோர் '' நபி
 (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
 அவர்களின் புனிதமிகு உடலை தாங்கி
 நிற்கும் புண்ணியமிகு கப்ரு உலகில் உள்ள
 எல்லா இடங்களைக் காட்டிலும் சிறந்தது என
 தீர்ப்பளித்துள்ளனர்.
 (இத்திஹாப் 4 : 416,417)
 சில நல்லோர்கள், உலமாக்கள்,இமாம்கள்
 மற்றும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம்) அவர்களின் கப்ரு ஷரீப், கஃபா
 பைத்துல் முகத்தஸைக்காட்டிலும் சிறந்தது
 எனத் தீர்ப்பளித்து விசுவாசத்தின்
 விளைநிலமான நபி (ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம்) அவர்களை கண்ணியம் செய்வதே
 ஈமானைத் தக்கவைத்து கொள்ளும் உபாயம் என
 உபதேசம் செய்துள்ளார்ள். இவர்களில்
 முக்கியமானவர்கள் ஜர்கஸீ, அபதீ போன்ற
 பேரரிஞர்களாவர்.
 (வஃபாவுல் வஃபா 1: 83)
 நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
 அவர்களின் கப்ரு ஷரீப் மிகவும்
 தரைமட்டமில்லாமலும் மிக உயரமில்லாமலும்
 கப்ரின் மேல்பகுதி அழகான சிவந்த
 பொடிக்கற்கலால் பதிக்கப்பட்டிருந்தது.
 ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்
 இருந்த அறையிலே நபி (ஸல்லல்லாஹு
 அலைஹி வஸல்லம்) அவர்கள் அடக்கப்பட்டார்க
 ள். எனவே ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹ)
 அவர்கள் அந்த அறையின் குறுக்கே
 மண்ணினால் ஒரு மதிலை எழுப்பி,நபி
 (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
 அவர்களின் கப்ரு ஷரீஃப் ஒரு புறமிருக்க
 ஆயிஷா (ரலியல்லாஹுஅன்ஹா) மறுபுறம்
 இருந்து கொண்டார்கள். அடிக்கடி நபி
 (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை
 ஜியாரத்துக்கு வருவதற்கு அதே மதிலில் ஒரு
 வாசலை வைத்துக் கொண்டார்கள். அன்னை
 ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின்
 வீட்டின் மேற்கூறை பழுதுப்பட்டு இருந்ததால்
 காலப்போக்கில் இந்த மண்மதில் மழையால்
 கரைந்துவிட்டது.
 இதன் பின் உமர் (ரழியல்லாஹு அன்ஹு)
 அவர்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் (ஹிஜ்ரி
 23 வரை) நபி (ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம்) அவர்களின் கப்ரு ஷரீஃபை சுற்றி
 முக்கோணவடிவில் அழகிய கருங்கற்கலால்
 மதில் எழுப்பினார்கள். எனினும் ஜியாரத்
 செய்பவர்களுக்கு தெறியும் அளவே
 மதில்களின் உயரம் இருந்தன.
 நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
 அவர்களின் கப்ரின் பரக்கத்தை நாடி கப்ருக்கு
 அருகில் இருக்கும் மண்ணை எடுச்துச் செல்ல
 ஆரம்பித்தனர். இவ்வாறு மண்ணை எல்லோரும்
 எடுத்தால் நாளடைவில் நபி (ஸல்லல்லாஹு
 அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரை சுற்றி
 பெரும் பள்ளம் ஏற்பட்டு, புனிதமிகு
 ரவ்ளாவுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்
 எனப்பயந்த ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)
 அவர்கள், நபி (ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம்) அவர்களின் ரவ்ளாவைச் சுற்றி
 சிறிது உயரமாக மதில் எழுப்பும்படி
 சொல்லி அவ்வாறே மதில்கள் கட்டப்பட்டன.
 இம்மதில்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம்) அவர்களின் கப்ரு தெரியும்படி
 துவாரம் வைக்கப்பட்டது. இந்த ஜன்னல் போன்ற
 துவாரம் வழியாகவும் மக்கள் பரக்கத்தை
 வேண்டி மண்ணை எடுக்க ஆரம்பித்தார்கள்.
 இதனால் ஜன்னல் போன்ற துவாரமும்
 அடைக்கப்பட்டது.
 (வஃபாவுல் வஃபா 2:544)
 பின்னர், அப்துல்லாஹ் பின் ஜுபைர்
 (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சி
 காலத்தில் மேற்கண்ட மதில்கள் மிகவும்
 உயரமாக இல்லாததால் அவற்றை நல்ல உயரமாக
 கட்டினார். அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு),
 உமர் (ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோரின்
 புனிதமிகு கப்ருகளையும் அதைச்சுற்றி
 சுவர்கள் எழுப்பும் விஷயத்திலும் எடுத்துக்
 கொண்டார்கள் என அனஸ் (ரலியல்லாஹு
 அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். நபி
 (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
 அவர்களின் கப்ரு இருந்த இடத்தை சுற்றி
 முதன் முதலில் சுவர் எழுப்பியவர் உமர்
 (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் ஆகும். இந்த
 சுவர்கள் உயரம் குறைவாய் இருந்ததால்
 அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலியல்லாஹு
 அன்ஹு) அம்மதில்கைள உயரமாகக்
 கட்டினார்கள்.
 (ஐனீ 4:252, வஃபாவுல் வஃபா 2: 544)
 உமையாக்கள் ஆட்சிகாலத்தில் உமர் பின்
 அப்துல் அஜீஜ் (ரலியல்லாஹு அன்ஹு)
 அவர்கள் மதீனாவின் கவர்னராக இருந்தார்கள்.
 அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம்) அவர்களின் புனிதமிகு கப்ரு
 ஷரீஃபை சுற்றியிருந்து மதில்கள்
 பலமில்லாமல் போகவே அம்மதில்களிலிரு
 ந்து சற்று இடைவெளிவிட்டு, சுற்றுச்சுவர்
 கட்ட ஏற்பாடானது. இவ்வாறு புணருதாரம்
 செய்ய, நபி (ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம்) அவர்களின் மனைவிமார்களின்
 வீடுகளை வாங்கி விரிவாக்கம் நடந்தது.
 இவ்வாறு நபி (ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம்) அவர்களின் மினிதமிகு ரவ்ளா
 ஷரீஃபின் வெளிச் சுவர்கள் கட்டப்பட்டபின்ப
 ு உட்சுவர்கள் இடிக்கப்பட்டன. அப்போது
 இதன் அதிர்வு தாங்காமல் நபி (ஸல்லல்லாஹு
 அலைஹி வஸல்லம்) அவர்கள், அபூபக்கர்
 (ரழியல்லாஹு அன்ஹு), உமர் (ரழியல்லாஹு
 அன்ஹு) அடக்கப்பட்டிருந்த கப்ருகளின்
 சுற்றுப்புறத்தின் ஒருபகுதி இடிந்து சரிந்து
 விட்டது. இதேபோல் கப்ரின் ஒருபுறமிருந்து
 மண்திட்டும் சரிந்ததால் கப்ரிலிருந்து
 முழங்கால் முதல் பாதம் வரை ஒருவரின்
 கால்பகுதி வெளியே தெரிந்தது. இது நபி
 (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
 அவர்களின் கால்தான் என பதறித்துடித்து
 ஆச்சரியப்பட்டு துக்கத்துடன் அழுது
 கூக்குறலிட ஆரம்பித்தனர். கூட்டமும்
 வெகுவாக கூட ஆரம்பித்தது. அப்போது
 அங்கிருந்த உர்வா (ரலியல்லாஹு அன்ஹு )
 அவர்கள் இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம்) அவர்கள் கால் அல்ல. இது
 நிச்சயமாக உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
 அவர்களின் கால்தான் எனத் தெரிவித்து
 மக்களின் துயரை துடைத்தார். இந்நிகழ்ச்சி
 உமர் பின் அப்துல் அஜீஜ் (ரலியல்லாஹு
 அன்ஹு) அவர்களின் முன்னிலையிலே
 நடந்தது. மீண்டும் உமர் (ரலியல்லாஹு
 அன்ஹு) அவர்களின் புனிதமான கால் கப்ரில்
 உள்புறம் வைக்கப்பட்டு கப்ருகள்
 கட்டப்பட்டன.
 (ஐனீ 4:251, பத்ஹுல் பாரி 3:165, ஹயாதுஸ்
 ஸஹாபா 22-23, தஹ்தீபுத் தஹ்தீப் 7: 475-477)
 அப்துல் மலிக்கின் (ஆட்சிக்)
 காலத்தின்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம்) அடக்கம் செய்யப்பட்ட அறையின்
 ஒரு சுவர் இடிந்து விழுந்தது. அதைப் புனர்
 நிர்மாணம் செய்வதில் மக்கள் ஈடுபட்டபோது
 ஒரு பாதம் வெளியில் தெரிந்தது. உடனே
 மக்கள் பதறிப் போய் அது நபி(ஸல்லல்லாஹு
 அலைஹி வஸல்லம்) அவர்களின் பாதமாக
 இருக்குமோ என நினைத்தனர். இது பற்றித்
 தெரிந்தவர் யாருமில்லாதிருந்தபோது நான்
 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது நபி
 (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
 அவர்களின் பாதமே இல்லை;மாறாக, இது உமர்
 (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின்
 பாதகமாகும் என்றேன்" என உர்வா ரலியல்லாஹு
 அன்ஹு அவர்கள் கூறுகிறார்.
 (ஆதாரம் புகாரி:1390)
 அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலியல்லாஹு
 அன்ஹு) அவர்களால் கட்டப்பட்ட மதில்கள்
 பலமானதாக நிர்மாணிக்கபட்டு,அதன் மேல்
 தளம் எழுப்பப்பட்டது. கப்ரின் மேற்பகுதி
 அழகான வேலைப்பாடுகள் உள்ள
 மரக்கட்டைகள்,பலகைகளைக் கொண்டு
 வேயப்பட்டது. அதன் பின் கலீஃபா ஹாரூன்
 ரஷீதின் காலத்தில், நபி (ஸல்லல்லாஹு
 அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமிகு
 கப்ரின் மேல் மரத்தால் கட்டப்பட்ட பகுதி
 திறக்கப்பட்டபோது அதில் 193வேலைப்பாடு
 மிக்க மரக்கட்டைகள் இருந்தன. அவை 70
 கட்டைகள், உத்திரங்கள் முறிந்து
 சிதிலமடைந்திருந்தன. அவைகளுக்கு பதிலாக
 70 புதிய கட்டைகள் மாற்றப்பட்டன.
 புனிதமிகு கப்ரின் அறையின் மதில்கள்
 அழகான பாலிஷ் செய்யப்பட்ட கற்கலால்
 கட்டப்பட்டன.
 பின்னர் ஹிஜ்ரி 232-ல் கலீஃபா முத்தவக்கில்
 காலத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம்) அவர்களின் புனிதமிகு கப்ரை
 சுற்றியுள்ள மதில்களின் வெளிப்புறமும்,
 உட்புறமும் வெள்ளை பளிங்கி கற்கள்
 பதிக்கப்பட்டு மிக நேர்த்தியான
 வேலைப்பாடுகளால் ;;அல்ஹுஜரதுஷ் ஷரீஃபா''
 அழகுப் படுத்தப்பட்டது.
 பின்னர் கலீஃபா முக்தபீ பில்லாஹ்
 அவர்களின் ஆட்சிகாலத்தில் ஹிஜ்ரி 548-ல்
 மேலும் பளிங்கிக் கற்கள் பதிக்கப்பட்டு
 சிதிலம் அடைந்தப் பகுதியை நீக்கப்பட்டு,செ
 ப்பனிடப்பட்டு நபி (ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம்) அவர்களின் புனிதமிகு கப்ரு,
 அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு), உமர்
 (ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோர்கள் கப்ருகள்
 இருந்த அறை, அதை ஒட்டியுள்ள பகுதிகள்
 அனைத்தும் புணர்தானம் செய்யப்பட்டு
 பளிங்கிக் கற்கள் பதிக்கப்படடுள்ளன.
 பின்னர் ஹிஜ்ரி 654-ல் வருடம் ரமலான்
 மாதம் முதல் நாள் அன்று,நபி (ஸல்லல்லாஹு
 அலைஹி வஸல்லம்) அவர்கள்
 அடங்கியிருக்கும் மஸ்ஜிதுன் நபவியின்
 மனாராவில் விளக்கு ஏற்றுவதற்காக சென்ற
 ஒருவர் தன்னுடன் கொண்டு சென்ற தீவட்டியை
 மறந்து மனாராவிலேயே வைத்துவிட்டு
 வந்துவிட்டார். அதன் தீ மனாராவில் சுற்றி
 வடிந்து காலாகாலம் தரையிலும் பரவியிருந்த
 எண்ணை வடுக்களில் பற்றி தீ பரவியது.
 புற்றி எறிந்த தீ,பள்ளிவாசல் மேல் தளத்தை
 இரையாக்கி, எங்கும் பரவிய தீ,மஸ்ஜிதுன்
 நபவியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
 கரித்து துவசம் செய்தது. இத்தீ விபத்தில்,நபி
 (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது
 புனிதமிகு கப்ர், அபூபக்கர்-உமர்
 (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோர்கள் கப்ர்,
 உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு ) ஓதிய
 குர்ஆன் ஆகியை மட்டும் எரியவில்லை.
 ஹிஜ்ரி 650-ஆம் ஆண்டு,எகிப்து மன்னர்
 நூருத்தீன் ஜன்கீ,யமன் நாட்டு மன்னர்
 ஷம்சுத்தீன் யூசுஃப் ஆகியோர் கட்டுமான
 பொருட்களை அனுப்பி ரவ்ளா, மற்றும்
 மஸ்ஜிதுந் நபவியின் கட்டுமானப் பணியை
 தொய்வில்லாது நடைபெறும்படி செய்தனர்.
 பின்னர் ஹிஜ்ரி 658-ல் எகிப்தின் மன்னர்
 ருக்னுத்தீன் பைப்ரஸ் அவர்கள், ரவ்ளா மற்றும்
 மஸ்ஜிதுன் நபவியின் விடுபட்ட
 பகுதியின் கட்டுமானத்திற்காக பொருட்கள்,
 53 கட்டப் பொறியாளர்களையும் ஜமாலுத்தீன்
 ஸாலிஹ் என்பவரின் தலைமையில்
 மதீனாவிற்கு அனுப்பி அவைகைள அழகுடன்
 நிர்மாணிக்கப்பட்டு புதுப்பொழிவுடன்
 ஆக்கினார்கள்.
 ஹிஜ்ரி 706-ல் ரவ்ளா ஷரீப் மற்றும்
 மஸ்ஜிதுன் நபவியின் மேற்கு, கிழக்குப்
 பகுதியில் மாடிகள் மேற்கூறைகள்
 கட்டப்பட்டு உறுதியாக்கப்பட்டது. நபி
 (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,
 அபூபக்கர்-உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா)
 ஆகியோர்களின் கப்ருகளையும் அழகு
 படுத்துவதிலும் மிக, மிக அக்கறை கொண்ட
 சுல்தான் கலாவூனும், ருக்னுத்தீன்
 பைப்ரஸ்,சுல்தான் காய்த்தபாதயீ, மற்றும்
 சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி
 சரித்திரத்தில் இடம் பிடித்து நபியவர்களின்
 உள்ளத்திலும் இடம் பிடித்துள்ளனர்.
 ஹிஜ்ரி 731-ல், மலிக்குல் அஷ்ரப் பர்ஷ்பாய்
 என்பவர், நபி (ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம்) அவர்களின் பள்ளிவாசலை மேலும்
 ஒரு நீண்ட பெரிய மாடியை கட்டினார். இதன்
 பின்னர், ஹிஜ்ரி 777-ல் சுல்தான் கலாவூன்
 என்பவர் மஸ்ஜிதுன் நபவியை விரிவு
 படுத்தி, ரவ்ளா ஷரீபுக்கு செல்ல தனிப்பாதை
 அமைத்தார்.
 ஹிஜ்ரி 779-ல் சுல்தான் காய்தபாய் என்பவர்
 பொருப்பேற்று,பள்ளிவாசலின் கிழக்குப் புறச்
 சுவர் இடிக்கப்பட்டு, மேலும் 27 முழங்கள்
 அகலப்படுத்தப்பட்டு சுவர் எழுப்பப்பட்டது.
 பின்னர் ஹிஜ்ரி 781-ல்,நபி (ஸல்லல்லாஹு
 அலைஹி வஸல்லம்) அவர்களின் ரவ்ளா புணர்
 நிர்மாணப் பணிக்கு ஹாஜா ஷம்ஜீ என்பவர்
 தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
 இவரின் மேற்பார்வையில் ரவ்ளா ஷரீபின்
 மேல்தளமும் அதனுடன் சேர்ந்து நபி
 (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
 அவர்களின் புனிதமிகு கப்ரின் மேல்
 எழுப்பப்பட்ட குப்பாவைச் சுற்றியுள்ள
 பகுதியும் உயர்த்தப்பட்டு, மின்பரின்
 கிழக்குபுறமுள்ள மேற்பகுதியில் முறிந்தும்,
 உடைந்தும் போன கட்டைகள்,உத்திரங்கள்
 பலவற்றை மாற்றி அமைக்கப்பட்டது.ஹிஜ்ரி
 853-ல் சுல்தான் லாஹிர் ஜக்மகின் காலத்தில்
 மஸ்ஜிதுன் நபவியின் மாடியின் தளத்தில்,
 நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
 அவர்களின் அபூபக்கர்-உமர் (ரழியல்லாஹு
 அன்ஹுமா) ஆகியோர்களின் புனிதமிகு
 கப்ருகள் இருக்கும் கட்டிடத்தின் ரவ்ளா
 ஷரீபின் மேல்தளத்தில் பெரும் கீரல் (விரிசல்)
 ஏற்பட்டது. மிகுந்த பொருட் செலவில்
 அக்கறையுடன் அதை செப்பனிட்டு ரவ்ளா
 புதுப்பிக்கப்பட்டது.
 பின்னர், ரவ்ளா ஷரீப் விரிவாக்கப்பட்ட
 ு மூன்று வாயில்கள் உள்ள அறையாக
 கட்டப்பட்டது. அதன் சுற்றுப் புறங்களில்
 பித்தளைக் கம்பிகளால் ஆன ஜன்னல்கள்
 வைக்கப்பட்டன. புனிதமிகு கப்ருகளை
 நெருங்கி மரியாதை இல்லாமல் நடந்துக்
 கொள்ளக்கூடாது என்பதற்காக கப்ருகளைச்
 சுற்றி வேலி போன்ற இரும்புத் தடுப்பு
 அமைக்கப்பட்டது. இந்த தடுப்புக்கு பித்தளை
 முலாம் பூசப்பட்டது. ஜும்ஆ நாளன்று கூட்டம்
 அதிகமாக இருப்பதால் ரவ்ளா ஷரீபின்
 பணியாளர்கள் மட்டும் தடுப்புக்கு உள்ளே
 நின்று தொழ அனுமதிக்கப்பட்டனர். இந்த
 அறையே; ஹுஜ்ரத் ஷரீபா (கண்ணியமான
 அறை) என்று அழைக்கப்பட்டது. ஹுஜ்ரத்
 முபாரக்காவில் நுழைவதற்கும் நபி
 (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,
 அபூபக்கர்-உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா)
 அகியோர்கள் அடக்கமாகியுள்ள அறைகளின்
 வாயில்களில் ஒரு வாயில் மட்டும் திறந்தே
 இருக்கும். (வஃபாவுல் வஃபா 2:616)
 ஹஜ் உடைய காலங்களில் மட்டும் மக்களின்
 கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால்,அக்க
 ாலத்தில் மட்டும் ரவ்ளாவின் அறை
 பூட்டப்பட்டு வந்தது. நபி (ஸல்லல்லாஹு
 அலைஹி வஸல்லம்) அவர்களின் அறைக்கும்
 இரும்புத் தடுப்புக்கும் இடைப்பட்ட பகுதி
 ஹஜ் காலங்களில் பெண்கள் தங்கள்
 குழந்தையுடன் தங்கும் இடமாகும். சில சமயம்
 பிள்ளைகள் அப்பகுதியில் அசுத்தம்
 செய்துவிடும். எனவே,ஹிஜ்ரி 732-ல் சுல்தான்
 மலிக்கு நாஸிர் ஹஜ்ஜுக்கு வந்து, நபி
 (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
 அவர்களின் இடத்திற்கு வந்து இவையெல்லாம்
 பார்த்து, நபி (ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம்) அவர்களின் புனிதமிகு
 அறைக்கும் இரும்புத் தடுப்புக்கும்
 இடைப்பட்ட பகுதியை மட்டும் ஹஜ்ஜுக்
 காலங்களில் மட்டும் பூட்டிவிட உத்தரவு
 இட்டார். அதன்பின் ஹஜ்ஜுக்காலங்களில்
 கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் நபி
 (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை
 ஜியாரத் செய்ய அந்த அறையில் நுழைவதால்
 பெரும் சிரமம் ஏற்பட்டு கட்டுப்பாடு
 இல்லாமல் போனது. எனவே, புனித அறையின்
 எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டன.
 இவ்வாறு ஹுஜ்ரத் ஷரீபாவை
 அடைக்கப்பட்டதால் நபி (ஸல்லல்லாஹு
 அலைஹி வஸல்லம்) அவர்களின் ஜியாரத்
 மட்டும் தடைபடவில்லை
 மகான்களின் மண்ணறைகள்) பச்சை
 குப்பாவை இடிக்க முயற்சி வீண்இன்றைக்கு
 இருக்க கூடிய சவூதி அரசாங்கம் சுல்த்தான்
 அப்துல் அஜீஸ் பின் அப்துர்ரஹ்மான் பின்
 சவூத் என்பவர் முதல் முதலில் 1902ல்
 ரியாத்தை கைப்பற்றினார் பிறகு 1924ல்
 மக்காவை கைப்பற்றினார் பிறகு 1925ல்
 மதீனாவை கைப்பற்றினார் 1936ல் முழு அரபு
 தேசத்தையும் கைப்பற்றி1939ல் சவூதி
 அரபியா
 என்று பெயர் வைக்கப்பட்டது .
 1925 ல் வாஹ்ஹாபியர்களால் மதீனாவின்
 அனைத்து அடையாளங்களும் அழிக்கப்பட்டன.
 ரவ்ழாவையும் அதன் அடையாளங்களையும்
 அழிக்க முற்ப்பட்டனர் அப்போது
 உலகமெங்கும் உலமாக்களிடத்தில் பெரும்
 கிளர்ச்சி ஏற்ப்பட்டது.அப்போது இறைவனின்
 உதவியால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ
 அலைஹி வஸல்லம் அவர்களின் கப்று
 ஷரீபினை உடைக்கச் சென்றவர்கள்
 அழிக்கப்பட்டு மகத்தான வெற்றியே கொண்டு
 மதீனா நகரமே வஹ்ஹாபிகளிடம் இருந்து
 பாதுகாக்கப்பட்டது
 பச்சை குப்பாவில் ஜன்னல் இன்று இருக்க
 கூடிய டூமில் கூட காணலாம்
 ஒரு தடவை மதீனாவில் கடும் பஞ்சம்
 நிலவியது அப்பொழுது அன்னை ஆயிஷா
 (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடத்தில்
 மக்களெல்லாம் முறையிட்டார்கள். அதற்கு
 அன்னையவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம்) அவர்களின் கப்ரின் பக்கம்
 முன்னோக்குங்கள் அவர்களின் கப்ரி(ருக்கும்
 அறையி)லிருந்து துவாரத்தை வானத்திற்கும்
 நபியவர்களின் கப்ருக்கும் மத்தியில்
 உண்டாக்குங்கள். அதேபோல் செய்யப்பட்டது
 மழை கொட்டோ கொட்டென்று கொட்டி
 விட்டது தாவரங்கள் முழைக்க ஆரம்பித்தன
 கால்நடைகள் அனைத்தும் பெருத்துவிட்டன
 தேவைக்கு அதிகமாகவே பொழிந்தது அந்த
 ஆண்டிற்கு ﻋﺎﻡ ﺍﻟﻔﺘﻦ என்று பெயர் வைக்க பட்டது
 (ஆதாரம் : தாரமியூ 5950)
 இதிலிருந்து நபி(ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம்) அவர்களின் கப்ரின் மேலே முகடு
 அன்றே இருந்திருக்கிறது இன்றைக்கும் இந்த
 ஹதீஸின் அடிப்படையில் பச்சை குப்பவிலே
 ஜன்னல் வைத்து மூடப்பட்டிருக்கிறது
 அப்படி பஞ்சம் வந்தால் குப்பவை உடைக்காமல்
 ஜன்னலை மட்டும் yநாயகத்தின்
 பச்சைகுப்பாவை இடிக்க வேண்டும் என்று
 வஹ்ஹாபிகள் உளறிக்கொண்டிருக்கும்
 நேரத்தில் மார்க்கத்தில் இதன் விஷயத்தில்
 இமாம்கள் என்ன வழிமுறையை
 கையாண்டுள்ளார்கள்.....நல்லோர்களுக்கு குப்பா
 கட்டுகின்ற விஷயத்தில் என்னக்
 கூறியுள்ளார்கள் என்பதை எடுத்தரைத்ததோடு
 கடந்த கால வரலாற்றைக் கூறி நபிகளாரின்
 கண்ணியம் காக்ககப்பட வேண்டும் என்று
 தக்கதருணத்தில் பிரஸ்தாபித்ததற்கு அல்லாஹ்
 உங்களுக்கு நற்கூலிகளை வழங்குவானாக.
 தலைப்பையே பேசி மக்களின் உணர்வை
 தூண்டி நாயகத்தின் மீதும் அவர்களின்
 புனித உடலை தாங்கி கொண்டிருக்கும்
 புனித ரவ்லாவின் மீதும் அந்த புனிதமான
 மண்ணின் மீதும் பரிபூரண முஹப்பைத்தை
 ஏற்படுத்துவோம

பிஜெயின் தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள் 02

முஹ்யித்தீன் மௌலித்
 ***********************************
 பிஜெயின் தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள் 02

 நமிமார்களின் காலத்தில் மலக்குகள் சில வேளை மனித வடிவில் நடமாடியுள்ளனர். வந்தவர்கள் மலக்குகள்தாம் என்பதைத் தெளிவுபடுத்த நபிமார்கள் இருந்தனர்.
 ஒரு முறை ஜீப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனித வடிவில் வந்தனர்.வந்தவர் ஜீப்ரீல்தான் என்று நபி ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்குவதற்க முன்னர் நபித்தோழர்கள் யாரும் அவர் ஜீப்ரீல் என அறிய முடியவில்லை என்பதை புகாரி உட்பட ஹதீஸ் நூல்கள் கூறுகின்றன. இந்த சமூகத்திலேயே மிகச் சிறந்தவர்களான நபித்தோழர்களுக்கே முடியவில்லை என்றால் அப்துல் காதிர் ஜீலானி எப்படி அறிந்து கொண்டார்?

 விளக்கம்
 ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் ஸஹாபாக்கள் வந்த மலக்கை அறிந்திருக்கவில்லை. என்பதை வைத்து ஸஹாபாக்களுக்கு மலக்குகளை அறியவே முடியாது என்ற பொதுச் சட்டத்தை விமர்சகர் உருவாக்கின்றார்.இந்தச் சட்டமும் ஆராய்ச்சியும் தவறாவை..
 ஆசிரியரிடம் மாணவர் ஒருவர் சந்தேகமொன்று கேட்ட போது ஆசிரியருக்கு அதற்கான பதில் தெரியவில்லை என்றால் எந்தக் கேள்விக்குமே! அவருக்கு பதில் தெரியாது என்று கூறுவதைப் போல உள்ளது இவரது வாதம்.
 விமர்சகர் குறிப்பிட்ட சம்பவத்தில் ஸஹாபாக்கள் மலக்குகளை சுயமாக விளங்கவில்லை என்றாலும் வேறு பல சந்தர்ப்பங்களில் மலக்குகளை அவர்கள் புரிந்துள்ளனர்.
 இம்றான் இப்னு ஹ_ஸைன் رضي الله عنه அவர்கள் சொன்னார்கள். என் மீது ஸலாம் சொல்லப்பட்டு வந்தது.நான் சூடு வைத்த போது ஸலாம் நின்றது. நான் சூடு வைப்பதை நிறுத்தினேன். அப்போது மீண்டும் ஸலாம் சொல்லப்பட்டது.
 முஸ்னத் அஹ்மத் எண்: 19486 இப்னு ஹிப்பான் 3938

 இந்த ஹதீஸை விளக்கும் போது இமாம் நவவி ரஹ்மதுல்லாஹ் கூறுகின்றார்கள். இம்ரான் ரழி அவர்களுக்கு மூல நோய் இருந்தது.அதன் வேதனை மீது அவர்கள் பொறுமை காத்தார்கள் அப்போது அவர்களிடம் வானவர்கள் வந்து ஸலாம் சொல்லிக் கொண்டிருந்தனர்.நோய் சிகிட்சைக்காக அவர்கள் சூடு வைக்க தொடங்கிய போது ஸலாம் நின்னறது. சூடு வைப்பதை நிறுத்திய பொழுது மீண்டம் ஸலாம் சொல்லப்பட்டது.(ஷரஹ் முஸ்லிம் பக்கம் 402)

 மற்றொரு அறிவிப்பில் இச்செய்தி மிகத்தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.இம்றான் இப்னு ஹ_ஸைன் அவர்கள் சொன்னார்கள் முதர்ரஃபே! அறிந்து கொள்ளுங்கள் கஃபாவின் அருகில் வைத்து எனது தலைமாட்டடில் மலக்குகள் என்னிடம் ஸலாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் சூடு வைத்த போது அது நின்று விட்டது. நான் இழந்த அந்த ஸலாம் மீண்டும் எனக்குத் திரும்பியது முதர்ரபே!
 நன் இறக்கும் வரை நீங்கள் இதை வெளிப்படுத்த வேண்டாம்.
 நூல் ஹாகிம் 3:472 ஹயாத்துஸ் ஸஹாபா பாகம் 03 பக்கம் 485

 நபி அல்லாதவர்களும் வானவர்களை அறிய முடியும் என்பத இந்த ஹதீஸ் தௌவு படுத்துகின்றது.

பலவீனமான ஹதீஸ்களை வைத்து அமல் செய்யலாமா? மேலும் ழஈபான ஹதீஸ்களை வைத்து இஸ்லாமிய சட்டங்களை வகுக்கலாமா?"

"பலவீனமான ஹதீஸ்களை வைத்து அமல் செய்யலாமா? மேலும் ழஈபான ஹதீஸ்களை வைத்து இஸ்லாமிய சட்டங்களை வகுக்கலாமா?"

 ழஈபான (பலவீனமான) ஹதீஸ்கள் என்றால் என்ன?

 நபிமொழியினை அறிவித்தவர்கள் பட்டியலில் ஒருவரோ, அல்லது பலரோ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்களா? இல்லையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய ஹதீஸ்கள் "ழஈபான ஹதீஸ்கள்" எனப்படும்.
 அந்தச் சந்தேகம் பல காரணங்களால் ஏற்படலாம்.அறிவிப்பாளர்களில் எவரேனும் நன்னடத்தை அற்றவராகவோ,நினைவாற்றல் குறைந்தவராகவோ அல்லது அறிவிப்பாளர்களின் தகுதியின்மையைக் கருத்தில் கொண்டு, அவர் அறிவித்த அந்த நபிமொழியை ளயீப்-பலவீனமானது என்ரோ, அல்லது இரண்டு அறிவிப்பாளர்களுக்கிடையில் சந்திப்பு இல்லாமலிருந்தாலோ அத்தகைய ஹதீஸ்களை "ழஈபான ஹதீஸ்கள்" என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் நிர்ணயித்துள்ளனர்.

 ழஈபான (பலவீனமான) ஹதீஸ்களைப் பின்பற்றலாமா?

 ஒரு ஹதீஸ் ஆதார பூர்வமானதாக (அதாவது ஸஹீஹானதாக அல்லது ஹசனானதாக) இருக்கும் பொழுது அவசியம் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் மவ்ளூஃவான (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்களை எந்தக் காரணத்திற்காகவும் பின்பற்றக் கூடாது என்றும் ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.
 ஆனால் இவ் இரு பிரிவுகளுக்கும் இடைப்பட்ட ழஈபான (பலவீனமான) ஹதீஸ்களைப் பின்பற்றலாமா? அல்லது கூடாதா? என்பதைப் பொறுத்தவரையில் அறிஞர்கள் மத்தியில் இரு விதமான கருத்துகள் உள்ளன

 1⃣ அகீதா (கொள்கை), அஹ்காம் (சட்டதிட்டங்கள்),தர்கீப் வத் தர்ஹீப் (ஆர்வமூட்டல் மற்றும் எச்சரித்தல்) அதாவது பழாயில்)ஆகிய எதுவாக இருந்தாலும் ழஈபான ஹதீஸ்களைப் பின்பற்றக் கூடாது

தர்கீப் வத் தர்ஹீப் விடயத்தில் ழஈபான ஹதீஸ்களைப் பின்பற்றக் கூடாது எனக் கூறுவோரின் வாதம் இமாம் முஸ்லிம் (ரஹ்மதுல்லஹி அலைஹி), இமாம் அபு பக்ர் இப்னுல் அரபி அல்-மாலிகி (ரஹ்மதுல்லஹி அலைஹி), இமாம் இப்னு ஹஸ்ம் அழ்-ழாஹிரி (ரஹ்மதுல்லஹி அலைஹி), இமாம் இப்னு ரஜப் அல்-ஹன்பலி (ரஹ்மதுல்லஹி அலைஹி) போன்ற அறிஞர்கள் இக் கருத்தையே கொண்டிருந்தனர். இமாம் முஸ்லிம் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் தமது ஸஹீஹ் முஸ்லிமுடைய முன்னுரையில் ழஈபான ஹதீஸ்கள் பின்பற்றத் தகுதியானதல்ல என பல ஆதாரங்களின் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள்.
 இக் கருத்துடையவர்கள் தமது கருத்துக்கு சார்பாக பின்வரும் ஆதாரங்களை எடுத்து வைக்கின்றனர்.

 1)எதைப் பற்றி உமக்குத் திட்டவட்டமான அறிவு இல்லையோ அதை நீர் பின்பற்றாதீர்(அல்குர்ஆன் 17:36)

 2)நிச்சயமாக யூகமானது சத்தியத்திலிருந்து (விளங்கிக் கொள்ள) எந்தப் பயனையும் தராது.
 (அல்குர்ஆன் 53:28)

 3)நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"உனக்கு சந்தேகமானதை விட்டுவிட்டு சந்தேகமற்றதின்பால் சென்றுவிடு"(அறிவிப்பவர்: ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு);
 (நூல்: திர்மிதீ, அஹ்மத்)

 2⃣ அகீதா (கொள்கை), அஹ்காம் (சட்டதிட்டங்கள்)விடயங்களில் ழஈபான ஹதீஸ்களை (பலவீனமான) பின்பற்றக்கூடாது, ஆனால் தர்கீப் வத் தஹ்ரீம் (ஆர்வமூட்டல் மற்றும் எச்சரித்தல்) அதாவது பழாயில்)ஆகிய எதுவாக இருந்தாலும் ழஈபான ஹதீஸ்களை சில நிபந்தனைகளுடன் பின்பற்ற முடியும்.

தர்கீப் வத் தர்ஹீப் விடயத்தில் ழஈபான ஹதீஸ்களை சில நிபந்தனைகளுடன் பின்பற்றலாம் எனக் கூறுவோரின் கருத்துகள் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்மதுல்லஹி அலைஹி), இமாம் அந்-நவவி (ரஹ்மதுல்லஹி அலைஹி), இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹ்மதுல்லஹி அலைஹி) போன்ற பல அறிஞர்கள் தர்கீப் வத் தர்ஹீப் (ஆர்வமூட்டல் மற்றும் எச்சரித்தல் அதாவது பழாயில்) விடயத்தில் ழஈபான ஹதீஸ்களைப் பின்பற்றலாம் என்கின்ற இக் கருத்தையே கொண்டிருந்தனர்.மேலும் இதுவே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தும் ஆகும். ஆனால் இக் கருத்துள்ள அறிஞர்கள் சில நிபந்தனைகளை முன் வைக்கின்றனர். அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்மதுல்லஹி அலைஹி) மற்றும் பல அறிஞர்கள் அமல்களின் சிறப்புகள் பற்றிய ஆதாரபூர்வமற்ற அறிவிப்புகளை, அவை பொய்யாக இல்லாமல் இருட்கும் பட்சத்தில், அவற்றை அறிவிப்பதை அனுமதிக்கத் தக்கதாகக் கருதினர்

மேலும் மார்க்கத்தில் ஆதாரபூர்வமாக நிறுவப் பட்ட ஒரு அமலின் பக்கம் ஆர்வமூட்டுகின்ற ஒரு ஹதீஸ் பொய்யாக இல்லாமல் ழஈபான இருட்கும் பட்சத்தில் அந்த ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ள கூலியானது உண்மையாக இருக்கக் கூடிய சாத்தியக் கூறு இருக்கிறது.ஒரு ழஈபான ஹதீஸின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு விடயத்தை (வாஜிப்) கடமையாகவோ அல்லது (முஸ்தஹப்) விரும்பத் தக்கதாகவோ கருதலாம் என எந்த ஒரு இமாமும் கூறவில்லை. அப்படி எவராவது கூறுவாரானால் அவர் அறிஞர்களின் ஏகோபித்த முடிவுக்கு மாற்றம் செய்கிறார். பொய் என அறியப் படாத ழஈபான அறிவிப்புகளை, ஆர்வமூட்டுதல் மற்றும் எச்சரிக்கை செய்யும் நோக்கத்தில் அறிவிப்பது அனுமதிக்கத் தக்கதாகும். ஆனால் அந்த விடயம் அல்லாஹ்வால் ஆர்வமூட்டப் பட்டு அல்லது எச்சரிக்கை செய்யப் பட்டிருக்கிறது என அறிவிப்பாளர்கள் அனைவரும் அறியப்பட்ட வேறு ஆதாரங்களின் மூலம் நிறுவப் பட்ட விடயமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே (அது அனுமதிக்கத் தக்கதாகும்).
 (ஆதாரம் : மஜ்மூஃ அல்-பதாவா 1/250)

 உலகம் போற்றும் மிகப் பெரும் ஹதீஸ் கலை அறிஞராகிய இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள், தர்கீப் வத் தர்ஹீப் (ஆர்வமூட்டுதல் மற்றும் எச்சரித்தல்) சம்பந்தப் பட்ட ழஈபான ஹதீஸ்களைப் பின்பற்றுவதற்கான நிபந்தனைகளப் பின்வருமாறு வகுத்துக் கூறுகிறார்கள். அவையாவன:

 1⃣ அந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானதாக இருக்கக் கூடாது.அறிவிப்பாளர் தொடரில் பொய்யர்களில் ஒருவர் அல்லது பொய்யர் எனக் குற்றம் சாட்டப் பட்ட ஒருவர் அல்லது மிகவும் கடுமையான தவறிழைக்கின்ற ஒருவர் சம்பந்தப்பட்டு மட்டும் வரும் ஹதீஸ்களைப் பின் பற்றக் கூடாது

 2⃣ மார்க்கத்தில் ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு விடயம் சம்பந்தமானதாக அந்த ஹதீஸ் இருக்க வேண்டும். (மார்க்கத்தில் இல்லாத புதிய வகையான ஒரு விடயத்தை அது அறிமுகப் படுத்தக் கூடாது)

 3⃣ அந்த ஹதீஸின் படி செயல்படுபவர் அந்த ஹதீஸில் கூறப் பட்டுள்ள விடயம் (நபியவர்களால் கூறப்பட்ட) நிரூபணமான ஒரு விடயம் தான் (சந்தேகமே இல்லை) என நினைத்து விடக் கூடாது. மாறாக (நபியவர்கள் கூறாத ஒன்றை கூறியதாக நினைத்து அல்லது நபியவர்கள் செய்யாத ஒன்றை செய்ததாக நினைத்து தவறு செய்து விடுவேனோ என்ற) முன்னெச்சரிக்கையுடன் அவர் அந்த விடயத்தைப் பின்பற்ற வேண்டும்.
 (ஆதாரம் : தைஸீரி முஸ்தலஹுல் ஹதீஸ்)

 பலவீனமான ஹதீஸ்களின் விடயத்தில் பேணுதல் மிக மிக அவசியம்.
 நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு);
 (நூல்: புகாரி-110, முஸ்லிம்)

சமுதாயத்தில் நல்லமல்கள் உருவாக வேண்டும் என்கிற நோக்கத்தில்தானே ழஈபான ஹதீஸ்கள் கூறப் படுகின்றன. சமுதாயம் கெட்டுப் போவதற்காக அல்லவே என்ற அடிப்படையில்
 அம்று-ஏவல், நஹீ-விலக்கல் போன்ற ஆணைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில்தான் பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாக எடுக்கக் கூடாது. ஆனால் 'பழாயில்' சிறப்பு குறித்தான விசயங்களில் அமல் செயல்வதற்கு பலவீனமான நபிமொழிகளை எடுக்கலாம் என்பது நபிமொழிக் கலை வல்லுனர்களுடையவும் சட்ட அறிஞர்களுடையவும் ஏகோபித்த அபிப்பிராயம் ஆகும்.

 ழஈபான (பலவீனம்) நபிமொழிகளின் படி நற்செயல்களை (அமல்) செய்யலாம் என்பதற்கான ஆதாரம்.
 உலமாக்களும், ஹதீஸ் கலை மேதைகளும், ளயீபான ஹதீஸ்களைக் கொண்டு சிறப்பு அமல்களில் ஆசையூட்டுவதற்கும், எச்சரிக்கை செய்வதற்கும்அமல் செய்வது சுன்னத் என சிறந்த ஹதீஸ்கலை மேதையும், சட்டத்துறை அறிஞருமான இமாம் நவவீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது அத்காறுன் நவவீ எனும் நூலில் கூறுகின்றனர்

 1⃣ பலவீனமான நபிமொழிகளை ஆதாரமாகக் கொண்டு 'பழாயிலுல் அஃமாலி'ல் அமல் செய்யலாமா? என இமாம் றமலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வின விடுக்;கப்பட்டபோது,இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அமல் செய்யலாம் என ஹதீஸ் கலை மேதைகள் கூறியுள்ளதாகச் சொல்கின்றனர்' என பதில் கூறினார்கள்.
 (பதாவா ரமலீ பாகம் 4, பக்கம் 383)

 2⃣ பலவீனமான நபிமொழிகளை ஆதாரமாகக் கொண்டு 'பழாலயிலுல் அஃமால்'-நற்செயல்களில் அமல் செய்யலாம் என உலமாக்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.
 (நூல்: ஷரஹ் ஷிபா பாகம் 2 பக்கம் 123)

 3⃣'நற்செயல்களில் பலவீனமான நபிமொழிகளின் படி அமல் செய்யலாம். ஆனால் சட்டங்கள் வகுப்பதற்குத்தான் ஸஹீஹான அல்லது ஹஸனான நபிமொழிகள் தேவை' (ஷரஹ் ஷிபா பாகம் 2, பக்கம் 133)

 4⃣'பலவீனமான நபிமொழிகளின் படி, ஆசையூட்டுவதற்காக அமல் செய்யலாம் என நபி மொழிக் கலைவல்லுனர்க் கருத்து வேறுபாடின்றி கூறியுள்ளனர்.' (தப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் 6 பக்கம் 410)

 5⃣ ஹாபிழ் இப்னு ஹஜர் மக்கீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லுகின்றார்கள், 'ளயீபான ஹதீஸ்கள் மூலம் சிறப்பானவைகளில் கருத்து வேறுபாடின்றி அமல் செய்யலாம்' (அல் மன்ஹுல் மக்கிய்யா ஃபீ ஷரஹில் ஹம்ஸிய்யா பக்கம் 82)

 இமாம்கள் பலவீனமான நபிமொழிகளை வைத்து அமல் செய்திருக்கிறார்களா?
 ஆம்! செய்திருக்கின்றனர்.
 ஆதாரங்கள் இதோ

 1⃣ ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள் 'அலியே! எனக்கு எதை நான் விரும்புகின்றேனோ அதைத்தான் உமக்கும் விரும்புகின்றேன். எனக்காக வெறுப்பவற்றை உமக்காகவும் வெறுக்கின்றேன். நீர் இரு ஸஜ்தாக்களுக்கிடையில் குதிகாலில் அமர வேண்டாம்'
 (அறிவிப்பவர்: அலி ரலியல்லாஹு அன்ஹு)

 இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் அபூ ஈஸா திர்மிதீ ரலியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் 'அலி அவர்களிடமிருந்து ஹாரிதும் ஹாரிதிடமிருந்து அபூ இஸ்ஹாக்கும் அறிவிக்கும் இந்த நபிமொழியை வேறு எவரும் அறிவிப்பதாக நாம் காணவில்லை
 இந்த அறிவிப்பாளர்களில் வரக்கூடிய ஹாரிதுல் அஃவர் என்பவரை சில அறிஞர்கள் பலவீனுமானவராக ஆக்கியுள்ளார்கள் (எனினும்) அனேகமான அறிஞர்கள் இந்த நபிமொழிப்படியே அமல் செய்கின்றனர். அதாவது இரு ஸுஜூதுகளுக்கிடையில் குதிகாலில் இருப்பது (நாயிருப்பு) மக்ரூஹ் என்று கூறுகின்றனர்
 (நூல்: ஜாமிஉத் திர்மிதி பாகம் 1 பக்கம் 57,58)

 2⃣ அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் தமது இரு பாதங்களின் முற்பகுதியிலேயே (நிலைக்கு) எழும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.(அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு நூல்: ஜாமிஉத் திர்மிதி பாகம் 1 பக்கம் 58)

 இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் காலிது இப்னு இயாஸ் என்பவர் இடம் பெறுகிறார். இவரை ஹதீஸ் கலை மேதைகள் பலவீனமானவர் என்கின்றனர்.அபூஈஸா திர்மிதி ரலியல்லாஹு அன்ஹு கூறுகின்றனர், 'அறிஞர்களிடத்து அமலில் இருப்பது அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்ற ஹதீதின் அடிப்படையில்தான்! தொழுகையில் இரு பாதங்களின் முற்பகுதி (யின் துணை)யால்(நிலைக்கு) எழுவதையே அறிஞர்கள் தேர்வு செய்திருக்கின்றனர்.

சற்று சிந்தித்து பாருங்கள்! பலவீனுமானவர்கள் என்று நபி மொழி வல்லுனர்களால் கணிக்கப்படுகின்ற அறிவிப்பாளர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆறு ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றான திர்மிதியைத் தந்துள்ள மேதை அபூஈஸா திர்மிதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது நூலில் பதிவு செய்துள்ளதோடு அந்த நபிமொழிகளை பலவீனுமானவை, அமல் செய்லதக்கதல்ல என்று கூறூது, அறிஞர்கள் அந்த நபிமொழிகளின் படி அமல் செய்கின்றனர் என்று கூறுகிறார்கள்

 எனவே ழயீபான-பலவீனமான ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து அறிஞர் பெருமக்கள் அமல் செய்தனர் என்பதற்கு இதுபோன்ற ஏராளமான ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்ட முடியும்.ஆனால் நவீனவாதிகள் அமல்கள் செய்வதற்கு தடை விதிக்கின்றனர். இறைபொருத்தத்தை நாடி செய்கின்ற அமல்களை விட்டும் மக்களை சோம்பேறிகளாக ஆக்குகின்றனர். அவர்களின் இக்கெடுதிகளை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக! ஆமீன்

ஹலாவதுல் ஈமான்

நெஞ்சில் தக்பீர் கட்டுவது தொடர்பான பலவீனமான செய்தி குறித்து தவறான தகவல்களை பகிரும் வழிகெட்ட வஹ்ஹாபிகள் "¶

¶"நெஞ்சில் தக்பீர் கட்டுவது தொடர்பான பலவீனமான செய்தி குறித்து தவறான தகவல்களை பகிரும் வழிகெட்ட வஹ்ஹாபிகள் "¶

 இதுவெல்லாம் அரபி இலக்கணம், இலக்கியம் தெரியாத மக்களை வஹ்ஹாபிகள் ஏமாற்றும் வார்த்தை ஜாலங்கள்

 இந்த ஹதீஸை தங்கள் கிரந்தத்தில் பதிவு செய்துள்ள இமாம் அஹ்மது அவர்களே இந்த அறிவிப்பாளரை குறைவு படுத்தி இருக்க இந்த ஹதீஸை ஸஹிஹ் என்று எப்பிடி சொல்ல முடியும், சிந்தியுங்கள்,

 حدثنا يحيى بن سعيد عن سفيان حدثني سماك عن قبيصة بن هلب عن ابيه قال رأيت النبي صلى الله عليه وسلم ينصرف عن يمينه وعن يساره ورأيته قال يضع هذه على صدره – رواه احمد

 இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை வலது பக்கமும் இடது பக்கமும் திரும்பும்போது பார்த்தேன்,(தொழுகையில்) நெஞ்சின் மீதுஇக்கையை வைப்பதையும் பார்த்தேன்,அறிவிப்பாளர் – ஹுல்ப் ரழியல்லாஹு அன்ஹுநூல் : அஹ்மத்- எண் : 20961

 இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் வரிசையில் சிமாக் என்பவர்வருகிறார்.இவரைப் பற்றி ஹதீஃத் கலை வல்லுனர்கள்பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர்,நம்பகமானவரென்றுநிறையை மட்டுமே கூறியவர்களுமுண்டு, இவ்வாறுகூறியவர்கள் எண்ணிக்கையில் மிகமிக சொற்பமானவர்கள்,இவருடைய குறை-நிறை இரண்டையும் கூறியவர்களும்இருக்கிறார்கள்,இவர்களும் குறைந்த எண்ணிக்கையில்உள்ளவர்களே,சிமாக் பலவீனவர்,அவருடைய ஹதீஃதைஆதாரமாக ஏற்கக்கூடாது என்று குறைமட்டுமே சொன்னஹதீஃத் கலை அறிஞர்கள்தான் ஏராளம்,நிறை கண்டோர்.

 *அவைகளை பின்வருமாறு தருகிறோம்

 1- قال يعقوب بن شيبة قلت لابن المديني رواية سماك عن عكرمة فقال مضطربة

 1. இக்ரிமா வழியாக சிமாக் அறிவிப்பது தடுமாற்றமுள்ளதாகும்.- இப்னுல் மதீனீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி

 2- قال النسائي ليس به بأس وفي حديثة شيئ

 2-சிமாக் என்பவர் பரவாயில்லை என்று சொல்லத்தக்கவரே.அவர் அறிவிக்கும் ஹதீஃதில் பலவீனமுண்டு.- நசாயீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி

 3- قال ابن ابي خثيمة سمعت ابن معين سئل عنه ماالذي عابه قال اسند الاحاديث لم يسندها غيره وهو ثقة

 3- சிமாக் நம்பகமானவர்.ஆனால் யாருமே அறிவித்திராதநபரின் வழியாகவெல்லாம் ஹதீஃதை அறிவிக்கும் குறைபாடுஇவரிடமுண்டு.- இப்னு மஈன் ரஹ்மத்துல்லாஹி அலைஹிகுறை கண்டோர்

 4- قال ابوطالب عن احمد مضطرب الحديث

 சிமாக் ஹதீஃத் அறிவிப்பதில் தடுமாற்றமுடையவர்.- அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

 இதுபோன்று பல ஹதீஸ் கலை வல்லுனர்கள்பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்கள்

 ஹதீஃத் கலை அறிஞர்களில் பலர் சிமாகை குறைகண்டுஇருக்க ஓரிரு அறிஞர்களின் கருத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு அரபி ஞானம் தெரியாத அப்பாவி இளைஞர்களைஏமாற்றி நெஞ்சின் மீது கைகட்ட வைத்து அவர்களின் வணக்கவழிபாடுகளை பாழடித்துக் கொண்டிருக்கிறார்கள் வஹ்ஹாபிசமுல்லாக்கள்.அப்பாவி இளைஞர்களே! ஆதாரபூர்வமான ஹதீள்தைமட்டுமே பின்பற்றுவோம் என்பதில் நீங்கள் உறுதியாகஇருந்தால் இப்போதிலிருந்து தொழுகையில் நெஞ்சின் மேலேகைகட்டுவதை விட்டுவிடுங்கள்!

 ஏனென்றால்,சிமாக்இடம்பெறும் ஹதீஃத் பக்கா பலவீனமான ஹதீஃத்.வஹ்ஹாபிய புரோகிதர்களையே பின்பற்றுவோம் என்றநிலையிலிருந்தால் மறுமை வாழ்வு என்னாகும் என்பதைஒரு கனம் யோசியுங்கள்!அறிவிப்பாளர் வரிசையில் சிமாக் இடம் பெற்ற ஹதீஃதைப்பின்பற்றுவதிலிருந்து பின் வாங்கமாட்டோம்,தொழுகையில்நெஞ்சின் மீது கைகட்டுவதை விடமாட்டோம் என்பதில்வஹ்ஹாபி இளைஞர்களே! நீங்கள் பிடிவாதமாக இருந்தால்!

 இன்றிலிருந்து புதிய முறையில் நீங்கள் கைகட்டவேண்டும்.நெஞ்சின் மீது இருகைகளையும் வைக்கக்கூடாது.ஒரெவொருகை மட்டுமே நீங்கள் வைக்கவேண்டும்.காரணம், நெஞ்சின்மீது கைவைப்பதற்கு நீங்கள் ஆதாரமாக எடுத்த அஹ்மதிலேபதிவுசெய்யப்பட்ட ஹதீஃத்தில் ஒரு கை வைப்பதற்குண்டானவார்த்தையே இடம்பெற்றுள்ளது. ‘ ஹாதிஹீ ‘ என்றவார்த்தை தான் அது.அதன் பொருள் இந்த(கை) என்பதாகும்.

 ஆகவே,நெஞ்சின்மீது வலது கையை மட்டும் வையுங்கள்!அல்லது இடது கையை மட்டும் வையுங்கள்!அது எப்படி ஒரு கையை வைப்பது?தொழுகையில் இவ்வாறுசெய்வது அழகிய நடமுறை அல்லவே என நீங்கள் கூறினால்அந்த ஹதீஃதை ஆதாரமாகக் கொண்டு நெஞ்சின்மீது கைகட்டுவதை நிறுத்திவிடுங்கள்! அதுதான் நீங்கள் நியாயவாதி-கள் என்பதின் அடையாளம்.அவ்வாறில்லாமல் அந்த ஹதீஃதில் இடம் பெற்ற ‘ நெஞ்சின்மீது ‘ என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். ‘ஒரு கை ‘என்பதை விட்டுவிடுவோம் என்ற முடிவுக்கு நீங்கள் வந்தால்வஹ்ஹாபி இளைஞர்களே!உங்களின் சுயநலத்திற்காகஹதீஃதை சிதைத்த குற்றத்திற்கு உள்ளாகுவீர்கள் என்பதைமறந்துவிடாதீர்கள்!நேர்வழிகாட்ட அல்லாஹ் போதுமானவன்

நவீனவாதிகளின் அறியாமையும் குழப்பமும்.

நவீனவாதிகளின் அறியாமையும் குழப்பமும்.


 ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு இதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்திருக்கிறார்களா? என்ற வினாவை எழுப்பி இல்லை என்று பதில் கிடைத்தால், 'அவ்வாறாயின் அது பித்அத். எல்லா பித்அத்களும் தீய வழிகள். தீய வழிகள் எல்லாம் நரகத்தில்தான்' (உமர்,உதுமான் ரலியல்லாஹு அன்ஹுமா நரகத்தில்தான்) என்று நவீனவாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். இது பெரிய அபாயமாகும். பித்அத் என்பதின் மரபுப் பொருளை (இஸ்திலாஹிமஃனா அர்த்தம்)விளங்காமல் இருப்பதே இதற்கு காரணம். குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ, அதர் (ஸஹாபாக்களின் நடைமுறை) ஆகிய நான்கு ஆதாரத்திற்கும் எதிராக, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்குப் பின் தோன்றிய 'ஷரீஅத்' என்று கருதப்படும் செயல்களே பித்அத்(தானவை) என்று முன் விவரிக்கப்பட்டுள்ளது.


 இதிலிருந்து ஒரு செயலுக்கு பித்அத் என்று பெயர் சொல்ல வேண்டுமெனில் ஸஹாபாக்களின் நடைமுறையையும் ஆராய வேண்டும். மேலும் அந்தச் செயல் மேற்குறிப்பிட்ட குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ, அதர் என்ற நான்கு ஆதாரங்களுக்கும் முரண்பட்டுள்ளது என்பதும் ருசுவாக வேண்டும் என்பதும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


 குழப்பவாதிகள் பித்அத் என்பதற்கு பெருமானாரின் காலத்தில் இல்லாதது என்பதோடு நிறுத்திக் கொள்கின்றனர்இ ஸஹாபாக்களை ஏற்க மறுக்கின்றனர். ஸஹாபாக்களின் அதர் உட்பட உள்ள நான்கு ஆதாரங்களுக்கும் எதிரிடையாக இருந்தால்தான அது பித்அத் என்பதை அவர்'கள் அறியவில்லை. இதனால்தான் குழப்பங்கள் தலை தூக்குகின்றன.


 ஸஹாபாக்களும், சான்றோர்களும் சென்ற பாதையே சரியான பாதை:

 சங்கைமிகு ஸஹாபா பெருமக்ககளுக்கு மாபெரும் மதிப்பும் பதவியும் இருந்திருக்கின்றன என்பது குர்ஆன், ஹதீஸைக ஆராய்ந்தால் நன்கு புலப்படும்.


 ஹக்கையும், பாத்திலையும் (மெய்யையும், பொய்யையும்) கலந்து, ஆயத்து ஹதீதுகளுக்கு பொருளும், கருத்தும் கூறுகின்ற ஒரு வகுப்பினர் இ.ன்று நம்மிடையே உள்ளனர். இந்தக் கலப்பு சித்தாந்தம் இந்த துர்ச்செயல், பல நூற்றாண்டுகள் பழமையானதாகும். முந்தய சமுதாயங்களிலும் இந்த துர்ப்பழக்கங்கள் நடைமுறையில் இருந்திருக்கிறது. இந்தப் பழக்கமுடையவர்கள் காலப்போக்கில் பற்பல குழுக்களாக உருவெடுத்துள்ளனர். இதுபற்றி நபிகள் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்திருப்பதை சிந்திப்போம்.


 'உங்களுக்கு முன் சென்றவர்கள் 72 வகையினராகப் பிரிந்தனர். நீங்கள் 73 வகையினராகப் பிரிவீர்கள்.' –அல்ஹதீஸ் திர்மிதி.


 எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' அவர்களின் சமுதாயத்திலும் மார்க்க விஷயர்தில் சுய அபிப்பிராயத்தை செலுத்துபவர்கள்-பிரமாணங்களுக்கு துர்வியாக்கியானம் செய்பவர்கள் பல குழுக்களாக உருவெடுப்பார்கள் என்பதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தீர்க்க தரிசனம் செய்திருப்பதை இங்கு பார்க்கிறோம்.


 தொடர்ந்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது 'உரு வகுப்பினரைத் தவிர மற்ற 72 வகுப்பாரும் நரகத்திற்குரியவர்கள்' என்'றார்கள். இதனைக் கேட்ட ஸஹாபா பெருமக்கள் 'சுவனத்திற்கு உரித்தான அந்த வெற்றிக்குரிய வகுப்பினர் யார்?' என்று வினவினார்கள். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய பதில் மிக முக்கியமானது. இதை நாம் மிக்க கவனத்துடனும் ஆழ்ந்த சிந்தனையுடனும் விளங்கி மனதில் நிறுகத்திக்கொள்ள வேண்டும்.

 ஸஹாபாக்களின் கேள்விக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் சொன்னார்கள்: 'நானும் என் சஹாபாக்களும் கொண்டிருக்கிற கொள்கையைப் பற்றிப்பிடிக்கிறவர்கள்'. (திர்மிதி)


 இஸ்லாமின் மூலப்பிரமாணம் தூய குர்ஆன் ஷரீபேயாகும். அதன் விரிவுரையாளரும், அதனை செயல்படுத்திக் காட்டியவர்களும் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களேயாவார்கள். அவர்களின் வாழ்வு முழுக்க முழுக்க திருக்குர்ஆனாகவே இருக்கின்றது. அந்த பரிசுத்தமான வாழ்க்கை முறையை பின்பற்றி நடக்க கடமைப்பட்டவர்கள்தான் முஸ்லிம்கள். ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களி;ன் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்று, பின் தலைமுறையினருக்கு எப்படி விளங்கும்?


 மகான்களான ஸஹாபாக்கள் பெருமானாரின் வாழ்க்கைமுறையை சிறிதும் பிசகாமல் அப்படியே பின்பற்றினார்கள். அவர்களைப் பின்பற்றி நடப்பதின் மூலம்தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கைமுறையை நாமும் மேற்கொள்ள முடியும். ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு ஒன்றாக இருந்து அவர்களது நடைமுறைகளை இடைவிடாது கவனித்து தம் வாழ்க்கiயிலும் அவற்றை ஜொலிக்கச் செய்ய ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மையையே கொண்டிருந்தார்கள். அந்த ஸஹாபா பெருமக்கள் இல்லாமல் நமக்கு இஸ்லாம் எங்கிருந்து கிடைக்கும்? அதனால்தான் (ஸஹாபாக்களை தவிர்த்து இஸ்லாமில்லை என்பதால்தான்)


 'நானும் என் ஸஹாபாக்களும் மேற்கொள்கின்ற வழிமுறைதான் ஈடேற்றத்திற்குரியது' என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்'கிச் சொன்னார்கள்.


 மாபெரும் மதிப்பையும் சிறப்பையும் அல்லாஹுதஆலா ஸஹாபாக்களுக்கு கொடுத்துள்ளான் என்பதை திருக்குர்ஆன் 9:100ல் கண்டோம்.


 பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், ஸஹாபாக்களுக்குள்ள பெருமதிப்பை விளக்கிச் சொல்லி இருக்கிறார்கள் என்பதை மேலே கண்டோம். ஆனால் இந்த நவீனவாதிகளோ ஸஹாபாக்களை சாதாரண மனிதர்களாகவே கருதுகின்றனர். இது ஒரு குருட்டுத் திமிராகும்.

 நவீன வாதிகளில் ஒருவர் சொல்கிறார். 'நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு எந்த மனிதரையம் ஹக்கின் உரை கல்லாக ஆக்கிக்க கொள்ள கூடாது. யாரையம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக கருதவும் கூடாது'. இந்த வாக்கியத்தின் மேலோட்டமான கருத்து விபரீதமாகத் தோன்றாது. என்'றாலும் இதன் உள்நோக்கம் வார்த்தையில் சங்கைமிகு ஸஹாபாக்களும் சத்திய சீலர்களான இமாம்களும் உள்ளடக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும்.

 ஸஹாபாக்களையும், இமாம்களையும் ஒதுக்கி விடவேண்டும் என்ற கருத்தை இவ்வாக்கியம் வெளியிடுகிறது.


 ஆனால் ஸஹாபாக்களையும், இமாம்களையும் ஒதுக்கிவைத்து விட்டு இஸ்லாமை விளங்க முடியும் என்ற பேச்சு எத்தகைய மூடத்தனமானது என்பதையும், ஸஹாபாக்களையும் இமாம்களையும் பாலமாகக் கொண்டுதான் நாம் இஸ்லாமை விளங்கிக் கொள்ள முடியும். அதுவே இஸ்லாமை அதன் தூய வடிவில் காண்பதற்கான வழி என்பதையும் நாம் தெளிவாகவே மேலே விவரித்திருக்கிறோம்;..


 மேலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நவீனவாதியின் கருத்திலிருந்து பெருமானாரைத் தவிர்த்து மற்றவர்களையும் (ஸஹாபாக்களையும் கூட) எப்படியும் விமர்சிக்கலாம், அவர்களைப் பற்றி எப்படியும் கருத்துக் கூறலாம் என்ற அபாயகரமான அனுமதி வழங்கப்படுகின்றது. சஹாபாக்களின் அந்தஸ்த்தை அறிந்து அவர்கள் விஷயத்தில் முஸ்லிம்கள் கைகொள்ள வேண்டிய எச்சரிக்கையுணர்வு இங்கே சிதறடிக்கப்படுகிறது. சஹாபாக்களின் விஷயத்தில் எத்தகைய எச்சரிக்கையுணர்வு கொள்ள வேண்டும். அப்படியில்லாதபோது என்ன விளைவு ஏற்படும் என்பதை நாம் அறிந்திருக்கிற பல ஆயத்து, ஹதீதுகள் விபரிக்கின்றன.

 யுகமுடிவு காலம்வரை இந்த உண்மை மார்க்கம் நிலைபட வேண்டும் என்ற எண்ணத்தில் ஸஹாபாக்கள் தம் சீடர்களான தாபியீன்களுக்கும், தாபியீன்கள் தம் சீடர்களான தபஉத்தாபியீன்களுக்கும் குர்ஆன் ஹதீதுகளின் விளக்கங்களை பூரணமாகக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்கள்தான் நம்முடைய முன்மாதிரிகள். அவர்கள் நடந்து காட்டியதுதான் சரியான இஸ்லாம். அவர்கள் வாழ்ந்த காலத்தைத்தான் 'உத்தம காலகட்டம்' என்று பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வர்ணித்திருக்கிறார்கள்.


 'காலங்களில் மிகச் சிறந்தது என் காலம். அடுத்தது எனக்குப் பின்னால் உள்ளவர்கள் காலம். அதற்கும் அடுத்தது அவர்களுக்குப் பின்னால் வருபவர்களது காலம்'. (புகாரி, முஸ்லிம்)


 சஹாபாக்களும், தாபியீன்களும் தங்களது சீடர்களுக்கு இஸ்லாத்தை கற்றுக் கொடுத்தது போலவே தபஉத்தாபியீன்கள் மார்க்கச் சட்டங்கள் ,கொள்கைகள் அனைத்தையும் தமது சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இவ்வாறே குருசீடர் பரம்பரையாக பல்வேறு தலைமுறைகளைத் தாண்டி இன்று நம்மிடம் வந்துள்ளது. இந்தப் பரம்பரையில் உள்ளவர்கள் மேதைகளும், மகான்களும், கண்ணியமிக்கவர்களும், ஆழ்ந்த பக்தியுடையவர்களும், பேணுதல்மிக்கவர்களுமாவார்கள். எவ்வித ஏற்றமும், இறக்கமும் இல்லாமல் புனித மார்க்கத்தை அதன் தனி உருவத்தோடு பின் தலைமுறையினருக்குச் சமர்ப்பித்து விட்டார்கள். இந்த அறிஞர் பரம்பரையைத் தான் 'நபிமார்களின் வாரிசுகள்' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வர்ணித்தார்கள்.


 இன்று நம்மிடமிருக்கிற மார்க்க நடைமுறைகள் முழுவதும் ஒன்று சேர்க்கப்பட்ட நிலையில் மேற்குறிப்பிட்ட பேரறிஞர் பரம்பரையில் வந்ததாகம். அவற்றில் பிக்ஹ் சட்டங்கள் இமாம் ஷhபியீ, இமாம் அபூஹனீபா, இமாம் மாலிகி, இமாம் அஹ்மது ஆகிய நால்வர் வழியாகவும், கொள்கைச் சட்டங்கள் இமாம் அஷ;அரீ, இமாம் மாதுரீதி ஆகிய இருவர் வழியாக மட்டுமே வந்தன. அந்தப் பரம்பரையிலுள்ள மற்ற மேதாவிகளின் வழியாகச் சட்டங்களும், கொள்கைகளும் முழுமையாக ஒன்று சேர்க்கப்பட்டதாக ஆதாரங்கள் இல்லை. எனவே இன்றைய முஸ்லிம்கள் பிக்ஹ் சட்டங்களில் மேற்கூறிய நான்கு மத்ஹபுகளில் ஒன்றையும், கொள்கைக் கோட்பாடுகளில் பின்னருள்ள இரண்டு வழிகளில் ஒன்றையும் ஏற்றுக் கொள்வது கட்டாயக் கடமையாக இருக்கிறது.

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஸஹாபாக்கள், தாபயின்கள் வழியாக பரம்பரையாக வந்தவைகளில் எதையும் தள்ளிவிட்டு நாமும் நம்முடைய சாலிஹீன்களான முன்னோர்களும் கேள்விபட்டிராத விஷயங்களை யாராவது நம்மிடம் சொன்னால் அதுபோது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய எச்சரிக்கைப் பொன்மொழி எப்போதும் ஒரு மாபெரும் வழிகாட்டியாகவே உங்களுக்கு இருக்க வேண்டும்.


 'இறுதி காலத்தில் தஜ்ஜால்கள் (அதிகமாகப் பொய்ப்பிரச்சாரம் செய்பவர்கள்) நீங்களும், உங்களது மூதாதையர்களும் கேள்விப்பட்டிராத பலவற்றையும் உங்களிடம் கொண்டு வருவார்கள். அவர்களிடமிருந்து உங்களை நீங்கள் மிகக் கவனமாகக் காத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களை குழப்பாமலும், வழிதவறச் செய்யாமலும் இருக்கட்டும்.'


 -முஸ்லிம், மிஷ்காத் பாகம் 1 பக்கம் 28.