Popular Posts

Monday 25 April 2016

திருகுர்ஆன் மற்றும் ஹதிஸ்களின் வழியில் சுப்ஹான மவ்லித்

திருகுர்ஆன் மற்றும் ஹதிஸ்களின் வழியில் சுப்ஹான மவ்லித்..

 தொடர் - 01

 இன்று சிலர் ஸுப்ஹான மவ்லிது என்ற கிதாபை வைத்துக் கொண்டு, ஸுப்ஹான மவ்லிது தவறு என்று விமர்ச்சனம் செய்கின்றனர், உண்மையில் அவர்கள் குர் ஆன், ஹதிஸ்களில் ஞானம் இல்லாமல் உண்மையான விளக்கத்தை தவறாக புரிந்து கொண்டு மற்றும் தெரிந்து கொண்டு மக்கள் இடையே தவறாக விமர்ச்சனம் செய்து வருகின்றனர், இன்ஷா அல்லாஹ் ஸுப்ஹான மவ்லித்தில் இடம் பெற்றிருக்கும் வார்த்தைகள் குர் ஆன், ஹதிஸ் மற்றும் ஆதரபூர்வமான நூல்களில் இருந்து தான் தொகுக்கப்பட்டுள்ளது தான் என புரிந்து கொள்வீர்கள்.

 விமர்ச்சிபவர்கள் வைக்கும் விமர்ச்சனம் :

 பாவங்களை நபிகள் நாயகம் மன்னிக்க முடியுமா

 كَفِّرُوْا عَنِّيْ ذُنُوْبِيْ
 وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

 என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்!
 என் தீமைகளை அலட்சியம் செய்யுங்கள்!
 ‘யா நபி (நபியே!)’ என்று அழைத்துப் பாடப்படும் முதல் பாடலின் சில வரிகள் இவை.

 يَا مَنْ تَمَادَى وَاجْتَرَمْ
 تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ
 وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ

 குற்றமும் பாவமும் செய்து விட்டவனே!
 மன்னிப்புக் கேள்! குற்றத்தை ஒப்புக்கொள். அருளை எதிர்பார்.
 சரணடைந்து விடு! (இத்தனையையும் ஹரமில் (மதீனாவில் தங்கியுள்ளவர்களிடம் கேள்!’

 சல்லூ அலாகைரில் இபாத்’ என்ற பாடலின் சில வரிகள் இல்லை.

 وَاعْطِفْ عَلَيَّ بِعَفْوٍ مِنْكَ يَشْمَلُنِيْ

 உங்களின் மன்னிப்பை என் மீது சொரிந்து என் மீது அருள் புரியுங்கள்.

 நமது பதில் :

 وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلاَّ لِيُطَاعَ بِإِذْنِ اللّهِ وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُواْ أَنفُسَهُمْ جَآؤُوكَ فَاسْتَغْفَرُواْ اللّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُواْ اللّهَ تَوَّابًا رَّحِيمًا

 அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள். ( திருக்குர்ஆ 4:64)

 (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். திருக்குர்ஆன் 3:31)

No comments:

Post a Comment