Popular Posts

Saturday 23 April 2016

#‎கஞ்சன்_காணான்_என்_திருமுகம்‬

#‎கஞ்சன்_காணான்_என்_திருமுகம்‬

 மூமீன்களின் தாய்
 எங்கள் ஆய்ஷா நாயகி
 ஆடைதனை எடுத்து
 தைப்பதற்கு ஆவலுற்று
 விளக்கேற்றி ஊசியில் நூல் கோர்க்க
 அவ்வூசி நிலம் விழும் நேரம்
 விளக்கு மணைந்து காரிருள்தான் சூழ
 நூரொளியின் திருத்தூதர்
 அல்லாஹ்வின் அருட்தூதர்
 இல்லத்தின் உள்நுழைய
 நூர் நபியின் நூரதனால்
 அவ்வில்லம் நூராய் இலங்கி ஒளிர
 அன்னையார் ஊசியைதானெடுத்து
 ஆடையையும் தைத்து புறம் வைத்து
 அன்பரே உங்கள் முக அழகை
 என்னென்பேன் என்னென்பேன்
 என்றே வியந்து நிற்க
 கஞ்சன் காணான் ஆய்ஷாவே
 என் முக அழகை என்ற
 அருள் வாக்கை ஏந்தலர் எடுத்தோத
 கண்ணாளரே காட்டுங்களேன் அக்கஞ்சனை எங்களுக்கும்
 என்றன்னை கெஞ்சி நிற்க
 யார் என் பெயர் கேட்டும்
 ஸலவாத் என் பேரில் கூறானோ
 அவனே அக்கதி கெட்டக் கருமியென
 காருண்ய நபி இயம்பி
 அகம் இருண்ட அவன் ஒருபோதும் காணான் என் திருமுகம்
 என்றோதி ஜோதியாம் நன்நபி
 நம்மையும் விழிப்படைய வைத்தனரே
 صَلَّى للهُٰ عَلَيْهِ وَ سَلَّمْ

 கண்ணின் கருமணியே... கருத்தின் திருமணியே யாரஸூலல்லாஹ் ... ஸல்லு அலன் நபி صلى الله عليه و سلم
 — with Mailof Islam and Ahamed Bilal.

No comments:

Post a Comment