Popular Posts

Saturday 23 April 2016

வஹாபிசம் வேண்டாம் வஹ்ஹாபிய தோற்றம் 02 (தொடர்ச்சி) பிரிட்டிஷ் உளவாளி ஹம்ரே கூறுகிறான்.

வஹாபிசம் வேண்டாம்
வஹ்ஹாபிய தோற்றம் 02 (தொடர்ச்சி)

 பிரிட்டிஷ் உளவாளி ஹம்ரே கூறுகிறான்...

 இந்த கிழக்கிந்திய கம்பெனி தன்னை ஒரு வியாபாரக் கம்பெனிபோல் காட்டிகொண்டாலும் அந்தரங்கத்தில் இது ஒரு உளவு ஸ்தாபனமாக இயங்கி வந்தது.இன்னும் வர்த்தகம் என்னும் பெயரில் இக்கம்பெனி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அகப்பட்ட நாடுகளில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவும் நோக்கம் கொண்டிருந்தது.மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தனது கிளைகளை பரப்ப திட்டமிட்டிருந்தது.

 அந்நாளில் தெற்காசிய நாடுகளில் தனது கால்களை பதித்த பிரிட்டிஷ் அரசு அந்நாட்டு மக்களையோ அதனை சுற்றியுள்ள மத்திய கிழக்கு நாடுகளோ தனக்கு எதிராக செயற்படும் என்ற விஷயத்தில் சிறிதும் பயம் அற்று இருந்தது.காரணம் அந்நாட்டு மக்களிடையே இருந்து வந்த ஜாதி மத வேறுபாடு அம்மக்களை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக குரல் கொடுக்க அவசியமளிக்காமல் இருந்தது.

 இந்த நிலையில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட நாடுகளில் உள்ள மக்களிடையே இந்த ஜாதி மத குழப்ப நிலையை அவர்கள் மத்தியில் நிரந்தர படுத்தவும் ,அவர்கள் சுதந்திர தாகம் குறித்த பிரச்சினையை துவக்கினால் அதை முளையிலே கிள்ளி எறிவதற்குரிய முயற்சிகளும் முடுக்கிவிடப்பட்டன.

 இவ்வாறு வகுக்கப்படும் திட்டங்கள் மிக நீண்ட காலத்திற்கு அம்மக்களிடையே பிரிவினை ,அறியாமை ,நோய்கள்,வறுமை போன்றவற்றில் அவர்கள் அமிழ்ந்து கிடப்பதற்குரிய நிலைகளைக் கொண்டதாக வகுக்கப்பட்டன.

 இப்படிப்பட்ட அறியாமைவாதிகளிடையே பரவியிருந்த மௌட்டீகத்தில் நீந்திச்சென்று அவர்களை எங்களின் கட்டுபாட்டிற்கு கொண்டுவந்தோம்.இதற்காக எங்களுக்கு சொல்லப்பட்ட உபதேசம் நோயாளியை அவரது நிலையிலேயே நிறுத்தி வைத்தல்,பொறுமையை கைவிட்டு விடாதிருத்தல்,இதனால் அக்கசப்பான ,மருந்தை (நமது ஆட்சியை) முடிவில் அவர்களாகவே விரும்ப துவங்கிவிடுவர்.

 இது போன்றே மேற்கண்ட நோயால் பீடிக்கபட்டிருந்த உஸ்மானிய பேரரசை சேர்ந்த அதிகாரிகளிடம் பல்வேறு கோரிக்கைகளில் அவர்களின் கையொப்பங்களை வாங்கி வைத்திருந்தோம்.

 தொடரும்.

No comments:

Post a Comment