Popular Posts

Saturday 23 April 2016

கருங்கற்கலாலும், சுண்ணாம்பாலும், மதில் எழுப்பினார்கள். எனினும் ஜியாரத் செய்பவர்களுக்கு தெறியும் அளவே மதில்களின் உயரம் இருந்தன.

கருங்கற்கலாலும், சுண்ணாம்பாலும், மதில் எழுப்பினார்கள். எனினும் ஜியாரத் செய்பவர்களுக்கு தெறியும் அளவே மதில்களின் உயரம் இருந்தன. நபி (ஸல்) அவர்களின் கப்ரின் பரக்கத்தை நாடி கப்ருக்கு அருகில் இருக்கும் மண்ணை எடுச்துச் செல்ல ஆரம்பித்தனர். இவ்வாறு மண்ணை எல்லோரும் எடுத்தால் நாளடைவில் நபி (ஸல்) அவர்களின் கப்ரை சுற்றி பெரும் பள்ளம் ஏற்பட்டு, புனிதமிகு ரவ்ளாவுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் எனப்பயந்த ஆயிஷா (ரளி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் ரவ்ளாவைச் சுற்றி சிறிது உயரமாக மதில் எழுப்பும்படி சொல்லி அவ்வாறே மதில்கள் கட்டப்பட்டன. இம்மதில்களில் நபி (ஸல்) அவர்களின் கப்ரு தெரியும்படி துவாரம் வைக்கப்பட்டது. இந்த ஜன்னல் போன்ற துவாரம் வழியாகவும் மக்கள் பரக்கத்தை வேண்டி மண்ணை எடுக்க ஆரம்பித்தார்கள். இதனால் ஜன்னல் போன்ற துவாரமும் அடைக்கப்பட்டது. (வஃபாவுல் வஃபா 2: 544)
 பின்னர், அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரளி) அவர்களின் ஆட்சி காலத்தில் மேற்கண்ட மதில்கள் மிகவும் உயரமாக இல்லாததால் அவற்றை நல்ல உயரமாக கட்டினார். அபூபக்கர் (ரளி), உமர் (ரளி) ஆகியோரின் புனிதமிகு கப்ருகளையும் அதைச்சுற்றி சுவர்கள் எழுப்பும் விஷயத்திலும் எடுத்துக் கொண்டார்கள் என அனஸ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்.
 நபி (ஸல்) அவர்களின் கப்ரு இருந்த இடத்தை சுற்றி முதன் முதலில் சுவர் எழுப்பியவர் உமர் (ரளி) ஆகும். இந்த சுவர்கள் உயரம் குறைவாய் இருந்ததால் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரளி) அம்மதில்கைள உயரமாகக் கட்டினார்கள். (ஐனீ 4:252, வஃபாவுல் வஃபா 2: 544)
 உமையாக்கள் ஆட்சிகாலத்தில் உமர் பின் அப்துல் அஜீஜ் (ரளி) அவர்கள் மதீனாவின் கவர்னராக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு கப்ரு ஷரீஃபை சுற்றியிருந்து மதில்கள் பலமில்லாமல் போகவே அம்மதில்களிலிருந்து சற்று இடைவெளிவிட்டு, சுற்றுச்சுவர் கட்ட ஏற்பாடானது. இவ்வாறு புணருதாரம் செய்ய, நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களின் வீடுகளை வாங்கி விரிவாக்கம் நடந்தது. இவ்வாறு நபி (ஸல்) அவர்களின் மினிதமிகு ரவ்ளா ஷரீஃபின் வெளிச் சுவர்கள் கட்டப்பட்டபின்பு உட்சுவர்கள் இடிக்கப்பட்டன. அப்போது இதன் அதிர்வு தாங்காமல் நபி (ஸல்) அவர்கள், அபூபக்கர் (ரளி), உமர் (ரளி) அடக்கப்பட்டிருந்த கப்ருகளின் சுற்றுப்புறத்தின் ஒருபகுதி இடிந்து சரிந்து விட்டது. இதேபோல் கப்ரின் ஒருபுறமிருந்து மண்திட்டும் சரிந்ததால் கப்ரிலிருந்து முழங்கால் முதல் பாதம் வரை ஒருவரின் கால்பகுதி வெளியே தெரிந்தது. இது நபி (ஸல்) அவர்களின் கால்தான் என பதறித்துடித்து ஆச்சரியப்பட்டு துக்கத்துடன் அழுது கூக்குறலிட ஆரம்பித்தனர். கூட்டமும் வெகுவாக கூட ஆரம்பித்தது. அப்போது அங்கிருந்த உர்வா (ரளி) அவர்கள் இது நபி (ஸல்) அவர்கள் கால் அல்ல. இது நிச்சயமாக உமர் (ரளி) அவர்களின் கால்தான் எனத் தெரிவித்து மக்களின் துயரை துடைத்தார். இந்நிகழ்ச்சி உமர் பின் அப்துல் அஜீஜ் (ரளி) அவர்களின் முன்னிலையிலே நடந்தது. மீண்டும் உமர் (ரளி) அவர்களின் புனிதமான கால் கப்ரில் உள்புறம் வைக்கப்பட்டு

 கப்ருகள் கட்டப்பட்டன. (ஐனீ 4:251, பத்ஹுல் பாரி 3:165, ஹயாதுஸ் ஸஹாபா 22-23, தஹ்தீபுத் தஹ்தீப் 7: 475-477)
 حدثنا فروة ، حدثنا علي ، عن هشام بن عروة ، عن أبيه لما سقط عليهم الحائط في زمان الوليد بن عبد الملك أخذوا في بنائه فبدت لهم قدم ففزعوا وظنوا أنها قدم النبي صلى الله عليه وسلم فما وجدوا أحدا يعلم ذلك حتى قال لهم عروة لا والله ما هي قدم النبي صلى الله عليه وسلم ما هي إلا قدم عمر ، رضي الله عنه. (بخارى-1390)
 அப்தில் மலிக்கின் (ஆட்சிக்) காலத்தின்போது நபி(ஸல்) அடக்கம் செய்யப்பட்ட அறையின் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. அதைப் புனர் நிர்மாணம் செய்வதில் மக்கள் ஈடுபட்டபோது ஒரு பாதம் வெளியில் தெரிந்தது. உடனே மக்கள் பதறிப் போய் அது நபி(ஸல்) அவர்களின் பாதமாக இருக்குமோ என நினைத்தனர். இது பற்றித் தெரிந்தவர் யாருமில்லாதிருந்தபோது நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது நபி(ஸல்) அவர்களின் பாதமே இல்லை; மாறாக, இது உமர்(ரலி) அவர்களின் பாதகமாகும் என்றேன்" என உர்வா கூறுகிறார். (புகாரி:1390)
 அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரளி) அவர்களால் கட்டப்பட்ட மதில்கள் பலமானதாக நிர்மாணிக்கபட்டு, அதன் மேல் தளம் எழுப்பப்பட்டது. கப்ரின் மேற்பகுதி அழகான வேலைப்பாடுகள் உள்ள மரக்கட்டைகள், பலகைகளைக் கொண்டு வேயப்பட்டது. அதன் பின் கலீஃபா ஹாரூன் ரஷீதின் காலத்தில், நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு கப்ரின் மேல் மரத்தால் கட்டப்பட்ட பகுதி திறக்கப்பட்டபோது அதில் 193 வேலைப்பாடு மிக்க மரக்கட்டைகள் இருந்தன. அவை 70 கட்டைகள், உத்திரங்கள் முறிந்து சிதிலமடைந்திருந்தன. அவைகளுக்கு பதிலாக 70 புதிய கட்டைகள் மாற்றப்பட்டன. புனிதமிகு கப்ரின் அறையின் மதில்கள் அழகான பாலிஷ் செய்யப்பட்ட கற்கலால் கட்டப்பட்டன.
 பின்னர் ஹிஜ்ரி 232-ல் கலீஃபா முத்தவக்கில் காலத்தில் நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு கப்ரை சுற்றியுள்ள மதில்களின் வெளிப்புறமும், உட்புறமும் வெள்ளை பளிங்கி கற்கள் பதிக்கப்பட்டு மிக நேர்த்தியான வேலைப்பாடுகளால் ;;அல்ஹுஜரதுஷ் ஷரீஃபா'' அழகுப் படுத்தப்பட்டது.
 பின்னர் கலீஃபா முக்தபீ பில்லாஹ் அவர்களின் ஆட்சிகாலத்தில் ஹிஜ்ரி 548-ல் மேலும் பளிங்கிக் கற்கள் பதிக்கப்பட்டு சிதிலம் அடைந்தப் பகுதியை நீக்கப்பட்டு, செப்பனிடப்பட்டு நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு கப்ரு, அபூபக்கர் (ரளி), உமர் (ரளி) ஆகியோர்கள் கப்ருகள் இருந்த அறை, அதை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்தும் புணர்தானம் செய்யப்பட்டு பளிங்கிக் கற்கள் பதிக்கப்படடுள்ளன.
 பின்னர் ஹிஜ்ரி 654-ல் வருடம் ரமலான் மாதம் முதல் நாள் அன்று, நபி (ஸல்) அவர்கள் அடங்கியிருக்கும் மஸ்ஜிதுன் நபவியின் மனாராவில் விளக்கு ஏற்றுவதற்காக சென்ற ஒருவர் தன்னுடன் கொண்டு சென்ற தீவட்டியை மறந்து மனாராவிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். அதன் தீ மனாராவில் சுற்றி வடிந்து காலாகாலம் தரையிலும் பரவியிருந்த எண்ணை வடுக்களில் பற்றி தீ பரவியது. புற்றி எறிந்த தீ, பள்ளிவாசல் மேல் தளத்தை இரையாக்கி, எங்கும் பரவிய தீ, மஸ்ஜிதுன் நபவியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு கரித்து துவசம் செய்தது. இத்தீ விபத்தில், நபி (ஸல்) அவர்களது புனிதமிகு கப்ர், அபூபக்கர்-உமர் (ரளி) ஆகியோர்கள் கப்ர், உதுமான் (ரளி) ஓதிய குர்ஆன் ஆகியை மட்டும் எரியவில்லை.
 ஹிஜ்ரி 650-ஆம் ஆண்டு, எகிப்து மன்னர் நூருத்தீன் ஜன்கீ, யமன் நாட்டு மன்னர் ஷம்சுத்தீன் யூசுஃப் ஆகியோர் கட்டுமான பொருட்களை அனுப்பி ரவ்ளா, மற்றும் மஸ்ஜிதுந் நபவியின் கட்டுமானப் பணியை தொய்வில்லாது நடைபெறும்படி செய்தனர். புpன்னர் ஹிஜ்ரி 658-ல் எகிப்தின் மன்னர் ருக்னுத்தீன் பைப்ரஸ் அவர்கள், ரவ்ளா மற்றும் மஸ்ஜிதுன் நபவியின் விடுபட்ட பகுதியின் கட்டுமானத்திற்காக பொருட்கள், 53 கட்டப் பொறியாளர்களையும் ஜமாலுத்தீன் ஸாலிஹ் என்பவரின் தலைமையில் மதீனாவிற்கு அனுப்பி அவைகைள அழகுடன் நிர்மாணிக்கப்பட்டு புதுப்பொழிவுடன் ஆக்கினார்கள்.

No comments:

Post a Comment