Popular Posts

Saturday 23 April 2016

குர்ஆன், ஹதீஸை முறையாக விளங்கா விட்டால்..!!!!அதை ஏற்க வேண்டுமே தவிர அந்த ஹதீஸை ஒதுக்கி விடக் கூடாது.

குர்ஆன், ஹதீஸை முறையாக விளங்கா விட்டால்..!!!!

 بسم الله الرحمن الرحيم

 குர்ஆனிலும், ஹதீஸிலும் சில விஷயங்கள் அறிவுக்கு எட்டாததைப் போன்று தோன்றலாம். அதற்கு நபித் தோழர்கள், இமாம்கள் என்ன விளக்கம் கூறியுள்ளார்கள் என்பதைக் கவனித்து அதை ஏற்க வேண்டுமே தவிர அந்த ஹதீஸை ஒதுக்கி விடக் கூடாது.

 1, உதாரணமாக பின்வரும் ஹதீஸில் நபி ஸல் தன் கனவில் கஃபாவை வலம் வருபவராக ஈஸா நபியை அலை காண்கிறார்கள். அதேபோல் தஜ்ஜாலையும் அவ்வாறே கஃபாவை வலம் வருபவனாக காண்கிறார்கள் மக்கா, ஹரமுக்குள் பிரவேசிக்கவே முடியாத தஜ்ஜால் எவ்வாறு கஃபாவை தவாஃப் செய்வது சாத்தியம் என்பதற்கு இமாம்கள் என்ன பதில் கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.
 عَن بْن عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَانِي اللَّيْلَةَ فِي الْمَنَامِ عِنْدَ الْكَعْبَةِ فَإِذَا رَجُلٌ آدَمُ كَأَحْسَنِ مَا تَرَى مِنْ أُدْمِ الرِّجَالِ تَضْرِبُ لِمَّتُهُ بَيْنَ مَنْكِبَيْهِ رَجِلُ الشَّعْرِ يَقْطُرُ رَأْسُهُ مَاءً وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلَيْنِ وَهُوَ بَيْنَهُمَا يَطُوفُ بِالْبَيْتِ فَقُلْتُ مَنْ هَذَا فَقَالُوا الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ وَرَأَيْتُ وَرَاءَهُ رَجُلًا جَعْدًا قَطَطًا أَعْوَرَ عَيْنِ الْيُمْنَى كَأَشْبَهِ مَنْ رَأَيْتُ مِنْ النَّاسِ بِابْنِ قَطَنٍ وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلَيْنِ يَطُوفُ بِالْبَيْتِ فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا الْمَسِيحُ الدَّجَّالُ (مسلم) بَاب ذِكْرِ الْمَسِيحِ ابْنِ مَرْيَمَ وَالْمَسِيحِ الدَّجَّالِ- كِتَاب الْإِيمَانِ
 இங்கே நபி ஸல் அவர்களுடைய கனவில் கஃபாவாக காட்டப்பட்டதை இஸ்லாம் என்று விளங்க வேண்டும். அதாவது இஸ்லாம் என்ற கட்டிடத்தை நபி ஈஸா அலை அவர்களும் வலம் வருகிறார்கள். தஜ்ஜாலும் வலம் வருகிறான். நபி ஈஸா அலை தன் ஆதரவாளர்களுடன் வலம் வருவது அந்தக் கட்டிடத்தைப் பாதுகாப்பதற்காக... ஆனால் தஜ்ஜால் வலம் வருவது அந்தக் கட்டிடத்தை த் தகர்ப்பதற்காக என்று மிர்காத் நூலில் விளக்கம் கூறப்பட்டுள்ளது
 2, சூனியம்- குர்ஆன் ஹதீஸுக்கு தோதுவாக நாம் வளைய வேண்டுமே தவிர குர்ஆன், ஹதீஸை நமக்குத் தோதுவாக வளைக்கக் கூடாது. ஆனால் இன்று சிலர் சூனியம் இல்லை என்ற பொதுவாக கொள்கையை வைத்துக் கொண்டு அது பற்றிய குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் தங்களின் கொள்கைக்குத் தோதுவாக வளைக்கிறார்கள். சில நேரம் ஒடித்தும் விடுகிறார்கள்
 3, புகாரீ, முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஒரு ஹதீஸ்- 99 கொலைகள் செய்து பின்பு அதை 100 ஆகவும் பூர்த்தி செய்த ஒரு மனிதர் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்ட போது அவரை அல்லாஹ் மன்னித்த சம்பவம் பிரபலமானது ஆனால் அதை சிலர் மறுப்பதோடு, அது எப்படி இத்தனை கொலைகள் செய்த மனிதரை அல்லாஹ் மன்னிப்பான் என்று தங்களின் அறிவை இதில் புகுத்துகிறார்கள்.குர்ஆனில் 4- 93 வது வசனத்தை காரணம் காட்டி அல்லாஹ் அவர்களுக்கு நிரந்தர நரகம் என்று கூறியுள்ள போது அந்த வசனத்திற்கு இந்த ஹதீஸ் முரண்படுவதால் நாங்கள் ஏற்க மாட்டோம் என்கின்றனர் ஆனால் அல்லாஹ் இந்த ஆயத்தில் ஒரு முஃமினை கொலை செய்தவருக்கு இந்த தண்டனை என்று மட்டுமே கூறப்பட்டுள்ளதே தவிர அவர் திருந்தி தவ்பா செய்தால் அவருடைய நிலை என்ன என்பது இங்கே கூறப்படவில்லை. மற்றொரு வசனத்தில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்
 إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا (48النساء)
 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَضْحَكُ اللَّهُ إِلَى رَجُلَيْنِ يَقْتُلُ أَحَدُهُمَا الْآخَرَ يَدْخُلَانِ الْجَنَّةَ يُقَاتِلُ هَذَا فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلُ ثُمَّ يَتُوبُ اللَّهُ عَلَى الْقَاتِلِ فَيُسْتَشْهَدُ (بخاري) باب الْكَافِرِ يَقْتُلُ الْمُسْلِمَ ثُمَّ يُسْلِمُ فَيُسَدِّدُ بَعْدُ وَيُقْتَلُ .-كتاب الجهاد
 குர்ஆன், ஹதீஸின் அனைத்து அம்சங்களிலும் அறிவைப் புகுத்த முடியுமா ?
 இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்கள் கூறும்போது மோஜா என்னும் காலுறைக்கு மஸஹு செய்யும் விஷயத்தில் என் அறிவைக் கொண்டு சட்டம் சொல்வதாக இருந்தால் கால்களின் அடிப்பகுதியில் பாதத்தில் மஸஹு செய்வது தான் சிறந்தது என்று சொல்லியிருப்பேன். ஏனெனில் அங்கு தான் அழுக்குகள் அதிகம் தேங்குகிறது. ஆனால் நபி ஸல் அவர்கள் காலின் மேல் பகுதியில் மஸஹு செய்யும்படி கூறுகிறார்கள். ஆகவே இதில் என் அறிவைப் புகுத்த எனக்குத் தகுதியில்லை. உரிமையில்லை
 அறிவு ஏற்றுக் கொண்டால் நம்புவேன் என்று கூறுவதாக இருந்தால் மிஃராஜ் இரவின் சம்பவத்தையும் மறுக்க வேண்டியது வரும். கப்ருடைய வேதனை கூட கிடையாது என்று சொல்ல வேண்டியது வரும். ஏனெனில் முஃமினுக்கு அவருடைய கப்ரு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விசாலமாகும் என்று கூறப்பட்டுள்ளது இதை அறிவைக் கொண்டு விளங்க முடியாது.
 பிறை பார்க்கும் விஷயத்தில் கூட சிலர் நபி ஸல் அவர்களின் கூற்றை ஒதுக்கி விட்டு அறிவைப் புகுத்துகிறார்கள் பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் முப்பதை பூர்த்தி செய்யுங்கள் என்று நபி ஸல் கூறியிருக்கும்போது சிலர் இதுவெல்லாம் விஞ்ஞானம் வளராத காலத்திற்கு மட்டுமே பொருந்தும் நாங்கள் செயற்கைக் கோள் மூலம் பிறையை முன்பே பார்த்து விடுவோம், மேகத்திற்கு மேல் பறந்து பிறையை நாங்கள் பார்ப்போம் என்று கூறி சிலர் குழப்பம் விளைவிக்கிறார்கள். மேகமூட்டமாக இருந்தால் முப்பதை பூர்த்தி செய்யுங்கள் என்பது தான் நபி ஸல் அவர்களின் கூற்றே தவிர அதை மீறி நாம் செயல்பட முடியாது அப்படிப் பார்த்தால் ஷரீஅத்தின் எத்தனையோ அம்சங்களை மாற்ற வேண்டியது வரும். லுஹரிலும், அசரிலும் சப்தமாக கிராஅத் ஓதாமல் மெதுவாக ஓதுவதற்கான காரணம் என்ன ? அறிவால் விளங்க முடியாது. ஒருவேளை அன்று மக்காவில் பகலில் காஃபிர்கள் பற்றிய அச்சம் இருந்தது என்று சிலர் கூறினாலும் அந்த அச்சம் நீங்கிய பிறகும் இன்று வரை லுஹரிலும், அசரிலும் மெதுவாகத் தானே ஓதிக் கொண்டிருக்கிறோம். ஹஜ்ஜின் காரியங்களில் எத்தனையோ அறிவுக்கு எட்டாதவை தான்.
 ஹதீஸின் வாசகங்களை முறையாக விளங்காமல் நபி ஸல் அவர்களே ஷிர்க் செய்பவர்களாக இருந்து, பிறகு யூதர்கள் சுட்டிக் காட்டி அந்த தவறை திருத்திக் கொண்டதாக சிலர் கூறுகின்றனர்
 عَنْ قُتَيْلَةَ امْرَأَةٍ مِنْ جُهَيْنَةَ أَنَّ يَهُودِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّكُمْ تُنَدِّدُونَ وَإِنَّكُمْ تُشْرِكُونَ تَقُولُونَ مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ وَتَقُولُونَ وَالْكَعْبَةِ فَأَمَرَهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادُوا أَنْ يَحْلِفُوا أَنْ يَقُولُوا وَرَبِّ الْكَعْبَةِ وَيَقُولُونَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ شِئْتَ (نسائ) الْحَلِفُ بِالْكَعْبَةِ- كِتَاب الْأَيْمَانِ وَالنُّذُورِ
 மேற்படி ஹதீஸில் இரண்டு விஷயங்களை சரியாகப் புரியாமல் தவறாக சித்தரிக்கிறார்கள் அதாவது நீங்களும் இணை வைக்கிறீர்கள் என்று நபித் தோழர்களை நோக்கியே அந்த யூதன் கூறியுள்ளானே நபி ஸல் அவர்களை கூறவில்லை. ஆனால் இவர்கள் நபி ஸல் அவர்களைப் பார்த்து யூதன் கூறியது போலவும் உடனே நபி ஸல் அவர்கள் ஆஹா இத்தனை நாட்கள் நாம் இணை வைத்து விட்டோமே என்று தன் தவறை திருத்திக் கொண்டதைப் போலவும் இவர்கள் சித்தரிக்கிறார்கள்.
 2, நீங்களும் இணை வைக்கிறீர்கள் என்று நபித் தோழர்களைப் பார்த்து யூதன் கூறியதும் நபி ஸல் அவர்கள் தோழர்களிடம் இனிமேல் நீங்கள் இப்படி கூறுங்கள் என்று திருத்திக் கொடுத்ததை வைத்து இத்தனை நாள் நபித் தோழர்கள் இணை வைத்திருக்கிறார்கள் என்றும கூறி விட முடியாது மாறாக அந்த யூதர்கள் தவறாக நினைக்கும் அளவுக்கு நாம் ஏன் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று தான் திருத்திக் கொடுத்தார்களே தவிர உண்மையில் முன்பு பயன்படுத்திய வார்த்தையும் தவறாக வார்த்தை கிடையாது இதில் வரும் வாவ் என்ற அரபி எழுத்துக்கும் தும்ம உடைய அர்த்தம் உண்டு மேலும் வல்- கஃபா என்பதற்கும் வரப்பில் கஃபா என்று பொருள் கொள்ள முடியும் அரபியில் சில எழுத்துக்களைப் போக்கிச் சொல்லும் பழக்கம் உண்டு ஆக இது தவறான அர்த்தம் கிடையாது எனினும் அரபி இலக்கணம் தெரியாத யூதர்கள் தவறாக நினைக்கும் அளவுக்கு நாம் ஏன் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று தான் திருத்திக் கொடுத்தார்கள்
 நபி ஸல் அவர்களின் கப்ருக்கு மேல் உள்ள பச்சை குப்பாவை இடிக்க வேண்டும் சிலர் பேசுவது பற்றி...?
 عَنْ جَابِرٍ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ.(مسلم) باب النَّهْىِ عَنْ تَجْصِيصِ الْقَبْرِ وَالْبِنَاءِ عَلَيْهِ.-كتاب الجنائز
 நபிகள் ஸல் அடக்கத்தலத்துக்கு மேல் கட்டப்பட்டுள்ள பச்சை நிற குப்பா அன்னை ஆயிஷா ரழி அதனை வீடாக பயன்படுத்திய போது இருக்கவில்லை. முதன் முதலாக சுல்தான் கலாவூன் சாலிஹி என்ற ஆட்சியாளர் ஹிஜ்ரி 678ல் மரியாதை நிமித்தமாக மரத்தால் ஆன ஒரு டூமை நபி ஸல் உடைய கப்ரின் மேல் கட்டுகிறார். அதன் பிறகு சிமெண்டால் கட்டப்பட்டு வெள்ளை வர்ணம் பூசப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு பிறகு ஹிஜ்ரி 1253ல் துருக்கி உதுமானிய சுல்தான் அப்துல் அல் ஹமீத் அந்த டூமின் மேல் பச்சை வர்ணத்தை பூசுகிறார். அதுவே இன்று வரை தொடர்கிறது. தற்போதைய ஆட்சியாளர்களிடம் சவுதியை ஒப்படைக்கும் போது 'தாங்கள் செய்வித்த மாற்றங்களை இடிக்க வேண்டாம் அப்படியே விட்டு வைத்திருங்கள்' என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
 ரவ்ழாவில் அடங்கப் பெற்றுள்ள நபி ஸல் அவர்களின் உடலைத் திருட நடந்த சதிகள்...
 1, ஹிஜ்ரீ 5-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அல்-ஹாகிம் பி அம்ரில்லாஹ் என்ற அரசனின் கட்டளைப்படி அதை மிஸ்ருக்கு எடுத்துச் செல்ல அபுல் ஃபுதூஹ் என்பர் திருட வந்தார். அப்போது ரவ்ழாவுக்கு மேலே கடுமையான காற்று வீசியது. உடனே அபுல் ஃபுதூஹ்
 தான் செய்ய வந்தது தவறு என்று உணர்ந்து மிஸ்ருக்கு திரும்பிச் சென்று விட்டார்.
 2. அதேபோல் அடுத்த தடவையும் அதே அரசன் அல்-ஹாகிம் பி அம்ரில்லாஹ் வேறு நபர்களை மீண்டும் அனுப்பி வைத்தான். அவர்கள் மறைமுகமாக கப்ரு வரை தோண்ட ஆரம்பித்தார்கள். மக்களுக்குத் தெரிய வந்த போது அவர்கள் கொல்லப்பட்டார்கள்
 3, ஹிஜ்ரீ 557-ல் அப்பாஸிய ஆட்சியின் இறுதிக் கால கட்டத்தில் முஸ்லிம்கள் எதிரிகளால் பல தாக்குதலுக்கு ஆளாயினர். பல லட்ச முஸ்லிம்களின் உயிரைக் குடித்த பின்பும் அடங்காத கிருஸ்துவ உலகம் நபி ஸல் அவர்களின் உடலை எப்படியேனும் தோண்டி வெளியே எடுக்க பல முறை முயற்சி செய்தார்கள். இறுதியில் இரண்டு கிருஸ்துவர்களை முஸ்லிம்கள் போல வேடம் தரித்து மதீனா அனுப்பி வைத்து யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு தூரத்தில் கூடாரம் அமைத்து பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி நபி ஸல் அவர்களின் கப்ரை நெருங்கும் வேளையில் அப்போது ஷாமின் ஆட்சியாளராக இருந்த சுல்தான் நூருத்தீன் ஜங்கீ ரஹ் அவர்களின் கனவில் நபி ஸல் அவர்கள் தோன்றி தனது உடலைத் தோண்டி எடுக்கும் சதியில் இந்த இருவரும் ஈடுபட்டுள்ளனர். என்று கூறி அவர்களின் உருவத்தையும் காட்டி உடனே மதீனாவிற்கு நேரடியாகச் சென்று அதை தடுத்து நிறுத்தும்படி கூற, திடுக்கிட்டு எழுந்த சுல்தான் நூருத்தீன் ஜங்கீ ரஹ் அவர்கள் உடனடியாக மதீனா சென்று ரவ்ளாவை சுற்றிப் பார்த்த போது அப்படி யாரையும் கண்டு பிடிக்க முடியவில்லை. மிகுந்த கவலையுடன் இருந்த சுல்தான் நூருத்தீன் ஜங்கீ ரஹ் அவர்களுக்கு ஒரு தந்திரம் தோன்றவே தான் கொண்டு வந்திருந்த பொருட்களை தானம் செய்வதாக அறிவித்து அதை அனைவரும் பெற்றுக் கொள்ள அறிவிப்புச் செய்தார்கள். அனைவரும் வந்து வாங்கிச் சென்றனர் ஆனால் அவர்களில் யாரும் கனவில் காட்டப்பட்ட முக ஜாடையில் இல்லை. இன்னும் கவலையுற்ற சுல்தான் நூருத்தீன் ஜங்கீ ரஹ் அவர்கள் அல்லாஹ்விடம் தொழுது ரவ்ழாவில் ஸலவாத், ஸலாம் கூறி மக்களிடம் தாம் கொடுத்த அன்பளிப்பை வாங்க அனைவரும் வந்தனரா ? என்று கேட்க, இருவர் மட்டும் வரவில்லை என்று மக்கள் பதில் கூறினார்கள். ஏன் ? என்று கேட்டதற்கு அவர்கள் பரிசுத்தமானவர்கள். பிறரிடம் எதையும் வாங்க மாட்டார்கள். எப்போதும் அவர்களின் கூடாரத்திலேயே இபாதத்தில் இருப்பார்கள். என்று கூற உடனே அவர்களின் இருப்பிடம் தேடிச்சென்று பார்த்த போது அந்த இருவர் கனவில் காட்டப்பட்ட அதே நபர்கள் தான். ஆனால் கூடாரத்திற்குள் இஸ்லாமிய நூல்கள், குர்ஆன் என இபாதத் செய்யும் இடமாகவே காட்சி அளித்தது. கூடாரத்திற்குள் சோதனையிட்ட போது தரை விரிப்புக்குக் கீழே ஒரு பலகை இருந்தது அதை எடுத்துப் பார்த்தால் அங்கிருந்து ரவ்ளா வரை பெரிய பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. பிறகு அவர்களை விசாரித்த போது முஹம்மது நபி ஸல் அவர்களின் உடலை எப்படியேனும் தோண்டி எடுத்து வர வேண்டும். என்று கிருத்துவர்கள் எங்களுக்கு அதிகமான பணம் தந்து அனுப்பினார்கள் நாங்களும் கிருஸ்துவர்கள் தான் என்பதை அவ்விருவரும் ஒப்புக் கொண்டனர் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது
 1905- ல் ரவ்ழாவின் மீதுள்ள குப்பா சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனை
 1905-ல் சவூதியைச் சேர்ந்த வஹ்ஹாபீ ஆலிம்களில் ஒருவரான முக்பில் இப்னு ஹாதி அல்-வாதியீ என்பவர் பச்சை நிற குப்பாவை இடிக்க வேண்டும் என்றும் ரவ்ழாவின் அறையை மஸ்ஜிதிலிருந்து தனியாக்க வேண்டும் என்றும் கூறியதை அடுத்து ஸவூதியின் அப்போதைய அரசர் இடிக்க முன்வந்த பொழுது இந்த விஷயம் பல இடங்களுக்கும் பரவியது அப்போது பல நாடுகளிலிருந்தும் ஆலிம்கள் சவூதி சென்று வாக்குவாதம் செய்தனர் ஆனாலும் சவூதி அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை அப்போது இந்தியாவின் மாபெரும் மாமேதை தாருல் உலூம் தேவ்பந்த் உடைய முஃப்தீ அல்லாமா ஷப்பீர் அஹ்மது உஸ்மானீ ரஹ் அவர்கள் ஸவூதிக்கு நேரடியாகச் சென்று பல மணி நேரம் விவாதம் செய்தார்கள். குறிப்பாக அன்னை ஆயிஷா ரழி அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸில் ஆயிஷாவே உன்னுடைய சமுதாயம் ஜாஹிலிய்யா காலத்தைக் கொண்டு புதியவர்களாக இல்லாதிருந்தால் குரைஷிகள் கஃபாவின் எந்தப் பகுதியை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் கட்டிய அமைப்புக்கு மாற்றமாக வெளியே வைத்துக் கட்டினார்களோ அந்தப் பகுதியை நான் உள்ளே வைத்துக் கட்டியிருப்பேன் அதன் வாசலை தரையை ஒட்டி நான் அமைத்திருப்பேன் என்ற நபிமொழியை ஆதாரமாக காட்டி உலகம் முழுவதும் இன்று ரவ்ழாவுக்கு மேல் இருக்கும் அந்த குப்பா ஒரு அடையாளச் சின்னமாக முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரபலமாகி விட்டது அதை இடித்தால் பெரிய கொந்தளிப்பு ஏற்படும். ஆகவே தேவையில்லாத ஃபித்னா ஏற்படுவதை தடுக்க குப்பாவை இடிக்காமலிருப்பதே மேல் என்று என்ற வாதத்தை முன்வைத்த பிறகே அன்றைய சவூதி அரசாங்கம் இடிக்கும் முடிவை கைவிட்டது
 عنْ الْأَسْوَدِ قَالَ قَالَ لِي ابْنُ الزُّبَيْرِ كَانَتْ عَائِشَةُ تُسِرُّ إِلَيْكَ كَثِيرًا فَمَا حَدَّثَتْكَ فِي الْكَعْبَةِ قُلْتُ قَالَتْ لِي قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا عَائِشَةُ لَوْلَا قَوْمُكِ حَدِيثٌ عَهْدُهُمْ قَالَ ابْنُ الزُّبَيْرِ بِكُفْرٍ لَنَقَضْتُ الْكَعْبَةَ فَجَعَلْتُ لَهَا بَابَيْنِ بَابٌ يَدْخُلُ النَّاسُ وَبَابٌ يَخْرُجُونَ فَفَعَلَهُ ابْنُ الزُّبَيْرِ (بخاري) باب مَنْ تَرَكَ بَعْضَ الاِخْتِيَارِ مَخَافَةَ أَنْ يَقْصُرَ فَهْمُ بَعْضِ النَّاسِ عَنْهُ فَيَقَعُوا فِى أَشَدَّ مِنْهُ .-كتاب العلم
 குறிப்பு- ரவ்ழாவின் மீதுள்ள கட்டப்பட்டுள்ள கட்டிடம் என்பது கப்ரின் மீது கட்டப்பட்டது என்று நாம் கூறி விட முடியாது ஏனெனில் அது கப்ராக ஆகும் முன்பே அன்னை ஆயிஷா ரழி அவர்களின் வீடாக கட்டிடமாக இருந்த ஒன்று தான். அதில் தான் நபி ஸல் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள் அடக்கம் செய்யப்பட்ட பிறகும் அந்த வீடு (கட்டிடம்) இருந்து வந்தது. பிறகு காலப்போக்கில் அந்த வீடு சிதிலமடைந்த போது அதை சீரமைத்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக காலத்திற்கேற்ப மாற்றிக் கட்டி இறுதியில் சுவற்றின் மேல் இருந்த முகடு குப்பா வடிவில் கட்டப்பட்டது. ஆகவே ஹுஜ்ரத்துன் நபவிய்யா எனப்படும் நபி ஸல் அவர்களின் வீடு தான் காலப்போக்கில் மாறி இப்போது குப்பா வடிவம் பெற்றுள்ளது.

3 hrs ·

No comments:

Post a Comment