Popular Posts

Monday 25 July 2016

சூனியம் விஷயத்தில் பைத்தியம் யாருக்கு?

பைத்தியம் யாருக்கு?

இந்த செய்தி சூனியத்தால் நபி (ஸல்) அவர்கள் பைத்தியமானர்கள் எனக் கூறுகிறது. நபி (ஸல்) அவர்கள் பைத்தியமில்லை என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே இதை ஏற்க முடியாது என்று கூறுகின்றனர். ஹதீஸில் இல்லாததை இருப்பதாக சொல்லும் இவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஒட்டுமொத்த ஹதீûஸயும் கவனித்து முறைப்படி விளங்காமல் ஹதீஸில் வரும் ஏதாவது ஒரு வாசகத்தை பிடித்துக்கொண்டு அநாகரீகமாக சித்தரிப்பதே இவர்களுக்கு வேலையாகிவிட்டது.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக கூறும் இந்த ஹதீஸில் வானவர்களின் சொல் நபி (ஸல்) அவர்களின் சொல் ஆயிஷா (ரலி) அவர்களின் சொல் என மூவரின் கூற்றுக்கள் அடங்கியுள்ளது.

ஹதீஸ் மறுப்பாளர்கள் இந்த ஹதீûஸ மறுப்பதற்கு இங்கே வானவருடைய சொல்லையோ நபி (ஸல்) அவர்களின் சொல்லையோ விமர்சிப்பதில்லை. மூடலாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய ஒரு வாசகத்தையே பிடித்துக்கொண்டு முழு ஹதீûஸயும் மறுக்கின்றனர்.

இந்த நீண்ட ஹதீஸில் ஒரு செயலை செய்யாமலிருந்த நிலையில் அதை செய்துவிட்டது போன்ற உணர்வு நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் சொல்லை பிடித்துக்கொண்டு ஒட்டுமொத்த ஹதீஸையும் நிராகரிக்கின்றனர்.

ஆயிஷா (ரலி) அவர்கள் எதை சொல்ல வருகிறார்கள் என்பதை பின்னர் விளக்குவோம். நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட பிறகு அவர்கள் பைத்தியமாகவில்லை. சுய நினைவோடு தான் இருந்தார்கள். அவர்களுக்கு உடல் பாதிப்பே ஏற்பட்டது என்று இந்த ஹதீஸ் தெள்ளத்தெளிவாக கூறுகிறது. இதை முதல் அறிவோம்.

சூனியத்தால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை நபி (ஸல்) அவர்கள் தானே உணரக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள். இந்த பாதிப்பை வேறு ஒருவர் சுட்டிக்காட்டி அதன் மூலம் நபியவர்கள் அறியவில்லை. மேற்கண்ட ஹதீஸில் இது தெளிவாக உள்ளது.

பைத்தியம் பிடித்தவர் தனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்பதை அறியமாட்டார். மற்றவர்கள் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார். ஆனால் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு இது தான் என்பதை ஒருவர் தானே தெளிவாக உணர்ந்துகொண்டால் அவர் நிச்சயமாக முழு தெளிவான மனநிலையில் இருக்கிறார் என்று தான் அறிவுள்ளவர்கள் முடிவுசெய்வார்கள். சூனியத்தின் மூலம் பாதிப்பிற்குள்ளான நபி (ஸல்) அவர்களும் இந்த தெளிவான மனநிலையில் தான் இருந்தார்கள். இது முதலாவது சிந்திக்க வேண்டிய விசயம்.

நல்ல மனநிலையில் உள்ள ஒரு முஃமின் தனக்கு துன்பம் ஏற்பட்டால் அல்லாஹ்விடத்தில் நெருங்கி தன் பிரச்சனையை முறையிடுவான். அறிவிலும் மார்க்கத்திலும் தெளிவாக இருப்பவர்கள் இவ்வாறு செய்வார்கள். இந்த

சம்பவத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இதைத் தான் செய்கிறார்கள். தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை அல்லாஹ்விடம் முறையிட்டு பலமுறை தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவரிடம் இதைக் காண முடியாது. இது சிந்திக்க வேண்டிய இரண்டாவது விசயம்.

நபி (ஸல்) அவர்களுக்கு கனவில் இரு வானவர்கள் வந்து உண்மை நிலவரத்தை எடுத்துச்சொல்கிறார்கள். இந்த கனவை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளில் நபி (ஸல்) அவர்கள் ஈடுபடுகிறார்கள். இதன் பின் நிவாரணமும் கிடைக்கிறது.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டு அவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தான் அவர்களுக்கு கனவில் வஹீ வருகிறது. இந்த வஹீ விசயத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு எந்த குழப்பமும் ஏற்படவில்லை. சூனியத்தின் பாதிப்பு இருக்கும் போதே தெளிவான மனநிலையோடு வஹியை செயல்படுத்துகிறார்கள். பாதிக்கப்பட்ட நிலையிலும் தூதுப்பணியை நபி சிறப்பாக செயலாற்றினார்கள். எனவே நபி (ஸல்) அவர்களுக்கு பைத்தியம் ஏற்படவில்லை. இது சிந்திக்க வேண்டிய மூன்றாவது முக்கியமான விசயம்.

வானவர்களின் வாக்குமூலம்

நபி (ஸல்) அவர்களுடைய கனவில் மனித வடிவில் வந்த வானவர் கூறிய தகவலை நாம் சிந்தித்துப் பார்த்தால் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பு உடல் பாதிப்பு தான் என்பதை சந்தேகமற அறியலாம்.

مَا وَجَعُ الرَّجُلِ

இந்த மனிதருக்கு ஏற்பட்ட உடல் பாதிப்பு என்ன?

உடல் பாதிப்பு என்று நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் வஜ்உ என்ற அரபுச் சொல் இடம்பெற்றுள்ளது. இது உடல் பாதிப்பைத் தான் குறிக்கும் என்பதை அரபு கற்ற யாரும் மறுக்க மாட்டார்கள்.

இந்த ஹதீஸை மறுப்பவர்களும் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். வஜ்உ என்ற சொல் உடல்பாதிப்பைக் குறிக்கும் என்பதை அவர்கள் மறுக்கவில்லை. உதாரணமாக பின்வரும் ஹதீஸ்களில் இந்தச் சொல் உடல் நோயைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

190بَاب حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يُونُسَ قَالَ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ عَنْ الْجَعْدِ قَالَ سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ يَقُولُ ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَ أُخْتِي وَجِعٌ فَمَسَحَ رَأْسِي وَدَعَا لِي بِالْبَرَكَةِ ثُمَّ تَوَضَّأَ فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ ثُمَّ قُمْتُ خَلْفَ ظَهْرِهِ فَنَظَرْتُ إِلَى خَاتَمِ النُّبُوَّةِ بَيْنَ كَتِفَيْهِ مِثْلَ زِرِّ الْحَجَلَةِ رواه البخاري

சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

என் சிறிய தாயார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று ""அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் உடல் நிலை சரியின்றி உள்ளான்'' என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி (190)

114حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَمَّا اشْتَدَّ بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعُهُ قَالَ ائْتُونِي بِكِتَابٍ أَكْتُبْ لَكُمْ رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபி (ஸல்) அவர்களுடைய (மரண) வேதனை கடுமையான போது ""என்னிடம் ஒரு ஏடு கொண்டு வாருங்கள். உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள்'' என்றார்கள்.

நூல் : புகாரி (114)

1296حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي عَامَ حَجَّةِ الْوَدَاعِ مِنْ وَجَعٍ اشْتَدَّ بِي فَقُلْتُ إِنِّي قَدْ بَلَغَ بِي مِنْ الْوَجَعِ وَأَنَا ذُو مَالٍ وَلَا يَرِثُنِي إِلَّا ابْنَةٌ  رواه البخاري

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

"விடைபெறும்' ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை நலம் விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.

நூல் : புகாரி (1296)

எனவே நபி (ஸல்) அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பு உடல் சம்பந்தப்பட்டது என்பதைத் தான் வானவருடைய கூற்றிருந்தும் நபி (ஸல்) அவர்களின் சொல்ல் இருந்தும் அறிய முடிகிறது. இங்கே மனபாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்று சந்தேகப்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. இந்த அடிப்படையில் விளங்கினால் ஹதீûஸ மறுப்பதற்கு எந்த காரணத்தையும் கூற முடியாது.

முழு ஹதீஸையும் நிராகரிக்கலாமா?

நபி (ஸல்) அவர்கள் மனைவியிடத்தில் சேராமருந்த நிலையில் சேர்ந்தது போன்ற உணர்வு அவர்களுக்கு வரும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதை கொண்டே இந்த முழு ஹதீûஸயும் மறுக்கின்றனர். எனவே இது தொடர்பான விளக்கத்தை இனி அறிந்துகொள்வோம்.

இவர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் போது வித்தியாசமான ஒரு முறையை கடைபிடிக்கின்றார்கள். ஒரு நீண்ட ஹதீஸில் ஒரு வாக்கியம் மட்டும் பிரச்சனையாக இருந்தால் அல்லது இவர்களின் வாதப்படி அந்த வாக்கியம் மட்டும் குர்ஆனுக்கு முரணாக இருந்தால் அந்த வாக்கியத்தை மட்டும் விட்டுவிட வேண்டும். அந்த ஹதீஸின் மீதமுள்ள பகுதிகளை ஏற்று அதனை ஆதாரமாக சுட்டிக்காட்டலாம் என்று கூறுகின்றனர்.

உதாரணமாக உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பேண் பார்த்துவிட்ட ஹதீஸ் சூனியம் ஹதீஸைப் போன்று நீண்ட செய்தியாகும். இதில் பேண்பார்த்துவிட்டத் தகவலை மட்டுமே இவர்கள் மறுக்கின்றனர். மீதமுள்ள விசயங்களை ஆதாரமாக ஏற்றுக்கொள்கின்றனர்.

குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று கூறி மறுத்த உம்மு ஹராம் தொடர்பான ஹதீஸை நீங்கள் எப்படி ஏகத்துவம் மாத இதழில் ஆதாரம் காட்டலாம்? என்று இவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இவர்கள் பிரச்சனைக்குரிய வாசகத்தை தவிர்த்து மீதமுள்ள ஹதீஸ்களை ஏற்றுக்கொள்வோம் என்று பதிலளித்தனர்.

இவர்களின் இந்த விதியின் படி முடிவெடுத்தால் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸையும் இவர்கள் ஏற்க வேண்டும். நீண்ட இந்த ஹதீஸில் இவர்களின் வாதப்படி ஆயிஷா (ரலி) அவர்கள் கூற்று தான் குர்ஆனுக்கு முரண்படுகிறது. எனவே அதை விட்டுவிட்டு ஹதீஸின் மீதமுள்ள பகுதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மீதமுள்ள முழு செய்தியும் நபி (ஸல்) அவர்களுக்கு உடல்பாதிப்பு ஏற்பட்டது. பிறகு குணமானது. அவர்கள் தெளிவான மனநிலையில் இருந்தார்கள் என்று கூறுகிறது. எனவே இதனை அவர்கள் ஏற்க வேண்டும். அப்படி ஏற்றால் சூனியத்தின் முலம் பாதிப்பு ஏற்படும் என்ற உண்மையை கூற வேண்டிவரும். இவர்களின் குழப்பம் அனைத்தும் தகர்ந்துபோகும். எனவே இவ்வாறு கூறுவார்களா? என்பது சந்தேகம் தான்.

அரபுச் சொல்லை அறியாத அறிவிலிகள்

 6391حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُنْذِرٍ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طُبَّ حَتَّى إِنَّهُ لَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ قَدْ صَنَعَ الشَّيْءَ وَمَا صَنَعَهُ رواه البخاري

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து ஒரு செயலை செய்யாலிருந்த நிலையில் அதை செய்துவிட்டது போன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது.

நூல் : புகாரி (6391)

நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய இந்த வாசகம் பல அர்த்தங்களையும் தரக்கூடிய வகையில் மூடலாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தை செய்யாமல் இருக்கும்போது அதை செய்ததாக நினைத்தார்கள். செய்யாத காரியத்தை செய்ததாக சொன்னார்கள் என்று ஹதீஸ் கூறுகிறது. பைத்தியம் ஏற்பட்டவர் தான் இப்படி சொல்வார் என்று கூறி இதை மறுக்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்ட பிறகு நல்ல மனநிலையில் தான் இருந்தார்கள் என்பதை இதே ஹதீஸிருந்து முன்னர் விரிவாக அறிந்துகொண்டோம். எனவே ஹதீஸ் எதை நிராகரித்துவிட்டதோ அதை ஹதீஸில் இருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள் என்றால் இவர்களின் வாதத்தில் எள்ளளவு கூட உண்மை இல்லை. குழப்பம் செய்ய வருகிறார்கள் என்பதை மக்கள் புரிய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தான் செய்யாதவற்றை செய்ததாகச் சொன்னார்கள் என்று இவர்கள் கூறுவது ஹதீஸில் இவர்கள் துணிந்து இட்டுக்கட்டும் பச்சைப் பொய்யாகும். இப்படி எந்த ஒரு வாசகமும் ஹதீஸில் இல்லை. செய்யாமல் செய்தது போன்ற உணர்வு வந்தது என்றே கூறப்பட்டுள்ளது.

பைத்தியத்தை சொல்வதற்கு அரபியில் மஜ்னூன் என்ற சொல் உள்ளது. நபி (ஸல்) அவர்களுக்கு பைத்தியம் ஏற்பட்டது (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்) என்று ஆயிஷா (ரலி) சொல்வதாக இருந்தால் மஜ்னூன் என்ற சொல்லை குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு சொல்லாமல் யுகைய்யல் (உணர்வு வந்தது) என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார்கள்.

அரபுகள் பைத்தியத்தை குறிப்பதற்கு இந்தச் சொல்லை பயன்படுத்தவே மாட்டார்கள். அரபுமொழி சம்பந்தப்பட்ட எந்த நூலும் இந்தச் சொல் பைத்தியத்தைக் குறிக்கும் என்று காட்டவே முடியாது. பின்வரும் வசனத்தில் மூசா (அலை) அவர்கள் விசயத்தில் யுகய்யல் என்ற இந்த வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.

قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى (66)20

நீங்களே போடுங்கள் என்று மூசா கூறினார். அவர்களின் சூனியத்தால் அவர்களின் கயிறுகளும் கைத்தடிகளும் ஓடுவது போன்று மூசாவிற்குத் தோன்றியது.

அல்குர்ஆன் (20 : 66)

இங்கே மூசா (அலை) அவர்களுக்கு தஃக்யீல் ஏற்பட்டதால் அவர்களுக்கு பைத்தியம் ஏற்பட்டது என்று சொல்ல முடியுமா? நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக கூறும் ஹதீஸில் வரும் யுகய்யல் என்ற சொல்லுக்கு பிரம்மையூட்டப்பட்டது என்று தவறாக மொழிபெயர்த்துள்ளார்கள். இது நபிமொழியை விகாரப்படுத்திக்காட்டும் முயற்சியாகும்.

இவர்களே இந்த வார்த்தைக்கு வேறு ஒரு ஹதீஸில் உணர்வு ஏற்பட்டது என சரியான பொருளைக் கொடுத்துள்ளார்கள். அந்த ஹதீஸ் இது தான்.

5659حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا الْجُعَيْدُ عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدٍ أَنَّ أَبَاهَا قَالَ تَشَكَّيْتُ بِمَكَّةَ شَكْوًا شَدِيدًا فَجَاءَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ إِنِّي أَتْرُكُ مَالًا وَإِنِّي لَمْ أَتْرُكْ إِلَّا ابْنَةً وَاحِدَةً فَأُوصِي بِثُلُثَيْ مَالِي وَأَتْرُكُ الثُّلُثَ فَقَالَ لَا قُلْتُ فَأُوصِي بِالنِّصْفِ وَأَتْرُكُ النِّصْفَ قَالَ لَا قُلْتُ فَأُوصِي بِالثُّلُثِ وَأَتْرُكُ لَهَا الثُّلُثَيْنِ قَالَ الثُّلُثُ وَالثُّلُثُ كَثِيرٌ ثُمَّ وَضَعَ يَدَهُ عَلَى جَبْهَتِهِ ثُمَّ مَسَحَ يَدَهُ عَلَى وَجْهِي وَبَطْنِي ثُمَّ قَالَ اللَّهُمَّ اشْفِ سَعْدًا وَأَتْمِمْ لَهُ هِجْرَتَهُ فَمَا زِلْتُ أَجِدُ بَرْدَهُ عَلَى كَبِدِي فِيمَا يُخَالُ إِلَيَّ حَتَّى السَّاعَةِرواه البخاري

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் தமது கையை என் நெற்றியின் மீது வைத்துப் பிறகு அதை என் வயிற்றின் மீதும் என் முகத்தின் மீதும் தடவினார்கள். பின்னர், "இறைவா! சஅதுக்குக் குணமளிப்பாயாக. அவருடைய ஹிஜ்ரத்தை முழுமைப் படுத்துவாயாக'' என்று பிரார்த்தித்தார்கள். அவர்களது (கரத்தின்) குளிர்ச்சியை என் ஈரலில் இப்போதும் கூட நான் உணர்வதைப் போன்று இருக்கிறது.

புகாரி (5659)

ஆன்லைன் பீஜே இணையதளத்தில் இந்த ஹதீஸிற்கு இவ்வாறே மொழிபெயர்த்துள்ளார்கள். நான் உணர்வதைப் போன்றுள்ளது என்று நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் யுகாலு என்ற சொல் இடம்பெற்றுள்ளது. யுகாலு யுகைய்யல் இரண்டும் சற்று வேறுபட்டிருந்தாலும் இரண்டுக்கும் ஒரே பொருள் தான் உள்ளது.

இங்கே சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்கு தஃக்யீல் ஏற்பட்டுள்ளதாக ஹதீஸ் கூறுகிறது. அப்படியானால் இந்த நபித்தோழர் பைத்தியமாகிவிட்டார் என்று இவர்கள் கூறுவார்களா?

எனவே நபி (ஸல்) அவர்களுக்கு சூனியத்தின் பாதிப்பால் தக்யீல் (உணர்வு) ஏற்பட்டது என்பதிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு பைத்தியமோ மனபாதிப்போ ஏற்படவில்லை என்பதைத் தான் அறிய முடிகிறது. இனி நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட உணர்வு குறித்து அறிந்துகொள்வோம்.

உடலுறவை கொள்வதில் ஏற்பட்ட பாதிப்பு

ஒரு செயலை செய்யாமலேயே செய்துவிட்ட உணர்வு நபி (ஸல்) அவர்களுக்கு வரும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். இவ்வாறு சில அறிவிப்புகள் மூடலாக வருகின்றது.

செய்யாமலேயே செய்தது போன்ற உணர்வு நபி (ஸல்) அவர்களுக்கு வந்தது என்றால் எந்தெந்த விசயத்தில் இவ்வாறு ஏற்பட்டது என்ற கேள்வி இங்கே வருகிறது. இந்தக் கேள்விக்கு பின்வரும் அறிவிப்புகளில் தெளிவான விடை உள்ளது. மூடலாக வரும் அறிவிப்புகளுக்கு விளக்கமாக இந்த அறிவிப்புகள் உள்ளது.

இப்னு ஜுரைஜ், சுஃப்யான், மஃமர் ஆகிய மூவரின் அறிவிப்புக்களில் உடலுறவு விசயத்தில் தான் இந்த பாதிப்பு நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது என்று குறிப்பாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்டுள்ளது.

5765حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ قَالَ سَمِعْتُ ابْنَ عُيَيْنَةَ يَقُولُ أَوَّلُ مَنْ حَدَّثَنَا بِهِ ابْنُ جُرَيْجٍ يَقُولُ حَدَّثَنِي آلُ عُرْوَةَ عَنْ عُرْوَةَ فَسَأَلْتُ هِشَامًا عَنْهُ فَحَدَّثَنَا عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُحِرَ حَتَّى كَانَ يَرَى أَنَّهُ يَأْتِي النِّسَاءَ وَلَا يَأْتِيهِنَّ رواه البخاري

 

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே சென்றதாக எண்ணம் ஏற்பட்டது.

புகாரி (5765)

6063حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَكَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَذَا وَكَذَا يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَأْتِي أَهْلَهُ وَلَا يَأْتِي  فَأَمَرَ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأُخْرِجَ قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَهَلَّا تَعْنِي تَنَشَّرْتَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَّا اللَّهُ فَقَدْ شَفَانِي وَأَمَّا أَنَا فَأَكْرَهُ أَنْ أُثِيرَ عَلَى النَّاسِ شَرًّا قَالَتْ وَلَبِيدُ بْنُ أَعْصَمَ رَجُلٌ مِنْ بَنِي زُرَيْقٍ حَلِيفٌ لِيَهُودَ رواه البخاري

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபி (ஸல்) அவர்களுக்கு (சூனியம் செய்யப்பட்டதால்) அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்றதைப் போன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் சில நாட்கள் இருந்தார்கள்.

புகாரி (6063)

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பு உடலுறவு விசயத்தில் தான். மார்க்கத்தை எத்திவைப்பதிலோ உடலுறவு அல்லாத வேறு விசயங்களிலோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதை ஹதீஸ் தெளிவாகக் கூறுகிறது. ஹதீஸில் இல்லாதவற்றை இருப்பதாகக் கூறி ஹதீஸை மறுக்க நினைப்பவர்களே நபி (ஸல்) அவர்களுக்கு பைத்தியம் ஏற்பட்டது என்று இந்த ஹதீஸ் கூறுவதாக ஹதீஸை திரிக்கின்றனர்.

உடலுறவு சம்பந்தமாக நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த ஒரு பாதிப்பும் மனபாதிப்பல்ல. இதுவும் உடல் பாதிப்பு தான்.

அல்லாஹ் 2 : 102 வது வசனத்தில் சூனியத்தின் மூலம் கணவன் மனைவிக்கிடையே பிரிக்க முடியும் என்று கூறியதையும் மதீனத்து மக்கள் யூதர்கள் உங்களுக்கு சூனியம் செய்துவிட்டார்கள். எனவே உங்களுக்கு குழந்தை பிறக்காது என்று கூறியதையும் இங்கே மறுபடியும் நினைவில் கொண்டு வாருங்கள்.

இந்த இரண்டு தகவலும் சூனியத்தின் பாதிப்பால் கணவன் மனைவி இல்லறத்தில் ஈடுபட முடியாது என்ற கருத்தைக் கொடுக்கிறது. நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக கூறும் நபிமொழியும் இதைத் தான் கூறுகிறது.

சூனியத்தின் பாதிப்பால் நபி (ஸல்) அவர்களால் இல்லறத்தில் ஈடுபடமுடியவில்லை என்பதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் வெளிப்படையாக சொல்லாமல் இழைமறைக்காயாக மூடலாக இதைத் தெரிவித்துள்ளார்கள். இது ஹதீஸ் மறுப்பாளர்களுக்கு ஹதீஸை மறுப்பதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது.

இரண்டு நாளாக நான் சாப்பிடவில்லை. சாப்பிடாமலேயே சாப்பிட்ட மாதிரி உள்ளது என்று ஒருவர் கூறினார் இவர் பைத்தியமாகிவிட்டார் என்று கூறுவோமோ? அல்லது தனக்கு பசி இல்லை. உணவில் நாட்டமில்லை என்று தன்னுடைய உடல்பாதிப்பு குறித்து பேசுகிறார் என்று புரிந்துகொள்வோமா?

இந்த அடிப்படையில் தான் ஆயிஷா (ரலி) அவர்களும் கூறுகிறார்கள். உடலுறவு கொண்டால் களைப்பும் சோர்வும் ஏற்படும். உடலுறவில் நாட்டம் இருக்காது. இந்த நிலை உடலுறவு கொள்ளாமலேயே நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது. அப்படியானால் அவர்களால் இல்லறத்தில் ஈடுபடமுடியவில்லை என்பதைத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் சூசகமாக இங்கே குறிப்பிடுகிறார்கள்.

செய்யாமலேயே செய்தது போன்ற உணர்வு ஏற்படும். மனைவியிடத்தில் செல்லாமலேயே சென்றது போன்ற உணர்வு ஏற்படும் என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றின் அர்த்தம் இது தான்.

நபி (ஸல்) அவர்கள் மனைவியிடத்தில் சேராமல் சேர்ந்ததாக நினைத்தார்கள் என்றால் கடைசி வரை அப்படியே நினைத்துக்கொண்டே இருந்திருப்பார்கள். ஆனால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தானாக உணர்ந்துகொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறார்கள். எனவே தான் உடலுறவுகொள்ளவில்லை என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள்.

அப்படியிருக்க உடலுறவு கொள்ளாமல் உடலுறவு கொண்டதாக அவர்கள் எப்படி நினைப்பார்கள்? இதனால் தான் இதனை நேரடிப்பொருளில் புரியக்கூடாது என்று கூறினோம்.

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நாளும் மக்களை பல முறை சந்திக்கும் தலைவராக இருந்தார்கள். அவர்களுக்கு மனபாதிப்பு ஏற்பட்டிருந்தால் நிச்சயமாக அது அன்றைக்கு இருந்த அனைத்து மக்களுக்கும் பரவியிருக்கும். ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியத்தால் ஏற்பட்ட பாதிப்பை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியத்தால் ஏற்பட்ட பாதிப்பு அந்தரங்க விசயம் தொடர்பானது. எனவே தான் இதை அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை.

சூனியத்தால் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட உடல் பாதிப்பு அவர்களின் அழைப்புப் பணியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. வெளிப்படையாக மக்கள் அறியும் வகையில் இந்த பாதிப்பு நபிக்கு ஏற்படவில்லை என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

உடலுறவு கொண்டதில் சந்தேகம்

நேரடிப் பொருளில் புரிந்தால் கூட நபி (ஸல்) அவர்கள் பைத்தியமானர்கள் என்ற கருத்து ஒருக்காலும் வராது. அதிகபட்சமாக உடலுறவு விசயத்தில் சந்தேகம் வந்தது என்றே கூற முடியும்.

யுகய்யல் என்றச் சொல்லுக்கு சந்தேகம் ஏற்படுதல் என்பது தான் அசல் அர்த்தமாகும். அரபு அகராதி நூற்களில் இந்தப் பொருள் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சந்தேகம் ஏற்படுதல் என்ற அர்தத்தில் பின்வரும் ஹதீஸில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

137 حَدَّثَنَا عَلِيٌّ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ح وَعَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ عَنْ عَمِّهِ أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُالَّذِي يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّيْءَ فِي الصَّلَاةِ فَقَالَ لَا يَنْفَتِلْ أَوْ لَا يَنْصَرِفْ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا رواه البخاري

 

அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "தொழும்போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஒருவருக்கு ஏற்படுகிறது (இதனால் உளூ முறிந்துவிடுமா?)'' என்று முறையிட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ""(காற்றுப் பிரிவதன்) சப்தத்தைக் கேட்காத வரை அல்லது நாற்றத்தை உணராத வரை (தொழுகையிருந்து) திரும்ப வேண்டாம்'' என்றார்கள்.

நூல் : புகாரி (137)

இந்த செய்தியில் உணர்வு ஏற்படுகிறது என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் யுகய்யல் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. அப்படியானால் இந்த நபித்தோழருக்கு பைத்தியம் ஏற்பட்டது என்று புரிவார்களா?

இது பைத்தியமல்ல. உடல்பாதிப்புக் கோளாறால் ஏற்படும் சந்தேக உணர்வு என்று சரியாக புரிந்துகொள்வோம். வயிறு சரியில்லாவிட்டால் இது போன்ற உணர்வும் சந்தேகமும் ஏற்படும்.

மலம் வரவில்லை. மலம் வருவதைப் போன்ற உணர்வு உள்ளது என்று ஒருவர் கூறினால் இவருக்கு பைத்தியம் பிடித்துள்ளது என்று கூறமாட்டோம். இவருக்கு வயிறு சரியில்லை என்று புரிந்துகொள்வோம். இது போன்று தான் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியத்தால் உடல் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பால் உடலுறவு கொள்ளாமல் உடலுறவு கொண்ட உணர்வு ஏற்பட்டது என்று புரிந்துகொள்ளலாம்.

சூனியத்த்தால் பாதிப்பு ஏற்படும் என்பதை அறிவைக்கொண்டோ லாஜிக்கை கொண்டோ நிரூபிக்க முடியாது. குர்ஆன் சுன்னாவை வைத்தே நிரூபிக்க முடியும். எனவே சூனியத்தால் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் இது லாஜிக்கிற்கு ஒத்துவருகிறதா? என்று பார்க்காமல் நபிமொழியில் கூறப்பட்டுள்ளதால் அப்படியே நம்பிவிட வேண்டும்.

எத்தனையோ விசயங்களில் சர்வசாதாரணமாக மனிதர்களுக்கு சந்தேகம் வந்து பிறகு அந்த சந்தேகம் நீங்குகிறது. ஒருவருக்கு பணம் கொடுத்திருக்கமாட்டோம். ஆனால் கொடுத்ததாக நினைப்போம். சற்று ஆழமாக யோசித்துப்பார்த்தால் நாம் கொடுக்கவில்லை என்பதை நாமே அறிந்துகொள்வோம். இவ்வாறு சந்தேகம் வந்தால் பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்வோமா?

நபி (ஸல்) அவர்கள் உடலுறவு கொள்ளவில்லை. உடலுறவுகொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதாவது உடலுறவு கொண்டதாக சந்தேகம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். தான் உடலுறவு கொள்ளவில்லை என்பதை நபி அறிந்துள்ள நிலையில் இது போன்ற சந்தேகம் தொடர்ந்து வருவதால் இது குறித்து அல்லாஹ்விடம் விளக்கம் கேட்கிறார்கள்.

இவ்வாறு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதை நல்ல முறையில் புரிவதற்கு எத்தனையோ இடம்பாடுகள் இதில் உள்ளது. மனிதர்களின் சுய கற்பனை விளக்கம் நமக்கு வேண்டாம். நபிமொழி தான் நமக்கு வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த விளக்கங்கள் போதுமானதாக இருக்கும்.

ஆனால் இந்த ஹதீஸை மறுத்தே ஆக வேண்டும். இதில் தான் எங்களுடைய கொள்கை பிடிப்பு அடங்கியுள்ளது என்று பிடிவாதம் பிடிப்பவர்கள் தொடர்ந்து மறுத்துக்கொண்டே தான் இருப்பார்கள். அல்லாஹ் தான் அவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும். “

பாதிப்பு ஆறுமாத காலம் நீடித்ததா?

مسند أحمد موافقا لثلاث طبعات - (6 / 63)

(24347) 24851- حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ ، عَنْ رَبَاحٍ ، عَنْ مَعْمَرٍ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ قَالَتْ : لَبِثَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَسِتَّةَ أَشْهُرٍ يَرَى أَنَّهُ يَأْتِي وَلاَ يَأْتِي ، فَأَتَاهُ مَلَكَانِ ،

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆறுமாத காலம் தான் செல்லாமலிருந்த நிலையில் செல்வது போன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது.

நூல் : அஹ்மது (24347)

நபி (ஸல்) அவர்கள் பைத்தியமாகவில்லை. உடலுறவு விசயத்தில் உடல் பாதிப்பு தான் ஏற்பட்டது. இதனால் அவர்களின் தூதுப்பணி தடையாகவில்லை என்பதை முன்னர் அறிந்துகொண்டோம்.

எனவே ஆறுமாதகாலம் என்ன? ஒரு வருட காலம் இந்த பாதிப்பு நபிக்கு நீடித்திருந்தது என்று நம்பினாலும் அது குர்ஆனுக்கோ நபி (ஸல்) அவர்களின் தகுதிக்கோ எதிரானது இல்லை.

என்றாலும் ஆறுமாத காலம் பாதிப்பு ஏற்பட்டது என்ற தகவல் ஏற்றுக்கொள்ள முடியாத பலவீனமான தகவலாகும்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக கூறும் ஹதீûஸ ஹிஷாம் பின் உர்வாவிடமிருந்து மொத்தம் 14 நபர்கள் அறிவிக்கிறார்கள். இவர்களில் மஃமர் என்ற அறிவிப்பாளரைத் தவிர்த்து மற்றவர்கள் யாரும் ஆறுமாத காலம் பாதிப்பு ஏற்பட்டது என்று தகவலைக் கூறவில்லை. மஃமர் மட்டுமே இதை அறிவிக்கிறார்.

மஃமர் மட்டும் ஹிஷாமிடமிருந்து கூடுதலாக இதனை கேட்டு அறிவித்திருக்க வாய்ப்புள்ளது என்று இவர் விசயத்தில் எண்ண முடியாது. ஏனென்றால் அறிவிப்பாளர் மஃமர் நம்பகமானவர் என்றாலும் பல தவறுகளை செய்யக்கூடியவர் ஆவார். குறிப்பாக ஹிஷாமிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ்களில் தவறிழைப்பார் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.

تقريب التهذيب (2/ 541)

6809- معمر ابن راشد الأزدي مولاهم أبو عروة البصري نزيل اليمن ثقة ثبت فاضل إلا أن في روايته عن ثابت والأعمش [وعاصم بن أبي النجود] وهشام ابن عروة شيئا وكذا فيما حدث به بالبصرة من كبار السابعة مات سنة أربع وخمسين وهو ابن ثمان وخمسين سنة ع

மஃமர் நம்பகமானவர் உறுதியானவர் சிறப்பிற்குரியவர் என்றாலும் ஹிஷாம் பின் உர்வா வழியாக மஃமர் அறிவிக்கும் அறிவிப்புகளில் பிரச்சனையுள்ளது.

தக்ரீபுத் தஹ்தீப் (பாகம் 2 பக்கம் 541)

قال يحيى : و حديث معمر عن ثابت و عاصم بن أبى النجود و هشام بن عروة و هذا

الضرب مضطرب كثير الأوهام .

 

சாபித், ஆசிம், ஹிஷாம் பின் உர்வா ஆகியோர் வழியாக மஃமர் அறிவிக்கும் அறிவிப்புகளில் அதிகமான தவறுகளும் முரண்பாடும் உள்ளது என்று யஹ்யா கூறியுள்ளார்.

தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 10 பக்கம் 245)

எனவே இந்த நிலையில் உள்ள அறிவிப்பாளர் மஃமர் அவர்கள் ஆறுமாதகாலம் பாதிப்பு இருந்தது என்றத் தகவலை மற்ற யாரும் கூறாத நிலையில் இவர் மட்டும் கூறுகிறார் என்றால் இங்கே இவர் கூறிய இந்தத் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது. இது ஷாத் என்ற அடிப்படையில் பலவீனமான தகவலாகும்.

நபி (ஸல்) அவர்களுக்கு குறிப்பிட்ட சில நாட்கள் உடல் பாதிப்பு இருந்தது பிறகு அல்லாஹ் குணமாக்கினான் என்று புரிந்துகொள்ளலாம்.