Popular Posts

Saturday 23 April 2016

பக்கத்து வீட்டுக்காரர்களையும் எப்படி பேணவேண்டும் என வலியுறுத்துகிறது என்று பாருங்கள்..!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

கண்ணியமிக்க அல்லாஹ்வின் நல்லடியார்களே,

உறவினர்களை பேணி வாழக்கூறிய மார்க்கமான இஸ்லாம், பக்கத்து வீட்டுக்காரர்களையும் எப்படி பேணவேண்டும் வலியுறுத்துகிறது என்று பாருங்கள்..!

ஹதீஸ்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “தனது அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் முஃமினாக (இறை விசுவாசியாக) மாட்டார்.” {முஸ்னத் அபூ யஃலா}

அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அபூதர்! நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்துக்கொள்வீராக. உம்முடைய அண்டை வீட்டாரையும் கவனித்துக்கொள்வீராக” என்று கூறினார்கள். {ஸஹீஹ் முஸ்லிம்: 5120}

No comments:

Post a Comment