Popular Posts

Saturday 23 April 2016

மீலாத் விழாக்களுக்கு குர்ஆனில் ஆதாரம் உண்டா?

மீலாத் விழாக்களுக்கு 
குர்ஆனில் ஆதாரம் உண்டா?
கேள்வி: இன்று நடைமுறையில்
இருக்கும் மீலாத் - மௌலித் 
வைபவங்களுக்கு குர்ஆனிலிருந்தும்
அல்லது ஹதீதுகளிலிருந்தும் 
ஆதாரம் காட்ட முடியுமா?
ஆதாரம் காட்டினால், பத்து 
இலட்சம் சன்மானம் வழங்கப்படும்
என்று சவால் விட்டு ஒரு பிரசாரம்
வஹாபிகளால் 
வெளியிடப்பட்டுள்ளது. 
இவர்களின் சவாலுக்கு 
நாங்கள் கூறும் பதில்.
பதில்: வஹாபிகளின் இச்செயல்
புதியது அல்ல. பல நூறு 
ஆண்டுகளாக அவர்கள் பாடும்
பல்லவிதான் இது.
வழிகெட்ட வஹாபிகளிடம் 
சில வினாக்களை நாமும் 
விடுகி்ன்றோம். அதற்கு அவர்கள்
கூறும் பதிலில் எமது பதில் 
அடங்கியுள்ளது.
கவனமாகப் படியுங்கள். 
வழிகேடர்களின் சதி வலையைப்
புரிந்து கொள்வீர்கள்.
நமது வினாவுக்கு சரியான பதில்
கூறினால் அதே தொகையை நாம் தருவோம். இன்ஷா அல்லாஹ்!
01.உமது றப்பின் நிஃமத்தை 
எடுத்துக் கூறுவீராக!
(அல்குர்ஆன் - 93:11)
வினா:றஸூலுல்லாஹி 
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்ல
மவர்களின் பிறப்பு இந்த உலகிற்கு
நிஃமத்தாக இல்லை என்பதையும்,
மீலாத் விழாக்களில் பெருமானாரின்
வாழ்க்கை வரலாற்றையும்,
அன்னார் பற்றிய சிறப்பம்சங்களையும்,
மக்களுக்கு எடுத்துக் கூறுவது
அல்லாஹ்வின் நிஃமத்தாகிய 
றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்ல மவர்களைப்
பற்றி கூறுவதும் ஆகாதா?
வஹாபிகள் எடுத்துக் கூற வேண்டும்.
02.நபிகள் நாதர் அகிலத்தின் 
அருட்கொடை முத்திரை நபி. 
அவர்கள் பிறந்த தினம் 
மகத்துவமிக்கவர்களி்ன் நாட்களைச்
சார்ந்து இல்லையா?
மீலாத் விழா மகத்துவமிக்க அத்தினத்தை 
நினைவுபடுத்துவதாக ஆகாதா?
வஹாபிகள் சுற்றி வளைக்காமல்
பதில் கூற வேண்டும்.
03.நபியே கூறுவீராக! 
அல்லாஹ்வின் வரிசை,அவன் 
றஹ்மத் அவை கொண்டு 
சந்தோஷம் கொண்டாடட்டும்.
(அல்குர்ஆன் - 10:58)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு 
அலைஹி வஸல்லமவர்களின் 
பிறப்பு, அல்லாஹ்வின் வரிசை,
றஹ்மத் இல்லை என்று 
வஹாபிகள் நிரூபிக்கட்டும். 
அல்லது மீலாத் விழாக்கள் 
அல்லாஹ்வின் வரிசை, றஹ்மத்
பற்றி நினைவுபடுத்தி மகிழ்கின்ற
விழா இல்லை என்பதையும் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
04.றஸூல் எதை உங்களுக்கு 
கொண்டு வந்தாரோ அதை எடுங்கள்.
இன்னும் எதை உங்களுக்கு 
விலக்கினாரோ அதை விட்டும்
தவிர்ந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் - 59:7)
மௌலித் ஓதுவது மீலாத் விழாக்கள்
எடுப்பது கூடாத செயல் என்பதை
வழிகெட்ட வஹாபிகள் குர்ஆனிலிருந்தோ,
ஹதீதுகளிலிருந்தோ மழுப்பாமல்
சுற்றி வளைக்காமலும் நேரடியாக
நிரூபித்துக் காட்ட வேண்டும்.
றபீஉல் அவ்வல் மாதத்தில் 
மௌலிது ஓதுவது,மீலாத் விழா
எடுப்பது பாவமான காரியம்,
ஷரீஅத் தடை செய்த ஒன்று 
என்பதை திருக்குர்ஆன் வசனத்தையும்,
அதற்கு நபியவர்கள் அல்லது,
ஸஹாபாக்கள் கூறிய விளக்கத்தை
ஸனதுடன் 
பதிவுசெய்யப்பட்ட ஹதீது நூற்களை பட்டியலிட்டு 
பகிரங்கப்படுத்தட்டும்.
வஹாபிகளுக்கு வசதியாக 
மீலாத் விழா எடுப்பது அல்லது
மௌலிது ஓதுவது பாவமான செயல்
என்பதை நான்கு இமாம்களில் ஒருவராவது
அல்லது ஹதீதுத்துறை அறிஞர்கள்
அல்லது பிக்ஃ சட்ட அறிஞர்கள்
யாராவது கூறியிருப்பின் தக்க ஆதாரத்துடன்
முன் வைக்கட்டும்.
05.வழிகெட்ட வஹாபிகள் 
மகாநாடுகள் நடத்துவது,
அதற்காக உணவு பரிமாறுவது,
அதற்காக சுவரொட்டிகள் அச்சடித்து 
ஒட்டுவது, பதாதைகள் தொங்க
விடுவது,மேடை அமைத்து 
மின் அலங்காரம் செய்து சோடிப்பது,
மத்ரஸாக்கள் அமைத்து அதற்கென்று 
பாடத்திட்டம் வகுத்து குறிப்பிட்ட
கால எல்லையை நிர்ணயித்து 
பாடபோதனை புரிவது,
பரீட்சை நடாத்தி சித்தி எய்தவர்களுக்கு
சான்றிதழ் வழங்கி பட்டம் சூட்டுவது,
பத்திரிகை நடாத்துவது போன்றவைகள்
நபியவர்கள் காலத்தில் நடந்தவைகள்
என்பதை குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்துடன்
சுற்றி வளைக்காமல் நேரடியான
ஆதாரத்துடன் வஹாபிகள் 
முன் வைக்க வேண்டும். 06.நபியே! நிச்சயமாக நாம் 
உம்மை சாட்சி கூறுபவராகவும்,
நற்செய்தி கூறுபவராகவும்,
எச்சரிப்பவராகவும் அனுப்பினோம். 
அல்லாஹ்வையும், அவனது 
திருத்தூதரையும் ஈமான் கொள்வதற்காக.
இன்னும் அவரை கண்ணியப் படுத்துங்கள்.
அவரை கௌரவப்படுத்துங்கள்.
(அல்குர்ஆன் - 48:8,9)
எவர் அவரை (ரஸூலை) ஈமான்கொண்டு,
இன்னும் அவரைக் கண்ணியப்படுத்தி,
அவருக்கு உதவியும் செய்து 
அவரோடு இறக்கப்பட்ட வேதத்தைப்
பின்பற்றினாரோ அக்கூட்டம்தான்
வெற்றி பெற்றவர்கள்.
(அல்குர்ஆன் - 7:157)
“நீங்கள் தொழுது ஸகாத்தும் கொடுத்து,
எனது றஸூல்மார்களை ஈமான் கொண்டு,
அவர்களைக்கண்ணியப்படுத்தி,
அழகிய முறையில் அல்லாஹ்வுக்கு
கடன் வழங்குவீர்களாயின்,
உங்கள் குற்றங்களை விட்டும் 
நீக்கி விடுவேன்,சொர்க்கத்தில் 
நுழைவிப்பேன்.
அதன் கீழ் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும்.
இதன் பின் உங்களில் யாராவது
நிராகரித்தால் நிச்சயமாக நேரான
வழியிலிருந்து தப்பியவராவர்”.
.(அல்குர்ஆன் - 5:12)
மேற்கண்ட மூன்று திருவசனங்களிலும் 
அல்லாஹ்வின் திருத்தூதரை 
கண்ணியப்படுத்துமாறு 
அல்லாஹ் கட்டளை யிட்டுள்ளான்.
அல்லாஹ்வின் கட்டளை எதுஎதுவித
குறிப்பும் இல்லாமல் பொதுமையாக
உள்ளது. “அல்முத்லகு யஜ்ரி
அலா இத்லாகிஹி” - “ஒரு
பொதுமை, பொதுமையாகவே,
இருக்கும்“ என்பது ஷரிஅத்தின் விதி.
(பார்க்க. அத்தவ்ழீஹ் வத்தல்வீஹ்,
பாகம் - 01,பக்கம் - 169)
பெருமானார் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லமவர்கள் மீது
பொதுவாகவே கண்ணியம் செலுத்துவதில்
அனைத்து வகையான கண்ணியமும்
அடங்கும். ஷரீஅத் தடை விதிக்காத
அனைத்து வகையான கண்ணியமும்
செலுத்துமாறு திருக்குர்ஆன் நமக்கு
கட்டளையிடுகின்றது.
அல்லாஹ் அருளிய றஹ்மத்
மீது சந்தோஷம் கொண்டாடுவது,
அல்லாஹ்வின் நாட்களை
எடுத்துச்சொல்வது அல்லாஹ்வின்
நிஃமத்தை பறை சாற்றுவது
என்பதெல்லாம் பொதுமையானதாகும்.
இவற்றை ஷரீஅத் அனுமதிக்
கத்தக்க எவ்வழியில் செய்தாலும்
அது அல்லாஹ்வி்ன் கட்டளைக்கு உட்பட்டதாகும்.
அல்லாஹ் அனுமதித்த ஒன்றை
அல்லாஹ்தான் மாற்ற வேண்டும்.
அல்லது நபியவர்கள் மாற்ற வேண்டும்.
இரண்டுமில்லாமல் ஒருவர் நிராகரித்தால்
அல்லது அல்லாஹ் பொதுமையாகக்
குறிப்பிட்ட வட்டத்துக்குள்
குறிப்பாக் கினால், அவர்
திருக்குர்ஆனுக்கு சுய விளக்கம்
கூறியவராவார்.
அதனால் தனது இடததை மறுமையில்
நரகத்தில் ஆக்கிக் கொண்ட
துர்ப்பாக்கியத்திற்குரியவராவார்.
ஒருவரை ஒருவர் மனதால் நேசித்தால்
அவரைப் பற்றிப் புகழ்ந்து பேசுவது,
அவரைப்பற்றி யாராவது பாராட்டிப்
பேசினால் மன மகிழ்ச்சியடைவது,
அவரை வரவேற்பது,
அவரைப் புகழ்து பாடிய கவிதைகளை
ரசிப்பது மனித இயல்பாகும்.
“ஒன்றை ஒருவன் நேசித்தால்
அதிகமாக அதை நினைவு கூருவான்”
என்ற உண்மையை நினைவு
கூர்ந்து பாருங்கள்.
மனதில் வெறுப்பும், குரோதமும்
உள்ளவன் அவர் பாராட்டப்படுவதையோ
விரும்ப மாட்டான்.
யாராவது அவன் வெறுப்பவரை
பாராட்டினால் ஆத்திரப்படுவான்.
புகழ்ந்து பாடுபவரை தாக்குவான்.
இது மனித இயல்பு நிலை.
நண்பனையும்,விரோதியையும்
அறிந்து கொள்வதற்கான முறை இதுதான்.
“பசுத்தோல் போத்தியபுலி போல்“
சிலர் முஸ்லிம் பெயரில் முனாபிக்குகளாக
நடமாடுகின்றனர்.
இதற்குரிய சரியான உரைக்கல்
நபிகளாரைப் பற்றி அவர்
கூறும் கருத்துரைகளாகும். “நம்மைப் போன்றசாதாரண
மனிதர் அவர்” அவரை
சாதாரண மனிதரை விட அதிகம்
புகழக் கூடாது.
தனது தாய் தந்தையே நரகிலிருந்து
காப்பாற்ற முடியாதவர் நம்மைக்
காப்பாற்றுவாரா? (நஊதுபில்லாஹ்)
இப்படியான சாக்கடை வார்த்தைகளை
நாக்கூசாமல் கூறுவோர் எப்படி
நபிகள் கோமான் முஹம்மது
முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களை நேசிப்பவராகக்
கூற முடியும்?
இப்படி,.நெஞ்சில் நஞ்சும், உதட்டில்
அமுதமும் வைத்துக்கொண்டு
வஞ்சகத்தனமாக நடப்போர்தான்
நபிகள் நாயகத்தின் மீது புகழ்பாடும்
மௌலிதுகளையும், மீலாத் விழாக்களையும்
வெறுக்கின்றனர். நயவஞ்சகர்கள் நாவிலிருந்தும்,
நடத்தையிலிருந்தும் நபிகள்
நாயகத்தைப் பற்றிய நல்லெண்ணத்தை
ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
அறிவுக்கோ, ஷரிஅத்திற்கோ
எவ்விதத்திலும் பொருந்தாத புரட்டு
வாதங்களையே தொடர்ந்தும் பாடுவர்.
இது அவர்களின் பூர்வீகப் பண்பு.
அதனால் இவர்கள் கூறும் வெற்று
வாதங்களையும், பொருத்தமில்லாத மற்ற விளக்கங்களையும்
ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு
அறிவு பூர்வமாகவும் ஈமானி்ன்
வெளிச்சத்தோடும் நோக்க வேண்டியது
முஃமின்களின் கடமையாகும்.
இதில் தவறுபவர் மறுமையில் வருந்த
வேண்டி வரும்.
“ஒன்றை மறுப்பவர்தான் ஆதாரம்
காட்ட வேண்டும்“என்பது நபி மொழி“
ரஸூல் எதை தடுத்தார்களோ அதிலிருந்து
விலகியிருங்கள்“
.என்பது இறை கட்டளை. “ஒன்றின்
அடிப்படைச் சட்டம் ஆகும்“ என்பதும் நபி மொழிதான். இவைதான் இஸ்லாமிய உஸூல் முறையாகும். இதனைப்
புரிந்த எவரும் மீலாத் விழாக்களுக்குரிய
ஆதாரத்தை, செய்கின்றவர்களிடம்
கேட்கமாட்டார்கள்.
மீலாத் விழா கூடாது என்று எவர்
வாதிக்கின்றாரோ அவர்தான் தக்க
ஆதாரத்தை முன்வைக்கவேண்டும்.
இதுவரை வஹாபிகள் எவரும்
மீலாத் விழா கூடாது என்பதற்கு
சரியான ஆதாரத்தை முன்வைக்கவில்லை.
மீலாத் விழா கூடாது என்போர்,
தக்க ஆதாரத்தை முன்வைக்காமல்
இருப்பதுதான் எங்களுக்கான தக்க
ஆதாரமாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு நிரபராதி, தான் நிரபராதி என்று
நிரூபிக்க வேண்டும் என்று
கேட்பது உலகில் எங்குமில்லாத கேள்வியாகும்.

No comments:

Post a Comment