Popular Posts

Saturday 23 April 2016

ஸூபியாக்கள் பார்வையில் சோதனையின் எதார்த்தம்

ஸூபியாக்கள் பார்வையில் சோதனையின் எதார்த்தம்
ஸூபியாக்களின் இமாமான ஹளரத் ஜுனைதுல் பகுதாதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்,
சோதனைகள் ஆரிபீன்களின் தீபமாகும். முரீதின்களை தட்டி எழுப்பக்கூடிய ஒன்றாகும். முஃமீன்களை சீர்செய்வதாகும். அல்லாஹ்வை மறந்தவர்களுக்கு அழிவாகும். சோதனையில் பொறுமை செய்யாமல் ஒரு முஃமீன் ஈமானின் தித்திப்பை சுவைக்க முடியாது.
நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்,
ஒரு நோயாளி தனது நோயின் துன்பத்தில் பொறுமை செய்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை தேடுவாராயின், பாவங்கள் மன்னிக்கப்பட்டு பிறந்த பாலகன் போன்று ஆகிவிடுவார். இதனால் நோய் உம்மைத் தொட்டால் உடன் நீங்கி சுகம் கிடைக்க வேண்டும் என்று ஒருபோதும் நீர் ஆதரவு வைக்க வேண்டாம்.
ஹளரத் ழஹ்ஹாக் ரலியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்,
ஒரு மனிதன் நாற்பது இரவுகளில் ஒரு இரவிலாவது சோதனைகளின் துன்பத்தை - வேதனையை - அனுபவிக்காவிட்டால் அவருக்கு எதுவித நன்மையும் அல்லாஹ்விடம் கிடைக்காது.
முஃமீனான பாவியின் குற்றம் பதியப்படுவதில்லை
ஹளரத் முஆத் பின் ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்,
ஒரு முஃமீன் நோயால் பாதிக்கப்பட்டால் அவன் குற்றங்களைப் பதிய வேண்டாம் என்று இடது பக்கத்திலிருக்கும் மலக்கிற்கு கூறப்படும். அவனது அமல்களில் நல்லவைகளை எல்லாம் அவனது ஏட்டில் பதியுமாறு வலது பக்கத்திலிருக்கும் மலக்கிற்கு கூறப்படு்ம்.
ஹதீஸ் ஷரீபில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது,
ஒருவர் நோயாளியானால் இரு மலக்குகளை அவர் பக்கம் அல்லாஹ் அனுப்பி, எனது அடியான் என்ன செய்கின்றான் என்று பார்க்குமாறு கூறுவான். அவன் “அல்ஹம்துலில்லாஹ்“ என்று கூறினால் மலக் அல்லாஹ்விடம் சென்று இவர் கூறியதை எத்தி வைப்பார். இந்த நோயாளிக்கு மரணம் வரை நோய் நீடிக்குமானால், அவரை சொர்க்கத்தில் நுழைவிப்பேன் என்று அல்லாஹ் கூறுவான். அவருக்கு சுகம் கிடைத்தால் புதிய தேகத்தையும், புதிய குருதியையும் அவருக்கு வழங்குவேன். அவர் குற்றங்களையும் மன்னிப்பேன் என்று கூறுவான்.
இஸ்ரவேலர்கள் மத்தியில் மிக மோசமான ஒரு கேடி இருந்தான். அவன் அட்டகாசம் மிகக் கொடுமையாக இருந்தது. எந்த வழியிலும் குறைவதாக இல்லை. அவன் தொல்லை கட்டுக் கடங்காமல் சென்றபோது, அவன் தீங்கிலிருந்து தங்களைப் பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் மக்கள் துஆக் கேட்டார்கள்.
“இஸ்ரவேலில் இன்ன நகரத்தில், இன்ன ஒரு கேடி வாழ்கின்றான். அவனை நகரத்தை விட்டும் வெளியேற்றி விடுங்கள்! இல்லையேல் அவன் துஷ்டத்தினால் நகரமே தீப்பிடித்து எரிந்துவிடும்!“ என்று அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கட்டளையிட்டான். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அங்கு சென்று அவனை நகரத்திலிருந்து வெளியேற்றி விட்டார்கள்.
அவன் வேறு ஒரு கிராமத்தில் தஞ்சம் புகுந்தான். அங்கிருந்தும் அவனை வெளியேற்றுமாறு இறை கட்டளை வந்தது. இறுதியாக ஒரு குகையில் தஞ்சம் கொண்டான். அங்கு மனிதர்களோ, தாவரங்களோ,மிருகங்களோ, பறவைகளோ எதுவும் கிடையாது. குகையில் இருக்கும்போது அவனுக்கு நோய் பீடித்தது. அவனுக்கு உதவ யாருமே இல்லை. பலவீனத்தால் மண்ணில் விழுந்தவனாக மண்ணில் தலையைப் புரட்டி புலம்பினான்.
[3/14, 4:47 PM] Saifullah: எனது தாய் என் தலையருகில் இருந்திருந்தால் என் நிலையை எண்ணி வருந்துவாள். என்னில் இரங்கி எனக்கு உதவுவாள். எனது தந்தை என் முன் இருந்தால் அவரும் எனக்குதவுவார். அதுவும் எனக்குக் கிட்டாமல் போய் விட்டது. எனது மனைவியாவது பக்கத்திலிருந்தால் என் பிரிவை எண்ணி கண்ணீர் சிந்துவாள். எனது பிள்ளைகள் இருந்தால் எனது ஜனாஸாவைத் தொடர்ந்துவந்து என் தந்தை ஒரு பாவி,பலவீனமானவர், பரதேசி ஊர் ஊராக விரட்டப்பட்டவர் பாவி. இறுதியாக குகையிலிருந்து உலக வாழ்வை முடித்துக்கொண்டு மறுமைக்கு பயணம் செய்த எல்லாவற்றிலிருந்தும் ஒதுக்கப்பட்ட பாவி. யா அல்லாஹ்! என் தந்தையின் குற்றங்களை மன்னித்து அவர்பால் உன் அருளை சொரிவாயாக! என்று பிரார்த்திப்பார்கள்.
பின், பாவியான வாலிபன் அல்லாஹ்விடம் முறையிட்டான். யாஅல்லாஹ்! எனது பெற்றோர்,பிள்ளைகள், மனைவி ஆகியோரிலிருந்து நீதான் என்னைப் பிரித்தாய்! ஆனால், உனதருளிலிருந்து என்னை தூரமாக்கி விடாதே! அவர்களின் பிரிவால் எனது இதயத்தை நீதான் கரித்தாய்! எனது குற்றத்தின் காரணமாக நரக நெருப்பால் என்னைக் கரித்து விடாதே!
உடனே அல்லாஹ் ஒரு மலக்கை அவன் தந்தையின் கோலத்திலும், சொர்க்கத்து ஹூறுல்ஈன்களில் ஒருவரை அவர் தாயின் கோலத்திலும், மற்றுமொரு ஹூறுல்ஈனை அவன் மனைவியின் கோலத்திலும் ,சொர்க்கத்து இளவல்களை அவன் பிள்ளைகளின் கோலத்திலும் அவன் முன் அனுப்பினான். அவர்கள் அவன் அருகே இருந்து அழுதார்கள்.
என் தாய், தந்தை, மனைவி, மக்கள் எல்லாம் என் அருகில் வந்து விட்டார்கள் என்ற கூறி மனம் மகிழ்ந்தான். பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருளைச் சுமந்தவனாக இறைவனடி சேர்ந்தான். குறித்த இடத்தில் உள்ள குகையில் அல்லாஹ்வின் ஒரு வலி இறந்து கிடக்கின்றார். அங்கு சென்று அவர் உடலை எடுத்து வந்து அவர் ஈமக்கடமைகளைச் செய்யுமாறு அல்லாஹ் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வஹி அறிவித்தான்.
குறித்த இடத்திற்கு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் சென்றார்கள்.
அருகில் ஹூறுல்ஈன்கள் சுற்றியிருக்க ஒரு ஜனாஸா கிடப்பதை அவதானித்தார்கள். உற்று நோக்கியபோது இறையாணைப்படி ஊர் ஊராக விரட்டப்பட்ட படுபாவியான வாலிபனின் உடல் என்பதை அடையாளம் கண்ட நபி மூஸா அலைஹிஸ்ஸலாமவர்கள்.
“யா அல்லாஹ்! உன் ஆணைப்படி ஊரிலிருந்தும்,கிராமங்களிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்ட வாலிபனின் உடல் அல்லவா இது?“ என்று கேட்டார்கள்.
அல்லாஹ் பதில் கூறினான், “மூஸாவே! அவன் அதிகமாக அழுதான். அவன் குடும்பத்தின் பிரிவால் அதிகமாக வருந்தினான், வாடினான். அதனால்,அவனில் நான் இரங்கினேன். அவனின் தந்தையின் கோலத்தில் ஒரு மலக்கையும், தாயின், மனைவியின் கோலத்தில் ஹூறுல்ஈன்களையும், சொர்க்கத்து இளவல்களை அவன் பிள்ளைகளின் கோலத்திலும் அனுப்பி, அவன் தனிமையையும், விரக்தியையும் விலக்கினேன். அவனின் கேவலமான நிலைகண்டு அவர்கள் அவனுக்காக இரங்கினார்கள். அவன் மரணித்தபோது அவனில் இரக்கங்கொண்டு வானத்திலும், புவியிலுமுள்ளோர் கண்ணீர் வடித்தனர். கருணையாளனாக இருக்கும் நான் அவனுக்காக எப்படி கருணை செய்யாமலிருக்க முடியும்? அவன் குற்றங்களை மன்னித்தேன். என்னருகில் அவனை உள்வாங்கினேன்“ என்றான்.
ஒரு பிரயாணி மரணத்தின் விளிம்புக்கு வந்தால் அல்லாஹ் மலக்குகளைப் பார்த்து இவ்வாறு கூறுவான்,
“எனது அமரர்களே! இவர் ஓர் ஏழை பிரயாணி. பெற்றோர், குடும்பம், பிள்ளைகள் எல்லோரையும் விட்டும் தனித்து நிற்கின்றார், அவர் மரணித்தால் அவருக்காக கவலைப்படுவதற்கோ, அழுவதற்கோ யாரும் கிடையாது. பின் அல்லாஹ் அவர் தந்தை, தாய்,பிள்ளைகள், குடும்பங்களின் கோலத்தில் தனித்தனியான மலக்குகளை அனுப்புவான். அவர்கள் அவனுக்குப் பக்கத்தில் இருப்பதைக் கண்டதும் அவன் மகிழ்ச்சியடைவான். இதே, மகிழ்ச்சியிலும்,ஆனந்தத்திலுமே அவனது உயிர் பிரியும்.
பின் அவனது ஜனாஸாவை அவர்கள் தொடர்ந்து சென்று அவன் கப்றடியில் இருந்துகொண்டு மறுமை நாள் வரையிலும் அவனுக்காக துஆக் கேட்டுக் கொண்டேயிருப்பார்கள்“. அல்லாஹ் கூறுகின்றான்,“அல்லாஹ் அவன் அடியார்களின் (மீது) மிக்க இரக்கமுள்ளவனாகும்“.
இப்னு அதா ரழியல்லாஹு என்ற அறிஞர் கூறுகின்றார்கள்,
ஒரு மனிதனின் உண்மையும் பொய்யும் அவன் துக்கத்திலும், ஆனந்தத்திலும் இருக்கும்போதே வெளிப்படும். சந்தோஷமாக இருக்கும்போது அல்லாஹ்வுக்கு ஷுக்று - நன்றி பாராட்டுபவனும்,வேதனையான வேளையில் துவண்டு கிடப்பவனும் ஐயமற பொய்யானவனாவான்.
[3/14, 4:47 PM] Saifullah: இரு உலகங்களின் அறிவு வழங்கப்பட்ட ஒருவருக்கு சோதனைகள் என்ற ஊழிக்காற்று அடிக்கும்போது முறையீட்டையும், முனங்கலையும் வெளிப்படுத்துவாராயின், அவரின் அறிவோ, அவரி்ன் அமலோ அவருக்கு பயன்படாது போய்விடும். ஹதீதுஸ் குத்ஸியில் நபிகள் நாதர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
“எவர் எனது விதியை பொருந்திக் கொள்ளாமலும், நான் வழங்கியதற்கு நன்றி பாராட்டாமலும் இருப்பவர். நான் அல்லாத வேறு ஒரு இரட்சகளை - றப்பாக எடுத்துக் கொள்ளட்டும்“
வஹ்ப் பின் முனப்பிஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்ற அறிஞர் கூறுகின்றார்.
ஒரு நபி ஐம்பது ஆண்டுகளாக அல்லாஹ்வை வணங்கி வந்தார். அவரின் குற்றத்தை மன்னித்து விட்டதாக அவருக்கு அல்லாஹ் வஹீ அறிவித்தான். நான் எந்த குற்றமும் செய்யவில்லையே! அப்படியிருக்க எதற்காக என்னை மன்னித்தாய்? என்று நபியவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்.
அவரின் ஒரு நரம்பை அல்லாஹ் செயலிழக்கச் செய்தான். அதனால், அன்று இரவு முழுவதும் அவர் தூங்காமல் இருந்தார். காலை விடிந்ததும் ஒரு மலக்கு அந்த நபியிடம் வந்தார். நரம்பு செயலிழந்த சோகத்தை மலக்கிடம் நபியவர்கள் முறையிட்டார்கள். அப்போது மலக்கானவர் புகன்றார். உங்களின் ஐம்பது ஆண்டுகால வணக்கம் இந்த ஒரு முறையீட்டிற்கு நிகரில்லை என்று அல்லாஹ் கூறுகின்றான் என்றார் வானவர்.

1 comment: