Popular Posts

Saturday 23 April 2016

ஸுபிகளை பற்றி உனக்கு தெரியுமா?

ஸுபிகளை பற்றி உனக்கு தெரியுமா?

ஸுபிகளை பற்றி ஒரு இளைஞர் எந்நேரமும் குறைகூறிக்கொண்டிருந்தார். ஒருநாள் அவர் ஹழ்ரத் துன்னூன் மிஸ்ரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை காண வந்தார். அப்பொழுது அவர்கள் அவரிடம் தாம் அணிந்திருந்த மோதிரத்தை கொடுத்து அதை ஒரு மளிகை கடைக்காரனிடம் கொடுத்து ஒரு தீனாருக்கு அடமானம் வைத்து தேவையான மளிகை பொருள்களை வாங்கிவருமாறு பணித்தார்கள்.

இளைஞரும் அதனை எடுத்துக்கொண்டு சென்று மளிகை கடைக்காரனிடம் அடமானம் வைக்க முற்பட்ட பொழுது, "இதற்கு ஒரு தீனார் தர இயலாது ஒரு திர்ஹம்தான் தர இயலும்" என்று கூறிவிட்டான் கடைக்காரன். அவர் உடனே துன்னூன் மிஸ்ரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் திரும்பி வந்து நடந்ததை கூறினார்.

உடனே அவர்கள் அதனை நகை வியாபாரியிடம் சென்று விலை பேசி வருமாறு கூறினார்கள். அவரும் அதனை எடுத்துக்கொண்டு நகை வியாபாரியிடம் சென்ற பொழுது, "அம்மோதிரம் ஆயிரம் தீனார் விலை மதிப்புள்ளது" என்று கூறினார். இளைஞர் அதனை துன்னூன் மிஸ்ரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் வந்து கூறினார். உடனே அவர்கள் அவரை நோக்கி, "இந்த மோதிரத்தை பற்றி மளிகை கடைக்காரனுக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவே உமக்கும் சூபிகளை பற்றி தெரியும்" என்று கூறினார்கள். அது கேட்டு அந்த இளைஞர் வெட்கி தலை குனிந்தார். அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

பாம்பின் கால் பாம்பறியும் என்று முதுமொழி. சான்றோரை சான்றோரே அறிவர். கீழ்தர மக்களுக்கு மேன்மக்களை பற்றி என்ன தெரியும்.

இதுவே இன்றைய வஹாபிகளின் நிலையாகும். எந்த அறிவும் அற்ற இந்த வஹாபிகள் மேன்மை மிக்க சூபியாக்களை குறை கூறுவது இதனாலேதான்.
இறைவனை,காணும் சக்தியில் வேற்றுமை இருக்கும்வரை அதை அறியும் விஷயத்தில் தர்க்கங்கள் வந்த வண்ணமே இருக்கும்.
என்றாலும் ஞானிகள் தா்க்கத்தில் ஈடுபடுவதில்லை.
ஏனெனில்,
இறைவனை விட்டு அவர்களை அது அப்புறப்படுத்துவதாக புரிகிறார்கள்.

அஞ்ஞானிகள் நிலையோ,
தங்கள் ஊருக்கு,
யானைஒன்று வந்திருப்பதைக் கேள்விப்பட்டு,
அதைப் போய் பார்த்து வந்த,
குருடர்களின் நிலைதான் இவர்கள் நிலையும்.

அந்த குருடர்கள் யானையை பற்றி அறிந்து கொள்ளக்கூடிய ஒரே வழி அதை தொட்டுப் பார்ப்பதுதான்.

எனவே ஒருவர் யானையின் காலைத் தொட்டுப் பார்த்தார்.
மற்றொருவர் அதன் தந்தங்களைத் தொட்டுப் பார்த்தார்.
இன்னொருவர் அதன் காதைத் தொட்டுப் பார்த்தார்.
தாங்கள் தொட்டுப் பார்ப்பதற்கு ஏற்பவே,
யானை தூண் போன்று இருப்பதாகவும்,
கெட்டியான கழிப்போன்று இருப்பதாகவும்,
கூறிக்கொண்டனர்.

இவர்கள் செய்த தவறு,
முழு யாணையையும் காணாது,
அதன் ஒரு பகுதியை மட்டும் தொட்டுப் பார்த்துவிட்டு,
அதுதான் முழு யானை என்று எண்ணிக் கொண்டதுதான்.

மேலும்,அக வெளிச்சம் பூரணமான நாதாக்களை,
நம்மைப் போன்றவர்கள் என எண்ணுவதும் தவறு.

இறைவன் தன் அடியார்களை ஒளியின்பால் அழைக்கிறான் என்பதாகவே இறைமறை கூறுகிறது.

அவ்வொளியே,
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளியாகும்.
இதைத்தான் ரூஹூல் குத்ஸி என்றும்,
ஜீவகாந்த ஒளி என்றும் சொல்லப்படும்.

No comments:

Post a Comment