Popular Posts

Monday 25 April 2016

தீனை உயிர்ப்பிக்கக் கூடிய முஜத்தித்



இமாம் தஹபி (رحمه الله) ஒவ்வொரு நூற்றாண்டின் முஜத்திதுகளையும் பற்றி
 ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم) கூறினார்கள்:
 நிச்சயமாக அல்லாஹு தஆலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த உம்மத்துக்காக அவர்களுடைய தீனை உயிர்ப்பிக்கக் கூடிய முஜத்தித் ஒருவரை அனுப்புவான்.

 நூல் - அபூ தாவூத், ஹாகிம்.

 ஹதீத் கலை மேதையான ஹாபிழ் இமாம் தஹபி (رحمه الله) ஒவ்வொரு நூற்றாண்டின் முஜத்தித் சம்பந்தமாகவும் தமது ஸியரில் பின்வருமாறு கூறுகிறார்:
 ஹஸ்ஸான் இப்னு முஹம்மத் கூற தான் கேட்டதாக அல்-ஹாகிம் கூறுகிறார்:ஹிஜ்ரி 303 இல் நாங்கள் இப்னு சுரைஜுடைய மஜ்லிஸில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அறிஞர்களில் ஒருவரான ஒரு ஷெய்க் எழுந்து "நற்செய்தி ஓ நீதிபதியே (இப்னு சுரைஜ்)! " நிச்சயமாக அல்லாஹு தஆலா ஒவ்வொரு நூற்றாண்டிலும் மார்க்கத்தை புதுப்பிக்கக் கூடிய ஒருத்தரை (முஜத்தித்) அனுப்புகிறான்.முதலாம் நூற்றாண்டில் அல்லாஹு தஆலா உமர் இப்னு அப்தில் அஸீஸை அனுப்பினான். இரண்டாம் நூற்றாண்டில் அல்லாஹு தஆலா முஹம்மத் இப்னு இத்ரீஸ் அஷ்-ஷாபியை அனுப்பினான். மூன்றாம் நூற்றாண்டில் அல்லாஹு தஆலா உங்களை (இப்னு சுரைஜ்) அனுப்பியுள்ளான்... எனக் கூறினார்.

 நான் (இமாம் தஹபி) கூறுகிறேன்:நாலாம் நூற்றாண்டில் ஷெய்க் அபூ ஹாமித் இஸ்ஃபராயீனீ இருந்தார்.ஐந்தாம் நூற்றாண்டில் அபூ ஹாமித் அல்-கஸ்ஸாலி இருந்தார்.ஆறாம் நூற்றாண்டில் ஹாபிழ் அப்துல் கனீ இருந்தார்.ஏழாம் நூற்றாண்டில் ஷெய்குனா அபுல் ஃபத்ஹ் இப்னு தகீகுல் ஈத் இருந்தார்.
 ஆதாரம் - ஸியர் அ'லாமின் நுபலாஉ [1]

 9ம் நூற்றாண்டின் முஜத்திதான ஹதீத் மற்றும் பிக்ஹ் கலை மேதை ஹாபிழ் இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி (رحمه الله) அவர்கள் தமது "تحفة المجتهدين بأسماء المجددين" எனும் நூலில் ஒவ்வொரு நூற்றாண்டின் முஜத்திதுகளையும் பின்வருமாறு பட்டியலிடுகிறார்.
 1ம் நூற்றாண்டு - உமர் இப்னு அப்தில் அஸீஸ்
 2ம் நூற்றாண்டு - ஷாபியீ
 3ம் நூற்றாண்டு - இப்னு சுரைஜ் மற்றும் அபுல் ஹஸன் அல்-அஷரீ
 4ம் நூற்றாண்டு - அல்-பாக்கில்லானீ, ஸஹ்ல் அல்-ஸுலூகி, அபூ ஹாமித் இஸ்ஃபராயீனீ
 5ம் நூற்றாண்டு - அல்-கஸ்ஸாலி
 6ம் நூற்றாண்டு - ஃபக்ருத்தீன் அர்-ராஸீ , அர்-ராஃபீ
 7ம் நூற்றாண்டு - இப்னு தகீகுல் ஈத்
 8ம் நூற்றாண்டு - அல்-புல்கினி, அல்-இராக்கீ
 9ம் நூற்றாண்டு - ஸுயூத்தி

 ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் அபூ ஹாமித் அல்-கஸ்ஸாலீ (رحمه الله) ஏகமானதாக 5ம் நூற்றாண்டின் முஜத்தித் என இந்த உம்மாவின் இமாம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்..
20 hrs ·

No comments:

Post a Comment