Popular Posts

Wednesday 6 January 2016

ஈஸால் தவாப் பற்றி ஓர் ஆய்வு.

ஈஸால் தவாப் பற்றி ஓர் ஆய்வு.

 சங்கைக்குரிய ஷெய்குனா மெளலவி அல்ஹாஜ் A. அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள்

 தொடர் -5

 08. ஒரு மனிதன் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து நாயகமே! எனது தாய் மரணித்துவிட்டார். அவர்கள் மீது ஒரு மாத நோன்பு (நிறை வேற்றப்பட வேண்டியது) இருக்கின்றது. அவர்களைத் தொட்டும் அதை நான் நிறைவேற்றலாமா? என்று கேட்டார். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அந்த மனிதனைப் பார்த்து உனது தாயார் மீது கடன் இருந்தால் நீ அதை அவர்களைத் தொட்டும் நிறைவேற்றுவீரா? என்று கேட்டார்கள். அதற்கு ஆம் என்று பதில் கூறினார்கள். அவ்வாறாயின் அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு மிக ஏற்றமானது என்று கூறியதாக இப்னு அப்பாஸ் றழி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

 (முஸ்லிம்,ஹதீஸ் இலக்கம்– 1148,பாடம் – கிதாபுஸ்ஸியாம்)

 09. ஒருவர் மீது கடமையான நோன்பு இருக்கும் நிலையில் அவர் மரணித்துவிடுவாராயின் அவரைத் தொட்டும் அவரின் பொறுப்பாளர் நோன்பு வைக்க வேண்டும் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக ஆயிஷஹ் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

 (முஸ்லிம்,ஹதீஸ் இலக்கம்– 1147,பாடம் - கிதாபுஸ்ஸியாம்)

 10. யாராவது வந்து காப்பாற்றமாட்டார்களா? என்ற என்னத்தில் நிரில் மூழ்கியவன் தத்தளிப்பது போல் கப்ரில் மையித் தனது தந்தை, அல்லதுதாய், அல்லது சகோதரன், அல்லது நண்பன் ஆகியோரிடமிருந்து துஆவை – பிராத்தனையை எதிர்பார்க்கின்றது. அப்படி ஏதேனும் ஒரு துஆ அந்த மையித்தைச் சென்றடைந்தால் அதை துன்யா மற்றும் அதிலுள்ளவற்றை விட மிகப் பிரியமாக கருதுகிறது. நிச்சயமாக அல்லாஹ் உலக மக்களின் பிராத்தனை மூலம் கப்று வாசிகளுக்கு மலைகள் போன்று அருள்களை நுழைவிக்கின்றான். இறந்தவர்களுக்காக பிழை பொறுக்கத்தேடுவது உயிரோடிருப்போர் மரணித்தவர்களுக்கு வழங்குகின்ற சன்மானமாகும் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

 (பைஹகீ,ஹதீஸ் இலக்கம்– 7904,
 மிஸ்காத்,ஹதீஸ் இலக்கம்– 2355,பக்கம் – 206,பாடம் – பாபுல் இஸ்திஃபார்)

 11. யாராவது ஒருவன் மையவாடிக்கு பக்கத்தால் சென்று 11 தரம் ஸூறதுல் இக்லாஸ் – குல்ஹவல்லாஹு அஹத் என்ற அத்தியாயத்தை ஓதி அதன் நன்மையை மரணித்தவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவானாயின் அவனுக்கு மரணித்தோரின் எண்ணிக்கப்படி நற்கூலி வழங்கப்படும் என்று றபி ஸல் அவர்கள் சொன்னதாக ஸெய்யிதுனா அலீ (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

 (கன்சுல்உம்மால்,பக்கம்2059,ஹதீஸ் இலக்கம்-42596)
 ஹதீஸ் இலக்கம் 01

 மேற்கண்ட இந்த ஹதீஸ் தருகின்ற சாரம் என்ன வெனில், ஒருவன் மரணித்த பின்னும் அவனுக்கு பயன் கொடுக்கும் விடயங்கள் மூன்று உள்ளன. 1. நிரந்தரதானம் 2. மரணித்தவன் கற்பித்த கல்வி 3. அவன் விட்டுச் சென்ற அவனுக்காகப் பிராத்திக்கும் பிள்ளை.

 இம்மூன்று அம்சங்களும் மூன்றாம் அம்சம் கவனத்திற்கொள்ள வேண்டிய ஒன்று. இந்த மூன்றாம் அம்சம் பற்றி குறிப்பாக வஹ்ஹாபிகள் சிந்தித்து பார்க்க வேண்டிய விடயம். உயிருள்ள ஒருவன் செய்கின்ற நல்லமலால் மரணித்தவன் பயன் பெறுவான் என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையா? “துஆ” பிராத்தனை என்பது வணக்கத்தின் மூளை என்று நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஹதீஸ் இங்கு நினைவு கூறப்பட வேண்டியதாகும். உயிருள்ளவனின் பிராத்தனை மரணித்தவனுக்குச் சென்றடையும் என்று நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே சொல்லியிருக்க நாம் சந்தேகம் கொள்ளவோ, விவாதிக்கவோ இடமே இல்லை. வஹ்ஹாபித்தம்பிகள் இதை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும்.

 ஹதீஸ் இலக்கம்02

 மேற்கண்ட இந்த ஹதீஸ் தருகின்ற சாரம் என்னவெனில் இந்த ஹதீஸில் கூறப்பட்ட 7 விடயங்களும் ஒருவன் மரணித்த பின் அவனுக்கு நன்மை சேர்க்கும் விடயங்களாகும். குறிப்பாக அவன் விட்டுச் சென்ற நல்ல பிள்ளை அவனுக்காக துஆ கேட்பதால் மரணித்தவன் பலன் பெறுகின்றான். இதிலிருந்து பிள்ளை செய்கின்ற வணக்கம் மூலம் மரணித்த பெற்றோர் பலன் பெறுகின்றனர் என்பது தெளிவாகின்றது. உயிரோடுள்ளவனின் நல்லமல்களால் மரணித்தவன் பலன் பெறுகிறான் என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையா? வஹ்ஹாபித்தம்பிமார் இதை ஆழமாக சிந்தனை செய்து பார்த்து ஒளியுலகுக்கு வரவேண்டும்.

 ஹதீஸ் இலக்கம்03

 இந்த ஹதீஸும் மேற்கண்ட இரண்டு ஹதீஸ்கள் போல் பெற்றோருக்காக பிள்ளைகள் செய்கின்ற பாவமன்னிப்புக் கோரலால் அவர்கள் பலன் பெறுகின்றார்கள் என்ற உண்மையையே உணர்த்துகின்றது. வஹ்ஹாபிச் சிறுவர்கள் இதையும் தூய மனதோடு ஆய்வு செய்து அசூசியில் நின்றும் சுத்தம் பெறவேண்டும்.

 திருக்குர்ஆன் வசனம் - 4

 இத்திருவசனத்தின் மூலம் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பெற்றோருக்கு துஆ செய்யுமாறு அவர்களை அல்லாஹ் பணித்துள்ளான் என்பது தெளிவாகின்றது. உயிருள்ள ஒருவன் செய்கின்ற நல்லமல் கொண்டு மரணித்தவர்கள் பயன்பெற மாட்டார்கள், என்றிருந்தால் அவ்வாறு செய்தல் மார்க்கத்துக்கு முரணான தாயுமிருந்தால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை தமது பெற்றோருக்கு துஆ செய்யுமாறு அல்லாஹ் பணித்திருக்க மாட்டான்.

 வஹ்ஹாபித்தம்பிமார் இத்திருவசனத்தைக் கருத்துக்கெடுத்து தூய மனதோடு ஆய்வு செய்து வழிகேடென்ற சிறையிலிருந்து விடுபட வேண்டும்.

 இன்ஷா அல்லாஹ் தொடரும்.

No comments:

Post a Comment