Popular Posts

Saturday 23 April 2016

வணக்கத்திற்கும், மரியாதைக்கும் வித்தியாசம் உண்டு என்பதை உணர்த்தும் ஆதாரங்கள்!

வணக்கத்திற்கும், மரியாதைக்கும்
 வித்தியாசம் உண்டு என்பதை
 உணர்த்தும் ஆதாரங்கள்!

 ஸஹாபாக்கள் ரலியல்லாஹு அன்ஹு
 அவர்கள் கண்மணி ரசூலுல்லாஹி
 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 அவர்களுக்கு முன்னால் அதிமான
 தாழ்மை காட்டியது. சஹாபாக்கள்
 ரலியல்லாஹு அன்ஹு பெருமக்கள்
 காட்டிய தாழ்மையை கீழ்கண்ட நிகழ்ச்
 சியின் மூலமாக விளக்கினால் தகும்.

 இது வஹ்ஹபிய உலமா தலைவரில்
 ஒருவரான SAFEEURRAHMAN
 MUBARAKPURI அவர்களின் வார்த்தை
 அல்லது ஆதாரத்தின் வெளிப்பாடு:

 "உர்வா அவர்கள் ரசூலுல்லாஹி
 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 அவர்களுக்கும், சஹாபாக்கள்
 ரலியல்லாஹு அன்ஹு பெரு
 மக்களுக்கும் இருந்த தொடர்பை
 ஆராய்ந்தபிறகு, தங்களுடைய
 மக்களிடம் திரும்பி வந்த பிறகு,
 மக்களே ரோமின் மன்னர் சீசர்க்கும்,
 மற்றும் மன்னர் நெகுஸ் (NEGUS)க்கும்,
 ரோமன் மக்கள் மிகுந்த மரியாதையை,
 முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம் நபிக்கு அவர்களுடைய
 தோழர்கள் மரியாதை கொடுத்ததை
 போன்று, கொடுக்கவில்லை.

 முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம் அவர்கள் தண்ணீரை
 கொண்டு கழுவும்பொழுது,
 அந்த தண்ணீரை சஹாபாக்கள்
 ரலியல்லாஹு அன்ஹு பெருமக்கள்
 கையில் ஏந்தி நிலத்தில் சிந்த விடாமல்
 தங்கள் கைஹளில் ஏந்திகொண்டார்கள்
 பிறகு தங்கள் முகத்திலும், உடலிலும்,
 தலையிலும் தடவிகொண்டார்கள்.

 மேலும் முஹம்மது ஸல்லல்லாஹு
 அலைஹி வஸல்லம் அவர்கள்
 உத்தரவுப்ர பித்தால் அதை தலையாய
 கடமையாக ஏற்று செய்கிறார்கள்.

 முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம் அவர்கள் பேசும்போது,
 வாய்மூடி மெளனமாக கேட்கிறார்கள்.

 மரியாதைக்காக, சஹாபாக்கள்
 ரலியல்லாஹு அன்ஹு பெருமக்கள்
 ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம் அவர்களை நேருக்குநேராக
 பாக்காமல் மரியாதை செய்தார்கள்.
 (ஆதாரம்- ARRAHEEQUL MAKHTOOM
 PAGE 40-MAKTABASALAFIA, LAHORER)

 தொழுகையில் கையை கட்டி
 தொழுவதும் (FOLDED ARMS),
 ருகுவில் கையை திறந்து தொழுவதும்
 (OPEN ARMS) ஒருவகை இபாதத்.

 ஆனால் ரசூல் ஸல்லல்லாஹு
 அலைஹி வஸல்லம் அவர்களுக்கு
 முன்னால், முதலாளிகளுக்கு
 முன்னால், தாய் தந்தையர்களுக்கு
 முன்னால் கையை கட்டி
 (FOLDED ARMS) நிற்பது ஒரு
 மரியாதையே தவிர வணக்கம் இல்லை.

 கண்மணி நாயகம் ரசூலுல்லாஹி
 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 அவர்களின் முபாரக்கான எச்சிலை
 முகத்தில் தடவிக்கொள்வது ஒரு
 அதிகாமாக செலுத்தும் மரியாதையை
 அதாவது கையைகட்டி நிற்பதைவிட
 சஹாபாக்கள் ரலியல்லாஹு அன்ஹு
 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 அவர்களுக்கு காட்டிய மரியாதையை
 என்ற தலைப்பில் மேற் கூரப்பட்ட
 வற்றை விளக்குவோம் இன்ஷா அல்லாஹ்

 மேலும் மக்காஹ் முஷ்ரிகீன்கள்
 சிலைகளை வணங்கும் பொழுது
 "நாங்கள் ஏன் சிலைகளை
 வணங்குஹிறோம் என்றால் அவைகள்
 எங்களை அல்லாஹ்வின் பக்கத்தில்
 சேர்த்து வைக்கும் என்பதற்காகவே
 அன்றி நாங்கள்வணங்கவில்லை.
 (SURATHULZUMAR VERSE - 3)

 அதாவது முஷ்ரிகீன்கள் அல்லாஹ்வை
 வணங்குவதற்கு சிலைகளை தேர்ந்த்
 தெடுத்து கொண்டார்கள். ஆனாலும்
 அவைகளை (சிலைகளை) (தாத்தில்)
 முழுமையாக தன்னாகவே உள்ளமையில்
 உள்ளது என்று நம்பியதால், அதை
 வணங்கியவர்கள் வழிகெட்டு
 போனார்கள்

 இதைதான் இறைவன் அல்குர்ஆனில்
 பல இடங்களில் சுட்டிகாட்டுகின்றான்.
 அவ்வாறு இல்லை என்று வாதிட்டால்,
 கீழ்காணும் ஆயத்துகளுக்கு என்ன
 சொல்லப் போகிறார்கள்:
 அல்குரான்: 7:117, 3:49, 54:14.

 இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து
 பார்ப்போம்...

No comments:

Post a Comment