Popular Posts

Saturday 23 April 2016

இன்றும் கூட இக்கவிதை புனித 'ரெளலா ஷரீப் ' அறையில் "ஜியாரத்" பக்கமாக உள்ள தூனில் எழுதப்பட்டிப்பதை கண்டு களிக்கலாம்.

அவர்கள் தங்களுக்குத் தாங்களே
 அநியாயம் செய்துகொண்டு உம்மிடம்
 வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி
 அவர்களுக்காக (அல்லாஹ்வின்)
 தூதராகிய (நீங்களும்) மன்னிப்புக்
 கேட்டால், அல்லாஹுதஆலாவை
 அதிக மன்னிப்போனாகவும், கருணை
 யுடையோனாகவும் அவர்கள் கண்டு
 கொள்வார்கள். (அல்குர்ஆன் :4:64)

 இவ்வசனத்தின் விரிவுரையில் தப்ஸீர்
 முஹ்தஸர் இப்னு கஸீரில் பின்வரும்
 சம்பவம் பொறிக்கப்பட்டுள்ளது.

 அத்பீ ரலியல்லாஹு அன்ஹு
 அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
 நபிமணி ஸல்லல்லாஹு
 அலைஹி வஸல்லம் அவர்களின்
 'ரெளலா ஷரீபிற்கு' அருகே
 அமர்ந்திருந்தேன். அப்போது
 ஒரு கிராமப்புற அறபி அங்கு வந்தார்.
 அஸ்ஸலாமு அலைக்கும்
 யாறஸூலல்லாஹ் என்று ஸலாம்
 கூறிவிட்டு மேலேயுள்ள.
 (4:65) கருத்தமைந்த திருமறை
 வசனத்தையும் ஓதினார்.

 பின்பு பின்வருமாறு கூறினார்:
 (சங்கை மிக்க நாயகமே!)
 என் பாவங்களுக்குப் பரிகாரமும்,
 மன்னிப்பும் பெற நாடியவனாக,
 தாங்களை எனக்காக பரிந்துரைப்
 பவராகக் கருதி உங்கள் சன்னிதானத்
 தில் ஆஜராகியுள்ளேன் என்று
 கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

 சற்று நேரத்தில் எனக்கு நித்திரை வந்தது.
 நான் கண்ணயர்ந்து விட்டேன்.
 என் கனவிலே கண்மணி நாயகம்
 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 அவர்கள் திருத்தோற்றம் வழங்கி,
 அத்பியே நீர் அக்கிராமப்புற அறபியைச்
 சந்தித்து, அல்லாஹ் அவரது குற்றங்க
 ளை மன்னித்து விட்டான் என்ற சுப
 செய்தியை சொல்லிவிடுவீராக!
 என்று கூறி மறைந்தார்கள்.
 நூல் :தப்ஸீர் முஹ்தஸர் இப்னு
 கஸீர் :1 பக் -409-410)

 மாநபியின் மறைவுக்குப் பின்
 மன்னிப்பும் சிபாரிசும் வேண்டிய
 அம்மனிதப் புனிதர் பின்வருமாறு
 ஒரு கவிதையைப் பாடினார். இதனை
 மேற்படி வசன விரிவுரையில் காணலாம்

 பொருள்: பூமியில் அடங்கியவர்களில்
 மிகவும் மேன்மையும், சிறப்பும்
 உடையவர்களே! அவற்றின்
 நருமணத்தால் மண்ணும் மலைக்
 குன்றுளும் மணம் பெற்று விட்டன.
 தாங்கள் அமைதி பெற்று
 அடங்கியுள்ள 'கப்று 'க்கு எனது ஆன்மா
 அர்ப்பணமாகுக! அதிலே பணிவுத்
 தன்மையும், நன்கொடையும், ஈகையும்
 அமைந்துள்ளன

 இன்றும் கூட இக்கவிதை அடிகளை
 அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம் அவர்கள் அடங்கப்
 பெற்றிருக்கும் புனித 'ரெளலா ஷரீப் '
 அறையில் "ஜியாரத்" பக்கமாக உள்ள
 தூனில் எழுதப்பட்டிப்பதை கண்டு
 களிக்கலாம்.

 ஸல்லல்லாஹு அலா முஹம்மது
 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

 ஸல்லல்லாஹு அலா முஹம்மது
 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம

No comments:

Post a Comment