Popular Posts

Saturday 23 April 2016

மத்ஹப் இமாம்கள் உள்ளத்தை பார்த்து பேசும் ஆற்றல் படைத்த இல்மே பராஷத் படைத்த வர்கள்

மத்ஹப் இமாம்கள் உள்ளத்தை பார்த்து பேசும் ஆற்றல் படைத்த இல்மே பராஷத் படைத்த வர்கள் ..
அவர்கள் தொகுத்தும்..வகுத்தும் வை த்த பின்தான் ஹதீஸ்களை உருவாக்கினார்கள் புகாரி இமாமில் இருந்து ஏனைய இமாம்கள் ..என்ற உண்மை ஏன் மறைக்க பட்டு விட்டது ..?
ஹதீஸின் தரத்தை வைத்தும் கண்மணி நாயகம் நியயமமாக செய்தார்களா ..?
அல்லது அவ்வப்பொழுது செய்தார்களா..?
என சஹாபாக்களின் நடைமுறை வரலாறுகளை துல்லியமாக ஆராய்ந்து தொகுக்க பட்டது தான் மத்ஹப்கள் !
நியமமாக செய்து வந்தால் அது பர்ளு ...அவ்வப்பொழுது செய்து வந்தால் அது ஸுன்னத்....முஸ்தஹப்பு என்றும் வகுத்தும் பிரித்தும் கொடுத்தவர்கள் மத்ஹப்களின் இமாம்கள் !
இமாம்கள் எல்லாம் கூமுட்டை ..அவர்களை எல்லாம் பின்பற்ற மாட்டோம்..என்ரூ சொல்கிறார்களே...அதை நம்பாதீர்கள் !
வாலிபர்களே..நீங்கள் சிந்திக்க வேண்டாமா ..?
இனம் காண வேண்டாமா..?
லட்சம் லட்சமான ஹதீஸ்களை ஆய்வு செய்து பிக்ஹு மஸாயில் களை தொகுத்து எழுதிய துர்ருல் முக்தார் ..என்ற மாபெரும் சட்ட நூலில் குறை காண்கிறார் வழிகேடர்களின் தலைவர் !
எப்படி குறை சொல்கிறார் என்றால் ..இளைஞர்களை கவருகிறார் போல் ..தான்...!
முடிவை விட்டு விட்டு ..நடுவில் உள்ளதை மட்டும் எடுப்பது ..!
சொல்லக்கூடிய ஆதாரம் ..பாருங்கள்..!
"துர்ருல்முக்தாரில் எழுதி இருக்காங்க ..இரண்டுபேர் போனான் கள் திருடுவதற்கு ..!
ஒருவன் வீட்டுக்குள்ளே நுழைந்தான் ...
இன்னொருவன் வெளியே இருந்தான் ..!
வீட்டிற்குள் போனவன் பொருட்க்களை எல்லாம் எடுத்து எடுத்து கீழே போட்டான் ..!
கீழே நின்றவன் தெருவில் வந்து விழுந்து கிடந்த பொருளை எல்லாம் எடுத்துட்டு போய்விட்டான் !
இவனும் வீட்டிற்குள் இருந்து வெறுங்கையோடு இறங்கி சென்றான் !
அதனால இந்த இரண்டு பேரையும் கையை வெட்டக்கூடாது ..!
திருட்டு சட்டம் கிடையாது ..என்று புக்கஹாக்கள் எழுதி இருக்கிறார்கள் !
இது ஒரு சட்டமா..இதை எழுதியவர் ஒரு மனிதரா ..?
என்று வழிகேட்டின் தலைவர்களால் சொல்ல ப்படுகிறது !
நமக்கும் கேட்க்கும்போது சரியாக இருக்கிறது !
துர்ருல்முக்தரில் அப்படித்தான் எழுதியுள்ளார்கள் !
இதுக்கு தனடனையே கிடையாது ...என்று எழுதி உள்ளார்கள் ..என்று சொல்லி நிறுத்தி விடுகிறார் !
புக்கஹாக்கள் ரொம்ப தெளிவாக எழுதியுள்ளார்கள் !
தண்டனை இருக்கிறது அதேசமயம் அது அந்தந்த நாட்டின் அரசியல் அமைப்பை சார்ந்த கடுமையான தண்டனை ..அன்னியர் வீட்டில் அனுமதி இல்லாமல் நுழைந்ததற்கும் சேர்த்து கடும்தண்டனை விதிக்க வேண்டும் என்று எழுதியுள்ளதை சொல்லாமல் விட்டு விட்டு ..
வீட்டிற்குள் போனவன் வெறும்கையோடு தானே வந்தான் ...
தெருவில் கிடந்த சாமான்களை தானே இன்னொருவன் எடுத்து சென்றான் இதுக்கு திருட்டு குற்றம் இல்லை என்றும் கையை வெட்டவேல்லாம் கூடாது என எழுதி வைத்துள்ள நூல நல்ல நூல அல்ல ..என்று
அந்த மாபெரும் சட்ட நூலையே இல்லாமல் ஆக்கி விட்டார் ..
அரபி தெரியாத ஆட்டுக்குட்டிகளும் சாய்ந்து விட்டது !

-----Shafiyath Qadiriyah

No comments:

Post a Comment