Popular Posts

Saturday 23 April 2016

ஃபக்கீர் என்றால் யார்..?

ஃபக்கீர் என்றால் யார்..?

ஃபக்கீர்கள் என்பவர்கள் இறைவனின் நெருக்கத்தை பெறுவது,
நஃப்ஸை சுத்தப்படுத்துவது,
மனதை தீய ஊசாட்டங்களை விட்டு சுத்தப்படுத்துவது,
அவனது பொருத்தத்தை பெறுவது,
அவனை எந்த நிலையிலும் திக்ரு செய்துகொண்டே இருப்பது,
அவனை அடைவது,
ஆகிய உயர்ந்த ஆத்மீக காரணங்களால்,
தங்களின் வாழ்க்கைத் தேவையைகூட பூர்த்தி செய்ய முடியாமல்,
ஏழ்மை நிலையிலும் கூட,
அல்லாஹ்வுடைய பாதை என்கின்ற,
ஃபீஸபீலில் அவனது மார்க்கத்தை பரப்புவதற்காக திரிபவர்கள் ஆவர்.

''ஃபக்கீர்கள் எத்தகையவர்கள் என்றால்,
தங்களின் சொந்த தேவைக்கும் பொருளீட்டுவதற்காக,
பூமியில் பயணம் மேற்கொள்ள முடியாதவாறு,
அல்லாஹ்வின் பாதையில் ஈடுபடுத்தப்பட்டவர்கள்.
(அல் குர்ஆன் 2:273)

மேற்கூறிய வசனத்தின் மூலம் அல்லாஹ் ஃபக்கீர் என்ற வார்த்தைக்கு அவனே பொருளை தந்துள்ளான்.

மேலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
ஏழையாகவே நீர் இறைவனை சந்திக்க வேண்டும்.
செல்வந்தனாக சந்திக்காதீர்.
ஹஜ்ரத் பிலால் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள்.

மேலும் எந்த வலிமார்களும்,
ஃபக்கீரியத்(ஏழ்மை) என்ற தன்மையை அடையாமல்,
விலாயத் பெற்றிருக்கவில்லை.
ஏனெனில்,
கெளதுனா முஹ்யத்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹூ அன்ஹூ முதல்,
இக்கால வலிமார்கள் வரை அனைவரும் ஃபக்கீரியத்தைக் கடைப்பிடித்துள்ளார்கள்.

ஆக நாம் அனைவரும்,
ஃபக்கீர்களை மதித்து,
அல்லாஹ்வின் அவனது ரஸூலின் நேசத்தைப் பெற்று,
தரீக்கத் எனும் நேரிய வழியை பேணி நடப்பதற்கு வல்ல இறைவன் அருள்புரிவானாக,ஆமீன்!

No comments:

Post a Comment