Popular Posts

Monday 25 April 2016

தப்லீக் ஜமாத்தின் வஹாபிய கொள்கைகள்

தப்லீக் ஜமாத்தின் வஹாபிய கொள்கைகள் :

 1. அல்லாஹுதஆலா பொய் சொல்லுவது சாத்தியம்.
 [ ஃபதாவா ரஷீதியா, வால்யூம் 1,பக்கம் 19 ]

 2. அல்லாஹுதஆலா தனது படைப்புகள் செய்யும் செயலை முன்னறே அறிந்திருக்க மாட்டான்.படைப்புகள் ஒரு செயலை செய்த பின்னரே அல்லாஹ் அதை அறிகின்றான்.
 [ தஃப்சீர் புல்காதுல் ஹைரான்,பக்கம் 157,158]

 3. ஷைத்தானும், மலக்குல் மவ்த்தும் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 அவர்களை விட நிறைய அறிந்துள்ளார்கள்.
 [ பராஹீனே காதியா,பக்கம் 51 ,52 ]

 4. நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தனது இறுதி முடிவு என்னவென்று தெரியாது , மேலும் அவர்களுக்கு சுவற்றுக்கு பின்னால் இருப்பது கூட தெரியாது.
 [ பராஹீனே காதியா,பக்கம் 51 ]

 5. அல்லாஹுதஆலாவால் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவும்,மறைவான ஞானமும் விலங்குகளுக்கும்,மதழைகளுக்கும்,பைத்தியக்காரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
 [ஹிஃப்ஸுல் ஈமான், பக்கம் 7 ]

 6. தொழுகையில் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிந்தனை வருவது எருமை அல்லது கழுதையின் சிந்தனையில் மூழ்குவதி விட மோசமானது.
 [ ஸிராத்தே முஸ்தகீம் ,பக்கம் 86 ]

 7. ரஹ்மத்துல் ஆலமீன் என்பது நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட தனித்துவமான பண்பு அல்ல,பிற நல்லடியார்களையும் ரஹ்மத்துல் ஆலமீன் என்று அழைக்கலாம்.
 [ ஃபதாவா ரஷீதியா,வால்யூம் 2,பக்கம் 12 ]

 8. மார்க்கம் அறியாத பாமர மக்களுக்கு “காத்தமுன் நபீயீன்” என்பது இறுதி நபி என்று அர்த்தம் கொள்வர்.எனினும் விஷயம் அறிந்தவர்களுக்கு இது சரியான விளக்கமன்று. அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னர் ஒரு நபி பிறந்தாலும் அது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதியானவர்கள் என்பதில் எந்த விளைவையும் உண்டாக்காது .
 [ தக்தீருன் நாஸ் ,பக்கம் 3,25 ]

 9. அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உர்து மொழியை தாருல் உலூம் தேவ்பந்தின் உலமாக்களிடம் இருந்து கற்றார்கள்
 [ பராஹீனே காதியா,பக்கம் 26 ]

 10. நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு மூத்த சகோதரரைப் போன்று தான் கண்ணியமளிக்கப்பட வேண்டும் .[ தக்வியத்துல் ஈமான் , பக்கம் 58 ]

 11. அல்லாஹ் நாடினால் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் போன்று கோடானு கோடி பேர்களை உருவாக்குவான் . [தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 16 ]

 12.பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்.
 [ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59 ]

 13.அனைத்து அன்பியாக்களும்,இறைத்தூதர்களும் பயனற்றவர்கள். [தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 29 ]

 தேவ்பந்த் தப்லீக் ஜமாத்தின் முன்னோடிகள் :

 இஸ்மாயில் திஹ்லவி ( மறைவு 1246 ஹிஜ்ரி - 1830 )

 காசிம் நானுத்வி (மறைவு 1297 ஹிஜ்ரி - 1879)

 ரஷீத் அஹ்மத் கங்கோஹி ( மறைவு 1323 ஹிஜ்ரி - 1905 )

 கலீல் அஹமத் அம்பேத்வி ( 1852 - 1927 )

 அஷ்ரப் அலி தானவி ( மறைவு 1392 ஹிஜ்ரி - 1943 )

 

 தாருல் உலூம் தேவ்பந்த் மௌலவி காசிம் நானூத்வியால் 1866/68 ல் ஸ்தாபிதம் செய்யப்பட்டது .


 பஹிஷ்தி ஜேவர் ,தப்சீர் பயானுல் குரான் போன்ற பல நூற்களின் ஆசிரியர் மௌலவி அஷ்ரப் அலி தானவி.இவரின் கொள்கைகள் தப்லீக் ஜமாத்தின் ஸ்தாபகர் மௌலவி இல்யாசை பெரிதும் கவர்ந்தன.


 மௌலவி இல்யாஸ் தப்லீக் ஜமாத்தினரால் ஹழ்ரத்ஜி என்று அழைக்கப்பட்டார்(மறைவு 1944). இவர் தான் தப்லீக் ஜமாத்தின் ஸ்தாபஹரும் முதல் அமீரும் ஆவார். இவர் கலீல் அஹ்மத் ஸஹரான்பூரியின் கலீபா ஆவார். அவர் ரஷீத் அஹமத் கங்கோஹியின் கலீபா ஆவார். [ இர்ஷாதுல் முலூக் , ஆங்கில மொழிபெயர்ப்பு ,பக்கம் 12 ]



 மௌலவி இல்யாஸின் மறைவைத் தொடர்ந்து தப்லீக் ஜமாத்தின் அடுத்த அமீராக அவரது மகன் மௌலவி முஹமது யூசுப் (மறைவு 1965) ஆனார்.அவரைத் தொடர்ந்து இனாமுல் ஹசன் அடுத்த அமீரானார்.தற்சமயம் தப்லீக் ஜமாத்திற்கு அமீர் யாரும் இல்லை , அதன் நடவடிக்கைகள் ஒரு ஷூரா (குழுவைக்) கொண்டு இயங்குகிறது.

 நூல்
 ஆசிரியர்
 ஹிப்ளுள் ஈமான்
 அஷ்ரப் அலி தான்வி
 பதாவா ரஷீதியா
 ரஷீத் அஹ்மத் கங்கோஹி
 ஆபே ஹயாத்
 முஹம்மத் காஸிம் நானோத்வி
 தக்தீரூன் னாஸ்
 முஹம்மத் காஸிம் நானோத்வி
 பராஹீனே காதியாஹ்
 கலீல் அஹமத் அம்பேத்வி
 தக்வியத்துல் ஈமான்
 ஷாஹ் இஸ்மாயில் தெஹல்வி
 ஸிராதே முஸ்தகீம்
 ஷாஹ் இஸ்மாயில் தெஹல்வி
 தப்சீர் புல்காதுள் ஹைரான்
 ஹுசைன் அலி வண் பச்ரனி
 தஸ்பி யாதுள் அகாயித்
 முஹம்மத் காஸிம் நானோத்வி
 ரிஸாலா அல் இம்தாத்
 அஷ்ரப் அலி தான்வி

No comments:

Post a Comment