Popular Posts

Monday 25 April 2016

தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர்

509. அபூ ஸாலிஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவித்தார்கள் .
 எவரும் குறுக்கே செல்லாமலிருக்கத் தடுப்பு வைத்துக் கொண்டு அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலியல்லாஹு அன்ஹு )அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமையன்று தொழுது கொண்டிருந்தார்கள். பனூ அபூ முயீத் என்ற கூட்டடத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் குறுக்கே செல்ல முயன்றார். உடனே அபூ ஸயீத்(ரலியல்லாஹு அன்ஹு) அவரின் நெஞ்சில் கையால் தள்ளினார்கள். வேறு வழியேதும் உள்ளதா என்று அந்த இளைஞர் கவனித்தபோது, அபூ ஸயீத்(ரலியல்லாஹு அன்ஹு)யின் குறுக்கே செல்வதைத் தவிர அவருக்கு வேறு வழிதென்படவில்லை. எனவே மீண்டும் அவர்களுக்குக் குறுக்கே செல்ல முயன்றார். முன்பை விடக் கடுமையாக அபூ ஸயீத்(ரலியல்லாஹு அன்ஹு) அவரைத் தள்ளினார்கள். அதனால் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. உடனே அவர் (ஆட்சித் தலைவராக இருந்த) மர்வானிடம் சென்று இது பற்றி முறையிட்டார். அவரைத் தொடர்ந்து அபூ ஸயீத்(ரலியல்லாஹு அன்ஹு) மர்வானிடம் சென்றார்கள். 'உமக்கும் உம் சகோதரர் மகனுக்குமிடையே என்ன பிரச்சினை?' என்று மர்வான் கேட்டார். 'உங்களில் எவரேனும் தமக்கு முன்னால் 'தடுப்பு' வைத்துத் தொழும்போது, எவரேனும் குறுக்கே செல்ல முயன்றால் அவரைத் தடுக்க வேண்டும்; அதை அவர் எதிர்த்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் நிச்சயம் ஷைத்தானாவார்" என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என அபூ ஸயீத்(ரலியல்லாஹு அன்ஹு) கூறினார்கள் .
 மற்றொரு ஹதீஸில்
 510. புஸ்ரு இப்னு ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள் .
 தொழுபவரின் குறுக்கே செல்பவர் பற்றி நபி(ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அவர்களிடமிருந்து செவியுற்றதை அறிந்து வருமாறு என்னை அபூ ஜுஹைம்(ரலியல்லாஹு அன்ஹு ) அவர்களிடம் ஸைத் இப்னு காலித்(ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அனுப்பி வைத்தார்கள் . 'தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது நாள்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும்' என்று இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அவர்கள் கூறினார்கள் என அபூ ஜுஹைம்(ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ) விடையளித்தார்கள்.
 இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுன் னழ்ரு என்பவர் 'நாற்பது ஆண்டுகள்" என்று கூறினார்களா? அல்லது 'நாற்பது மாதங்கள்' அல்லது 'நாற்பது நாள்கள்' என்று கூறினார்களா? என்பது சரியாக தமக்கு நினைவில்லை என்கிறார்.
 (நம்ம ஆளுங்க மிக சர்வ சாதரணமா எந்த கவலையும் இல்லாம குறுக்கே போறாங்க )
June 13 at 6:40pm ·

No comments:

Post a Comment