Popular Posts

Monday 9 May 2016

குர்ஆன் ,ஹதீஸ் இருக்க மத்ஹப் ஏன்???

குர்ஆன் ,ஹதீஸ் இருக்க மத்ஹப் ஏன்??? என்று கண்ணியமான அரபு இலக்கணப் பண்டிதர்களான இமாம்களை தூக்கி எறிந்து குர்ஆன்,ஹதீஸுக்கு அரபே ஒழுங்காக தெறியாத நாங்களே நேரடியாக விளக்கம் கொடுக்கலாம் என்று சில ஆலிம்களை நம்பி அறியாமல் புதிதாக இஸ்லாத்தை சொல்பவர்களின் கூடாரத்துக்கு சென்று இப்பொழுது எந்த tj பக்கம் போவது என்று தடுமாறும் அப்பாவி இளைஞர்களே?

 உங்களிடம் சில கேள்விகள் முடியுமென்றால் பதில் தரலாம்?கியாம நாள்
 வரைக்கும் அவகாசம்? இமாம்களின் கிதாபின் பக்கம் நெருங்காமல் முடியுமென்றால் குர்ஆன்,ஹதீஸிலிருந்து நேரடியாகவே ஆதாரம் தர வேண்டும்?

உங்களுடைய வஹாபி ஆலிம்சாக்களையும் உதவிக்கு அழைக்கலாம்

முதல் கேள்வி?
 நீங்களும் நாமும் உலக முஸ்லிம்களுக்கும் கடமையாக்கப்பட்ட இரண்டாவது கடமை தொழுகையில் சுபஹ் 2 ரக்அத் ளுஹர் 4 ரக்அத் அஸ்ர் 4 ரக்அத் மஃரிப் 3 ரக்அத் இஷா 4 ரக்அத் என்று இத்தனை ரக்அத்துக்கள்தான் தொழவேண்டும் என்பதை குர்ஆன்,ஹதீஸிலிருந்தே நிரூபிக்க வேண்டும்.....

இரண்டாவது கேள்வி?
 குர்ஆனில் 4ம் ஜுஸ்உவில் சூரதுன் நிஸா என்ற அத்தியாத்தில் 3ம் பக்கத்தில் அல்லாஹ் வாரிசு உரிமைப் சட்டம் பற்றி இறைவன் பேசுகின்றான்
 இதில் ஒரு இடத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவருடைய மனைவிக்கு 6/1 பகுதி என்றும் இன்னொரு இடத்தில் 3/1 பகுதி என்றும் கூறுகிறான்..இதனுடைய சட்டம் என்ன என்பதை இமாம்கள் உதவியில்லாமல் நிரூபிக்க வேண்டும்?

மூன்றாவது கேள்வி?குர்ஆனில் இறைவன் உங்கள் துனைவியாரை தொட்டால் வுழூ முறியும் என்று குறிப்பிடுகின்றான்..இந்த கருத்தை ஷாபியீ இமாம் எடுக கிறார்கள் ஆனால் ஹனபீ இமாம் வேறொரு வசனத்தை மையமாக வைத்து எடுக்கவில்லை இதனுடைய சட்டம் என்ன?இதை இமாம்களின் உதவியில்லாமல் சொல்ல வேண்டும்?

நான்காவது கேள்வி?
 தொழுகையில் இமாம் வழல்லால்லீன் என்று சொல்லும் போது ஷாபியீ மத்ஹப்காகிய நாம் சப்தமாக ஆமீன் சொல்வோம்..ஆனால் ஹனபீ மத்ஹப்இனர் மெதுவாக கூறுவார்கள்.இரண்டுக்கும் ஹதீஸிலே ஆதாரம் உள்ளது..ஆனால் இமாம்களைப் பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன?

ஐந்தாவது கேள்வி?பிறை விடயத்தில் இமாம்களின் சொற்களை பின்பற்றாத காரணத்தால் இன்று நபி வழி என்று ஆரம்பித்து சர்வதசப்பிறை,
 கணக் கீட்டுப்பிறை உள்நாட்டுப்பிறை,மாநிலப் பிறை என்று பல பிரிவாகிவிட்டனர்? இதில் எது நபி வழி?இமாம்கள் உதவியில்லாமல் சொல்ல வேண்டும்?

ஆறாவது கேள்வி!ஜும்ஆவுக்கு முந்தின சுன்னத் உண்டா?இதில் இமாம்களை பின்பற்றாத நீங்கள் இரண்டு பிரிவாகி விட்டீர்கள்?இதில் எதுதான் உங்கள் நபிவழி?இமாம்கள் உதவியில்லாமல் கூறவேண்டும்?

ஏழாவது கேள்வி!ஸகாத் ஒவ்வொரு ஆண்டும் கொடுக்க வேண்டுமா?அல்லது ஆயுளில் ஒரு தடவையா?இதில் நபி வழியினர் இரண்டாகி விட்டார்கள் உங்கள் நிலைப்பாடு என்ன?

இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்?அப்பாவி இளைஞர்களே உங்கள் சிந்தனைக்கு நாங்கள் நபி வழியைப் பின்பற்றுகிறோம் என்று கூறுகிறீர்கள ஆனால் இப்போது இந்த நபிவழியில் எத்தனை பிரிவினர்
 அதற்குள்ளே ஷாபி,ஹனபியிஐ பிரிவினை என்கிறீர்கள். ஆனால் நாம் எப்போதும் ஒற்றுமையாகவே இருக்கிறோம்.போட்டிப் பள்ளிவாசல் எங்காவது கண்டிருக்காறார்களா? ஆனால் தமிழகத்தில் tntj(உள்நாட்டுப் பிறை) ஒரு பள்ளியைக் கட்டினால் jaqqh(சர்வதேசப் பிறை)பிரிவினர் ஒரு பள்ளியை கட்டுகின்றனர்.

 இன்னுமொரு வித்தியாசமான கேள்வியைக் கேட்பார்கள்:-

 நபி அவர்கள் காலத்தில் ஷாபி,ஹனபிஈ இருந்திச்சா என்று இதற்கு பதில் சொல்ல முடியாத வாலிபர்களே!!!இனிமேல் நீங்களும் கேள்வி கேட்க வேண்டும் நபி அவர்கள் காலத்தில் tntj,slt,jaqqh,Actj,Darul adar,ntj,jamaathul muslimeen போன்றவைகள் இருந்த்தா?என்று கேட்க வேண்டும்.

 அடுத்த அவர்கள் கேட்கும் விசித்திரமான கேள்வி?
ஒருவர் இஸ்லாத்துக்கு வந்தால் ஷாபியீக்கு போவாரா,ஹனபிக்கு போவாரா? இந்த கேள்வி வைப்பவர்களிடம் நீங்கள் கேட்க வேண்டும்

 ஒருவர் இஸ்லாத்துக்கு வந்தார் மத்ஹப்(இமாம்,சஹாபா பாதை) வேண்டாம் குர்ஆன் ஹதீஸ் பிரகாரம் நடக்கப் போகிறார் அங்கே போனால் நீங்கள் 10 குழுவாக இருக்கிறார்கள் அவர் எந்த ஜமாத்தில் இணைவார்..???

எனவே,அன்பான வாலிப சமூகமே சிந்தியுங்கள்!!; எதை வஹாபிகள் சொன்னாலும் தலையாட்டி பொம்மை போல் இருக்காமல் நன்கு அரபு தெரிந்த,சட்டம் தெரிந்த உலமாக்களிடம் போய் கேளுங்கள்.....

இன்று உலகில் 200 கோடி முஸ்லிம்களும் 4 மத்ஹப்பில் ஏதோ ஒன்றில் இருக்கிறார்கள்...இதானால்தான்1980 வரை பிரச்சினை இல்லாமல் சுன்னத் வல் ஜமாத் கொள்கையில் இருந்து வந்தார்கள் ஆனால் ஏன் இவர்கள் பலதாக பிரிந்து சண்டை போடுகிறார்கள் என்று புரியவில்லையா???

 காரணம் சஹாபாக்களையும்,இமாம்களையும்,சலபுஸ்ஸாலிஹீன்களும் குர்ஆன்,ஹதீஸுக்கு சொன்ன விளக்கத்தை எடுக்காமல் இன்று அரபே சரிவரத் தெரியாத எல்லோரும் ஆளுக்கொரு குர்ஆன்,ஹதீஸுக்கு அவர்கள் விளக்கம் கொடுத்ததால்தான்....

ஆகவே,அன்பான வாலிப சமூகமே!!!இனியும் நாம் அந்த கூடாரத்தில் இருக்கப் போகிறோமா அல்லது அல்லாஹ் குர்ஆனில் சொன்ன் நேரான வழியான நபிமார்கள்,
 உண்மையாளர்கள்
 (சஹாபாக்கள்)சுஹதாக்கள்,இமாம்களின் வழியைப் பின்பற்றி சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வாழ்ந்து மரணிக்கப் போகிறோமா??? நீங்களே சிந்தியுங்கள்

 உலக வாழ்வை விட மறுமை வாழ் வே மேலானது!!!

No comments:

Post a Comment