Popular Posts

Monday 9 May 2016

நவீனவாதிகளின் அறியாமையும் குழப்பமும்.

நவீனவாதிகளின் அறியாமையும் குழப்பமும்.


 ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு இதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்திருக்கிறார்களா? என்ற வினாவை எழுப்பி இல்லை என்று பதில் கிடைத்தால், 'அவ்வாறாயின் அது பித்அத். எல்லா பித்அத்களும் தீய வழிகள். தீய வழிகள் எல்லாம் நரகத்தில்தான்' (உமர்,உதுமான் ரலியல்லாஹு அன்ஹுமா நரகத்தில்தான்) என்று நவீனவாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். இது பெரிய அபாயமாகும். பித்அத் என்பதின் மரபுப் பொருளை (இஸ்திலாஹிமஃனா அர்த்தம்)விளங்காமல் இருப்பதே இதற்கு காரணம். குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ, அதர் (ஸஹாபாக்களின் நடைமுறை) ஆகிய நான்கு ஆதாரத்திற்கும் எதிராக, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்குப் பின் தோன்றிய 'ஷரீஅத்' என்று கருதப்படும் செயல்களே பித்அத்(தானவை) என்று முன் விவரிக்கப்பட்டுள்ளது.


 இதிலிருந்து ஒரு செயலுக்கு பித்அத் என்று பெயர் சொல்ல வேண்டுமெனில் ஸஹாபாக்களின் நடைமுறையையும் ஆராய வேண்டும். மேலும் அந்தச் செயல் மேற்குறிப்பிட்ட குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ, அதர் என்ற நான்கு ஆதாரங்களுக்கும் முரண்பட்டுள்ளது என்பதும் ருசுவாக வேண்டும் என்பதும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


 குழப்பவாதிகள் பித்அத் என்பதற்கு பெருமானாரின் காலத்தில் இல்லாதது என்பதோடு நிறுத்திக் கொள்கின்றனர்இ ஸஹாபாக்களை ஏற்க மறுக்கின்றனர். ஸஹாபாக்களின் அதர் உட்பட உள்ள நான்கு ஆதாரங்களுக்கும் எதிரிடையாக இருந்தால்தான அது பித்அத் என்பதை அவர்'கள் அறியவில்லை. இதனால்தான் குழப்பங்கள் தலை தூக்குகின்றன.


 ஸஹாபாக்களும், சான்றோர்களும் சென்ற பாதையே சரியான பாதை:

 சங்கைமிகு ஸஹாபா பெருமக்ககளுக்கு மாபெரும் மதிப்பும் பதவியும் இருந்திருக்கின்றன என்பது குர்ஆன், ஹதீஸைக ஆராய்ந்தால் நன்கு புலப்படும்.


 ஹக்கையும், பாத்திலையும் (மெய்யையும், பொய்யையும்) கலந்து, ஆயத்து ஹதீதுகளுக்கு பொருளும், கருத்தும் கூறுகின்ற ஒரு வகுப்பினர் இ.ன்று நம்மிடையே உள்ளனர். இந்தக் கலப்பு சித்தாந்தம் இந்த துர்ச்செயல், பல நூற்றாண்டுகள் பழமையானதாகும். முந்தய சமுதாயங்களிலும் இந்த துர்ப்பழக்கங்கள் நடைமுறையில் இருந்திருக்கிறது. இந்தப் பழக்கமுடையவர்கள் காலப்போக்கில் பற்பல குழுக்களாக உருவெடுத்துள்ளனர். இதுபற்றி நபிகள் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்திருப்பதை சிந்திப்போம்.


 'உங்களுக்கு முன் சென்றவர்கள் 72 வகையினராகப் பிரிந்தனர். நீங்கள் 73 வகையினராகப் பிரிவீர்கள்.' –அல்ஹதீஸ் திர்மிதி.


 எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' அவர்களின் சமுதாயத்திலும் மார்க்க விஷயர்தில் சுய அபிப்பிராயத்தை செலுத்துபவர்கள்-பிரமாணங்களுக்கு துர்வியாக்கியானம் செய்பவர்கள் பல குழுக்களாக உருவெடுப்பார்கள் என்பதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தீர்க்க தரிசனம் செய்திருப்பதை இங்கு பார்க்கிறோம்.


 தொடர்ந்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது 'உரு வகுப்பினரைத் தவிர மற்ற 72 வகுப்பாரும் நரகத்திற்குரியவர்கள்' என்'றார்கள். இதனைக் கேட்ட ஸஹாபா பெருமக்கள் 'சுவனத்திற்கு உரித்தான அந்த வெற்றிக்குரிய வகுப்பினர் யார்?' என்று வினவினார்கள். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய பதில் மிக முக்கியமானது. இதை நாம் மிக்க கவனத்துடனும் ஆழ்ந்த சிந்தனையுடனும் விளங்கி மனதில் நிறுகத்திக்கொள்ள வேண்டும்.

 ஸஹாபாக்களின் கேள்விக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் சொன்னார்கள்: 'நானும் என் சஹாபாக்களும் கொண்டிருக்கிற கொள்கையைப் பற்றிப்பிடிக்கிறவர்கள்'. (திர்மிதி)


 இஸ்லாமின் மூலப்பிரமாணம் தூய குர்ஆன் ஷரீபேயாகும். அதன் விரிவுரையாளரும், அதனை செயல்படுத்திக் காட்டியவர்களும் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களேயாவார்கள். அவர்களின் வாழ்வு முழுக்க முழுக்க திருக்குர்ஆனாகவே இருக்கின்றது. அந்த பரிசுத்தமான வாழ்க்கை முறையை பின்பற்றி நடக்க கடமைப்பட்டவர்கள்தான் முஸ்லிம்கள். ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களி;ன் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்று, பின் தலைமுறையினருக்கு எப்படி விளங்கும்?


 மகான்களான ஸஹாபாக்கள் பெருமானாரின் வாழ்க்கைமுறையை சிறிதும் பிசகாமல் அப்படியே பின்பற்றினார்கள். அவர்களைப் பின்பற்றி நடப்பதின் மூலம்தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கைமுறையை நாமும் மேற்கொள்ள முடியும். ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு ஒன்றாக இருந்து அவர்களது நடைமுறைகளை இடைவிடாது கவனித்து தம் வாழ்க்கiயிலும் அவற்றை ஜொலிக்கச் செய்ய ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மையையே கொண்டிருந்தார்கள். அந்த ஸஹாபா பெருமக்கள் இல்லாமல் நமக்கு இஸ்லாம் எங்கிருந்து கிடைக்கும்? அதனால்தான் (ஸஹாபாக்களை தவிர்த்து இஸ்லாமில்லை என்பதால்தான்)


 'நானும் என் ஸஹாபாக்களும் மேற்கொள்கின்ற வழிமுறைதான் ஈடேற்றத்திற்குரியது' என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்'கிச் சொன்னார்கள்.


 மாபெரும் மதிப்பையும் சிறப்பையும் அல்லாஹுதஆலா ஸஹாபாக்களுக்கு கொடுத்துள்ளான் என்பதை திருக்குர்ஆன் 9:100ல் கண்டோம்.


 பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், ஸஹாபாக்களுக்குள்ள பெருமதிப்பை விளக்கிச் சொல்லி இருக்கிறார்கள் என்பதை மேலே கண்டோம். ஆனால் இந்த நவீனவாதிகளோ ஸஹாபாக்களை சாதாரண மனிதர்களாகவே கருதுகின்றனர். இது ஒரு குருட்டுத் திமிராகும்.

 நவீன வாதிகளில் ஒருவர் சொல்கிறார். 'நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு எந்த மனிதரையம் ஹக்கின் உரை கல்லாக ஆக்கிக்க கொள்ள கூடாது. யாரையம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக கருதவும் கூடாது'. இந்த வாக்கியத்தின் மேலோட்டமான கருத்து விபரீதமாகத் தோன்றாது. என்'றாலும் இதன் உள்நோக்கம் வார்த்தையில் சங்கைமிகு ஸஹாபாக்களும் சத்திய சீலர்களான இமாம்களும் உள்ளடக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும்.

 ஸஹாபாக்களையும், இமாம்களையும் ஒதுக்கி விடவேண்டும் என்ற கருத்தை இவ்வாக்கியம் வெளியிடுகிறது.


 ஆனால் ஸஹாபாக்களையும், இமாம்களையும் ஒதுக்கிவைத்து விட்டு இஸ்லாமை விளங்க முடியும் என்ற பேச்சு எத்தகைய மூடத்தனமானது என்பதையும், ஸஹாபாக்களையும் இமாம்களையும் பாலமாகக் கொண்டுதான் நாம் இஸ்லாமை விளங்கிக் கொள்ள முடியும். அதுவே இஸ்லாமை அதன் தூய வடிவில் காண்பதற்கான வழி என்பதையும் நாம் தெளிவாகவே மேலே விவரித்திருக்கிறோம்;..


 மேலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நவீனவாதியின் கருத்திலிருந்து பெருமானாரைத் தவிர்த்து மற்றவர்களையும் (ஸஹாபாக்களையும் கூட) எப்படியும் விமர்சிக்கலாம், அவர்களைப் பற்றி எப்படியும் கருத்துக் கூறலாம் என்ற அபாயகரமான அனுமதி வழங்கப்படுகின்றது. சஹாபாக்களின் அந்தஸ்த்தை அறிந்து அவர்கள் விஷயத்தில் முஸ்லிம்கள் கைகொள்ள வேண்டிய எச்சரிக்கையுணர்வு இங்கே சிதறடிக்கப்படுகிறது. சஹாபாக்களின் விஷயத்தில் எத்தகைய எச்சரிக்கையுணர்வு கொள்ள வேண்டும். அப்படியில்லாதபோது என்ன விளைவு ஏற்படும் என்பதை நாம் அறிந்திருக்கிற பல ஆயத்து, ஹதீதுகள் விபரிக்கின்றன.

 யுகமுடிவு காலம்வரை இந்த உண்மை மார்க்கம் நிலைபட வேண்டும் என்ற எண்ணத்தில் ஸஹாபாக்கள் தம் சீடர்களான தாபியீன்களுக்கும், தாபியீன்கள் தம் சீடர்களான தபஉத்தாபியீன்களுக்கும் குர்ஆன் ஹதீதுகளின் விளக்கங்களை பூரணமாகக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்கள்தான் நம்முடைய முன்மாதிரிகள். அவர்கள் நடந்து காட்டியதுதான் சரியான இஸ்லாம். அவர்கள் வாழ்ந்த காலத்தைத்தான் 'உத்தம காலகட்டம்' என்று பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வர்ணித்திருக்கிறார்கள்.


 'காலங்களில் மிகச் சிறந்தது என் காலம். அடுத்தது எனக்குப் பின்னால் உள்ளவர்கள் காலம். அதற்கும் அடுத்தது அவர்களுக்குப் பின்னால் வருபவர்களது காலம்'. (புகாரி, முஸ்லிம்)


 சஹாபாக்களும், தாபியீன்களும் தங்களது சீடர்களுக்கு இஸ்லாத்தை கற்றுக் கொடுத்தது போலவே தபஉத்தாபியீன்கள் மார்க்கச் சட்டங்கள் ,கொள்கைகள் அனைத்தையும் தமது சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இவ்வாறே குருசீடர் பரம்பரையாக பல்வேறு தலைமுறைகளைத் தாண்டி இன்று நம்மிடம் வந்துள்ளது. இந்தப் பரம்பரையில் உள்ளவர்கள் மேதைகளும், மகான்களும், கண்ணியமிக்கவர்களும், ஆழ்ந்த பக்தியுடையவர்களும், பேணுதல்மிக்கவர்களுமாவார்கள். எவ்வித ஏற்றமும், இறக்கமும் இல்லாமல் புனித மார்க்கத்தை அதன் தனி உருவத்தோடு பின் தலைமுறையினருக்குச் சமர்ப்பித்து விட்டார்கள். இந்த அறிஞர் பரம்பரையைத் தான் 'நபிமார்களின் வாரிசுகள்' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வர்ணித்தார்கள்.


 இன்று நம்மிடமிருக்கிற மார்க்க நடைமுறைகள் முழுவதும் ஒன்று சேர்க்கப்பட்ட நிலையில் மேற்குறிப்பிட்ட பேரறிஞர் பரம்பரையில் வந்ததாகம். அவற்றில் பிக்ஹ் சட்டங்கள் இமாம் ஷhபியீ, இமாம் அபூஹனீபா, இமாம் மாலிகி, இமாம் அஹ்மது ஆகிய நால்வர் வழியாகவும், கொள்கைச் சட்டங்கள் இமாம் அஷ;அரீ, இமாம் மாதுரீதி ஆகிய இருவர் வழியாக மட்டுமே வந்தன. அந்தப் பரம்பரையிலுள்ள மற்ற மேதாவிகளின் வழியாகச் சட்டங்களும், கொள்கைகளும் முழுமையாக ஒன்று சேர்க்கப்பட்டதாக ஆதாரங்கள் இல்லை. எனவே இன்றைய முஸ்லிம்கள் பிக்ஹ் சட்டங்களில் மேற்கூறிய நான்கு மத்ஹபுகளில் ஒன்றையும், கொள்கைக் கோட்பாடுகளில் பின்னருள்ள இரண்டு வழிகளில் ஒன்றையும் ஏற்றுக் கொள்வது கட்டாயக் கடமையாக இருக்கிறது.

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஸஹாபாக்கள், தாபயின்கள் வழியாக பரம்பரையாக வந்தவைகளில் எதையும் தள்ளிவிட்டு நாமும் நம்முடைய சாலிஹீன்களான முன்னோர்களும் கேள்விபட்டிராத விஷயங்களை யாராவது நம்மிடம் சொன்னால் அதுபோது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய எச்சரிக்கைப் பொன்மொழி எப்போதும் ஒரு மாபெரும் வழிகாட்டியாகவே உங்களுக்கு இருக்க வேண்டும்.


 'இறுதி காலத்தில் தஜ்ஜால்கள் (அதிகமாகப் பொய்ப்பிரச்சாரம் செய்பவர்கள்) நீங்களும், உங்களது மூதாதையர்களும் கேள்விப்பட்டிராத பலவற்றையும் உங்களிடம் கொண்டு வருவார்கள். அவர்களிடமிருந்து உங்களை நீங்கள் மிகக் கவனமாகக் காத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களை குழப்பாமலும், வழிதவறச் செய்யாமலும் இருக்கட்டும்.'


 -முஸ்லிம், மிஷ்காத் பாகம் 1 பக்கம் 28.

No comments:

Post a Comment