Popular Posts

Monday 9 May 2016

சுன்னத் வல் ஜமாஅத்" என்று பெயர் வைத்தது யார்?

🌿"சுன்னத் வல் ஜமாஅத்" என்று பெயர் வைத்தது யார்?🌿
 இஸ்லாமிய உலகு ஈன்றெடுத்த இணையற்ற பேரறிஞர் இமாம் அபுல் ஹஸன் அல்அஷ் அரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி இவர்கள்தான் "சுன்னத் வல் ஜமாஅத்" என்று பெயர் வைத்தது ஆகும்.
சுன்னத் வல்ஜமாத்தின் அகீதா கோட்பாட்டை, குர்ஆன், ஹதீஸ் ஆதார பின்னணியில் நிறுவியவர்களுள் முதன்மையான முன்னோடியாக இவர்கள் விளங்குவதனால், சுன்னத் வல்ஜமாஅத்தின் இமாமாக மதிக்கப்படுகின்றார்கள்
இவர்கள் ஹிஜ்ரி 260இல் (873)இல் இராக்கிலுள்ள ‘பஸறா‘ நகரில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் ‘அலி‘ என்பதாகும். ‘அபுல் ஹஸன்‘ என்ற காரணப்பெயராலும் ‘அஷ்அரி‘ என்ற குடும்பப் பெயராலும் பிரபல்யம் பெற்றிருந்தார்கள்.
பிரபலமான நபித்தோழரான அபுல் மூஸா அல்அஷ்அரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழிவந்தனால் ‘அல்அஷஅரி‘ என்ற குடும்பப் பெயராலும் அழைக்கப்படலாயினர்.
இளம் வயதில் தந்தையை இழந்தார்கள். தந்தையின் மரணத்தின் பின் அக்காலத்தில் முஃதஸிலா இயக்கத்தின் பிரபல்யமான அறிஞர் அலி ஜுபாயி என்பவரை இவர்களின் தாய் மறுமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களின் ஆரம்பக் கல்வி அலி ஜுபாயின் கண்காணிப்பில் போதிக்கப்பட்டது. பின் இறையியல், தத்துவம், சட்டம், தர்க்கம், உள்ளிட்ட அனைத்துக் கலைகளையும் தனது வளர்ப்புத் தந்தை அலி ஜுபாயிடமே கற்றுத் தேறினார்கள்.இயற்கையிலேயே திறமையும், வாதத்திறமையும் வாய்க்கப்பெற்ற இவர்கள் முஃதஸிலா இயக்கத்தின் தீவிர பிரசாரகராகவும், ஆற்றல் மிக்க வாதவியலாளராகவும் விளங்கினார்கள்
இவர்களின் நுணுக்கமான அபார வாதத்திறமையால் முஃதஸிலா இயக்கம் நன்கு வலுப் பெற்றது விளங்கியது. இவரின் அபார வாதத்திறமையும், தீவிரப் பிரசாரமும் சுன்னத் வல்ஜமாஅத்தினருக்கு பெருத்த சவாலாகவே அமைந்திருந்தது.
மனமாற்றம் நாற்பது வயது வரை முஃதஸிலா இயக்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட இவர்களுக்குப் பின்னால் தங்களது வாதத்தில் சந்தேகங்கள் ஏழ ஆரம்பித்தன. ஒரு நாள் தனது வளர்ப்புத் தந்தையான அலி ஜுபையிடம் சில ஐயங்களை தெளிவுபடுத்தி விளக்கம் வேண்டினார்.முஃதஸிலாக்கள் பகுத்தறிவுக்கு முதன்மை வழங்குபவர்கள் வஹிக்கு இரண்டாம் இடமே வளங்குவார்கள். அல்லாஹுத்தஆலா நன்மையை மட்டுமே நாடுவான் என்றும், நன்மையை நாடுவது அவனுக்கு கடமை என்றும் கருதிய முஃதஸிலாக்கள்.தீமை மனிதனின் செயல்சுதந்திரத்திலிருந்து தோன்றுபவை என்று வாதித்து வந்தனர். நன்மை தீமை இரண்டும் அல்லாஹ்வின் நாட்டப்படி நடப்பவை என்பதை மறுதலித்தனர்.இமாம் அஷ்அரி அவர்களுக்கு முஃதஸிலாக்களின் கோட்பாடுகளில் முதலில் இக்கோட்பாட்டில்தான் ஐயமேற்பட்டது. அதனால் தனது ஆசானும் வளர்ப்புத் தந்தையுமான அலி ஜுபாயிடம் மூன்று நபர்களின் நிலை பற்றி விளக்கம் கேட்டார்கள்.
 01. அல்லாஹ்வை பயந்து பணிந்து பக்தியோடு வாழ்ந்து மறைந்த அண்ணன்
 02. அல்லாஹ்வை நிராகரித்து மாறுசெய்து பஞ்சமாபாதகமான பாவம் செய்து மரணித்த பாவி
 03. பாவமேயறியாமல் பிஞ்சுப்பிராயத்தில் மடிந்து போன குழந்தை ஆகிய மூவரின் மறுமை நிலை எப்படி இருக்கும்?
அலி ஜுபாயி விளக்கமளித்தார் இப்படி,

முதலாவது நபரான அண்ணன் அல்லாஹ்வை பக்தியோடு பணிந்து வணங்கிய அண்ணனான முஃமினின் இவர் உயர் சொர்க்கத்திலிருப்பார்.
 இரண்டாவது நபர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்து பாவம் புரிந்த பாவி. காபிர் இவர் நரகிலிருப்பார்.
 மூன்றாவது பாலகர் பாவமறியாதவர் அதனால் சொர்க்கத்திலிருப்பார்.
 🙇ஆசானின் பதிலை செவிமடுத்த இமாம் அஷ்அரி மீண்டும் விளக்கம் கேட்டார், தன் ஆசானிடம்.
பாவமறியாத பாலகன் அண்ணன் வாழும் உயர் சொர்க்கத்தை வேண்டினால் அல்லாஹ் வழங்குவானா? இல்லை அண்ணன் போன்று உயர்ந்த வணக்கம் உம்மிடம் கிடையாது அதனால் முடியாது என்று அல்லாஹ் பதிலளிப்பான் என்றார் ஜுபாயி.
அண்ணனுக்கு வழங்கப்பட்டது போன்று நீண்ட ஆயுள் எனக்கு வழங்கப்பட்டால் அண்ணன் போன்று நானும் உயர் அமல் செய்திருப்பேனே! என்று அல்லாஹ்விடம் பாலகன் முறையிட்டால் அல்லாஹ் என்ன கூறுவான் என்று திருப்பிக் கேட்டார்கள். இமாம் அஷ்அரி.
அதற்கு அண்ணன் போன்று நீண்ட ஆயுள் உமக்கு வழங்கப்பட்டிருந்தால் நெறிதவறி நீ துஷ்டனாக நரகம் புகுவாய் என்பதை முன்கூட்டியே நான் அறிந்திருந்ததனால் உம்மை இளவயதில் இறக்கச் செய்து உமக்கு நன்மை செய்தேன் என்று இறைவன் இயம்புவான் என்றார்.

இதேவேளை காபிராக மரணித்த சகோதரன் அல்லாஹ்விடம் குறுக்கிட்டு யாஅல்லாஹ்! பாலகனின் நிலையை முன்கூட்டியே அறிந்தது போன்று என்னுடைய நிலையையும் நீ நன்கு அறிவாய் அல்லவா? பாலகனுக்குச் செய்த நன்மையை எனக்குச் செய்யாதது ஏன்? என்று அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ் என்ன பதில் கூறுவான் என்றதற்கு,
 ஜுபாயியால் பதில் கூற முடியவில்லை. மௌனம் சாதித்தார்.ஆசானின் இயலாமை இமாம் அஷ்அரி அவர்களை அதிகம் சிந்திக்கத் தூண்டியது. பகுத்தறிவின் பலஹீனத்தை நன்கு புரிந்துகொண்ட இமாமவர்கள் எங்கும் செல்லாமல் ஓரிடத்தில் தனித்திருந்து ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டார்கள்.
ஓரிரவு கடுமையான மனக் குழப்பத்திலிருந்த
 இவர்கள் நடுநிசியில் இரண்டு ரகாஅத் நபில் தொழுது விட்டு தனக்கு நேர்வழி காட்டுமாறு அல்லாஹ்விடம் அழுது பிரார்த்தனை செய்து விட்டு துயில் கொண்டார்கள்.
அன்றிரவு சுந்தர நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 அவர்கள் இவர் சொர்ப்பனத்தில் தோன்றி ‘அலைக்க பிசுன்னத்தி‘ என் வழிமுறையை பின்பற்றுவீராக! என்று கூறி மறைந்தார்கள்.விடியற்காலை வெள்ளிக்கிழமை பஸரா நகரின் பெரிய ஜும்ஆப் பள்ளிசலுக்குச் சென்ற இமாமவர்கள் ஜும்ஆத் தொழுகைக்குப் பின் அங்கு திரண்டிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களை விளித்து.‘மக்களே! என்னைத் தெரிந்தவர்களுக்கு நான் யார் என்பது தெரியும். என்னைத் தெரியாதவர்களுக்கு நான் சொல்கின்றேன். நான்தான் அலி பின் இஸ்மாயீல் அல்அஷ்அரி. நான் இது நாள்வரை குர்ஆன் படைக்கப்பட்டது என்றும், புறக்கண்களால் மறுமையில் அல்லாஹ்வை பார்க்க முடியாது என்றும், நமது செயல்களுக்கு நாமே உரித்துள்ளவர்கள் என்று கூறிவந்தேன்.‘இப்பொழுது நான் அக்கொள்கையிலிருந்து தௌபாச் செய்து மீண்டுவிட்டேன். வழிதவறிய முஃதஸிலா இயக்கத்தின் தீய கொள்கைக் கோட்பாடுகளையும் மறுத்துப் பிரசாரம் செய்யவும் துணிந்து விடடேன் என்று உரத்த குரலில் நெஞ்சுரத்தோடு முழங்கினார்கள்.

 இமாமவர்களின் இச்சத்திய முழக்கம் கேட்ட மக்களின் தக்பீர் முழக்கத்தால் பள்ளிவாசல் அதிர்ந்தது.வைரத்தை வைரத்தால்தான் வெட்ட வேண்டும். என்பதெற்கொப்ப முஃதஸிலா இயக்கத்தை அவர்கள் பாணியிலான தர்க்கத்தலேயே முறியடித்தார்கள். இமாமவர்களின் தர்க்கரீதியான பிரசாரத்திற்கு முகம் கொடுக்க முடியாதவர்கள் இவர்களைக் கடுமையாக விமர்சிக்கலாயினர்.இவர்களுள், குர்ஆனுக்கு வெளிப்படையான அர்த்தம் கற்பிப்போரான ‘ழாஹிரிய்யாக்கள்‘ அல்லாஹ்வுக்கு மனிதப் பண்பேற்றி வேதம் பேசிய சட்டவாதிகளான முஜஸ்ஸிமிகள் தர்க்கத்தை மார்க்கத்தில் புகுத்துவது ‘பித்அத்‘ என்று வாதித்த ஹம்பலிகளில் சிலர் முக்கியமானவர்களாகும்.

 (இப்னுதைமிய்யா, இப்னுல் கைய்யூப், தஹபி, இப்னு கதீர், இப்னு அதீர் உள்ளிட்டோர் முஜஸ்ஸிமி (சட்டவாதி)களின் கொள்கையில் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதும், இவர்கள் அஷ்அரிய்யா கோட்பாட்டையும், அக்கோட்பாட்டை பின்பற்றும் இமாம்களையும் கடுமையாக விமர்சிப்பவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. வஹாபிகள் ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை விமர்சிப்பதற்கு இதுவே முக்கியமான காரணமாகும்.)இமாமவர்களின் தீவிர பிரசாரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் முஃதஸிலாக்கள் திக்குமுக்காடினார்கள். பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்த முஃதஸிலாக்களை கடுமையாக இமாமவர்கள் சாடினாலும், பகுத்தறிவை முற்றுமுழுதாக நிராகரிக்கவில்லை. வஹியின் கட்டளைக்கும், பகுத்தறிவுக்குமிடையில் நடுநிலைப் போக்கை இமாமவர்கள் கடைப்பிடித்தார்கள்.

 📚சுன்னத் வல்ஜமாஅத் கொள்கையை விளக்கி பல நூற்களை இவர்கள் எழுதியுள்ளார்கள். சிலர் 300 என்றும் சிலர் 93 என்றும், இன்னும் சிலர் 68 என்றும் குறிப்பிடுகின்றனர். இவர்களில் நூற்களின் கிதாபுல்லமஃ அல் இபானா, மகாலாத்துல் இஸ்லாமிய்யீன் உள்ளிட்டவைகள் நன்கு பிரசித்தி பெற்றவைகளாகும்.தனக்குப் பின் இஸ்லாமிய தூய கோட்பாடாகிய சுன்னத் வல்ஜமாஅத் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு பலமிக்க அறிஞர்கள் குழுவை உருவாக்கிய இமாமவர்கள் திடீரென சுகவீனமுற்று ஹிஜ்ரி 330இல் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஹிறாஜிஊன். இவர்களின் புனித உடல் பகுதாதில் உள்ள மஷ்அரத்துல் ஹுவாயா என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

🌿🌿🌿🌿🌿

No comments:

Post a Comment