Popular Posts

Monday 9 May 2016

அஹ்லுல் பைத்துக்களின் சிறப்புகள

அஹ்லுல் பைத்துக்களின் சிறப்புகள்

 "அல்லாஹ்வின் அன்பை பெற விரும்பினால், என்னை அன்பு வையுங்கள், எனது அன்பை பெற வேண்டுமானால், என் குடும்பத்தார்களை அன்பு வையுங்கள்" என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்.

 இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
 திர்மிதி 3814, மிஷ்காத் 573

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:
 மனிதர்களே அறிந்து கொள்ளுங்கள்! எம்மிடம் மரண தூதுவர் வரும் நேரம் நெருங்கி விட்டது. நான் அவருக்கு விடையளிக்கப் போகிறேன். மேலும் நான் உங்களிடையே பொறுப்பான இரண்டு விசயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டில் முதலாவது அல்லஹ்வின் வேதம். அதில் நேர்வழியும் பேரொளியும் இருக்கிறது. ஆகவே அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். இரண்டாவது அஹ்லுல் பைத்துக்கள் என்ற என் குடும்பத்தார்களாகும். ஆகவே அவர்கள் விசயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டுமென்று அல்லாஹ்வை முன் வைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்து கொள்கிறேன்.

 யசீத் இப்னு யய்யான் (ரலியல்லாஹு அன்ஹு)
 முஸ்லிம் – 5920, மிஷ்காத் 567

 கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் (செய்த) தங்களுடைய ஹஜ்ஜின் போது அரஃபாவின் தினத்தில் தங்களின் கஸ்வா என்ற ஒட்டகத்தில் அமர்ந்த வண்ணம் (ஒரு) பிரசங்கம் செய்தார்கள். (அந்தப் பிரசங்கத்தில்) "மனிதர்களே! நீங்கள் எவைகளை பின்பற்றி நடந்தால் வழிதவற மாட்டீர்களோ அப்படிப்பட்டவைகளை உங்களுக்கு மத்தியில் விட்டுச் செல்கிறேன் அதாவது அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனையும் என்னுடைய அஹ்லுல் பைத் என்ற என்னுடைய குடும்பத்தார்களையும் விட்டுச் செல்கிறேன்" என்று கூறியதை நான் செவியுற்றேன்.

 ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு)
 திர்மிதி - 3789 பாபு மனாக்கிபி அஹ்லில் பைத்,
 முஸ்னத் அஹ்மத் : 3 - 14, மிஷ்காத் - 569, 6152, பாபு மனாக்கிபி அஹ்லில் பைத்

அபூதர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கஃபாவின் வாயில் கதவை பிடித்தவர்களாக கூறினார்கள். “யார் என்னை தெரிந்துக்கொண்டாரோ அவருக்கு என்னைப்பற்றி தெரியும். என்னை தெரியாதவர்கள் நான் அபூதர் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். (என்னவெனில்) அறிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மத்தியில் உள்ள எனது அஹ்லுல் பைத்துகளுக்கு உதாரணமாகிறது நூஹு நபியின் கப்பலை போன்றதாகும். எவர் அதில் ஏறிக்கொண்டாரோ அவர் வெற்றிப்பெற்றார். யார் அதில் ஏறிக்கொள்ளவில்லையோ அவர் நாசமானார்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூற நான் கேட்டேன்.

 மிஷ்காத் 573, ஹாகிம்: 2 – 343

 நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
 "எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன், அஹ்லுல் பைத்துகளே! நம்மை எவராவது கோபப்படுத்திவிட்டால் அல்லாஹ் அவரை கண்டிப்பாக நரகில் நுழைத்து விடுவான்"

 முஸ்தத்ரக்: 3 – 150

 நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
 "எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன், எவர் அஹ்லுல் பைத்துகளாகிய உங்களை அல்லாஹ்வுக்காகவும், அவன் ரசூளுக்காகவும் பிரியம் வைக்க வில்லையோ அவருடைய இதயத்தில் ஈமான் நுழையாது"

 திர்மிதி, மிஷ்காத் 570

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
 உங்களுக்கு நான் இரண்டு கலிபாக்களை விட்டு செல்கின்றேன். ஒன்று அல்லாஹ்வின் திருவேதம். அது வானத்திற்கும் பூமிக்கும் மிடையே நன்கு தொடர்புடையாதயிருக்கும். அடுத்து என்னுடைய வழித்தோன்றல்களான அஹ்லுல் பைத்துகள். அந்த இரண்டும் ஹவ்லுல் கவ்ஸரை வந்தடையும் வரை பிரிந்து விடாது.

 அஹ்மத்: 5 – 182

 என் ஆத்மா எவன் வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். பெருமானாரின் சுற்றத்தார்களை நான் சேர்ந்திருப்பது எனது சுற்றத்தார்களை விட எனக்கு மிகவும் உகப்புக்குரியதாகும்.

 அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு
 புஹாரி 3712

 அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
 முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்து வாருங்கள். அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்.)

 இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
 புஹாரி 3713

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
 ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சுவனப் பெண்களின் தலைவியாகும்.

 புஹாரி, முஸ்லிம், திர்மிதி

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
 ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எனவே அவருக்குக் கோபமூட்டியவர் எனக்குக் கோபமூட்டியவராவார்.

 மிஸ்வர் பின் மக்ரமா ரலியல்லாஹு அன்ஹு
 ஸஹீஹுல் புகாரி - 3767

 ஹஸன், ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் சுவனத்து வாலிபர்களின் தலைவர்களாகும்.

 திர்மிதி, மிஷ்காத் 570

 ஸெய்யதுனா ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் நெஞ்சிலிருந்து தலை வரைக்கும் ஒப்பானவர்களாக இருந்தார்கள். ஸெய்யதுனா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நெஞ்சிலிருந்து கால் வரைக்கும் ஒப்பானவர்களாக இருந்தார்கள்.

 இமாம் அலி ரலியல்லாஹு அன்ஹு
 திர்மிதி, மிஷ்காத்

 உங்களின் குழந்தைகளுக்கு மூன்று விஷயங்களின் மீது ஒழுக்கம் கற்பியுங்கள். உங்கள் நபியின் மீது அன்பு வைத்தல், நபியுடைய குடும்பத்தார்கள் மீது அன்பு வைத்தல், குர்ஆன் ஷரீஃப் ஓதி வருதல் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

 தைலமி -

No comments:

Post a Comment