Popular Posts

Monday 9 May 2016

அஹ்லுல் பைத்தினர்கள் என்பவர்கள் யார்? அவர்களின் சிறப்புகள் என்ன"? மற்றும் அவர்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியமும்"

"அஹ்லுல் பைத்தினர்கள் என்பவர்கள் யார்? அவர்களின் சிறப்புகள் என்ன"?

 மற்றும் அவர்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியமும்"

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பதினற்க்கு பல பேர்களைக்கொண்டு அழைக்கப்படுவார்கள்

 அஹ்லுல் பைத்தினர்கள்
 ஸாதாத்மார்கள்
 மௌலானாமார்கள்
 தங்கள்மார்கள் என அழைக்கப்படுவார்கள்

 ---------------------
 ---------------------
ஸாதாத்துமார்கள் என்றால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த இரத்தத்திலிருந்து உதித்தவர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கென்று தனிப்பட்ட தகைமையும் கௌரவமும் இருக்கிறது என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது அல்ல. என்றாலும் குழப்பமும் குதர்க்கமும் நிறைந்த இக்கால கட்டத்தில் அவர்களைப்பற்றிய மரியாதையைக் குலைப்பதற்காகவே ஒரு கூட்டம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. எனவே ஸாதாத்துமார்களைப்பற்றிய மாண்புகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நாம் யாவருக்கும் கடமையாகும்.

 ஸாதாத்துமார்கள் என்றால் யாரைக் குறிக்கும்?

 1. ஸெய்யித் என்பது முஸ்லிம்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்குக் கூறப்படும்
 பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வயிற்றிலிருந்து கியாம நாள் வரை வந்து கொண்டிருப்பவர்களே ஸாதாத்துகள் ஆவார் என்று ஷைகுனா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தாங்களின் ஹத்யா ஷரீபின் 302ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

 2. என் சுற்றத்தார்களிடம் அன்பு வைக்க வேண்டுமென்பதைத் தவிர வேறெந்த கூலியையும் உங்களிடம் நான் கேட்க வில்லை என்ற வசனம் இறங்கியபோது, "நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நங்கள் அன்பு வைக்க கடமைப்பட்ட உங்களின் சுற்றத்தினர் யார்?"
 என்று ஸஹாபா பெருமக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவினார்கள். அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "

 அலீ (ரலியல்லாஹு அன்ஹு), பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா), ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு), ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு)" என்று பதிலளித்தார்கள்.

 3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள். அவர்களுடன் அலீ ரலியல்லாஹு அன்ஹு, பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா, ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு, ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் இருந்தனர். அவ்விருவரையும் தன் தொடையில் வைத்துக் கொண்டு ஒரு போர்வையால் எல்லோரையும் போர்த்தி, "நபியின் குடும்பத்தார்களே! உங்களை இறைவன் பரிசுத்தப்படுத்திவிட்டான்" என்ற ஆயத்தை ஓதினார்கள்.
 பிறகு, "இறைவா! இதோ இவர்கள் என்னுடைய அஹ்லு பைத்துகளாகும். ஆகவே இவர்களை பரிசுத்தப்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.

 மேற்படி போர்வைக்குள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்களில் ஒருவரான உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நுழைந்து கொள்ள முயன்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நுழைய விடாமல் தடுத்து விட்டதுடன், "நிச்சயமாக நீங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவிமார்களில் உள்ளவராகும்" என்று கூறியதாக வந்துள்ள ரிவாயத் இந்த இடத்தில் சிந்தனைக்குரியதாகும். (நூருல் அப்ஸார் 123)
 ----------------------
 ----------------------

 ஸாதாத்துமார்களின் மகத்துவம், சிறப்புக் குறித்து வந்துள்ள ஹதீஸ்களில் சில

 1. பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சுவனப் பெண்களின் தலைவியாகும். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, மிஷ்காத் 568 ,571 பாபு மனாகிபி அஹ்லில் பைத்தி)

 2. "ஸெய்யிதுனா ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஸெய்யிதுனா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் சுவனத்து வாலிபர்களின் தலைவர்களாகும்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, மிஷ்காத் பக்கம் 570 பாபு மனாகிபி அஹ்லில் பைத்தி)

 3. "மனிதர்களே அறிந்து கொள்ளுங்கள். எம்மிடம் மரண தூதுவர் வரும் நேரம் நெருங்கி விட்டது. நான் அவருக்கு விடையளிக்கப் போகிறேன். மேலும் நான் உங்களிடையே இரு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டில் முதலாவது அல்லாஹ்வின் வேதம். அதில் நேர்வழியும் பேரொளியும் இருக்கிறது. ஆகவே அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
 இரண்டாவது அஹ்லுபைத்துக்கள் என்ற என் குடும்பத்தார்களாகும். ஆகவே அவர்கள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டுமென்று அல்லாஹ்வை முன் வைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்து கொள்கிறேன்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று முறை கூறினார்கள். (முஸ்லிம், மிஷ்காத் 567)

 4. "என் மறைவுக்குப் பிறகு என் குடும்பத்தாருக்கு நல்லவரே உங்களில் நல்லவர்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மஜ்மஉஸ் ஸவாயித் 9-174)
 ------------------------
 ------------------------

 ஸாதாத்துமார்களை பின்பற்றுவதும், மற்றும் நேசிப்பது ஈமானில் ஒரு பகுதி

 1. மேலும் முஃமின்களே! உங்களுக்கு மத்தியில் நான் நபியாக அனுப்பப்பட்டு உங்களுக்கு எத்தி வைக்க வேண்டியதை எத்தி வைத்ததற்காக எவ்வித பிரதி பலனையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. என்றாலும் எனது சுற்றத்தார்களாகிய அஹ்லு பைத்துக்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதைத்தான் உங்களிடம் கேட்கிறேன் என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். (அல்குர்ஆன் ஷூரா:23)

 2. எவன் கை வசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டுக் கூறுகிறேன். எவர் அஹ்லு பைத்துக்களாகிய உங்களை அல்லாஹ்வுக்காகவும் அவன் ரஸூலுக்காகவும் பிரியம் வைக்கவில்லையோ அவருடைய இதயத்தில் ஈமான் நுழையாது. (திர்மிதி, மிஷ்காத் 570)

 3. அல்லாஹ்வின் அன்பைப் பெற விரும்பினால் என்னை அன்பு வையுங்கள் எனது அன்பைப் பெற வேண்டுமானால் என் குடும்பத்தார்களை அன்பு வையுங்கள். (திர்மிதி, மிஷ்காத் 573)

 4. எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். அஹ்லுபைத்துக்களே நம்மை எவராவது கோபப்படுத்தி விட்டால் அல்லாஹ் அவரை கண்டிப்பாக நரகில் நுழைந்து விடுவான். (முஸ்தத்ரக் 3-150)

 5. உங்களில் குழைந்தைகளுக்கு மூன்று விஷயங்களில் மீது ஒழுக்கம் கற்பியுங்கள். உங்கள் நபியின் மீது அன்பு வைத்தல், நபியுடைய குடும்பத்தார்கள் மீது அன்பு வைத்தல், குர்ஆன் ஷரீப் ஓதி வருதல் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (தைலமீ - நூருல் யகீன்)

 6)நபியின் குடும்பத்தினரே! உங்களிலிருந்து அழுக்குகளை அகற்றி உங்களை முழுமையாக தூய்மைப்படுத்த வேண்டும் என்றே அல்லாஹ் விரும்புகின்றான்;.' (அல் குர்ஆன் -33- 33)

 மேலுள்ள இறைமறை வசனத்திற்கு முபஸ்ஸிரீன்கள் அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் பலர், பல்வேறு விதமான விளக்கங்களைக் கூறியுள்ளனர்;.நபிமணி (ஸல்) அவர்கள், இவ்வசனத்திற்குறிய சரியான விளக்கத்தை தமது வாழ்க்கை மூலமாகவும்,வார்த்தை மூலமாகவும் தெளிவு படுத்தியிருக்கின்றார்கள்.

அஹ்லுல் பைத்துகளை பின்பற்ற வேண்டும்

 1⃣ “மனிதர்களே! அறிந்துக்கொள்ளுங்கள் எம்மிடம் மரணத்தூதுவர் வரும் நேரம் நெருங்கி விட்டது. நான் அவருக்கு விடையளிக்க போகிறேன். நான் உங்களிடையே பொறுப்பான இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டில் முதலாவது அல் குர்ஆன் அதில் நேர்வழியும் பேரொளியும் இருக்கிறது. ஆகவே அதை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். இரண்டாவது அஹ்லுல் பைத்துகள் என்ற என் குடும்பத்தார்களாகும். அவர்கள் விஷயத்தில் கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வை முன் வைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்துகொள்கிறேன்” என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் மூன்று முறை கூறினார்கள்
 (முஸ்லிம், மிஷ்காத் 567)

 2⃣ கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அன்னவர்கள் (செய்த) தாங்களுடைய ஹஜ்ஜின் போது அரஃபாவின் தினத்தில் தாங்களின் கஸ்வா என்ற ஒட்டகத்தில் அமர்ந்த வண்ணம் (ஒரு) பிரசங்கம் செய்தார்கள். (அந்தப் பிரசங்கத்தில்) மனிதர்களே! நீங்கள் எவைகளை பின்பற்றி நடந்தால் வழிதவற மாட்டீர்களோ அப்படிப்பட்டவைகளை உங்களுக்கு மத்தியில் விட்டுச் செல்கிறேன் அதாவது அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனையும் என்னுடைய அஹ்லுல்பைத் என்ற என்னுடைய பிச்சளங்களையும் விட்டுச் செல்கிறேன் என்று கூறியதை நான் செவியுற்றேன் என்று ஸைய்யதுனா ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
 (திர்மிதி, முஸ்னத் அஹ்மத்,மிஷ்காத்)

 3⃣ ஸெய்யதுனா அபூதர் رضي الله عنه அவர்கள் கஃபாவின் வாயில் கதவை பிடித்தவர்களாக கூறினார்கள். “யார் என்னை தெரிந்துக்கொண்டாரோ அவருக்கு என்னைப்பற்றி தெரியும். என்னை தெரியாதவர்கள் நான் அபூதர் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். (என்னவெனில்) அறிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மத்தியில் உள்ள எனது அஹ்லுல் பைத்துகளுக்கு உதாரணமாகிறது நூஹு நபியின் கப்பலை போன்றதாகும். எவர் அதில் ஏறிக்கொண்டாரோ அவர் வெற்றிப்பெற்றார். யார் அதில் ஏறிக்கொள்ளவில்லையோ அவர் நாசமானார்” என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டேன்.
 (மிஷ்காத் 573, ஹாகிம்: 2 – 343)

 4⃣ நட்சத்திரங்கள் விண்ணில் உள்ளோருக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. எனது அஹ்லுல் பைத்துகள் பூமியிலுள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள். ஆகவே எனது அஹ்லுல் பைத்துகள் போய்விடுவார்களானால் பூமியிலுள்ளவர்களும் (அழிந்து) போய்விடுவர் என நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு நான் இரண்டு கலிபாக்களை விட்டு செல்கின்றேன். ஒன்று அல்லாஹ்வின் திருவேதம். அது வானத்திற்கும் பூமிக்கும் மிடையே நன்கு தொடர்புடையாதயிருக்கும். அடுத்து என்னுடைய வழித தோன்றல்களான அஹ்லு பைத்துகள். அந்த இரண்டும் ஹவ்லுல் கவ்ஸரை வந்தடையும் வரை பிரிந்து விடாது
 (அஹ்மத்: 5 – 182)

ஹலாவதுல் ஈமான்

No comments:

Post a Comment