Popular Posts

Monday 9 May 2016

பூரண ஈமானையும் நிறைந்த இறையச்சத்தையும் பெற்றவர்களே இறைநேசர்கள்.

பூரண ஈமானையும் நிறைந்த இறையச்சத்தையும் பெற்றவர்களே இறைநேசர்கள். அவர்களைக் காணும் போது இறைவனைப் பற்றிய நினைவு வரும். இருண்ட உள்ளங்களுக்கு ஒளி கிடைக்கும். அத்தகைய சீரிய குணங்களுக்கு சொந்தக்காரர்கள் தான் வலிமார்கள்.
 இறைவன் கூறுகிறான்:
 அறிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக இறைநேசர்கள் எனும் வலிமார்களுக்கு எவ்வித பயமுமில்லை. அவர்கள் துக்கம்கொள்ளவும் மாட்டார்கள். முழுமையான ஈமானையும் இறையச்சத்தையும் அவர்கள் பெற்றிருப்பார்கள். (அல்குர்ஆன் - 10:62,63)
 உங்களில் நல்லோர்கள் யார் என்பதை அறிவிக்கட்டுமா? இறைதூதர் صلى الله عليه وسلم அவர்கள் கேட்டபோது, அறிவித்து தாருங்கள் என அருமைத் தோழர்கள் மறுமொழி பகர்ந்தனர். இறைதூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: யாரை பார்க்கும்போது இறைவனைப் பற்றிய நினைவு உங்களுக்கு ஏற்படுகிறதோ அவர்களே உங்களில் சிறந்தவர்கள். அறிவிப்பாளர்: அஸ்மா பின்த் ஸயீத் رضي الله عنه நூல்: இப்னுமாஜா-4109, அஹ்மத்-26319
 வலிமார்கள் யாரென வினா எழுப்பப்பட்ட சமயத்தில் இறைதூதர் صلى الله عليه وسلم அவர்கள் பதிலுரைத்தார்கள்: யாரை பார்க்கும்போது இறைவனின் நினைவு உங்களுக்கு வருகிறதோ அத்தகையவர்களே வலிமார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் رضي الله عنه நூல்: நசாயீ (சுனன் குப்ரா) – 11235, பஜ்ஜார் – 5034
 சஹாபா பெருமக்கள் ஒரு ஜனாஸாவை புகழ்ந்து பேசியபோது, அந்த ஜனாஸாவிற்கு சொர்க்கம் கடைமையாகி விட்டதென கூறிய இறைதூதர் صلى الله عليه وسلم அவர்கள் மேலும் சொன்னார்கள்: இறைநம்பிக்கையாளர்(களான முஃமின்)கள் இந்த மண்ணுலகில் அல்லாஹுவின் சாட்சியாளர்கள். (அறிவிப்பாளர்: அனஸ் رضي الله عنه, நூல்: புகாரி – 2642 (2448), முஸ்லிம் – 1578
 கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ, அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கை யாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.
 அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
 புகாரி 6502
 நல்லோர்களுடன் நட்பு வைப்பது, தோழமை உறவு கொள்வது, திருமணம் செய்வது மற்றும் அவர்களுக்கு உணவளிப்பது போன்ற ஆணைகளை இஸ்லாமிய மார்க்கம் பிறப்பிக்கிறது. நல்லோர்கள் யாரென்று நம்மால் அடையாளம் காண இயலாதென்றால் மேற்கண்ட நற்செயல்களை நிறைவேற்ற முடியாதென்பதுடன் மார்க்கத்தின் கட்டளைகளும் அர்த்தமற்றதாகவுமல்லவா ஆகிவிடும்.
 இறைதூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: அல்லாஹுவின் திக்ரை திறந்துவிடும் திறவு கோள்களாக மனிதர்களில் சிலர் உள்ளனர். அவர்களை நீங்கள் கண்டால் இறைவனைப் பற்றிய நினைவு வரும். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் رضي الله عنه நூல்: தபரானி (கபீர்) – 10325, பைஹகீ (ஷீஅபுல் ஈமான்) – 718)
 வலிமார்கள் யாரென்று இப்பாருலகில் நம்மால் அடையாளம் கண்டு கொள்ள இயலுமென்பதை பல்வேறு ஹதீத்கள் அறிவித்துக் காட்டுகின்றன.
 இறைவன் (ஹதீஸ் குத்ஸிய்யில்) கூறியதாக இறைதூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: எனது நேசரை பகைத்துக் கொள்பவர்களிடம் யுத்தப் பிரகடனம் செய்கிறேன். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா رضي الله عنه நூல்: புஹாரி – 6502, 6021)
 வலிமார்களை பகைத்துக் கொள்வது இறைவனுடன் போர் புரிவதற்கு சமமென்று தெளிவுபடுத்திய மேற்கண்ட ஹதீத் அத்தகைய தகாத செயலை அறவே செய்யக் கூடாதென வலியுறுத்தவும் செய்கிறது. இறைநேசர்கள் யாரென்று நமக்கு தெரிந்தால்தான், அவர்களை பகைத்துக் கொள்ளக் கூடாதென்ற இறைகட்டளையை அமுல்படுத்த முடியும். குர்ஆன்-ஹதீஸை புரியாத சிலர் கூறுவது போன்று இறைநேசர்களை அடையாளம் காண முடியாது என்பதே சரியென்றிருந்தால், நம்மால் செய்ய இயலாததை இறைவன் சட்டமாக்கியுள்ளான் என்றாகி விடும். இது கீழ்க்காணும் குர்ஆன் வசனத்திற்கு முரணாகும். இறைவன் கூறுகிறான்: எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு உட்பட்டே தவிர பொறுப்பை இறைவன் சுமத்தமாட்டான். (அல்குர்ஆன் - 2:286) மேலும், நல்லோர்களுடன் நட்பு வைப்பது, தோழமை உறவு கொள்வது, திருமணம் செய்வது மற்றும் அவர்களுக்கு உணவளிப்பது போன்ற ஆணைகளை இஸ்லாமிய மார்க்கம் பிறப்பிக்கிறது. நல்லோர்கள் யாரென்று நம்மால் அடையாளம் காண இயலாதென்றால் மேற்கண்ட நற்செயல்களை நிறைவேற்ற முடியாதென்பதுடன் மார்க்கத்தின் கட்டளைகளும் அர்த்தமற்றதாகவுமல்லவா ஆகிவிடும். இறைவன் கூறுகிறான்: இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹுவை அஞ்சிங்கள்! மேலும், உண்மையாளர்களுடன் இருங்கள்! (அல்குர்ஆன் – 9:119)
 இறைதூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர்களுடன் தோழமை வைத்துக் கொள்! இறையச்சமுள்ளவர்களுக்கு உணவளி! (அறிவிப்பாளர்: அபூஸயீத் رضي الله عنه நூல்: அபூதாவூத் – 4192, திர்மிதீ – 2318, அஹ்மத் – 10909)
 கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: “நபிமார்களை ஞாபகம் பண்ணுவது வணக்கமாகும். ஸாலிஹீன்களை ஞாபகம் பண்ணுவது பாவபரிகாரமாகும்”.
 அல் ஜாமிஉஸ் ஸகீர் 2 – 299
 இறையச்சமென்பது உள்ளம் சம்பந்தப்பட்டதே. எனினும், ஒருவரின் நடைமுறைகள், நற்குணங்கள் மற்றும் பழக்க வழக்கங்களைக் கொண்டு அவர் இறையச்சமுள்ளவரா? இல்லையா? என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆகவேதான், இறையச்சமுள்ளவருக்கு உணவளியுங்கள் என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
 இறையச்சமுள்ளவரை அறிந்து கொள்ள இயலாதென எவராவது வாதித்தால் நடைமுறைப்படுத்த சாத்தியமற்ற ஒன்றை இறைதூதர் صلى الله عليه وسلم அவர்கள் செய்ய சொல்லியிருக்கிறார்கள் என்ற தவறான கருத்து ஏற்பட்டுவிடும். இறைவன் நம்மை பாதுகாப்பானாக! இறையச்சமென்பது இங்குதான் உள்ளது என்று தன் நெஞ்சை சுட்டிக்காட்டிய பெருமானார் صلى الله عليه وسلم அவர்கள்தான் நல்லோர்களை அடையாளம் கண்டு கொள்ள இயலுமென்பதையும் அறிவித்துள்ளார்கள். மறுதலிக்கும் வஹ்ஹாபிகள் இதை புரிந்துகொள்வது அவர்களுக்கு நல்லது.

No comments:

Post a Comment