Popular Posts

Monday 9 May 2016

உம்மி நபி என்றால் எழுத படிக்க தெரியாதவர்கள் என்று சிலர் பொருள் கொடுக்கிறார்கள் அப்படி பொருள் கொடுப்பது தவறு

உம்மி நபி என்றால் எழுத படிக்க தெரியாதவர்கள் என்று சிலர் பொருள் கொடுக்கிறார்கள் அப்படி பொருள் கொடுப்பது தவறு . கண்ணியக்குறைவான சொல் .
 உம்மி நபி என்றால் மனிதர்களிடம் எழுத படிக்க கற்றுக்கொள்ளாதவர்கள் என்று பொருள் .
 அதனால்தான் முதன் முதலில் "இக்ர" நீங்கள் ஓதுவீராக என்று ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து சொன்ன போது நான் ஓத தெரிந்தவனில்லையே என்று கூறினார்கள் .
 அதன் பின்பு "இக்ர பிஸ்மி ரப்‌பிக்க" உங்கள் இறைவனின் திரு பெயரை கொண்டு ஓதுவீராக என்று கூறியபோது அன்னலம்பெறுமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதினார்கள் .
 மர்ஹூம் நாகூர் ஹனீபா கூட தனது பாடலில் அல்லாஹ்வே ஆசிரியன் அத்தனையும் ஆச்சரியம் என்று பாடுவார் .
 قال رسول الله صلى الله عليه و سلم : إنما أنا القــــــــاسم و الله يعـــــــــــطـــــــــي
 கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: அல்லாஹ் தருகின்றான். நிச்சயமாக நான் தான் பங்கீடு செய்கின்றேன். (ஸஹீஹுல் புஹாரி, முஸ்னத் அஹ்மத்)
 நபியவர்கள் பங்கீடு செய்கிறார்கள் என்றால் ஒரு மனிதனுக்கு இறைவன் புறத்திலிருந்து கிடைக்கப்பெறும் அனைத்து நலன்களும் நபியவர்களின் மூலமாக பங்கீடு செய்யப்படுவதே ..
 (இந்த ஹதீஸை யாரும் மறுக்க முடியாது )
 எழுத்தையும் ,படிப்பையும் மனிதர்களுக்கு பங்கு வைக்கும் நபியவர்கள் எழுத படிக்க தெரியாதவர்களா ??
 உம்மி நபி என்றால் மனிதர்களிடம் எழுத படிக்க கற்றுகொள்ளாதவர்கள் என்று பொருள் .
 நபியவர்களுக்கு ஒருவர் கற்றுகொடுக்க வேண்டும் என்றால் அவர் நபியை விட உயர்ந்தவராக இருக்க வேண்டும் .
 அதனால்தான் ஜிப்ரயீல் அலைஹி வசல்லம் ஓதுவீராக என இரு முறை கூறியும் ஓதாமல் உங்கள் இறைவனின் பெயரைக்கொண்டு ஓதுவீராக என்று கூறியதும் ஓத ஆரம்பித்தார்கள் .
 அதாவது உங்கள் இறைவன்தான் உங்களுக்கு கற்றுகொடுக்கிறான் ஓதுங்கள் என்று பொருள் .
 அதன் பிறகே ஓத ஆரம்பித்தார்கள் .
 (இதன் மூலம் நபியவர்கள் நமக்கு கற்றுக்கொடுக்கும் இன்னொரு பாடம் நீ எவ்வளவு
 பெரிய அறிவாளியாக இருந்தாலும் அல்லாஹ்விற்க்கு முன் தெரியாது என்று சொல் பிறகு அல்லாஹ் அவன் புறத்திலிருந்து உனக்கு கற்றுக்கொடுப்பான்)

No comments:

Post a Comment