Popular Posts

Monday 9 May 2016

பெண் பேசும் போது ஸலவாத் ஒதுவது சுன்னத்தாகும்

பெண் பேசும் போது ஹம்து ஸலவாத் ஓதுதல்...!
 பெண் பேசும் போது ஸலவாத் ஒதுவது சுன்னத்தாகும். இமாம் நவவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தமது அத்கார் எனும் நூலில் கூறினார்கள் : “பெண் பேசும் மாப்பிள்ளை வீட்டார் பெண் பேசும் நேரத்தில் ஹம்து, ஸலவாத், இரண்டு ஷஹாதத் கலிமாக்கள் ஆகியவற்றை ஓதியபின் ‘இன்னாருக்காக இன்னவளை பெண் பேசுகிறோம்’ என்று பேச்சினைத் தொடங்குவது சுன்னத்தாகும்”. மேலும் இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்கள் கூறினார்கள் : “நிச்சயமாக அல்லாஹ் உங்களது நபியைப்பற்றி புகழ்ந்துரைக்கிறான். அவர்களுக்காக ‘மஃக்பிரத்’ எனும் அருள் புரிகிறான். அவர்களுக்காக இஸ்திஃக்ஃபார் செய்யும் படி அவனது மலக்குகளையும் ஏவினான். ஆகவே நீங்களும் உங்கள் தொழுகையிலும், பள்ளிவாசலிலும், (நன்மையான) இடங்களிலும், பெண் பேசும் நேரத்திலும் உங்களது நபியின் புகழைக் கூறுங்கள். மறந்துவிடாதீர்கள்!”
 நூல் – அல்கவ்லுல் பதீஃ, ஜலாவுல் அப்ஹாம்
 இப்னு உமர் رضي الله عنه அவர்களை எவருக்காவது பெண் பேசுவதற்காக அழைத்திருந்தால் இப்னு உமர் رضي الله عنه அவர்கள் ஹம்து, ஸலவாத் எல்லாம் ஓதிய பின்பே “இன்னவருக்காக நாங்கள் பெண் பேச வந்திருக்கிறோம். அவருக்கு மணமுடித்துக் கொடுக்கச் சம்மதித்தால் அல்ஹம்து லில்லாஹ் – சம்மதிக்காவிட்டாலும் சுப்ஹானல்லாஹ்!” என்று (சபையில்) கூறுபவர்களாக இருந்தார்கள். மேலும் இரண்டாம் உமராகிய உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைப் பெண் பேசிய நேரத்தில் “பெருமைக்கும், கௌரவத்திற்குமுரிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், இறுதித் தூதரான நபி (ﷺ) அவர்கள் மீது அல்லாஹ் ஸலவாத் சொல்வானாக!” என்ற ஹம்தும் ஸலவாத்தும் ஓதிய பின்பே பெண் பேசும் பேச்சினைத் துவங்கினார்கள்.
 நூல் – கவ்லுல்பதீஃ லிஸ்ஸகாவீ

No comments:

Post a Comment