Popular Posts

Monday 9 May 2016

"மய்யித்தை அடக்கி முடிந்தவுடன் கபுரின் மீது தண்ணீர் ஊற்றுவதற்கு ஆதாரம் உண்டா"¶?

 "மய்யித்தை அடக்கி முடிந்தவுடன் கபுரின் மீது தண்ணீர் ஊற்றுவதற்கு ஆதாரம் உண்டா"¶?

 1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாங்களின் மகனார் இப்றாஹீம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கபுரின் மீது தண்ணீர் தெளித்தார்கள். மேலும் அதன் மீது பொடிக்கற்களை வைத்தார்கள் என்று ஜஃபர் இப்னு முஹம்மத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(மிஷ்காத் பக்கம் 148 ஹதீது எண் 1708 பாபு தப்னில் மைய்யித்தி, ஷரஹுஸ்ஸுன்னா பாகம் 5 பக்கம் 401 ஹதீது எண் 1515)

 2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்களை (அடக்கம் செய்வதற்காக கொண்டு வரப்படும் பலகையிலிருந்து) மெதுவாக எடுத்தார்கள். மேலும் அவர்களின் கபுரின் மேல் தண்ணீரைத் தெளித்தார்கள் என்று அபூராபிஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(இப்னுமாஜா ஹதீது எண் 1551 பாபு மா ஜாஅ பீ இத்காலில் மய்யித்தி அல் கப்ர கிதாபுல் ஜனாயிஸ், மிஷ்காத் ஹதீது எண் 1719 பாபு தப்னில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ்)

 3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கபுருக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருக்கு தோல் துருத்தியின் மூலம் தண்ணீர் ஊற்றியவர்கள் பிலால் பின் ரபாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களாகும். தலைமாட்டிலிருந்து துவங்கி கால்மாடு முடியும்வரை ஊற்றினார்கள்.(பைஹக்கி, மிஷ்காத் ஹதீது எண் 1710 பக்கம் 149 பாபுல் புக்காஜ் அலல் மய்யித்தி)

 கேள்வி:
 மய்யித்தை அடக்கி முடிந்தவுடன் கபுரின் மீது தண்ணீர் ஊற்றுவதால் என்ன பயன்?

 பதில்:
 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கபுருக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது ஸஹாபாக்கள் யாவரும் அதை நன்மை என்று கருதிய காரணத்தினாலாகும். மற்றவர்களின் கபுருக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு காரணம் என்னn வன்றால் ரஹ்மத் இறங்க வேண்டும், குற்றங்கள் கழுவப் பட வேண்டும், பாவங்கள் பொறுக்கப்பட வேண்டும் என்று ஆதரவு வைத்தலாகும். அத்துடன் கபுரின் மேலுள்ள மண் பரந்து செல்லாமல் தடுக்கப்பட வேண்டும் என்று நாடுவதுமாகும் என்று மிஷ்காத் பக்கம் 149 ல் உள்ள இரண்டாவது ஓரக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே கபுரின் மீது தண்ணீர் ஊற்றுவதால் மேற்கூறப்பட்ட நன்மைகள் கிடைப்பதுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் சுன்னத்தைப் பேணிய நன்மையும் கிடைக்கும் என்பதையும் அறிந்து செயல்படுவோமாக! எல்லாம் வல்ல நாயன் எம் அனைவருக்கும் நேரான பாதையை காட்டியருள்வானாக !
 ஆமீன்.

No comments:

Post a Comment