Popular Posts

Monday 9 May 2016

எனது மண்ணறையைப் பெருநாளாக ஆக்கிவிடாதீர்கள்” என்பதன் உண்மையான விளக்கம்...!

“எனது மண்ணறையைப் பெருநாளாக ஆக்கிவிடாதீர்கள்” என்பதன் உண்மையான விளக்கம்...!
 மாநபி (ﷺ) அவர்களின் மண்ணறையைப் பெருநாளாக ஆக்கிவிடாதீர்கள் என்பதன் விவரம் : வபாவுல்வபா நூலில் (1369:4) இமாம் ஸம்ஹுதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஹாபிள் முன்திரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய கருத்தினை எழுதுகிறார்கள். அதிகம் அதிகம் மாநபி (ﷺ) அவர்களின் மண்ணறையை ஸியாரத் செய்ய வேண்டும். ஒவ்வொரு வருடத்திலும் எப்போதாவது பெருநாள் வருவது போன்று எப்போதாவது ஓரிரு முறை மட்டும் ஸியாரத் செய்து சுருக்கிக் கொள்ளக் கூடாது.
 இப்னுல் இமாம் அவர்கள் தமது ஸிலாஹுல் முஃமின் – பக்கம் 45 ல் எழுதுகிறார்கள், வருடத்தில் இரண்டு முறை பெருநாள் வருவது போன்று ஓரிரு முறை மட்டும் மாநபி (ﷺ) அவர்களது மண்ணறையை தரிசிக்காமல் அதிகம் அதிகம் ஸியாரத் செய்து வாருங்கள்.
 இமாம் கஸ்தலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இமாம் தவர் பிஸத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களது கருத்தினை “மஸாலிகுல் ஹுனபா” 1/64 ல் எழுதுகிறார்கள், பெருநாளில் கேளிக்கை, வீண்விளையாட்டு, ஆடம்பரம், சந்தோஷம் ஆகியவற்றினை (மட்டுமே) வெளிப்படுத்துவது யஹூதிகளின் பண்பாகும். இது அவர்களுக்கு இறுகிய இதயத்தையும், மறுமையைப் பற்றிய மறதியையும் கொடுத்தது. (யஹூதிகளின்) பெருநாள் போன்று என் மண்ணறையை மாற்றிவிடாதீர்கள். ஏனெனில் எனது மண்ணறை மறுமையின் நினைவையும், அருளுக்குரிய இளகிய இதயத்தையும் நல்கும் இடமாகும்.
 இந்த ஹதீதின் ராவியாகிய அலிய்யிப்னு ஹுசைன் رضي الله عنه அவர்கள், மாநபியின் மண்ணறையிலேயே நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பற்றி அந்நபருக்காக குறிப்பிட்டுக் கூறிய வார்த்தையாகும். ஏனெனில் பிறருக்கு இடைஞ்சலாக இருப்பதைத் தவிர்ப்பதற்காக, நீண்ட நேரம் மாநபி (ﷺ) அவர்களின் மண்ணறையில் தங்குவது மக்ரூஹ் என்ற இதே கருத்தினை மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் கூறியுள்ளனர்.
 நூல் – வபாஉல்வபா 1368:4
 சையரி அஃலாமின் நுபலா (484:4), நூலில் இமாம் தஹபி அவர்கள் ஹஸன் இப்னு ஹஸன் அவர்களின் வரலாற்றின் கீழ் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள் : மாநபி (ﷺ) அவர்களின் மண்ணறை முன் ஒருவர் தாழ்மையுடன் ஸலவாத்தும், ஸலாமும் ஓதியவராகவும், நின்று கொண்டிருந்தால் அவருக்கு சோபனம் உண்டாவதாக! ஏனெனில் அவர் இரு நன்மைகளைப் பெறுகிறார். ஒன்று மதீனா முனவ்வராவில் மாநபி (ﷺ) அவர்களது மண்ணறையை நேரில் தரிசிக்கும் பாக்கியசாலி ஆகிறார். மற்றொன்று ஸலவாத், ஸலாம் ஓதிய நற்கூலியைப் பெறுகிறார். வெளியூரில் உள்ள ஒருவர் ஸலவாத், ஸலாம் ஓதும்போது அதற்குரிய கூலியினை மட்டுமே பெறுகிறார்.
 நூல் – பள்லு ஸலவாத்திஅலன் நபிய்யி (ﷺ), லிஇமாம் இஸ்மாயில்காழி ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஹிஜ்ரீ 199 – 282, தஹ்கீக் ஹுஸைன் முஹம்மது அலி சுக்ரீ : வெளியீடு தாருல் மதீனதுல் முனவ்வரா

No comments:

Post a Comment