Popular Posts

Monday 9 May 2016

நபி ஸல் அவர்களே மந்திரித்தார்கள்... அவர்களும் உண் கொள்கைபடி இணை வைத்தவரகளா?

ஷிர்கை ஒழிக்கிறோம் என்று ஒப்பாரி வெக்கிரான்...

 கிருக்கு பிடுத்து திரிகிரான்...

 நீ சொல்வதில் எதுவெல்லாம் ஷிர்கு?

 1_மந்திரித்தலை ஷிர்கு என்கிராய்..

நபி ஸல் அவர்களே மந்திரித்தார்கள்...
 அவர்களும் உண் கொள்கைபடி இணை வைத்தவரகளா?

 1_ பாடம் : 32 (பொதுவாக) குர்ஆன், (குறிப்பாக) பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் ஓதிப்பார்ப்பது.65
 5735. ஆயிஷா(ரலி) கூறினார்
 நபி(ஸல்) அவர்கள், தாம் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது (குர்ஆனில் உள்ள) பாதுகாப்புக் கோரும் (இறுதி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் மீதே ஊதிக்கொள்வார்கள். அவர்களுக்கு நோய் கடுமையானபோது நானே அவற்றை ஓதி அவர்களின் மீது ஊதிக்கொண்டும் அவர்களின் கையாலேயே (அவர்களின் மீது) தடவியபடியும் இருந்தேன். அவர்களின் சுரத்தின் சுபிட்சம் (பரக்கத்) கருதி இவ்வாறு செய்தேன்.
 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) மஅமர் இப்னு ராஷித்(ரஹ்) கூறினார்:
 நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் எப்படி (ஓதி) ஊதுவார்கள்?' என்று கேட்டேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் தம் இருகரங்களின் மீதும் ஊதிப் பிறகு அவற்றால் தம் முகத்தில் தடவிவந்தார்கள்' என்று பதிலளித்தார்கள்.66

 புகாரீ 5735

 2_ பாடம் : 33 அல்ஃபாத்திஹா" அத்தியாயத்தைக் கொண்டு ஓதிப்பார்ப்பது. இது பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித் துள்ளதாகக் கூறப்படுகிறது.67:

ஓதி ப்பார்த்து ஊதியம் வாங்குவது ஷிர்கு என்பாயா?

 அதையும் நபி ஸல் அவர்கள் அங்கீகரித்தார்களே

5736. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்
 நபி(ஸல்) அவர்களின் தேழர்களில் சிலர் (ஒரு பயணத்தின் போது) ஓர் அரபுக் குலத்தாரிடம் சென்றார்கள். அவர்களுக்கு அக்குலத்தார் விருந்தளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டிவிட்டது. அப்போது அக்குலத்தார் (நபித் தோழர்களிடம் வந்து) 'உங்களிடம் (இதற்கு) மருந்து ஏதும் உள்ளதா? அல்லது ஓதிப்பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா?' என்று கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள், 'நீங்கள் எங்களுக்கு விருந்தளிக்க முன் வரவில்லை. எனவே, நீங்கள் எங்களுக்கு (ஒரு) குறிப்பிட்ட கூலியைத் தந்தாலே தவிர (வெறுமனே) உங்களுக்கு நாங்கள் ஓதிப் பார்க்கமாட்டோம்' என்று கூறினர்.
 உடனே, நபித்தோழர்களுக்காக அக்குலத்தார் (முப்பது ஆடுகள் கொண்ட) ஓர் ஆட்டு மந்தையைக் கூலியாக நிர்ணயித்தார்கள். நபித்தோழர்களில் ஒருவர் (எழுந்து சென்று) 'குர்ஆனின் அன்னை' எனப்படும் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தை ஓதித் தம் எச்சிலைக் கூட்டி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். உடனே அவர் வலி நீங்கி குணமடைந்தார். (பேசியபடி) அவர்கள் ஆடுகளைக் கொண்டுவந்(து கொடுத்)தனர். நபித்தோழர்கள், 'நபி(ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்காதவரை இதை நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது' என்று (தமக்குள்) பேசிக்கொண்டு அவ்வாறே நபி(ஸல்) அவர்களிடம் (வந்து அனுமதி) கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு 'அல்ஃபாத்திஹா' ஓதிப்பார்க்கத் தகுந்தது என்று உமக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளை எடுத்துக் கொள்ளுங்கள்; எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள்' என்று கூறினார்கள்.
 புகாரீ

 5737. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
 (ஒரு பயணத்தின்போது) நபித்தோழர்களில் சிலர் ஒரு நீர் நிலையைக் கடந்து சென்றார்கள். அங்கு தங்கியிருந்த மக்களிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருந்தார். அப்போது அந்த நீர் நிலையில் தங்கியிருந்தவர்களில் ஒருவர் நபித்தோழர்களிடம் வந்து, 'உங்களிடையே ஓதிப் பார்ப்பவர் எவரேனும் இருக்கிறாரா? இந்த நீர் நிலையில் தங்கியிருப்பவர்க(ளான எங்க)ளிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருக்கிறார்' என்று கூறினார். உடனே நபித்தோழர்களில் ஒருவர் சென்று குர்ஆனின் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தைச் சில ஆடுகளை கூலியாகத் தரவேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் ஓதினார். உடனே விஷக்கடிக்கு ஆளானவர் குணமடைந்தார். ஓதிப்பார்த்தவர் அந்த ஆடுகளைத் தம் நண்பர்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதை (ஓதிப் பார்த்ததற்காகக் கூலி பெற்றதை) வெறுத்தார்கள். மேலும், 'அல்லாஹ்வின் வேதத்திற்காக நீர் கூலி வாங்கினீர்?' என்று கேட்டார்கள். இறுதியில் மதீனா சென்று, 'இறைத்தூதர் அவர்களே! இவர் அல்லாஹ்வின் வேதத்தை ஓதியதற்குக் கூலி வாங்கிக்கொண்டார்' என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நீங்கள் ஊதியம் பெற்றிட மிகவும் தகுதி வாய்ந்தது. அல்லாஹ்வின் வேதமேயாகும்' என்று கூறினார்கள்.
 புகாரி

கண் திருஷ்டியால் பாதிப்பு ஏர்படும் என்று நம்பினால் இணை வைத்தல் என்றாய்

 அது உன் தவ்ஹீதின் படி வஹீ இறங்கிய ரஸூலிர்கே தெரியலையோ...

 பாடம் : 35 கண்ணேறுக்கு ஓதிப்பார்ப்பது70
 5738. ஆயிஷா(ரலி) கூறினார்
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீயவிளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி 'கட்டளையிட்டார்கள்.
 புகாரீ

தாயத்து கட்டினால் ஷிர்கு என்ராய்

நபி .(ஸல்)கூறினார்கள்:"உங்களில் யாரேனும் தூக்கத்தில் பயந்தால் اعوذ بكلمات الله التامات من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين ان يحضرونن
 என்று கூறட்டும் அவனுக்கு அது எநந்த தீங்கும் எஏர்படுத்தாது என்றார்கள்

 அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி)அவரகள் தமது பிள்ளை களில் பருவ வயதை அடைந்தவர்களுக்கு அதை சொல்லிக்கொடுப்பார்கள் . அவரகளில் பருவ வயதை அடையாதவர்களுக்கு .ஓர் தாவீஸில் எழுதி கழுத்திலே கெட்டி விடுவார்கள்..
 திர்மிதி 3528

அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி)அவர்களுக்கு தவ்ஹீத் தெரியலையா?
 அதை பதிவு செய்த திர்மிதி (ர)அவர்களும் ஷிர்கிர்கு துணை போனார்கள் என்பாயா?

No comments:

Post a Comment