Popular Posts

Monday 9 May 2016

நபிமார்களும், அவ்லியாக்களும் மரணிப்பதில்லை! திருமறை முழக்கம் திருநபி விளக்கம்.

நபிமார்களும், அவ்லியாக்களும் மரணிப்பதில்லை! திருமறை முழக்கம் திருநபி விளக்கம்.

நபிமார்களும், அவ்லியாக்களும் மரணிப்பதில்லை! திருமறை முழக்கம் திருநபி விளக்கம்.





'பீஸபீலில்லாஹ்’ அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு உயிர் இழந்தவர்கள் மரணித்துவிட்டார்கள் என்று கருதிவிடாதீர்கள் எங்கிலும் அவர்கள் தங்களின் இறைவனிடம் உயிரோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவளிக்கப்படுகிறது. மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கும் அருட்கொடைகளை கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாய் இருக்கிறார்கள்” (அல்குர்ஆன்)
மேலே கூறப்பட்ட திருமறை வசனத்தின் மூலம் புனிதப்போரில் உயிர் துறந்த உத்தமர்கள் ஷுஹதாக்கல் ஆவார்கள் அவர்களுக்கு இவ்வுலகில் மவ்த் மரணம் பேரளவில் மட்டும்தான் ஏற்படுகிறது ஆயினும் அவர்கள் உண்மையில் மரணிப்பதில்லை. அவர்கள் எங்கு இருந்தாலும் உயிரோடுதான் இருக்கிறார்கள் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது மேலும் பல்வேறு அருட்களும் அவர்களுக்கு கிடைக்கின்றன. அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாய் இருக்கிறார்கள் என்ற உண்மையான தத்துவங்கள் கிடைக்கின்றன.மேலே கூறிய மறை வசனம் ஷுஹதாக்கல் எனப்படும் புனிதப்போரில் உயிர் துறந்தவர்களைப் பற்றி அருளப்பட்ட வசனமேயாகும். அந்தத் தியாகிகள் யாவரும் யுத்த களத்தில் மரணத்தைத்தழுவி முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டவர்களேயாவார்கள். அவர்கள் மரணித்ததும் அவர்களை மற்ற நண்பர்கள் நல்லடக்கம் செய்ததும் உண்மையேயாகும். இறைவன் திருமறையில் மேலே கூறிய வசனத்தின் மூலம் ஷுஹதாக்கள் மரணிக்கவில்லை என்று தெளிவாகக்கூறியுள்ளான் இதனால் ஷுஹதாக்கள் உயிர்தியாகிகள் யாவரும் பேரளவில் மரணத்தவர்களேயன்றி 'ஹகீகத்’ யதார்தத்தில் அவர்கள் மரணிக்கவில்லையென்பது தெளிவாகிவிட்டது. மறை வசனத்தில் கூறப்பட்ட ஷுஹத்தாக்கள் உயிர்தியாகிகள் யாரெனில் திருக் கலிமாவை நிலைநாட்டுவதற்காகவும் ஈமானையும், ஸ்திரப்டுத்துவதற்காகவும் காபிர்களுடன் போர்தொடுத்து அந்தப்போரில் காபீரீன்களால் அல்லது தவறுதலாக முஸ்லீம்களால் வெட்டப்பட்டு இறந்தவர்களேயாகும். மேலே கூறப்பட்ட வசனங்கள் யாவும் இவர்கள் விசயத்தில் அருளப்பட்டவைதான்.கலிமாவுக்காகவும், தவ்ஹீதை நிலைநாட்டுவதற்காகவு மின்றி நாட்டைக்கைப் பற்றுவதற்கும், எல்லைப் பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்கும் மேலும் இவ்வுலக விவகாரங்களுக்கும் நடைபெறும் போர் புனிதப்போராக மாட்டாது. அதில் இறப்பவர்கள் ஷுஹதாக்கள் ஆகவும் மாட்டார்கள். அவர்களுக்கு மேலேகூறிய வசனத்தில் உள்ள எந்த ஒரு சிறப்பும் கிடையாது. ஆகவே ஷுஹதாக்கல் எனப்படுவோர் புனிதப்போரில் உயிர்துறந்தவர்களேயல்லாமல் வேறு எந்த நோக்கத்திற்காகவும் உயிர் துறந்தவர்களல்லர்.மேலே கூறிய மறை வசனத்தில் விரிவான விளக்கத்தை அறியாதவர்கள் அவ்வசனத்தில் சுஹதாக்களை மட்டும்தான் அல்லாஹ் கூறியுள்ளான் ஆகையால் ஷுஹதாக்கள்அல்லாத வேறெவரும் ஷஹீதுடைய இடத்தை அடைய முடியாது என்று கருதி. நபிமார்களும், அவ்லியாக்கலும் ஷுஹதாக்களின் பதவியை பெற முடியாது என்றும் ஷுஹதாக்கள் அல்லாத எவரும் மரணித்த பின்பு உயிரோடு இருப்பதில்லை என்றும் வாதிடுகிறார்கள். இன்னொர் திருமறை வசனத்தின் சரியான விளக்கத்தை அறியாதவர்கள் என்றே கூறவேண்டும் மேலே கூறப்பட்ட மறை வசனத்தை சரியாக ஆராய்ந்தால் அவ்வசனத்திலேயே நபிமார்களும் அவ்லியாக்களும் மரணத்தபின் உயிர் உள்ளவர்கள் என்பது தெளிவாகும்.ஷுஹதாக்கள் அல்லாத நபிமார்களும் அவ்லியாக்களும் இயற்கை மரணத்தின்பின் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கு மேற்கூறிய வசனத்தில் எந்த வகையில் ஆதாரம் இருக்கிறது என்பதை பின்னால் ஆராய்வோம். நபிமார்கள் அவ்லியாக்கல் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை ஹதீஸ்கள் மூலம் ஆராய்வோம்.1.நபிமார் தமது கப்ரில் மண்ணறையில் உயிரோடு இருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள். ஆதாரம் –பைஹகீ2. நான் விண்ணுலக யாத்திரை சென்றபோது நபி மூஸா (அலை) அவர்களுக்கு அருகே சென்றேன் அப்பொழுது அவர்கள் தங்களின் கப்ரில் மண்ணறையில் நின்றவர்களாய் தொழுதுகொண்டிருந்ததைக் கண்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். ஆதாரம் –புஹாரி3. நபி (ஸல்)அவர்கள் விண்ணுலக யாத்திரை சென்ற இரவு எல்லா நபிமார்களையும் அல்லாஹ் நமது நபிக்கு எழுப்பிக் காட்டினான் நபி (ஸல்) அவர்கள் அந்த நபிமார்களை மஉமூம் தொடர்பவர்களாய் வைத்து இரண்டு ரக்அத் தொழுகை நடாத்தினார்கள். ஆதாரம்- புஹாரி, முஸ்லீம்4. நான் விண்ணுலக யாத்திரை செய்த பொழுது நபிமார்களில் ஒரு கூட்டத்துடன் என்னை நான் கண்டேன் அப்போழுது மூஸா நபி (அலை) அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள் மூஸா நபி சுருண்ட முடியுடையவராயும் மஞ்சல் நிறத்தை ஒத்தவராயும் இருந்ததைக் கண்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். ஆதாரம்-புகாரி, முஸ்லீம்மேற்கூறப்பட்ட ஆதாரபூர்வமான நான்கு ஹதீஸ்களின் மூலம் நபிமார் மரணத்தின்பின் உயிரோடு இருப்பார்கள் என்பது தெளிவாகிவிட்டது ஆயினும் உங்களுக்கு ஒரு சநதேகம் தோன்றும் அதை விளக்கி வைக்கிறேன்.இரண்டாவது ஹதீஸில் கூறப்பட்ட மூஸா (நபி) தனது கப்ரில் தொழுதுகொண்டிருந்த விஷயமும் மூன்றாவது ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் எல்லா நபிமாரையும் வைத்து தொழுகை நாடாத்தினார்கள் என்ற விஷயமும். நான்காவது ஹதீஸில் மூஸா நபி சுருண்ட முடியையும் மஞ்சல் நிறத்தையும் உடையவர் என்ற விசயமும் நபிமார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாகாதென்று சிலர் கருதி நபிமார்கள் மற்ற உயிரினங்களைப்போல் உயிரில்லாத பிணங்கள் என்றும் கூறுகிறார்கள் அதற்கு பின்வருமாறு அவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.நபி (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரை சென்ற சமயம் மூஸா நபி (அலை) அவர்களின் உடலமைப்பில் சடமில்லாத உருவத்தையும், மஉமூம்களாக நின்று தொழுத ஏனைய எல்லா நபிமார்களின் உடலமைப்பில் சடமில்லாத பல உருவங்களையும் இறைவன் நபி (ஸல்) அவர்களின் பார்வைக்கு காட்டிக் கொடுத்தானேயன்றி அந்த நபிமார் சடமுள்ளவர்களாகத் தென்படவில்லை. எனவே மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் மூலம் நபிமார் மரணித்தபின் உயிருள்ளவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதென்று கூறுகிறார்கள் நபிமார் மரணித்தபின் உயிருள்ளவர்கள் அல்லர். வென்பதற்கு மேலேகூறிய மூன்று ஹதீஸ்களிலும் ஆதாரமில்லை என்று வாதிடுவோர் முதலாவதாக கூறப்பட்ட பைஹகீ அறிவித்த ‘நபிமார் தமது கப்ரில் உயிரோடு இருக்கிறார்கள் இன்னும் தொழுகிறார்கள் என்ற ஹதீஸ் பற்றி என்ன சொல்வார்கள்? அந்த ஹதீஸில் நபிமார் மரணித்தபின் உயிருள்ளவர்கள் என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளதால் அவர்கள் உயிரோடு இருப்பதில் சந்தேகம் இல்லை. மேலும் அந்த ஹதீஸ் ஆதாரமற்ற தென்று கூறுவதற்கும் வழியே இல்லை.மேலே கூறப்பட்ட மூன்று ஹதீஸ்களிலும் நபிமார் மரணதித்தபின் உயிருள்ளவர்கள் என்பதற்கான ஆதாரத்தை கவனிப்போம். மூஸா நபி (அலை) அவர்களும் மற்ற எல்லா நபிமாரும் விண்ணுலக யாத்திரையின்போது நபி (ஸல்) அவர்களுக்கு காட்சி கொடுத்தார்கள் என்பதற்கு நபிமார்களின் உடலமைப்பை பெற்ற உருவங்களை கண்டார்களேயன்றி அவர்களை சடத்துடன் காணவில்லை என்று மேற்கூறப்பட்ட மூன்று ஹதீஸ்களுக்கும் மறுப்பவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.நபீ (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரையின்போது நபிமாரை அவர்களின் சடத்துடன் காணவில்லை என்பது அவர்களின் வாதமாகும். இவர்களின் வாதம் மறுக்கப்படவேண்டியதேயாகும். ஏனெனில் நபி மூஸா (அலை) அவர்களும் மற்ற நபிமார்களும் தொழுவார்கள். என்ற நபி மொழியிலிருந்து அவர்கள் தமது சடத்துடன் உயிரோடு இருக்கிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது. ஏனெனில் தொழுகை என்பது ருகூஉ, சுஜூது போன்ற பலவகையான செயல்களைக் கொண்டதாகும் செயல்கள் ஆட்ட அசைவுகள் யாவும் சடத்துக்குரிய தன்மைகளேயன்றி றூஹூக்குரியவையல்ல. குனிதல், நிமிர்தல், நிற்றல் ஆகியவையெல்லாம் சடத்துக்கும் உடலுக்குமுறிய தன்மைகளாகும் தொழுகையில் இவ்வாறான செயல்கள் இடம்பெறுவதால் விண்ணுலக யாத்திரையின்போது நபி (ஸல்) அவர்கள் கண்ட நபிமார் யாவரும் தமது சடத்துடனேயே காட்சியளித்தார்கள். என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களை சுருண்ட முடியும் மஞ்சல் நிறமும் உடையவர்கள் என்று வருணித்ததிலிருந்தும் நபி மூஸா (அலை) அவர்கள் தமது சடத்தோடுதான் காட்சியளித்தாகள் என்பது விளங்குகிறது. ஏனைனில் சுருண்ட முடியும் மஞ்சல் நிறமும் சடத்துக்குரிய வருணனையேயன்றி றூஹூக்குரியதல்ல. றூஹூ உயிர் என்பது சுருண்டது, நீண்டது, கறுப்பு, மஞ்சல் என்று வருணிக்கமுடியாததாகும். எனவே நபிமார் மரணத்தின்பின் உயிரோடு இருக்கிறார்கள் என்பது நபி (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரையின்போது நபிமார்களை அவர்களின் சடத்துடனேயே கண்டார்கள் என்பதும் மேற் கூறப்பட்ட ஹதீஸ்கள் மூலம் நிரூபணமாகிவிட்டது.நபிமார் மரணித்த பின்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதில் இமாம்களும், அவ்லியாக்களும் அறிஞர்களும் எவ்வித கருத்து வேறுபாடுகளும் தெரிவிக்கவில்லை. ஆனால் வஹாபிய்யத் எனும் வழிதவறிய கொள்ளை வழிநடப்பவர்களும் இன்னும் அவர்களைப்போன்ற சுன்னத் வல் ஜமாஆத் கொள்கைக்கு முரண்பட்ட கொள்கையுடையவர்களும் நபிமார் மரணித்தபின் உயிரோடு இருப்பதில்லை அவர்களின் சரீரம் இறந்து அழிந்து மண்ணுடன் மண்ணாகிவிட்டது என்று கருதுகிறார்கள்.இமாம்களும் அவ்லியாக்களும் ஏகமாக நபிமார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் தமது சடத்துடன் உயிரோடு இருக்கிறார்கள் என்பதில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு. விபரம் பின்னால் வரும்.இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களும் இமாம் கர்றாபி (ரஹ்) அவர்களும் நபிமார் மரணித்தபின் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள் ஆயினும் மரணத்தின்பின்பு நபிமார் தமது சடத்துடன் காட்சியளிப்பதை மறுக்கிறார்கள்.நபிமாருடைய மரணத்தின் பின்பு யாராவது அவர்களை கனவில் அல்லது விழிப்பில் கண்டால் அவர்களின் உடலமைப்பையுடைய உருவத்தைக் காண்கிறார்களேயல்லாமல் அவர்களின் சடலத்தைக் காணவில்லை. என்று வலியுறுத்திக்கூறியுள்ளார்கள்.இமாம்களுக்கிடையில் கருத்துவேறுபாடு இல்லையானால் நான்கு மத்ஹபுகள் தோன்றியிருக்க மாட்டாது “இக்திலாபுல் அயிம்மா றஹ்மதுன் லில்உம்மா” இமாம்களின் கருத்து வேறுபாடு மனிதர்களுக்கு மாபெரும் அருளேயாகும். என்று அறிஞர்கள் ஏகமாக கூறியுள்ளார்கள்.இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்களும் இமாம் கர்றாபி (றஹ்) அவர்களும் நபிமார் மரணத்தின்பின்பு சடத்துடனேயே மற்றவர்களின் கனவிலோ, நினைவிலோ காட்சியளிக்கின்றார்கள் என்பதை மறுக்கின்றார்கள். ஆயினும் நபிமார் மரணத்தின் பின்பு உயிரோடு இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். இவர்கள் இருவரையும் தவிரவுள்ள ஏனைய இமாம்கள் இவ்விருவருக்கும் மாறாக கூறுகிறார்கள். நபீமார் மரணத்தின்பின்பு உயிரோடு இருப்பதைப்போல் தமது சடத்துடனேயே மற்றவர்களுக்கு காட்சியளிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இதுவரை எழுதியவற்றிலிருந்து நபிமார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதும் கனவிலோ நினைவிலோ தமது சடத்துடனேயே மற்றவர்களுக்கு காட்சியளிக்கின்றார்கள் என்பதும் நிரூபணமாகிவிட்டது.ஆரம்பத்தில் கூறிய திருமறை வசனத்தை ஆராய்வோம். அவ்வசனத்தில் மரணத்தின் பின்னும் உயிரோடு இருப்பவர்கள் ஷுஹதாக்கள் புனிதப்போரில் உயிர் துறந்தவர்கள் என்று அல்லாஹ் அருளியுள்ளான். அந்த ஷுஹதாக்களில் நபிமார்களும் அவ்லியாக்களும் சேர்ந்தவர்களா? இல்லையா? என்பதை ஆராய்வோம்.மேலே கூறப்பட்ட திருமறை வசனத்தில் “குதிலூ பீஸபீலில்லாஹ்” அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு இறந்தவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான் இதனால் புனிதப்போரில் உயிர் துறந்தவர்கள் மட்டும்தான் அவ்வசனத்தில் குறிக்கப்பட்டவர்கள் என்பது மேலெழுந்த வெளிப்படையான விளக்கத்தின்மூலம் கிடைக்கின்றது.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் புனிதப்போருக்கு சென்று யுத்தம் செய்துவிட்டு திரும்பி வந்த சமயம் நாம் சிறிய யுத்தத்திலிருந்து பெரிய யுத்தத்திற்கு வந்துள்ளோம் என்று கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் ரசூலே நாம் செய்துவிட்டு வந்திருப்பது சிறிய யுத்தம் என்றால் பெரிய யுத்தம் எது என்று வினவினார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒருவர் தனது நப்சுடன் போராடுவது பெரிய யுத்தம் என்று அருளினார்கள். இந்த ஹதீஸில் போர்களத்தில் வால் ஏந்தி காபீர்களுடன் யுத்தம் செய்வது சிறிய யுத்தம் என்றும் ஒருவர் தனது நப்சுடன் போரிடுவது பெரிய யுத்தம் என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.சிறிய யுத்தத்தில் உயிர் துறந்தவர் ஷஹீத் ஆகிவிடுகிறார் என்றால் பெரிய யுத்தம் என்று நபி (ஸல்) அவர்களால் வருணிக்கப்பட்ட நப்சுடனான போரில் உயிர் துறந்த ஒருவர் ஷஹீதாகி விடுவார் என்பதில் வியப்பொன்றும் இல்லை.‘நுபுவ்வத்’ நபித்துவம் என்ற பதவி நபிமாருக்கும், ‘விலாயத்’ ஒலித்தனம் என்ற பதவி அவ்லியாக்களுக்கும் கிடைப்பதனால் அப்பதவியைப் பெறுபவர் நப்ஸுடன் போராடி வெற்றி பெற்றவராக இருத்தல் வேண்டும் உயர் பதவிக்கு தகுதியற்றவருக்கு அப்பதவியை வழங்குவது நியாயமற்றது ஹக்தாஆலா நியாயமில்லாத வேலை செய்ய மாட்டான் உலகில் தோன்றிய எல்லா நபிமார்களும் ஒலிமார்களும் ஜிஹாத் அக்பர் என்னும் பெரிய யுத்தம் செய்தவர்களேதான். அவ்யுத்தத்தில் போராடி வெற்றி பெறாதவர் நபியாகவோ ஒலியாகவோ முடியாது. எனவே மேலே கூறப்பட்ட ஹதீஸின் மூலம் நப்சுடன் போராடிய அனைவரும் பெரிய யுத்தம் செய்த ஷஹீதுகளேயாவார்கள். சிறியபோரில் உயிர் துறந்தவர் மரணித்த பின்னும் உயிரோடு இருக்கிறார் என்றால் நப்ஸுடன் போராடிப் பெரிய யுத்தம் செய்தவர் உயிருடன் இருப்பது நிச்சயமானதாகும்.வாளேந்தி காபீர்களுடன் சமர் செய்வது சிறிய ஜிஹாத் யுத்தம் என்றும் நப்சுடன் போராடுவது பெயரிய யுத்தம் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதன் இரகசியம் என்னவெனில் திருக்கலிமாவை ஏற்றுக் கொள்ளாத காபிரீன்களுடன் வாலேந்திப் போரிடுவது மிகச் சுலபம். ஏனெனில் காபீர் தன்னை விட்டும் வேறானவனேயல்லாமல் தன்னிலிருப்பவன் அல்லன். நப்ஸு என்பது தன்னிலேயே அமைந்த ஒன்றாகும். மேலும் காபிர் சடமுள்ளவனாகும் நப்ஸ் என்பது சடமுள்ளதல்ல ஆகையால் தன்னை விட்டும் வேறான ஒருவனையும், சடமுள்ளவனையும் வெட்டிக் கொன்றுவிடுதல் தன்னிலுள்ளதையும், சடமில்லாததையும் வெட்டிக் கொல்வதைவிடச் சுலபமானதேயாகும். கூண்டில் கிளியிருப்பது போல் மனிதனிலேயே தங்கியுள்ள நப்ஸு எந்த நேரத்தில் எந்த உருவத்தில் தீமை செய்யும் என்பதை அறிந்து கொள்ள முடியாது மேலும் காபீரை வாள்போன்ற ஆயுதத்தினால் வெட்டி விடலாம். ஆனால் நப்ஸ் என்பது வாள் போன்ற ஆயுதத்தினால் வெட்ட முடியாத ஒன்றாகும். ஒரு காபிரை வெட்டி வீழ்த்துவதிலும். நப்ஸை வெட்டி வீழ்த்துவதிலும் நப்சை வெட்டிவீழ்துவதுதான் மிகவும் சிரமமானது.மேலும் நபி (ஸல்) அவர்கள் இன்னோரு ஹதீஸில் உனது பகைவர்களில் உனக்கு மிகவும் கொடிய பகைவன் யாரெனில் உனது இரண்டு விலாவுக்கும் இடையிலுள்ள நப்சு ஆகும் என்று கூறியுள்ளார்கள்.இந்த ஹதீஸில் திருக்கலிமாவை ஏற்றுக் கொள்ளாதவன் பகைவனாய் இருந்தாலும் நப்சானது அவனைவிட பகை கூடியதென்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். எனவே பகை கூடியவனை வெற்றி கொள்வது பகை குறைந்தவனை வெற்றி கொள்வதைவிட சிறந்ததென்பது தெளிவாகிவிட்டது. ஆகவே பகை குறைந்த காபிரை வெற்றி கொண்டவன் ஷஹீது என்ற பதவியை பெற்று மரணத்தின் பின்னும் உயிரோடு இருக்கும் பட்சத்தில் பகை கூடிய நப்ஸுடன் போராடி பெரிய ஜிஹாத் செய்து அதை வெற்றி கொண்டவன் ஷஹீது எனற பதவியைப் பெற்று மரணித்தபின் உயிரோடு இருப்பது வியப்பொன்றுமில்லை.போர்களத்தில் வாளேந்தி போரிடுவது சிறிய யுத்தம் என்பதும் நப்ஸுடன் போராடுவது பெரிய யுத்தம் என்பதும் மேலேகூறிய ஹதீஸ்களினால் நீரூபனமாகிவிட்டதால் சிறிய யுத்தம் செய்தவர் மரணத்தின்பின் உயிரோடு இருப்பதேபோல் பெரிய யுத்தம் செய்தவரும் உயிரோடு இருக்கிறார் என்பதும் தெளிவாகிவிட்டது.

No comments:

Post a Comment