Popular Posts

Sunday 1 May 2016

தொழுஹையை எவ்வாறு தொழுக வேண்டும் ??.

தொழுஹையை எவ்வாறு தொழுக வேண்டும் ??.

தொழுகை என்பது வெளிச் செயல்களால் முழுமை பெறுவதில்லை என்ற உண்மையை ஸஹாபி ஒருவரின் வினாவிற்குப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கொடுத்த விடையிருந்து தெளிவாகத் தெரிகிறது.
.
"இறைவனை எப்படி வணங்க வேண்டும்?" என்று அந்த ஸஹாபி கேட்ட போது பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
.
"இறைவனை நீர் பார்ப்பது போல் வணங்க வேண்டும். நீர் அவனைப் பார்ப்பவராக இல்லாவிட்டால், அவன் உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வோடு வணங்க வேண்டும்" எனக் கூறினார்கள்.
.
இங்கு தொழுகையின் உயர் மாண்பு சுட்டிக் காட்டப்படுகிறது. இதே உண்மை மற்றோரு ஹதீஸ் இப்படித் தெளிவுப்படுத்துகிறது.
.
"தொழுகை என்பது மூமின்களுக்கு 'மிஹ்ராஜ்' ஆகும்
மிஹ்ராஜ் என்று சொல்லப்படுகிற ஆத்மீகப் பயணத்தில் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) அவர்கள் இறைவனைத் தரிசித்தது போல், தொழுகையில் ஈடுபடுகிற ஒவ்வொரு மனிதனும், இறைவனைப் பார்ப்பதுப் போன்ற உணர்வைத் தோற்றுவித்துக் கொள்ளவேண்டும்.
.
"தொழுகையில் மனிதன் தன் நாயனோடு உரையாடுகிறான்" என்று, பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) அவர்கள் கூறியிருகின்றார்கள்.
.
அப்படியானால், நாம் தொழுகையின் போது, எந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருப்பது முக்கியமானது என்று தெரிய வருகின்றது.
.
"உடலும் உள்ளமும் கலக்காத எந்தச் செயலையும் தன் அடியாரிடமிருந்து இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கருத்து.
.
உறுப்புக்களின் அசைவுகளினால் இறைவணக்கம் முழுமைப் பெற்றுவிடும் என்று எண்ணுகின்றவர்களைத் தூக்கத்திலிருந்து தட்டி எழுப்புகிறது.
.
"ஒரு மனிதன் தன் தொழுகையைப் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்துக் கொள்கிறானோ அந்த அளவுக்குத்தான் அதிலிருந்து அவனுக்கு பயன் கிடைக்கும்!"
.
நன்றி: Ahamed Bilal

No comments:

Post a Comment