Popular Posts

Tuesday 12 January 2016

சஹாபாக்களை பற்றி அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்/ஈமானில் அந்தஸ்தில் சிறந்து விளங்கிய சஹாபாக்களை விட அண்ணன் விபரமானவரா ??

சஹாபிகளை விட நாங்கள் அதிகமாக விளங்குவோம் என்று அண்ணன் சொல்கிறார்
 சஹாபிகளை விட அற்புதமாக விளங்கும் அண்ணனின் ஆற்றலை பாரீர் என்று ஒரு வஹ்ஹாபி ஸ்டேடஸ் போடுகிறார் .
 ஈமானில் அந்தஸ்தில் சிறந்து விளங்கிய சஹாபாக்களை விட அண்ணன் விபரமானவரா ??
 சஹாபாக்களை பற்றி அல்லாஹ் சொல்வதை கேளுங்கள் .

 48:29 مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ‌ ؕ وَالَّذِيْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ ‌ تَرٰٮهُمْ رُكَّعًا سُجَّدًا يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا‌سِيْمَاهُمْ فِىْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ‌ ؕ ذٰ لِكَ مَثَلُهُمْ فِى التَّوْرٰٮةِ ۛ ۖۚ وَمَثَلُهُمْ فِى الْاِنْجِيْلِ ۛۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْئَـهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِهٖ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَـغِيْظَ بِهِمُ الْكُفَّارَ‌ ؕ وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا 
 48:29. முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் )அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்கள் ;
 அவர்களுடன் (சஹாபா பெருமக்கள் )இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில்(நிராகரித்தவர்களில் ) எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.
 ஸூரா 47
 சஹாபாக்களை பற்றி தவ்ராத்திலும் ,இன்ஜீலிலும் சொல்லப்பட்டிருக்கிறது .அண்ணனைபற்றி எந்த வேதத்தில் சொல்லப்படிருக்கிறது .???
 அல்லாஹ்வும் அவர்களுடைய ஈமானுக்கு சர்டிபிகேட் கொடுக்கிறான் ? உங்கள் அண்ணனுக்கு யார் கொடுத்தது ??

No comments:

Post a Comment