Popular Posts

Tuesday 12 January 2016

TNTJ யினர் மறுக்கும் குஸைமா (ரலி) அவர்களின் ஹதீஸும், அதன் உண்மை நிலையும்

TNTJ யினர் மறுக்கும் குஸைமா (ரலி) அவர்களின் ஹதீஸும், அதன் உண்மை நிலையும்
 =====================================================
 TNTJ யினர் தங்களுக்கு பிடித்த ஹதீசுகளை வைத்துக் கொண்டு தங்களுக்கு விருப்பமில்லாத ஹதீசுகளை தட்டி விட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்பதை யாவரும் அறிந்ததே.!!!

 இன்று இந்த பகுத்தறிவு வாதம் வைத்து ஹதீஸுகளை தட்டி விடும் போக்கு, தமிழ் உலகில் மக்களையும் அதிகமாக தாக்கி, அடிப்படை மார்க்க அறிவு இல்லாத சகோதர்கள் கூட தங்களுக்கு விருப்பமான மாதிரி ஹதீஸுகளை தட்டி விட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
 சமூகத்தில் இப்போது ஹதீஸுகளின் நிலை, 'உங்கள் மனசு ஏற்கிறதா என்று பாருங்கள் இல்லை என்றால் தட்டி விடுங்கள்,' என்ற நிலைக்கு மக்களை கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர். அதற்கு அவர்கள் ஆதாரமாக வைக்கும் ஹதீஸ்.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.

 என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்.

 அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)
 நூல்: அஹ்மத் 15478

 இந்த ஹதீஸை ஆதாரமாக காட்டி அளவுகோல் ஒவ்வொரு தனி மனிதனின் கையிலும் இன்று கொடுக்கப் பட்டுள்ளது. விரும்பினவன் விரும்பின ஹதீஸை ஏற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் தட்டி விடலாம்

 நல்ல நிலைப் பாடு தான்.

 இது என்ன கலியாணத்திற்கு பெண் பார்க்கும் விடயமா????

 அவர் அவருக்கு பிடித்தது போல செயற்படுவதற்கு???
 இன்று சாதாரண பாமர மக்கள் கூட ஹதீஸுகளை தூக்கி வீசும் நிலைமைக்கு கொண்டு வந்து வைத்துள்ளார்கள் என்றால். இந்த 1400 ஆண்டுகளாக இமாம்கள் ஹதீஸ் கலைக்காக பட்ட கஷ்டங்களை எல்லாம் தேவை இல்லாமல் ஆக்கி இருக்கிறார்கள்

 5 லட்சம் அறிவிப்பாளர்களை இமாம்கள் திரட்டி இருக்கிறார்கள், எதற்கு திரட்டினார்கள்????

 இமாம்கள் எல்லாம் குந்தி இருந்து கொண்டு 'நீ ஹதீஸ சொல்லு, மனசுக்கு புடிச்சிருந்தா ஷஹீஹ் என்று சொல்கிறோம், இல்லை என்றால் ழஈப் என்று சொல்கிறோம்' என்று சொல்லிவிட்டு போயிருக்கலாம் அல்லவா??

 ஒரு ஹதீஸை திரட்ட 1 மாதம் பயணம் செய்தார்கள் இமாம்கள். தேவையா இது???

 சரி இவர்கள் மேலே குறிப்பிட்ட ஹதீஸின் அடிப்படையில் எத்தனை ஹதீஸுகளை இமாம்கள் தட்டி உள்ளார்கள்????என்பதை இவர்கள் காட்ட வேண்டும்.

 இந்த ஹதீஸ், சில அடிப்படையே இல்லாத செய்திகளை குறிக்கும். உதாரணமாக தப்லீக் ஜமா அத் சகோதர்களின் தஃலீம் தொகுப்பில் ஒரு ஹதீஸ் வருகிறது, தொழுகையை தொடர்ந்து தொழுதவனுக்கு 15 உபகாரம், தொழுகையை விட்டவனுக்கு 5 தண்டனைகள் என்று, இந்த ஹதீஸை படித்ததுமே நமக்கு தோன்றும் இப்படி ஒரு செய்தியை நபிகளார் சொல்லி இருப்பார்களா என்று...

 உண்மையில் இது ஒரு இட்டுக் கட்டப் பட்ட செய்தியாகும்.

 இந்த செய்தி இட்டுக்கட்டப்படதாகும் என இமாம் தஹபி இப்னு ஹஜர் போன்றவர்கள் விளக்கியுள்ளனர்

 அதில் முஹம்மத் இப்ன் அலி பின் அல் அப்பாஸ் என்ற பொய்யன் இடம் பெறுகிறான் அவந்தான் இதை இட்டுக் கட்டினான் என இமாம் தஹபி (ரஹ்) கூறுகிறார்கள்

 இது போன்ற செய்திகளை தான் மேற்குறித்த அஹ்மதுடைய ஹதீஸ் குறிப்பிடுகிறது.

 அதிராம் பட்டினத்தில் TNTJ இற்கும் ADT க்கும் நடந்த விவாதத்தில் 4 ஹதீஸுகளை சுடச் சுட தட்டி விட்டனர்.

 அதில் ஒன்று தான் நபி (ஸல்) அவர்கள் குதிரை வாங்கியதாகவும் அதற்கு குஸைமா (ரலி) அவர்கள் சாட்சி சொன்னதாக அபூதாவூதில் பதிவாகி இருக்கும் ஆதாரபூர்வமான செய்தி

 "நபிகள் நாயகம்(ஸல்) ஒரு கிராம வணிகரிடம் இருந்த குதிரையை விலை பேசி வாங்கி விட்டு அதற்கு உரிய விலையை பெறுவதற்கு தன்னை பின் தொடர்ந்து வருமாறு கூறிவிட்டு நபிகள் நாயகம்(ஸல்) விரைந்து சென்று விட்டார்

 குதிரை வியபாரி தாமதமாக சென்றார். அந்த குதிரையை நபிகள் நாயகம் (ஸல்)வாங்கிவிட்டதை அறியாத சிலர்கள் அந்த குதிரையை மீண்டும் விலை பேசினர். நபிகள் நாயகம்(ஸல்) பேசிய விலையை விட சிலர்கள் அந்த குதிரைக்கு அதிக விலை கூறவே குதிரை வியபாரி நபிகள் நாயகத்தை அழைத்து உங்களுக்கு வேண்டும் என்றால் உரிய விலை கொடுத்து குதிரையை வாங்கி கொள்ளுங்கள் இல்லையேல் நான் வேறு நபருக்கு விற்க போகிறேன் என்று குறிப்பிட்டார் இதை செவியுற்ற நபிகள் நாயகம்(ஸல்) நான் அந்த குதிரையை வாங்கி விட்டேனே என்று கூறினார்கள் வணிகர் நான் உங்களுக்கு விற்பனை செய்யவில்லை என்று கூற, இல்லை நான் வாங்கி விட்டேன் என்று மீண்டும் நபிகள் நாயகம் கூற இருவருக்கும் இடையே பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பலரும் நபிகள் நாயகம்(ஸல்) பொய் பேசவே மாட்டார்கள் என்று கூறி வணிகரை எச்சரித்தனர் நீங்கள் வாங்கி விட்டது உண்மையானால் அதற்கு உரிய சாட்சியை கொண்டு வாருங்கள் என்று வணிகர் கூறவே அப்போது அங்கு வந்த குஸைமா பின் ஸாபித் அன்ஸாரி நான் சாட்சி என்று கூறினார்கள். உடனே நபிகள் நாயகம்(ஸல்) குஸைமா அவர்களை நோக்கி திரும்பி நீ தான் அதை பார்க்கவில்லையே எப்படி சாட்சி சொன்னாய் என்று விளக்கம் கேட்டார்கள் .அதற்கு அந்த நபி தோழர் நீங்கள் பெற்று தரும் இறை செய்திகளை முழுமையாக நம்பும் நான் இந்த வணிகருக்கு எதிரான விசயத்தில் எப்படி உங்களை நம்பாமல் இருக்கமுடியும் என்று திருப்பி கேட்டார்கள். உடனே நபி அவர்கள் குசைமா சொல்லும் சாட்சி இரு நபருக்கு இணையான சாட்சியாகும் என குறிப்பிட்டார்கள்." (அபூ தாவூத்)

 இவர்கள் இந்த ஹதீஸை மறுபதற்கு சொல்லும் காரணம்.
 குசைமா அவர்கள் பொய் சாட்சி சொல்லியதாகவும் நபிகள் நாயகம் அவர்கள் அதை ஊக்க படுத்துவது போன்றும் இந்த நபி மொழி அமைவதால் இது ஏற்று கொள்ள தகுந்த நபி மொழி அல்ல! எனவே இந்த நபி மொழியை மறுக்கிறோம். என்று வாதம் வைக்கிறார்கள்.

 அனைத்து ஹதீஸுகளையும் இவர்கள் தலைகீழாக புரிந்தது போல் இதையும் தலைகீழாக புரிந்து உள்ளனர்.
 நபி (ஸல்) அவர்களை மக்கத்து காபிர்கள் கூட உண்மையாளர் என்றே அழைத்தார்கள். அவர் ஒரு நற்குண சீலராக சிறு வயதில் இருந்தே விளங்கினார்கள். என்பது அனைவரும் அறிந்ததே.

 இந்த ஹதீஸில் வரும் குதிரையை விற்றவன் நபி (ஸல்) அவர்கள் கொடுத்த காசை விட அதிகமாக காசு கிடைக்கும் என்று நபிகளாரை பொய்யர் ஆக்க முயன்றான்.

 "இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்" (33:6)

 நம்மை விட நபி (ஸல்) அவர்களை அதிகமாக நேசித்தவர்கள் தான் அந்த உத்தம தோழர்கள்.அந்த அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் நேசித்தார்கள்.

 நபி(ஸல்) அவர்களை பொய்யர் ஆக்க அவன் முயன்றால் சஹாபாக்கள் விடுவார்களா???

 ஆனால் நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் பொய் சொல்ல மாட்டார் என்பது சஹாபாக்களுக்கு தெரியும், 100% இற்கு 200% உறுதியாகவே இருந்தார்கள் அதனால் தான் குஸைமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை உண்மை படுத்துவதற்கு அங்கு வந்து அவ்வாறு சாட்சி சொன்னார்.
 ஒரு முஸ்லிம் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இப்படி தான் நடந்திருக்க வேண்டும்

 நபி (ஸல்) அவர்களை உண்மை படுத்துவதற்கு ஒரு உண்மையை எடுத்து வைத்தால் அது எப்படி பொய்யாகும்???

 அப்படியென்றால் உங்கள் வாதப் படி நபி (ஸல்) அவர்கள் பொய் சொன்னார்களா??? நபி (ஸல்) அவர்கள் பொய் சொன்னார்கள் என்று குஸைமா (ரலி) அவர்கள் சொல்லியிருந்தால் அது உங்கள் பார்வையில் ஷஹீஹ் ஆக ஆகி இருந்திருக்கும், அந்த வாதத்தை தான் வைக்க வருகிறார்களா???

 என் அன்பின் சகோதரர்களே!!!இது ஒரு வாதமா ???? யாரவது இப்படி ஒரு வாதம் வைத்து ஹதீஸுகளை தட்டி விடுவார்களா?? நான் தெரியாமல் கேட்கிறேன்???

 அல்லாஹு ரப்புல் ஆலமீன் இந்த tntj யினருக்கு நேர்வழி காட்ட அனைவரும் துஆ செய்யுங்கள்

No comments:

Post a Comment