Popular Posts

Tuesday 12 January 2016

‘தப்லீக் ஜமாத்’.

வெளிவந்தது.மக்கள் அவர்களை புறக்கணித்து,மஸ்ஜிதுகளை விட்டு விரட்டிஅடித்த போது,பல்வேறு இடங்களில் இவர்கள் கேவலப்படுத்தப்பட்டதற்கு பின்னால்,மௌலவி இஸ்மாயில் திஹ்லவியுடன் இருந்த ஒரு கூட்டம்,அவர்களும் மார்க்கம் பயின்ற ஆலிம்கள்,இந்த கொள்கையை இந்திய முஸ்லிகளும்,இந்திய இஸ்லாமிய உலமாக்களும் புறக்கணிக்கின்றனர், எனவே இந்த கொள்கையை தற்சமயத்திற்கு நாம் வெளிப்படையாக பேச வேண்டாம்,தற்போது இந்த விஷயங்களையெல்லாம் மறைவாக வைத்துக்கொள்வோம்,முதலில் மனிதர்களை நம் வசமாக ஈர்த்து அவர்களை நம் அபிமானத்திற்கு உரியவர்களாக திருப்பியதற்குப் பின்னால்,அவர்களிடம் மெல்ல,மெல்ல சன்னச்சன்னமாக தனிமையில் அவர்களுக்கு நாம் போதிப்போம் என்ற ஒரு கருத்து அவர்களுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட போது,அந்த கருத்தை அவர்களிலேயே சிலர் ஏற்க மறுத்தார்கள்.

 அவ்வாறு ஏற்க மறுத்தவர்கள் அவர்களில் இருந்து பிரிந்து டில்லியில் இருந்து வெளியேறி பஞ்சாபை நோக்கி செல்கிறது,அவர்கள் தான் நவாப் சித்திக் ஹசன் கான் பொபாலைச் சேர்ந்தவர்,காதி வஹீதுஸ்ஸமான் அமிர்தரஸை சேர்ந்தவர்.இவர்கள் வெளிப்பட்டு இதே வஹாபியக் கொள்கையை நாங்கள் பகிரங்கமாகத் தான் பேசுவோம்,பெசுவது சரிதான் என்று சொன்னால் அதை ஏன் மக்களிடத்தில் மறைத்து பெசவேண்டும் என்ற வாதத்தை முன் வைத்து பகிரங்கமாக பேசத் துவங்கினார்கள்,அது மட்டுமல்ல அவர்கள் தங்களுக்குத் தாங்களே ‘அஹ்லே ஹதீஸ்’ என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார்கள்.

 இந்த நிலையில் வஹாபிய கொள்கையை மறைத்து பேச வேண்டும் என்று பிரிந்த கூட்டம் செய்யத் அஹ்மத்,மௌலவி இஸ்மாயில் திஹ்லவி இவர்களோடு இன்னும் சிலர் சேருகின்றனர்.அவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு நபர் மௌலவி கலீல் அஹமத் அம்பேட்டி,மௌலவி காசிம் நானூத்வி,மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி. இதில் மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியும்,மௌலவி அஷ்ரஃப் அலி தானவியும் அல்லாமா முஹாஜிர் மக்கி ரஹ்மதுல்லாஹி அவர்களிடம் முரீதாகவும்,கலீஃபாக்களாகவும் இருந்தார்கள்.

 ரஷீத் அஹமத் கங்கோஹியிடம் பத்து ஆண்டுகள் வரை மார்க்க கல்வி பயின்ற ஒரு மாணவர் மௌலவி இல்யாஸ் வளர்ந்து வாலிபர் ஆனபொழுது,அவருடைய சிந்தனைக்குள் இருந்து, கற்பனைக்குள் இருந்து இதே வஹாபிய கொள்கைக்கு உரிய ஒரு இயக்கம் ஒருவாயிற்று. அந்த இயக்கத்திற்கு அவர்களால் வைக்கப்பட்ட பெயர் தான் ‘தப்லீக் ஜமாத்’

No comments:

Post a Comment