Popular Posts

Wednesday 6 January 2016

முஹம்மத் பின் அப்துல் வஹாப் நஜ்தி

'' தவ்ஹீத் பெயரில் வஹாபிகள்''
எச்சரிக்கை

 நபி ஸல் அவர்களின் தீர்க்க தரிசனத்தால் பிற்காலத்தில் நடக்கவுள்ள விபரீதங்கள் பற்றி விளக்கமாக முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள்.அவற்றில் சிலதை இங்கு எழுதுகின்றேன்.

 முற்காலத்தில் வாழ்ந்த ஸாலிஹான நல்லோர்களும் அதை அடுத்துள்ள காலத்திலுள்ள நல்லவர்களும்மரணித்து விடுவார்கள். இப்படியே படிப்படியாக “ஸாலிஹீன்“ நல்லவர்கள் சென்ற பின் (மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில்) தொலிக்கோதுமையின் சருகுகள் போன்ற அல்லது பேரீத்தம் பழச் சக்கைகள் போன்றகுப்பைகள்தான் எஞ்சியிருப்பர். (அவர்கள் தங்களைப் பற்றித் தாங்களே எல்லாம் அறிந்த மேதைகள் என்று சொல்லிக் கொள்வர்.) ஆனால் அல்லாஹ்“ அவர்களை கணக்கெடுக்கவே மாட்டான். என்று நபி ஸல் அவர்கள அருளினார்கள்.
 புஹாரி,பாகம் – 02,ஹதீஸ் இலக்கம் – 952
 பாடம் - கிதாபுர்ரிகாக்

 கடைசி காலத்தில அறிவும், தெளிவும், அனுபவமுதிர்ச்சியும் இல்லாத ஒரு கூட்டம் வருவார்கள். அவர்கள் நபி ஸல் அவர்களின்ஹதீஸில் இருந்தே ஆதாரம் எடுத்துப் பேசுவார்கள். ஆனால் அவர்களின் ஈமான் (உதட்டளவில்தான் இருக்குமேயன்றி) உள்ளத்தில் நுழைந்திருக்காது. மேலும் அவர்கள் புனித இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறி விடுவார்கள்.

 புஹாரி,ஹதீஸ் இலக்கம் – 3611,பாடம் – கிதாபுல்மனாகிப்
 முஸ்லிம், பாகம் – 01,பக்கம் – 342

 இந்த உம்மத்தில் பிற்காலத்தில் வாழும் மக்கள் முற்காலத்தில் வாழ்ந்தவர்களை நிந்திக்க – சபிக்க ஆரம்பித்தார்களானால் (கலியுகம் வந்துவிட்டதாக பொருள். ஆகவே) கியாமத் நாளை எதிர்பாருங்கள் என்று நபி ஸல் அவர்கள் அருளினார்கள்.
 மிஷ்காத்,பக்கம் – 470,ஹதீஸ் இலக்கம் – 5450
 திர்மிதீ,ஹதீஸ் இலக்கம் – 2211

 அன்புத்தம்பி!
 தற்காலத்தில் சமூகத்தைக் குழப்புகின்ற பல்வேறு இயக்கங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் நஜ்தியின் கொள்கைகளைப் பிரதிபலிப்பவைகளாகவே இருக்கின்றன. இவர் வழி தவறிய இப்னு தைமிய்யா, இவர் மாணவர் இப்னு கைய்யூம் ஆகியோரைப் பின்பற்றியதோடு தனது சொந்தக் கருத்துக்களையும் சேர்த்து ஒரு புது மார்க்கத்தை தோற்றுவித்தார்.
 முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் மதீனாவின் கிழக்குத்திசையிலுள்ள நஜ்த் மாகாணத்தின் வாதிபனிஹனிபா என்ற சிற்றூரில் ஹிஜ்ரி 1111அல்லது 1114இல் பிறந்து, ஹிஜ்ரி 1204இல் மரணித்தார். இவர் தந்தை அப்துல் வஹ்ஹாப் அப்பகுதியின் காழியாக விளங்கினார். இவர் சகோதரர் சுலைமான் என்பவர் மிகச் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார்.
 முஹம்மத் இப்னு அப்துல் வஹாபின் நடவடிக்கைகளை அவதானித்த தந்தை, சகோதரர், ஆசிரியர்கள், அறிஞர்கள் அனைவரும் இவர் தீய பாதையில் செல்வதாகவும் இவரின் பிரச்சாரத்தால் மக்கள் வழிதவறிச் செல்லும் ஆபத்து உண்டு என்றும் மக்களை எச்சரித்தனர். இவரின் வழி தவறிய கருத்துக்களுக்குத் தக்க விளக்கத்தை பல நூற்களின் மூலம் எழுதி வெளியிட்டனர். இவ்வாறு எழுதப்பட்டவைகளுள் இவரின் சகோதரரான சுலைமான் இப்னு அப்துல் வஹாப் எழுதிய “ஷவாஇக்குள் இலாஹிய்யா“ என்ற நூல் பிரசித்தி பெற்றதாகும்.
 அன்புத் தம்பி! முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் நஜ்தியின் குழப்பத்தை நிகர்த்த ஒரு பெரிய குழப்பம் இஸ்லாமிய வரலாற்றில் நடந்ததில்லை என்று அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். ஹஜ்ஜாஜ் இப்னு யூசுபை நீர் கேள்விப் பட்டிருப்பீர். 125,000 உயிர்களைக் கொன்று குவித்த பாஸிஸவாதி என்று சரித்திரம் அவனைப் பற்றி எழுதிவைத்துள்ளது. ஆனால்,
 முஹம்மத் பின் அப்துல் வஹாப் நஜ்தியுடன் சேர்ந்து இப்னு சுஊத் செய்த கொலைக் கலாச்சாரம் ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுபையும் மிஞ்சி விட்டதாக அப்போது புனித மக்கா, மதீனாவின் முப்தியாக விளங்கியவரும், பிரபல சரித்திர ஆசிரியரும், பல்துறை சார்ந்த பன்னூலாசிரியருமான இமாம் ஸைனி தஹ்லான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அத்துறறுஸ் ஸனிய்யா மற்றும் குலாசத்துல் கலாம் ஆகிய நூற்களில் எழுதியுள்ளார்கள்.
 வஹாபிகளின் கொடுமைகளைத் தாங்காதவர்கள் புனித ஹரத்தில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் கொடுங்கோலர்களான வஹாபிகள் புனித ஹரம் ஷரீப் என்றும் பார்க்காமல் உள்ளே புகுந்து உலமாக்கள், பெண்கள், சிறு குழந்தைகள் அனைவரையும் சரித்தனர். இத்தோடு இவர்களின் கொலைவெறி அடங்கவில்லை. தாயின் மார்பில் அமுதுண்டிருந்த பச்சிளம் பாலகரையும் பதைக்கப் பதைக்க பதம் பார்த்தனர். இந்தப் பாஸிஸவாதிகள் இவையனைத்தையும் மேற்படி ஹரத்தின் முப்தியாக இருந்த இமாம் ஸைனி தஹ்லான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மேற்படி நூலில் கண்ணீர் மல்க எழுதி வைத்துள்ளார்கள்.
 அன்புள்ள தம்பி!
 இப்படிப் பல்லாயிரக் கணக்கான உலமாக்களையும் மற்றும் உயிர்களையும் கொன்று குவித்து அவர்களின் ஜனாஸாவையும் குருதியையும் உரமாக்கி வளர்ந்ததுதான் இந்த வஹாபிசமாகும்.
 வஹாபிகளின் கொடுங்கோண்மை கட்டுக்கடங்காமல் சென்றபோது இவர்களை அடக்குவதற்கு எகிப்திலிருந்து மேலதிகப் படை அனுப்பப்பட்டது. இப்படை இவர்களை அடக்கி முஸ்லிம்களின் பகுதியிலிருந்து விரட்டியடித்தது. இவ்வாறு வஹ்ஹாபிகள் தோற்கடிக்கப்பட்டது முஸ்லிம்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என முஸ்லிம் உலகம் கருதியது.
 இதனை புகழ்பூத்த மார்க்கப் பேரறிஞர் அல்லாமா ஷாமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது மிகப் பிரசித்தி பெற்றதும் உலகம் பூராகவும் பாடநூலில் இடம்பெற்றதுமான றத்துல் முக்தார் பாகம் - 03, பக்கம் - 309இல் இவ்வாறு வரைந்துள்ளார்.
 வழி ததறிய கவாறிஜிகள் தற்காலத்தில் நஜ்திலிருந்து வெளிப்போந்த (இப்னு) அப்துல் வஹாபைப் பின்பற்றியவர்களைப் போன்றிருந்தனர். இவர் (வஹாபி)கள் ஹன்பலி மத்ஹபை பின்பற்றுவதாக கூறினர். ஆயினும் தாங்கள் மட்டும்தான் முஸ்லிம்கள். தங்களின் கொள்கைகளுக்கு மாற்றமானவர்கள் முஷ்ரிகுகள் என்று நம்பினர். இதனால் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரையும் அக்கொள்கை சார்ந்த உலமாக்களையும் கொன்றனர். அவர்களின் பலம் உடைக்கப்பட்டு அவர்களின் (கட்டுப்பாட்டு) பிரதேசங்களும் சீரழிக்கப்பட்டு முஸ்லிம் படைகளுக்கு ஹிஜ்ரி 1233இல் வெற்றி கிட்டும்வரை இது நடந்தது.
 உலகம் பூராகவும் பாடத்திட்டத்தில் இருக்கும் தப்ஸீர் ஸாவியின் பாகம் - 03, பக்கம் - 230இல் இப்படி விபரிக்கப்பட்டுள்ளது.
 அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்
 “நிச்சயமாக ஷைத்தான் உங்களின் விரோதியாக உள்ளான். எனவே நீங்களும் அவனை விரோதியாக எடுத்துக் கொள்ளுங்கள்“.
 இத்திருவசனம் கவாரிஜிகள் விடயத்தில் இறங்கியது என்று ஒரு கூற்று உள்ளது. இவர்கள் குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும் புரட்டுத் தனமான வலிந்துரைகள் செய்தனர். (தவறான கருத்துக்களால்) முஸ்லிம்களின் உடமைகளையும், உயிர்களையும் சூறையாடுவது ஹலால் என்றனர். இவர்களின் சிந்தனையை ஒத்த ஒரு கூட்டம் ஹிஜாஸ் மண்ணில் நம் கண் முன்னே தோன்றியுள்ளது. இக்கூட்டத்தை “வஹாபிகள்“ என்று கூறப்படுகிறது. அவர்கள் ஏதோ உண்மையைக் கூறுவதாகக் கூறுகின்றனர்.
 ஆனால், உண்மையில் அவர்கள் பொய்யானவர்கள். ஷைத்தான் அவர்களில் மேலாதிக்கம் செய்துள்ளான். அதனால் அல்லாஹ்வின் நினைவை விட்டும் அவர்களை மறக்கடிக்க வைத்துள்ளான். இவர்கள் ஷைத்தானின் கூட்டத்தினர். அறிக! நிச்சயமாக ஷைத்தானின் கூட்டத்தினர் கைசேதத்திற்குரியவர்கள்.
 தப்ஸீர் ஸாவி:பாகம் - 03, பக்கம் - 288
 உலகம் முழுவதும் பாடத்திட்டத்திலுள்ள மற்றுமொரு சட்டநூல் ஹாஷியத்துல் ஷர்வானி ஆகும். இந்நூல் பாகம்- 04, பக்கம் - 230இல் அவர்கள் கூறுவதையும் கேளுங்கள்.
 ஸஹாபாக்கள் நான்கு இமாம்கள் உள்ளிட்ட சட்ட அறிஞர்கள், சூபியாக்கள் போன்றோரின் சுவடு(நூற்)கள் போன்றதை அவர்கள்மீது சினம் கொண்டிருக்கும் பித்அத்துக் காரர்களான றாபிழிகள், வஹாபிகள் போன்றோருக்குக் கையளிப்பது ஹறாமாகும். இவர்கள், இவற்றைக் கிண்டல் செய்வது காபிர்கள் கிண்டல் செய்வதை விட கடுமையாக உள்ளது.
 ஆதாரம்:ஷர்வானி பாகம்- 04, பக்கம் - 230
 தேவ்பந்து மத்ரஸாவில் நீண்ட காலம் ஹதீதுப்பாடம் கற்றுக்கொடுத்தவரும், புகாரி ஷரீபுக்கு விளக்கம் எழுதியவருமான அன்வர் ஷாஹ்கஷ்மீரி என்பவர் இப்படி எழுதியுள்ளார்.
 “முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் நஜ்தி என்பவர் அறிவு குறைந்த ஓர் அற்பத்தனமான மனிதனாகும். இவர் (குப்ர் பத்வா) தீர்ப்பளிப்பதில் தீவிரமானவர். குப்ர் பற்றி சிந்தித்து தீர்ப்பளிப்பதாயின் அவர் ஷரீஅத்தை நன்கு கற்றுத் தேர்ந்தவராகவும், குப்ரியத்தின் வகைகளையும் அது உண்டாவதற்கான காரணங்களை நன்கு அறிந்தவராகவும் இருத்தல் வேண்டும். இத்தகுதி இல்லாத ஒருவர் இதில் இறங்குவது அறவே கூடாது,
 பைழுல் பாரி : பாகம் - 01, பக்கம் - 170
 அன்புத் தம்பி அப்துல்லாஹ்!
 நான் மேற்கூறியவைளை நன்கு சிந்தித்துப் படித்துப் பார்! சட்டம், தீர்ப்பு, ஹதீஸ், வரலாறு உள்ளிட்ட துறைகளில் துறைபோகக் கற்ற பேரறிஞர்கள் வஹாபிகளைப் பற்றி வழங்கிய தீர்ப்பை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்.
 வஹாபி ஒரு பாஸிஸ கொள்கைக்காரன்,அறிவு குறைந்த அற்பன், காபீர்களைவிடக் கொடியவன். என்று அவர்கள் அவனைக் குறித்துக் கூறியிருப்பதையும் சிந்தித்துப்பார். இவற்றைக் கூறியவர்கள் அவனின் அடாவடித்தனத்தை கண்முன்னே கண்டவர்கள், அனுபவித்தவர்கள் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்.
 கேடுகெட்ட காபீர்களை விட கொடிய சுபாவம் கொண்ட பாஸிஸவாதிகளான வஹாபிகளின் அடி வருடிகள்தான் நமது நாட்டில் தூய இஸ்லாம் போதிக்கப் புறப்பட்டிருக்கும் தௌஹீது ஜமாஅத்தினர் என்பதையும் முதலில் விளங்கிக் கொள்!
 வழி தவறிய வஹாபிகளினால் இஸ்லாம் ஒரு போதும் புனிதம் பெறப் போவதில்லை. முஸ்லிம்களுக்குள் பிரிவினையையும், பகைமை உணர்வையும் விதைத்து முஸ்லிம்கள் அதிகம் மதிக்கின்ற அறிஞர்களையும் அவர்களின் அரிய நூற்களையும் அவமதித்து, அவற்றினைப் பார்க்காது தடைவிதித்தும், முஸ்லிம்களின் அனைத்து விடையங்களிலும் சந்தேகங்களையும், சலனங்களையும் தோற்றுவித்து இஸ்லாத்தைப் புனிதப்படுத்துவதாக இவர்கள் கூறுவது எவ்வளவு கேவலமானது என்பதை உணர்ந்து பார்!
 அன்புத் தம்பி!
 உன்கடிதத்திற்கு சுருக்கமாக பதில் எழுதவே நினைத்தேன் கடிதம் நீண்டு விட்டது. ஆயினும் வஹாபிகள் பற்றிய இவ்விளக்கம் உனக்கு பெரும் தெளிவைக் கொடுத்திருக்கும். என்று நம்புகின்றேன். மற்றவை உன் மறுமடல் கண்டு.

2 comments:

  1. வரலாற்று ரீதியாக பார்த்தவரை இந்த பதிவு மிக மிக பொய்யான ஒன்று .

    ReplyDelete
  2. இந்த பதிவு ஒரு காழ்புணர்ச்சியாகவே இருக்கிறது வரலாற்று நிகழ்வுகள் போலியானவைகளாக உள்ளது .

    ReplyDelete