Popular Posts

Wednesday 6 January 2016

மௌலித் ஓதுவ‌தின் சிற‌ப்பும்... வ‌ஹ்ஹாபிக‌ளின் கிறுக்கும்...

                                          மௌலித் என்றால் என்ன ???????

(மௌலித்) என்ற அரபு வசனத்திற்கு தமிழ் மொழியில் ''பிறப்பு'' என்று பொருளாகும்...!



இஸ்லாமியர்களின் வழக்கில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின், இறை நேச‌ர்க‌ளின் பிறப்பு மற்றும் சிறப்புகளை கவிநடையில் புகழ்வதற்கு (மௌலித்) என்று கூறப்படும்..!



வ‌ஹ்ஹாபிச‌ ஏஜென்டுக‌ள் கூறுவ‌து போன்று ந‌பிக‌ளாரின் புக‌ழை க‌வி ந‌டையில் எடுத்தோதுவ‌தும்,அவ்லியாக்க‌ள் என‌ப்ப‌டும் இறை நேச‌ர்க‌ளின் புக‌ழை க‌வி ந‌டையில் எடுத்தோதுவ‌தும் ஸிர்க்கான‌ விடைய‌மோ,அல்லது குப்ரான‌ விடையமோ அல்ல‌...



 ந‌பிக‌ளாரின் கால‌த்திலும்,முன்னோர்க‌ளின் கால‌த்திலும் இது இட‌ம் பெற்று வ‌ந்த‌தே...



வ‌ஹ்ஹாபிய‌ வ‌ழி கேட்டின் த‌ந்தை அப்துள்ளாஹிப்னு அப்தில் வ‌ஹ்ஹாபின் ந‌ஜ்தீ என்ற‌ சைத்தானின் கொம்பு முளைத்த‌ கால‌த்தில் இருந்தே இது கூடாது என்றும்,ஸிர்க்கு என்றும் ம‌க்க‌ள் ம‌த்தியில் ப‌ர‌ப்ப‌ப்ப‌ட்ட‌து...



அவ‌ர்க‌ளின் த‌ரக‌ர்க‌ளே தேசிய‌ த‌வ்ஹீத் ஜ‌மாஅத்,பீ ஜெய்னுல் ஆப்தீனின் கூட்டம்,இன்னும் ப‌ல‌ வாஹ்ஹாபிய‌ ஏஜென்டுக‌லும் ஆகும்.இவ‌ர்க‌லும் இக் க‌ருத்தையே கூறி வ‌ருகின்ற‌ன‌ர்.



ஆனால் உண்மை இதோ.....



இந்த கண்ணியம் நிறைந்த அவர்களின் (மௌலித்) என்னும் புகழ் பாடுதல் சஹாபாக்களின் காலத்திலும் கண்ணியமாகவே... நடந்துள்ளது...!!!!!



இதை கீழ் வரும் ஆதாரங்கள் மூலம்அறிந்துகொள்ள முடியும்...!



பெருமானார் (ஸல்) புகழ் கூறும்...சஹாபாக்கள்...!



01.ஹஸ்ஸான் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுக்கு பள்ளிவாசல் ஒரு மிம்பரைஅமைத்துக் கொடுத்தார்கள்.அதிலே அவர்கள் ஏறி நின்றுஇறைதூதர் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களையே புகழ்வார்கள்.



அறிவிப்பாளர் :ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹாநூல் :திர்மிதி எண் :2773

******************************************



02.இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்."நபி(ஸல்) அவர்கள், 'கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை(அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு)உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னைஉயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான்அல்லாஹ்வின் அடியான் தான்.(அப்படி என்னைப் நீங்கள் புகழ நாடினால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும்' இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்'என்று கூறினார்கள்"என மிம்பரின் மீதிருந்தபடி உமர்(ரலி)சொல்ல கேட்டிருக்கிறேன்.



நூல்-(புகாரி-3445)

******************************************



03.பெருமானார் (ஸல்) அவர்கள்' வெண்மை நிறத்தவர்கள்...!அவர்களால் மழை வேண்டப்படும்....!அவர்கள் அனாதைகளுக்குப் புகலிடமாகவும்,,,விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார்கள்...!' என்றுஅபூ தாலிப் அவர்கள்,, நபி (ஸல்) அவர்களைபுகழ்ந்து பாடிய கவிதையை இப்னு உமர் (ரழி) அவர்கள் எடுத்தாள்பவராக இருந்தனர்.



அறிவிப்பு-அப்துல்லாஹ் இப்னு தீனார் (ரழி)நூல் : புஹாரி (1008)

******************************************



04.அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் ஓர் முறை உரை நிகழ்த்தும் போது'' நபி(ஸல்) அவர்களை பற்றி அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அவர்கள் இயற்றிய'' பின்வரும் கவிதையை எடுத்துக் கூறினார்கள்....!'எங்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருக்கின்றார்கள்....!ஃபஜ்ரு நேரம் வந்ததும்,,அல்லாஹ்வின் வேதத்தை அவர்கள் ஓதுகிறார்கள்..!நாங்கள் வழிகேட்டில் இருந்த பின் எங்களுக்குஅவர்கள் நேர்வழி காட்டினார்கள்...!அவர்கள் கூறியது நடந்தே தீரும்...!இதை எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன...!இணை வைப்பவர்கள் படுக்கையில்,,அழுந்திக் கிடக்கும்போது இறை தூதர் அவர்கள்,,படுக்கையிலிருந்து எழுந்து (இறையை)தொழுவார்கள்...!



அறிவிப்பு- ஹைஸம் இப்னு அபீ ஸினான் (ரழி)நூல் : புஹாரி-(1155)

******************************************



05.நபி (ஸல்) அவர்கள் (மிம்பரில் ஏறி நின்று) (தமது ''முபாரக்கான'' கையை மேலே நீட்டி)(அல்லாஹ் விடம்) மழையை வேண்டிப் பிரார்த்தித்தபோது...!அவர்களின் (திரு) முகத்தை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்..! அவர்கள் (மிம்பரில் இருந்து) கீழே இறங்குவதற்குள் ஒவ்வொரு கூரையிலிருந்தும் தண்ணீர் வழிந்தோடியது....!பெருமானார் (ஸல்) அவர்கள்' வெண்மை நிறத்தவர்கள்...!அவர்களால் மழை வேண்டப்படும்....!அவர்கள் அனாதைகளுக்குப் புகலிடமாகவும்,,,விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார்கள்...!என்றஅபூ தாலிபின் கவிதையை அப்பொழுது நான் நினைத்துக்கொள்வேன்.அறிவிப்பு-இப்னு உமர் (ரழி)



நூல்: புஹாரி(1009)

******************************************



06.நபி(ஸல்) அவர்கள் ''பனூ நளீர்'' குலத்தாரின் பேரீச்ச மரங்களைத் தீயிலிட்டுக் கொளுத்தியும் (இன்னும் பல மரங்களை) வெட்டியும்விட்டார்கள்...! இந்தப் பேரீச்சந் தோப்புகளுக்குத்தான்  'அல் புவைரா' என்று கூறுவார்கள்..! (நபி (ஸல்) அவர்களின் இந்த செயலை) குறிப்பிட்டு,,ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழி) அவர்கள்..''புவைராவின் நெருப்பு பரவிக் கொண்டிருக்க,அதை (அணைத்திட) எதுவும் செய்ய முடியாமல்,(இயலாமையுடன்) பார்த்துக் கொண்டிருப்பது, 'பனூ லுஅய்' குலத்து (குறைஷித்) தலைவர்களுக்கு எளிதாகிவிட்டது"என்று..(குறைஷித் தலைவர்களை பரிகாசம் செய்தும்'நபி (ஸல்) அவர்களை புகழ்ந்தும் ) கவிதை பாடினார்கள்..!



அறிவிப்பு- அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி)நூல்: புஹாரி-(2326)

******************************************



07.அபூ இஸ்ஹாக் ஸபீஈ(ரஹ்) கூறினார்கள்.பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்களிடம்'நபி(ஸல்) அவர்களின் முகம் (பிரகாசத்தில்) (வெட்டும்) வாளைப் போன்று இருந்ததா..?என்று... கேட்கப்பட்டது .அதற்கு அவர்கள்''இல்லை ஆனால் சந்திரனைப் போல(பிரகாசமாக) இருந்தது..!என்றார்கள்...!



நூல்: (புகாரி-3552.)

******************************************



08.அனஸ் (ரலி) அறிவித்தார்கள்.நபி(ஸல்) அவர்களின் உள்ளங்கையைவிட மென்மையான பட்டையோ,,,/தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை.நபி(ஸல்) அவர்களின் (உடல்) மணத்தை விடசுகந்தமான ஒரு நறுமணத்தை நான் நுகர்ந்ததேயில்லை.வேறுசில அறிவிப்புகளில் 'உடல் மணம்'என்பதற்கு பதிலாக 'வியர்வை' என்று இடம் பெற்றுள்ளது



.நூல் : (புகாரி-3561)

******************************************



09.அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்)அறிவித்தார்கள்..!கஅப் இப்னு மாலிக்(ரலி),தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கிவிட்டசமயத்தை (நினைந்து) பேசிய படி,''நான் அல்லாஹ்வின் திரு தூதருக்கு சலாம் சொன்னேன்.அவர்களின்(பொன்னிற) முகம் மகிழ்ச்சியால் மின்னிக் கொண்டிருந்தது.இறைத்தூதர்(ஸல்) மகிழ்ச்சியடைந்தால் அவர்களின் முகம் சந்திரனின் ஒரு துண்டைப் போல் பிரகாசமாகிவிடும்.நாங்கள் அதை வைத்து அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதைத் தெரிந்துகொள்வோம்"என்று கூறினார்கள்.



நூல் :(புகாரி-3556)

******************************************



10.எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன...!(01)-நான் முஹம்மது - புகழப்பட்டவர்...!(02)-அஹ்மத் - இறைவனை அதிகம் புகழ்பவர்..!(03)-மாஹீ - அழிப்பவர் ஆவேன்..!என் மூலமாக அல்லாஹ் இறை மறுப்பைஅழிக்கிறான்.(04)-ஹாஷிர் - ஒன்று திரட்டுபவர்...!மக்கள் எனக்குப் பின்னால் ஒன்றுதிரட்டப்படுவார்கள்.(05)-ஆகிப் -(நபிமார்களில்) இறுதியானவர்..!என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்கூறியதாக:ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி)அறிவித்தார்கள்.



நூல்; (புகாரி-4896.-3532.)

******************************************



11.இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தங்களுக்கு ஒரு சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டுக் கொண்டார்கள்.அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள்..'' சந்திரனை இரண்டு துண்டுகளாக(பிளந்து) காட்டினார்கள்''எந்த அளவிற்கென்றால்,மக்கா வாசிகள் அவ்விருதுண்டுகளுக்கிடையே 'ஹிரா'மலையைக் கண்டார்கள்.எனஅனஸ் இப்னு மாலிக்(ரலி)அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி)அறிவித்தார்கள்.



நூல்-(புகாரி- 3869. 3870. 3871 4865. 3868.)

******************************************



12.பராஉ (ரலி) அறிவித்தார்கள்.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகிய முகம் உடையவர்களாகவும்,,,,,,,,,அழகிய உருவ அமைப்பு உடையவர்களாகவும் இருந்தார்கள்.அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவிற்கு உயரமானவர்களாகவும் இல்லை; கட்டையானவர்களாகவும் இல்லை.



நூல்-புகாரி-(3549.)

******************************************



13.(என் தந்தை) அபூ ஜுஹைஃபா(ரலி)கூறினார்கள்.அந்த ஈட்டிக்கு அப்பால் பெண்கள் நடந்துசென்று கொண்டிருந்தார்கள்.மக்கள் அப்போது எழுந்து நபி(ஸல்)அவர்களின் இரண்டு கரங்களைப் பிடித்துஅவற்றால் தங்கள் முகங்களை வருடிக் கொள்ளலாயினர்...நான் நபி(ஸல்) அவர்களின் கரத்தை(கையை) எடுத்து என் முகத்தின் மீதுவைத்துக் கொண்டேன்....!அது பனிக் கட்டியை விடவும் குளிர்ச்சியானதாகவும் கஸ்தூரியை விடவும் நறுமணம்மிக்கதாகவும் இருந்தது.



நூல்-புகாரி-(3553.)

******************************************



14.அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்.நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும்அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர்.ஷுஅபா(ரஹ்) இதே போன்றதை \அறிவித்துவிட்டு,'நபி(ஸல்) அவர்கள் எதையாவது வெறுத்தால்,அது அவர்களின் முகத்தில் தெரிந்துவிடும்"என்று (அதிகப்படியாக)அறிவித்தார்கள்.



நூல்-புகாரி-(3562.)

******************************************



15.இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்.நபி(ஸல்) அவர்கள்(பள்ளிவாசலில் தூணாக இருந்த)ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியின்மீது சாய்ந்தபடிஉரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.(பிட் காலத்தில்) (மிம்பர்)உரைமேடையை அமைத்த பின்னால்அவர்கள் அதற்கு மாறிவிட்டார்கள்.எனவே,(நபி-ஸல்- அவர்கள் தன்னைப்பயன்படுத்தாததால் வருத்தப்பட்டு)அந்த மரம் ஏக்கத்துடன் முனகியது...!(சுபானல்லாஹ்) உடனே, நபி(ஸல்) அவர்கள் அதனிடம்சென்று (அதை அமைதிப்படுத்துவதற்காக)அதன் மீது தன் கையை வைத்து (பரிவுடன்)வருடிக் கொடுத்தார்கள்.மேலும், இரண்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் இதுஅறிவிக்கப்பட்டுள்ளது.



நூல்-புகாரி-( 3583.,3584,3585)

******************************************



16.மஸ்ஜிதுன் நபவியில் நபிகளாரும் ஸஹாபாக்களும் கூடியிருந்த சபையில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) அன்னவர்களை ஸுஆத் என்ற அழகிய மங்கைக்கு ஒப்பிட்டு கஃபு இப்னு ஸுஹைர் (ரழியல்லாஹு அன்ஹு) என்ற ஸஹாபிக் கவிஞர் பாடியபோது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) அன்னவர்கள் மகிழ்ச்சியால் தமது மேனியில் போட்டிருந்த போர்வையை எடுத்து அந்த சஹாபியின் மேல் போர்த்தி அத்துடன் ஒட்டகைகளையும் அன்பளிப்பாக வழங்கி கொளரவித்தார்கள்.



ஹாகிம் 3-578 , அகீததுஸ் ஸுன்னா 318

******************************************



17.அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் ஓர் முறைஉரை நிகழ்த்தும் போது'' நபி(ஸல்) அவர்களை பற்றிஅப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அவர்கள் இயற்றிய''பின்வரும் கவிதையை எடுத்துக் கூறினார்கள்....!'எங்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்இருக்கின்றார்கள்....!ஃபஜ்ரு நேரம் வந்ததும்,,அல்லாஹ்வின் வேதத்தை அவர்கள் ஓதுகிறார்கள்..!நாங்கள் வழிகேட்டில் இருந்த பின் எங்களுக்குஅவர்கள் நேர்வழி காட்டினார்கள்...!அவர்கள் கூறியது நடந்தே தீரும்...!இதை எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன...!இணை வைப்பவர்கள் படுக்கையில்,,அழுந்திக் கிடக்கும்போது இறை தூதர் அவர்கள்,,படுக்கையிலிருந்து எழுந்து (இறையை)தொழுவார்கள்...!



அறிவிப்பு- ஹைஸம் இப்னு அபீ ஸினான் (ரழி)Volume :1 Book :19 புஹாரி-(1155)

******************************************



18.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

நிச்சயமாகக் கவிதையிலும் ஞானம் (ஹிக்மத்) உண்டு.என உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார்கள்...!



Volume :6 Book :78 புஹாரி-(6145.)

******************************************



19.அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்இப்னி அவ்ஃப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்,,!ழூழூ(கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்அல் அன்சாரி(ரலி) அவர்கள்அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம்,'அபூ ஹுரைரா! இறைத்தூதர் சார்பாகபதிலடி கொடுப்பீராக.இறைவா! தூய ஆன்மா(ஜிபிரீல்) மூலம் ஹஸ்ஸானைவலுப்படுத்துவாயாக!என்று கூறியதை நீங்கள் செவியுற்றீர்கள் அல்லவா?'என்று விவரம் கேட்டார்கள்.அதற்கு அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள்.



Volume :6 Book :78 புஹாரி-(6152)

******************************************



இந்த‌ ஹ‌தீஸ்க‌லை அடிப்ப‌டையாக‌ கொண்டே மௌலிது எனும் புக‌ழ்பாட‌ல் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் என பிரபல இமாம்களான:



1.இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)

2.இமாம் ஸகாவி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)

3.இமாம் வஜூதின் பின் ஸைபானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)

4.இமாம் நாஸிருத்தீன் இப்னு ஷம்ஸுதீன் (ரஹ்மதுல்லாஹி அலைஹி)

5.இமாம் இப்னு இராக்கி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)

6.அக்ஷ்க்ஷெய்கு அப்துல் காதிர் இப்னு அஹ்மத் பல்பகீஹ் (இந்தோனேக்ஷிய ஷரிஅத் சபையின் முப்தி) (ரஹ்மதுல்லாஹி அலைஹி) ஆகியோரும், இன்னும் 

7.இமாம் இஸ்மாயில் ஹக்கீ பரூஸி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் “தப்ஸீர் ரூஹுல் பயானிலும்”

8.இமாம் இப்னு கஸீர் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் “அத்தாரிஹ் லிப்னி கஸீர்” என்ற நூலிலும்

9.இமாம் இப்னு திஹ்யா (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் “அத்தன்வீர் கபீ மௌலிதில் பஷீரிந் நதீர்” என்ற நூலிலும்

10.இமாம் முல்லா அலீ காரி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் “அல் மௌரிது பில் மௌலிது” என்ற நூலிலும்

11.இமாம் ஸம்ஸுதீன் இப்னு ஜஸரி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் “அர்புத் தஃரீபு பில் மௌலிதிஷ் ஷரீப்” என்ற நூலிலும்

12.எகிப்து அல் – அஸ்ஹர் பல்கலைக்கழக தப்ஸீர் பேராசிரியர் அல்லாமா அப்துல் ஹலீம் மஹ்மூத் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் “பதாவா அப்துல் ஹலீம் மஹ்மூத்” என்ற நூலிலும்என்ற நூற்களிலும் மார்க்கத்தீர்ப்பு (பத்வா) வழங்கியுள்ளார்கள்.



என‌வே வ‌ஹ்ஹாபிய‌ ஏஜென்டுக‌ள் ச‌வ்தி ரியாலின் மோக‌ம் க‌ருதி இதை நிறுத்த‌ முய‌ற்சி செய்கிறார்க‌ள்.



என‌வே சிந்த‌னையுல்ல ந‌ண்ப‌ர்க‌ளே சிந்தித்துப் பாருங்க‌ள். ந‌பிக‌ழை புக‌ழ்ந்து மௌலிது ஓதி புக‌ழ் பாடுங்க‌ள்.



அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும்யா-ரஹ்மதன்லில் ஆலமீன்..!

அல்..மதத் ''அப்லளுள் மக்லூகாத்''யா..ரசூலல்லாஹ்......!

அல்..மதத் ''அவ்வளுள் மௌஜூதாத்''யா..ஹபீபல்லாஹ்...!



அறிந்துகொள்ளுங்கள்...!இது போன்ற எத்தனையோசம்பவங்கள்...!நபி (ஸல்) அவர்களின்புகழ் கூறுதல்../..பாடுதல்(மௌலித்) பற்றி,,இருக்கின்றன...!அவற்றை இனி வரும்காலங்களில் பார்போம்..!இன்ஷா அல்லாஹ்...!



நபி (ஸல்) அவர்களைப் புகழ்வது''சிர்க்'' என்று சொல்லும் வஹ்ஹாபிகளே...!



நாங்கள் ஒரு போதும்நபி (ஸல்) அவர்களைகடவுள் என்று கூறவில்லை...!(இது தான் சிர்கு)ஆனால்,,,??இத்தனைநபித் தோழர்களும்நபி (ஸல்) அவர்களை புகழ்ந்துகூறுவதாலோ..////பாடுவதாலோ..இவர்கள் அனைவரும்''பித்அத்'' வாதிகளா..??????



வழி கெட்ட வஹ்ஹாபிகளைபின் பற்றி வாழும்அப்பாவி ஜீவன்களே..........!



இவர்கள் ''சிர்கு'' ''சிர்கு'' என்று கூறும்போதெல்லாம்...........நீங்கள்கிருக்கர்களைப் போல் தலைஆட்டினீர்களே ...???? இவைகளுக்கு இவர்கள் என்னபதில் தரப் போகின்றார்கள்..????வஹ்ஹாபிகளின் நிலை தான் என்ன..??? சிந்தித்துப் பாருங்கள்...!நபி புகழ் பாடுதல்நல்லமலே.....!இது இஸ்லாத்தில்ஆகுமானதே...!இதை சகாபாக்கள் தெளிவாகபுரிந்து செயல் பட்டார்கள்...!நாமும் நமது வருங்கால சந்ததியும்அல்லாஹ்வை மற்றும் அவனது தூதரைநேசித்து,சஹாபா பெருமக்கள்நபிகளார் ஸல்... அவர்களை புகழ்ந்ததைபோல புகழ்ந்துஈருலகிலும் வெற்றி பெறஅல்லாஹ் ஜல்.... அருள் புரிவானாக!

No comments:

Post a Comment