Popular Posts

Wednesday 6 January 2016

கப்ர் ஸியாரத் - அல்குர்ஆன் அல்ஹதீத் அடிப்டையில்

கப்ர் ஸியாரத் - அல்குர்ஆன் அல்ஹதீத் அடிப்டையில்

 ஆக்கம் - 'ஹகீகத்'


 ஸியாரத் பற்றி

 "எவர் என் கப்ரை தரிசிக்கிறாரோ அவருக்கு எனது ஷபாஅத் (பரிந்துரைப்பு) கடமையாகி விட்டது"

 (தாரகுத்னி பாகம் 2 பக்கம் 278 பைஹகீ 3/490) என்றும்

 "என்னை ஸியாரத் செய்வதற்கென்றே தயாராகி எவர் என்னை தரிசிக்கிறாரோ அவர் நாளை மறுமையில் என் அயலில் இருப்பார்"

 (மிஷ்காத் 240) என்றும் ஹதீஸ் வந்துள்ளது.

 இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு சில பெரியார்கள் ஹஜ்ஜுக்கு என்று ஆயத்தமாகி மக்கமா நகரம் செல்வது போன்றே புனித ஸியாரத்தை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு புனித மதீனாப் பயணம் மேற் கொண்டுள்ளார்கள் என்பதை வலிமார்களின் மற்றும் நல்லவர்களான ஸாலிஹீன்களின் வரலாறுகளில் காணமுடிகிறது.
 "எவர் ஹஜ்ஜு செய்து விட்டு என் வபாத்திற்குப் பிறகு என் கப்ரை ஸியாரத் செய்கின்றாரோ அவர் என்னை என் ஹயாத்திலேயே சந்தித்தவரைப் போன்றவராகிவிடுகிறார்" (மிஷ்காத் 241) என்று ஹதீஸ் வந்துள்ளதால் ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் பெருமானாரின் புனித ரவ்ழா ஷரீபை தரிசிக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.


 ஸியாரத்தின் முறைகளும் பலன்களும்

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மை ஸியாரத் செய்வதால் ஏற்படும் பலன்களை குறிப்பிட்டிருப்பது போன்றே பொது கப்ரிஸ்தானங்களுக்குச் சென்று தாங்கள் ஸியாரத் செய்து காட்டி அதன் முறைகளையும் விபரித்ததுடன் அதனால் ஏற்படும் பலாபலன்கள்களையும் நமக்கு எடுத்துக் கூறி இருக்கிறார்கள்.

 1."ஸியாரத்திற்குச் சென்றால், முஃமீன் முஸ்லிம்களில் நின்றும் வீட்டையுடையவர்களே, உங்கள்மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும். நிச்சயமாக நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களாக இருக்கிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்வின் சுகத்தைக் கேட்கிறோம் என்று கூற வேண்டும்" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபா பெருமக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

 (முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 154)

 2. "எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஸியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என்று எழுதப்படும்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

 (பைஹகீ, மிஷ்காத் பக்கம் 154)

 3. "கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அது இவ்வுலகத்தில் பற்றற்ற நிலையை உண்டாக்கி மறுவுலக வாழ்வைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்த வல்லது" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

 (இப்னு மாஜா 1569, மிஷ்காத் பக்கம் 154)

 4. "இவ்வுலகில் அதிகமான செல்வங்களைத் திரட்டி சுக போகமாக வாழ வேண்டுமென்ற எண்ணம் உங்களை வீணான விஷயங்களில் ஆழ்த்திவிட்டது. (அது எதுவரை என்றால்) நீங்கள் கப்ருகளை ஸியாரத் செய்கின்ற வரை"
 (அல்குர்ஆன் 102:1,2)

 அன்புச் சகோதரர்களே!

 மேற்கூறப்பட்ட குர்ஆன் ஆயத்தையும் ஹதீஸ்களையும் நன்றாக நோக்குங்கள். உலகப் பற்று நீங்கி இதயம் ஒளிமயமாவதற்கு சிறந்த சஞ்சீவிதான் ஸியாரத் என்பதை உணர்வீர்கள். இவ்வுலகப்பற்று என்பது மரணத்தையும் மறுமை வாழ்வையும் மறந்து இவ்வுலகையே நம்பி இம்மை இன்பத்திலேயே முழுமையாக ஈடுபட்டிருந்தலாகும். இது நீதி நேர்மை என்றெல்லாம் பாராது இவ்வுலக வாழ்வில் இன்பமாக பட்டம் பதவியுடன் வாழ்வதற்கும் செல்வமும் செல்வாக்கும் கடைப்பதற்கும் அடிப்டையாகிறது.

 "இவ்வுலகப் பற்று அனைத்து விதமான தவறுகளுக்கும் காரணமாக இருக்கிறது" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (பைஹகீ ஸாதுத் தாலிபீன் பக்கம் 22).

 வேறொரு அறிவிப்பில் ஈஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கூறியதாக வந்துள்ளது. (லுக்கதுத்துரர் பக்கம் 83)

 உலகப் பற்று என்ற வியாதி ஸியாரத்தின் மூலம் எப்படி நீங்கும் என்கிறீர்களா? நீங்கள் நேரடியாக மண்ணறைக்குச் சென்று ஸியாரத் செய்து அனுபவித்துப் பாருங்கள். ஸலாம் சொல்லுவதடன் மட்டும் நிறுத்திக்கொள்ளும் ஸியாரத்தாக இல்லாமல் சிந்தனைக் கண் கொண்டு ஸியாரத் செய்யுங்கள். சித்தம் தெளிவீர்கள். நேற்று நம்முடன் இருந்தவர் ஆடம்பரமாக இவ்வுலக வாழ்வை கழித்தவர் இதோ ஆறடி நிலத்துள் அடங்கிக் கிடக்கிறாரே, நம்முடைய கதியும் ஒரு நாளை இவ்வாறுதான் என நினைத்துப் பாருங்கள். சன்னம் சன்னமாக உலகப் பற்று மனதை விட்டு நீங்குவதை நீங்களே தெளிவாக உணர்ந்து கொள்வீர்கள்.

 நாதாக்கள் புனித தர்ஹா ஷரீபுக்குச் சென்று ஸியாரத் செய்யுங்கள். அவர்களின் சன்னிதியில் நடைப்பெறும் கணக்கில் அடங்காத கராமத்துக்களையும் அதிசயங்களையும் கண்ணுற்றுப் பாருங்கள். மரணத்திற்குப் பின்னும் அம்மகான்களுக்கு வல்லோன் வழங்கி இருக்கும் வல்லமையைக் கண்டு அதிசயப் படுவீர்கள். அவர்கள் தங்களின் இப்பூவுலக வாழ்வை எப்படியெல்லாம் வணக்க வழிபாட்டிலும் மார்க்க சேவையிலும் கழித்துள்ளார்கள் அவர்களின் தக்வாவும் நேர்மையும் தன்னலம் கருதா சேவையும் கண்டு கொள்வீர்கள்.

 படிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அவைகளைப் படிப்பினையாக எடுத்து படிப்படியாக செயலாக்கம் பண்ணிப்பாருங்கள். நாளடைவில் இறை நெருக்கம் பெற்ற நல்லடியாராக இறை அன்பிற்கு பாத்திரமான அல்லாஹ்வின் நேசராக ஆக அல்லாஹ் போதுமானவனாக இருக்கிறான். ஆமீன்.

 ஸியாரத் செய்வது இவ்வுலகப் பற்று என்ற மாசு நம் மனதிலிருந்து நீங்கி மாண்பாளர்களின் பட்டியலில் சேருவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது என்பதால் தான் ஆன்மீக பாதையில் வழிநடத்தும் சங்கைக்குரிய ஷைகுமார்கள் தங்களின் சிஷ்யர்களுக்கு ஸியாரத் செய்து வருமாறு உபதேசிப்பதுடன் அதில் அதிகப்படியான ஆர்வமூட்டுகிரார்கள்.


 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸியாரத் செய்துள்ளார்கள்

 1. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவிமார்களில் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் முறை வரும் பொழுதெல்லாம் நள்ளிரவின் கடைசிப் பகுதியில் (தஹஜ்ஜது நேரத்தில்) ஜன்னத்துல் பகீஉவுக்குச் சென்று அங்கு அடங்கியிருக்கக் கூடியவர்களுக்கு பிழை பொறுக்கத்தேடி விட்டு வரும் பழக்கத்தை கொண்டவர்களாக இருந்தார்கள்.

 (முஸ்லிம் ஷரீப் பாகம் 1 பக்கம் 313, மிஷ்காத் 154)

 2.நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தாயாரின் கப்ரை ஸியாரத் செய்தார்கள். மேலும் அவ்விடத்திலே அழுதார்கள். அவர்களின் அழுகையை பார்த்து சூழ இருந்த ஸஹாபா பெருமக்களும் கண்ணீர் சொறிந்தார்கள்.
 (முஸ்லிம் ஷரீப், மிஷ்காத் 154)

 3. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் ஷுஹதாக்களின் கப்ருகளை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் அபூ பக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் உஸ்மான் பின் அப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அப்படியே செய்பவர்களாக இருந்தார்கள்.
 (தபரானி பாகம் 3 பக்கம் 241 கிதாபுல் ஜனாஇஸ்)


 பெண்கள் கப்ரு ஸியாரத்துச் செய்யலாமா?

 ஸியாரத் செய்வதால் உலகப்பற்று ஒடுங்கி மறுமையின் நினைவு மேலோங்கும் என்றும் பெற்றோர்களை ஸியாரத் செய்வதால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நல்ல பிள்ளை என்ற பெயர் கிடைக்கும் என்றும் சுற்றத்தார்களை ஸியாரத் செய்வதால் அவர்களின் பிரார்த்தனைக்கு ஆளாகலாம் என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஸியாரத் செய்வதால் அவர்களின் ஷபாஅத்து கிடைக்கும் என்றும் சுவனபதியில் அவர்களின் பக்கத்தில் குடியிருக்கும் வாய்ப்பு அமையும் என்றெல்லாம் கூறி ஸியாரத்தின் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூறிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த பாக்கியம் அனைத்தும் ஆண்களுக்கு மட்டும் தான் கிடைக்கும் பெண்களாக இருந்தால் கிடைக்காது என்று வாசகமாகவோ சூசகமாகவோ சாடையாகவோ கூறியதாக எந்த ஹதீஸிலும் இடம் பெறவில்லை.

 ஆகவே பெண்களும் ஸியாரத் செய்து அதன் மூலம் கிடைக்கின்ற அனுகூலங்களைப் பெற மிகவும் அருகதை உள்ளவர்களாக இருக்கிறார்கள். பெண்கள் ஸியாரத் செய்வது முற்றிலும் தடையானது என்று இருக்குமானால் உம்முல் முஃமினீன் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஸியாரத்திற்கு சென்றிருக்கமாட்டார்கள். அது போன்றே அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் சென்றிருக்கமாட்டார்கள். ஸியாரத்திற்கு செல்லும் போது என்ன சொல்ல வேண்டும் என்று உம்முல் முஃமினீன் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்ட பொழுது ஆண்கள் மட்டும் தான் போக வேண்டும், பெண்கள் போகக் கூடாது என்று கூறித் தடுத்திருப்பார்கள். ஆனால் அப்படி ஒன்றும் நடந்ததாக ஹதீஸில் இல்லை. மாறாக ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்ழா ஷரீபை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள் (அஹ்மத், மிஷ்காத் பக்கம் 154) என்றும்


 மக்காவில் அடங்கப்பட்டிருக்கும் தன் சகோதரர் அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மக்காவுக்குச் சென்று ஸியாரத் செய்து வருபவர்களாக இருந்தார்கள் (முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் பாகம் 3 பக்கம் 5079, மிஷ்காத் பக்கம் 149) என்றும்

 ஸியாரத்திற்கு செல்லும் போது என்ன ஓத வேண்டும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து ஸியாரத்திற்கு முழு அனுமதி வழங்கி இருப்பதாகவும் (முஸ்லிம், மிஷ்காத் 154),

 அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஸியாரத் செய்து வந்ததாகவும் (முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் பாகம் 3 பக்கம் 572, முஸ்தத்ரக் பாகம் 1 பக்கம் 377) ஹதீஸ்கள் வந்துள்ளன.

 பெண்கள் பொறுமை குறைந்தவர்களாகவும் கடும் மனக்கலக்கம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதால் தான் பெண்கள் ஸியாரத் செய்வது மக்ரூஹ் என்று சில இமாம்கள் கூறுகிறார்கள் என்று (மிஷ்காத் பக்கம் 154 பாபுஸ் ஸியாரத்) தில் குறிபிடப்பட்டுள்ளது.


 பெண்கள் ஸியாரத்துச் செய்யும் முறை

 உம்முல் முஃமினீன் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்ழா ஷரீப் சென்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அபூ பக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் ஃபர்தா அணியாமலேயே ஸியாரத்துச் செய்பவர்களாக இருந்தார்கள். உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அதில் அடக்கம் செய்யப்பட்ட போது ஃபர்தா அணிந்தே (தன்னை முழுமையாக மறைத்தவர்களாக) ஸியாரத்துச் செய்பவர்களாக இருந்தார்கள். (மிஷ்காத் 154)

 ஸியாரத் செய்யும் போது கப்ரை முன்னோக்க வேண்டும்

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் உள்ள கப்ருகளுக்கு அருகே சென்றார்கள். அப்போது தாங்களின் திரு முகத்தைக் கொண்டு கப்ருவாசிகளின் மீது முன்னோக்கி ஸலாம் கூறினார்கள். (மிஷ்காத் பாகம் 2 பக்கம் 407 பாபு ஸியாரத்தில் குபூர்)

 கப்ரு ஸியாரத்திற்கு சென்றால் யாஸீன் ஓத வேண்டும்

 "எவராவது கப்ரு ஸ்தானங்களுக்குச் சென்று ஸூரத் யாசீன் ஓதினால் கப்ராளிகளைத் தொட்டும் வேதனை லேசாக்கப்படுகிறது. மேலும் அவருக்கு அந்த கப்ராளிகளின் எண்ணிக்கையளவுக்கு நன்மைகள் கிடைக்கின்றன" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மிர்காத் பாகம் 4 பக்கம் 382)

 பெற்றோர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக பிள்ளைகள் செய்ய வேண்டிய நன்மைகள்

 ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, "யாரசூலுல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பெற்றோர்கள் மரணித்த பின்பு அவர்களுக்காக பிள்ளைகளாகிய நாங்கள் செய்யவேண்டிய நன்மைகள் ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஆம், இருக்கிறது. அவர்களுக்காக தொழுது நன்மை சேர்த்தல், அவர்களுக்காக பிழைபொறுக்கத் தேடுதல், அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல், அவர்களின் சுற்றத்தினர்களுடன் சேர்ந்து நடந்துகொள்ளுதல், அவர்களின் தோழர்களுக்கு சங்கை செய்தல்" என்று கூறினார்கள். (அபூதாவூது, இப்னு மாஜா, மிஷ்காத் பக்கம் 420 பாபுல் பிர்ரி வஸ்ஸிலா)


 கப்ருகளை உதாசீனம் செய்யாதீர்கள்

 1. "கப்ருகள் மீது உட்காராதீர்கள்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 312)

 2. "உங்களில் ஒருவர் நெருப்பு கங்கின் மீது அமர்ந்து உடையும் உடலும் கரிந்து போவது ஒரு கப்ரின் மீது அமர்வதை விட சிறந்ததாகும்" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 312 கிதாபுல் ஜனாஇஸ்)

 3. நான் ஒரு கப்ரின் மீது சாய்ந்து கொண்டிருந்ததை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்தார்கள். அப்போது, "இந்த கப்ருடையவருக்கு நோவினை கொடுக்காதே" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மிஷ்காத் பக்கம் 149 பாபு தப்னில் மய்யித்தி)

 4. ஒரு மனிதன் ஸெய்யிதுனா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித கப்ரின் மீது அசிங்கப் படுத்திவிட்டான். உடனே பைத்தியம் பிடித்து நாய் ஊளையிடுவது போன்று ஊளையிட்டுக் கொண்டிருந்தான். சில தினங்களில் இறந்து விட்ட அவனின் கப்ரிலிருந்தும் ஊளைச் சத்தம் கேட்கப்பட்டது. (நூருல் அப்ஸார் பக்கம் 134)

 கப்ரு பிரகாசித்தது

 "நஜ்ஜாஷி மன்னர் இறந்த போது அவருடைய மண்ணறையின் மேல் ஒளியைப் பார்க்கப்படக்கூடியதாகவே இருக்கிறது என்று நாங்கள் பேசுபவர்களாக ஆகியிருந்தோம்" என்று உம்முல் முஃமினீன் அன்னை ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத் பாகம் 2 பக்கம் 16 கிதாபுல் ஜிஹாத்)


 மரணித்தவர்கள் பற்றி வாஹ்ஹாபிகள்

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் மற்றவர்களையும் ஸியாரத் செய்யவேண்டும் என்று ஆர்வம் ஊட்டுகின்ற ஹதீஸ்கள் அனேகம் இருந்தும் கூட நம்மில் சில (குதர்க்கக்) கொள்கையுடையவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் வபாத்தாகி அடக்கப்பட்டு சில காலத்திலேயே மண்ணோடு மண்ணாகி மக்கிப் போயிருப்பார்களே, அப்படியிருக்கையில் அவர்களை நாம் ஸியாரத் செய்வதும் அவர்கள் மீது ஸலவாத் ஓதுவதும் ஸலாம் கூறுவதும் அவர்களுக்கு எப்படித் தெரியும் என்று சந்தேகம் கொள்கிறார்கள். இப்படியெல்லாம் சந்தேகம் கொள்ளும் மக்கள் பிற்காலத்தில் வருவார்கள் என்பதை உணர்ந்த ஸஹாபா பெருமக்கள் நமது சார்பிலேயே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அந்த ஐயப்பாட்டை எடுத்து வைத்து அதற்குரிய விளக்கத்தையும் பெற்றுத் தந்துள்ளார்கள் என்பதை கீழ் வரும் நபி மொழிக் கருத்தின் மூலம் அறியலாம்.


 மரணித்த பின்பும் நபிமார்கள் உயிருடன் இருக்கிறார்கள்

 1. ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாப் பெருமக்களிடம், "வெள்ளிக்கிழமை மிகச் சிறந்த நாளாகும். ஆகவே அந்த நாளில் என் மீது அதிகம் ஸலவாத் ஓதுங்கள். நீங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் அனைத்தும் மலக்குகள் மூலம் என்னிடம் சமர்பிக்கப்படுகின்றன." என்றார்கள். அப்போது, "நாங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் தாங்களுடைய ஜீவியத்தில் எடுத்துக்காட்டப்படுவது போன்றே தாங்கள் மறைவுக்குப் பிறகும் (கப்ரிலும்) காட்டப்படுமா?" என்று சில ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஒருவர் என் மீது ஸலவாத் ஓதினால் அவர் ஓதி முடிக்கின்றவரை அவருடைய ஸலவாத்துக்கள் ஒன்றுவிடாமல் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகின்றன" என்று கூறியதுடன், "நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது" என்றும் கூறினார்கள். (அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, தாரமி, பைஹகீ, மிஷ்காத் பாகம் 120 பாபுல் ஜும்ஆ)

 2. "ரஸூல்மார்களும் நபிமார்களும் தாங்களின் கப்ரறைகளில் தொழுது கொண்டிருக்கிறார்கள்." என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் எண் 3089)

 3. "நான் நபிமார்களின் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். அந்நேரம் இப்ராஹீம் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்." என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 96 கிதாபுல் ஈமான்)

 4. "நான் மிஃராஜ் சென்ற இரவில் கதீபுல் அஹ்மர் என்ற இடத்தில் நல்லடக்கமாகி இருக்கின்ற மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் கப்ருக்கருகே சென்றேன். அப்போது அவர்கள் தமது கப்ருக்குள்ளே தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன்." என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 2 பக்கம் 268)

 இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த ஹதீஸுக்கு விளக்கம் கூறுகையில், "ஷுஹதாக்களே ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது என்று குர்ஆன் ஷரீப் கூறும் போது அவர்களைவிட பன் மடங்கு ஏற்புடையவர்களான நபிமார்கள் தாங்களுடைய கப்ருகளில் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்றும் தொழுகை ஹஜ் போன்ற கிரியைகளை நடத்தி வருகிறார்கள் என்றும் கூறுவது தூரமான ஒன்றல்ல." என்று கூறுகிறார்கள். (ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 94 அத்தஅம்முல் 251)

 மேலும் நபிமார்கள் இவ்வுலக வாழ்வை விட்டு மறைந்த பின்பும் ஜீவியத்துடன் இருந்து வருகிறார்கள் என்பதற்கு மிஃராஜ் இரவில் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நபிமார்களையும் சந்தித்தும் அவர்கள் அனைவருக்கும் இமாமாக நின்று தொழவைத்ததும் போதுமான ஆதாரமாகும்.


 நபிமார்களின் உடலை மண் அரிக்காது

 1. பைத்துல் முகத்தஸ் என்ற புனித பள்ளியின் கட்டுமானப் பணியை ஜின்கள் மூலம் செய்வித்துக் கொண்டிருந்த நபி சுலைமான் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் அதே நிலையில் மரணத்தைத் தழுவி ஓராண்டுக்குப் பின்னும் அவர்களின் உடம்பில் எவ்வித மாற்றமோ நாற்றமோ ஏற்படாமல் இருந்தது. (அல்குர்ஆன் 34:14)

 2. நிச்சயமாக நபிமார்கள் மேனிகளை மண் தின்னாது. சிங்கம் புலி போன்றவைகளும் சாப்பிடாது. (அல்கஸாஇஸூல் குப்ரா பாகம் 2 பக்கம் 280)

 3. ஹழ்ரத் உஜைர் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் மரணித்து நூறு வருடங்கள் வரை அப்படியே இருந்தார்கள். (அல்குர்ஆன் 2:259)

 4. ஹழ்ரத் யூனுஸ் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்களை மீன்விழுங்கிய பின்பும் சில காலம் வரை மீன் வயிற்றில் அப்படியே இருந்தார்கள். (அல்குர்ஆன் 37:142,143,144)

 5. அமீருல் முஃமினீன் ஸெய்யிதுனா உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சி காலத்தில் துஸ்தர் கோட்டை பிடிபட்டது. அங்கு ஹுர்முஜானுடைய இல்லத்தில் ஹழ்ரத் தானியால் அலைஹிஸ் ஸலாம் அவர்களது திரேகம் அழியாமல் வைக்கப்பெற்றிருந்த பெட்டகம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத்திரேகத்தில் உள்ள நரம்புகள் அனைத்தும் இரத்த ஓட்டம் உள்ளதாயிருந்ததுடன் அந்தச் சங்கையான சடலம் பல நூற்றாண்டுகளாக எவ்வித பேதமுமின்றி அப்படியே இருந்தது. (அல்பிதாயா வன்னிஹாயா பாகாம் 2 பக்கம் 41)


 ஷுஹதாக்கள் ஹயாத்துடன் இருக்கிறார்கள்

 அன்பியாக்கள் கப்ரில் ஹயாத்துடன் இருப்பது போன்றே இஸ்லாத்தின் எதிரிகளான காபிர்களுடன் போராடி அவர்களின் வாளால் வெட்டுண்டு ஷஹீதாகிய வீர தியாகிகளான ஷுஹதாக்களும் தங்களுடைய கப்ருகளில் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்று திரு மறையாம் குர்ஆன் ஷரீபில் தெள்ளத் தெளிவாக வருகிறது.

 இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:154)

 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் றப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (அல்குர்ஆன் 3:169)


 மரணத்திற்குப் பிறகும் இறை நேசர்கள் உயிருடன் இருக்கிறார்கள்

 இஸ்லாத்தின் வைரிகளான காபிர்களுடன் போராடி அவர்களின் வாட்களால் வெட்டப்பட்ட ஷஹீதுகள் கப்ரில் ஹயாத்துடன் இருப்பது போலவே தன் மனதுடன் போரிட்டு அதைவெட்டி வீழ்த்தி, "மரணத்திற்கு முன்பே மரணமாகிக் கொள்ளுங்கள்." (ஹத்யா ஷரீப் பக்கம் 38) மற்றும், "மரணத்திற்கு முன்பே தவ்பாச் செய்து கொள்ளுங்கள்." (இப்னு மாஜா 1081) என்ற நாயக வாக்குகளை மெய்ப்பித்து தம்மை இறைவனில் அழித்துக் கொண்ட அவ்லியாக்களும் கப்ருகளில் ஹயாத்தாக இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், "ஒருவனுக்கு அவன் நப்ஸுதான் பெரிய விரோதி" (நபஸுர் ரஹ்மான் பக்கம் 208) என்றும், "(அந்த) நப்ஸுடன் போராடுபவன்தான் உண்மையான வீரன்" (ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் எண் 9178, மிஷ்காத் பக்கம் 15) என்றும் கூறியதுடன் இதையே "ஜிஹாதுல் அக்பர் (பெரிய யுத்தம்)" என்றும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிலாகித்து சொல்லியிருக்கிறார்கள். (இஹ்யா - பாகம் 3 பக்கம் 7,66)

 போர் புரிந்து விட்டு யுத்த களத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த ஸஹாபாக்களைப் பார்த்து, "உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் உண்டாகட்டும், சிறிய போரிலிருந்து பெரிய போரின் பால் வந்து விட்டீர்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். "நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பெரிய போர் என்றால் என்ன?" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "மனதுடன் போரிடுவது தான் பெரிய போர்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கம் கூறினார்கள்.

 காபிர்களுடன் வாளேந்திப் போரிடுதல் என்ற சிறிய போரில் மரணித்து ஷஹீதானவர்கள் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்று கூறும்போது மனதுடன் போராடுதல் என்ற பெரியபோரில் ஷஹீதானவர்களான இறை நேசச் செம்மல்கள் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

 இறந்தும் இறக்காதவர்

 "தன் ஆண்டவனை தியானிப்பவருக்கு தியானிக்காமல் இருப்பவருக்கும் உதாரணமாகிறது உயிரோடு இருப்பவரையும் இறந்தவரையும் போலாகும்." என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (புகாரி ஷரீப் ஹதீஸ் எண் 6023)

 இறந்தவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள்

 ஸஹாபாப்பெருமக்களில் ஒருவர் ஒரு கப்ரின் மீது அது கப்ரு என்று அறியாமல் கூடாரம் அமைத்துவிட்டார். கப்ருக்குள் ஒரு மனிதர் ஸூரத்து முல்க் (தபாரக்கல்லதீ) ஒதிகொண்டிருக்கும் விஷயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அறிவித்த போது ஸூரத்துல் முல்க் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் மனிதனைக் காப்பாற்றக்கூடியது என்று கூறினார்கள். (திர்மிதீ, மிஷ்காத் பக்கம் 187)

 இறந்தவர்கள் வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள்

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ

No comments:

Post a Comment