Popular Posts

Wednesday 6 January 2016

வஹாபிகளை பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் முன் அறிவி

ஹுதைபா பின் யமானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறியதாக, நிச்சயமாக நான் ஒரு மனிதனை பற்றி அச்சப்படுகிறேன் அவர் தன்னுடைய முகம் பிரகாசிக்கும் அளவுக்கு குர்ஆனை அதிகமாக ஓதி இஸ்லாத்தை எடுத்துரைப்பார். அல்லாஹ்வின் நாட்டப்படி இது தொடரும்.எப்போது அவர்களை புறக்கணித்து அவர்கள் அனைவரையும் பிற்படுத்தி அவர் தன்னுடைய அயலவர்களை இணைவைப்பாளர்களாக குற்றம் சுமத்தி தன்னுடைய வாளால் தாக்குகின்றாரோ அப்போது அவரில் இருந்து இந்த பிரகாசம் பறிக்கப்படும்.

 பின்னர் ரசூல் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கேட்டார்கள், யாருக்கு இந்த குற்றச்சாட்டு பொருந்தும், குற்றம் சுமத்தியவருக்கா? குற்றச் சாட்டிற்கு உள்ளானவரா? அப்போது அவர்களே அதற்கு மொழியாக குற்றம் சுமத்தியவருக்கே இந்த குற்றச்சாட்டு பொருந்தும் என்றார்கள்.

 சஹிஹ் இப்னு ஹிப்பான்

No comments:

Post a Comment