Popular Posts

Wednesday 6 January 2016

கப்ருகளை "ஜியாரத்" செய்பவர்கள் கப்ரு வணங்கிகளா?

 - கப்ருகளை "ஜியாரத்" செய்பவர்கள் கப்ரு வணங்கிகளா?
 ****************************************************************************************
 கப்ருகளை நீங்கள்
 வணங்குங்கள்..!
 கப்ருகளை நீங்கள்
 "ஸஜ்தா" செய்யுங்கள்..!
 "அவ்லியாக்கள்"தான்
 உங்கள் கடவுள்கள்..!
 அல்லாஹ்வுக்கு எந்த
 சக்தியும் கிடையாது..!

 இப்படியெல்லாம்....
 எந்த ஒரு "முஃமினான"
 உலமாக்களோ..?///
 இமாம்களோ..?///
 நபிமார்களோ..?///
 இறைநேசர்களோ..?///
 எங்காவது கூறியுள்ளார்களா..???
 Or
 அல்லாஹ்தான் தனது அல்குர்ஆனில்...
 கூறியுள்ளானா..???
 இருந்தால் ஆதாரம் காட்ட
 முடியுமா..???
 கிடையவே கிடையாது..!
 ஆனால்....
 இப்படியான ஒரு செயலை
 எவன் செய்தாலும்...
 அவன் அல்லாஹ்வுக்கு...
 இணை வைத்த பாவியாகிவிடுவான்..!
 இது யாராலும் மறுக்க முடியாத
 உண்மையாகும்..!
 ஆனால்...!
 இப்படியான ஒரு
 "கீழ் தரமான" செயலை
 இறையச்சமுடைய ஒருவர்
 செய்கிறார்.. என.. அவர் மீது
 (அவதூறு) "வீன்பழி" சுமத்தினால்...
 அவ்வாறு சுமத்துபவனுக்கு
 அல்லாஹ்வின் தண்டனை
 எவ்வாறு இருக்கும்..?? என
 சற்று சிந்தித்துப் பாருங்கள்..!

 இதை தான் இன்றைய "முஸ்லிம்"
 சமூகத்தின் மீது...
 இந்த வழிகெட்ட வஹ்ஹாபிகள்
 சுமத்தி வருகின்றனர்..!!!
 100%

 கப்ருகளை "ஷியாரத்" செய்பவர்கள்
 "கப்ரு வணங்கி"களென்றால்..???
 நபிகள் நாயகம் { ﷺ } அன்னவர்கள்
 ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும்
 ஷுஹதாக்களின் கப்ருகளை
 ஸியாரத் செய்பவர்களாக
 இருந்தார்கள்..!
 மேலும் அபூபக்கர், உமர், உஸ்மான்
 (ரலியல்லாஹு அன்ஹுமா)
 ஆகியோரும்
 அப்படியே செய்பவர்களாக
 இருந்தார்கள்..!
 தபரானி 3 - 241

 { வழிகெட்ட வஹ்ஹாபிசகளே..!
 உங்களின் கூற்றுப்படி...
 நபிகள் நாயகம் { ﷺ } ,
 மேலும் அபூபக்கர், உமர், உஸ்மான்
 (ரலியல்லாஹு அன்ஹுமா) யார்..??? }

 l - ஹதீஸ் : அப்துல்லாஹ் இப்னு அபீ
 மலீக்கா ( (ரலியல்லாஹு அன்ஹு) ) அறிவிக்கிறார்கள ்.
 ஒரு நாள் ஆயிஷா நாயகி
 அவர்கள்
 கப்ருஸ்தானிலிருந்து வரும்
 போது எங்கே போய்விட்டு வருகிறீர்.!
 எனக் கேட்டேன்.
 அதற்கு எனது சகோதரர்
 அப்துர் ரஹ்மானை ஜியாரத்
 செய்துவிட்டு வருகிறேன் என்றார்.
 அதற்கு நான் நபிகள்
 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 பெண்கள்
 ஜியாரத்
 செய்வதை தடுக்கவில்லையா..?
 எனக் கேட்டேன்.
 ஆமாம் முன்பு தடுத்திருந்தார் கள்.
 பின்பு ஜியாரத்
 செய்யுமாறு உத்தரவிட்டார்கள ் என
 ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா ) பதில் கூறினார்கள் .
 (நூல் : பைஹகீ 7238)

 { வழிகெட்ட வஹ்ஹாபிசகளே..!
 உங்களின் கூற்றுப்படி...
 ஆயிஷா நாயகி ( (ரலியல்லாஹு அன்ஹா) )
 யார்..??? }

 காஸிம் ( (ரலியல்லாஹு அன்ஹு) ) அவர்கள்
 அறிவிக்கின்றார் கள்.
 நான் ஆயிஷா நாயகி அவர்களின்
 வீட்டுக்கு நான் சென்றேன்.
 நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ) அவர்களின் புனித
 கப்றையும் அவர்களின் தோழர்கள் இருவரின் கப்றுகளையும்
 திறந்து காட்டுமாறுகேட்டுக்கொண்டேன்.
 அவர்கள் எனக்கு மூன்று
 கப்றுகளையும் திறந்து
 காட்டினார்கள்.
 அவை அதிக
 உயரமாவையாகவு மிருக்கவில்லை,
 பூமியுடன் சமனானதாகவுமிருக்கவில்லை. - தாவூத் இப்னு சாலிஹ்ரஹ்மத்துல்லாஹி
 அறிவிக்கிறார்கள்.!
 ஒரு நாள்
 [மதீனாவின் ஆளுநராகிய] மர்வான்
 [இப்னு ஹகம்]
 ஒரு மனிதர்
 [ரஸுலுல்லாஹ் { ﷺ } அவர்களின்]
 கப்ரின் மீது தமது முகத்தை
 வைத்துக் கொண்டிருப்பதைக்
 கண்டதும்
 [அம்மனிதரிடம்] நீங்கள் என்ன செய்து
 கொண்டிருக்கிறீர்கள் என
 உங்களுக்கு தெரியுமா.??
 எனக்
 கேட்டார்.

 பின் மர்வான்
 அவரை நெருங்கியபோது அவர்
 [நபித்தோழரான] அபூ அய்யூப் அல்-
 அன்சாரி (ரலியல்லாஹு அன்ஹு) என
 தெரியவந்தது.
 அபூ அய்யூப் (ரலியல்லாஹு அன்ஹு)
 அவர்கள் [மர்வானிடம்]
 "ஆம். நான் ரஸுலுல்லாஹ் { ﷺ }
 அவர்களிடம் வந்தேன்
 ஒரு கல்லிடமல்ல ,
 ரஸுலுல்லாஹ் அவர் கள் உங்கள்
 மார்க்கத்தின் பாதுகாவலர் மார்க்க
 பற்றுள்ளவராக
 இருந்தால் உங்கள் மார்க்கத்திற்காக அழாதீர்கள், ஆனால் அவர்
 மார்க்கப்பற்றற் றவராக
 இருந்தால் அழுங்கள் என கூற நான்
 கேட்டுள்ளேன்"
 என [மர்வானுக்கு] பதிலளித்தார்கள்..!

 நூற்கள்: முஸ்னத் அஹமத், முஸ்தத்ரக்
 அல்-ஹாகிம், இமாம் தகியுத்தீன்
 சுப்கியின் ஷிபாஉஸ் ஸிகாம்

 { வழிகெட்ட வஹ்ஹாபிசகளே..!
 உங்களின் கூற்றுப்படி...
 [நபித்தோழரான] அபூ அய்யூப் அல்-
 அன்சாரி
 (ரலியல்லாஹு அன்ஹு) யார்..???

 ஹதீஸ் : ஹஜ்ரத் அலீ (ரலியல்லாஹு அன்ஹு)
 கூறுகிறார்கள்.
 அன்னை பாத்திமா நாயகியவர்கள்
 ஹம்ஷா (ரலியல்லாஹு அன்ஹு) வுடைய கப்ரை,
 ஒவ்வொரு வாரமும் ஜியாரத்
 செய்து விட்டு வருவார்கள். (நூல் :
 பைஹகீ 7239)

 { வழிகெட்ட வஹ்ஹாபிசகளே..!
 உங்களின் கூற்றுப்படி...
 அன்னை பாத்திமா ரழியல்லாஹு அன்ஹா
 யார்..??? }

 இமாம் ஷாஃபீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள்
 கூறுகிறார்கள்.
 நான் இமாம்
 அபூஹனீபா (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) வுடைய
 கப்ருக்கு ஜியாரத்துக்காக வருவேன்.
 அதன் மூலம் பரக்கத்
 பெற்றிருக்கிறேன ்.
 (நூல் : பதவா ஷாமீ)

 { வழிகெட்ட வஹ்ஹாபிசகளே..!
 உங்களின் கூற்றுப்படி...
 இமாம் ஷாஃபீ (ரஹ்)
 யார்..??? } ——

 Comments - ஈமான் கொண்ட முஃமீன்களே..!
 நம் இறைவன் ஒரே ஒருவனே..!
 அவன்தான் அல்லாஹ்..!
 அவனையே நாம் வணங்க வேண்டும்..!
 அவனை தவிர வேறு எந்த
 ஒருவராலும் ஒன்றும்
 செய்ய முடியாது..!
 நீயோ..? / நானோ..? / அவனோ..?/
 அவளோ..?
 இறைவனால் படைக்கப்பட்ட
 எதுவாக இருந்தாலும்
 அவற்றுக்கு சுயமான
 எந்த ஒரு சக்தியும்
 கிடையவே கிடையாது..!
 அவனன்றி ஓர் அனுவும்
 அசையாது..!
 இதுவே நமது ஈமான்..!
 அதே போல்
 தன் அடியார்களுக்கு...
 ஒரு உதவியை செய்ய நாடினால்..
 அதை அவன் எதன்
 மூலமாவது செய்வதற்கும்...
 சக்தி பெற்றவன்..!

 உயிருள்ள படைப்புகளைக் கொண்டு
 உதவி செய்பவனும் அவனே..!
 உயிரற்ற படைப்புகளைக் கொண்டு
 உதவி செய்பவனும் அவனே..!
 மரணித்தும்
 உயிர் வாழும்...
 அவனுடைய நபிமார்கள்...,
 வலீமார்கள்...,
 நல்லடியார்களை கொண்டு
 உதவி செய்பவனும் அவனே..!
 எல்லாம் அவனே..!
 இதுவே நமது ஈமான்.! —

No comments:

Post a Comment