Popular Posts

Wednesday 6 January 2016

மத்ஹப்கள் ஒரு விளக்கம்

Assalamu Alaikum wa rahmathullahi wabarakathuhu......

 மத்ஹப்கள் ஒரு விளக்கம் -

 இளைஞர்களுக்கான காலத்தின்
 முக்கியத்துவம் கருதி ஒரு பதிவு

 நான்கு மத்ஹப்களிலிருந்து விலகி
 பல கொள்கைகளில் தஞ்சமிட்டுள்ள
 இளைஞர்கள் மீண்டும் அவர்கள் உலக
 பாரம்பரிய மார்க்க வழிகளுக்கு
 திரும்ப வேண்டும் என்ற அன்பு
 வேண்டுகோளுடன் அல்லாஹ்வின்
 பெயரால் ஆரம்பிக்கிறேன்..

 சுமார் 800 ஆண்டு காலத்தில் 4 மத்ஹப்கள்
 தான் ,இதை தவிர வந்த கூட்டங்கள்
 தங்களை ஐந்தாவது மத்ஹப் என
 கூறிகொள்ளலாம், ஆனால் அதற்கான
 அங்கீகாரத்தை இறைவன் இன்று
 வரை யாருக்கும் அளிக்கவில்லை.

 இஸ்லாமிய வரலாற்றில் எத்தனையோ
 கூட்டங்கள் தோன்றி பல ஆட்டங்கள்
 ஆர்பாட்டங்களுக்கு பின் உருதெறியாமல்
 போனது.

 இறைவன் யாரை வழிகாட்டிகளாக
 தேர்தெடுத்தானோ அவர்களின் வழிகாட்டலில்
 மட்டும் தான் உலகம் பல நூற்றாண்டு காலங்களை
 கடந்து வந்து விட்டது மற்றுமின்றி
 இன்று வரை பலகோடிக்கணக்கான
 மக்கள் இந்த மத்ஹப்களை சார்ந்துள்ளனர்.

 நீங்கள் எத்தனையோ பொது கூட்டங்கள்
 போடலாம் ஊடகங்கள் மூலம் மத்ஹப்களை
 ஏசி பேசலாம் , ஆனால் மக்கள் இந்த நான்கு மத்ஹப்களை தாண்டிவர
 தயாராக இல்லை .

 ஒரு சிலர் விளக்கை பார்த்து பாயும்
 விட்டில் பூச்சியாய் அவர்களிடம்
 விழுகிறார்கள் அவர்களுக்கு சுடும்
 என்று தெரியவில்லை , சுடும் என்பதை அறியதான் இந்த மத்ஹப்
 சம்பந்தப்பட்ட விளக்கங்கள் எல்லாம் ....

 # சகாபக்கள் எந்த மத்ஹப் ?
 என்று
 கேலி நகையள்ளிார்கள் .

 சகாபாக்களிடம் மத்ஹப்கள் இல்லை
 என்று யார் சொன்னது.

 இந்த நான்கு மத்ஹப்கள் இல்லை
 ஆனால் அவர்களுக்கிடையே மத்ஹப்கள்
 இருந்தது .
 மத்ஹப்களின் அடிப்படை புரிய வேண்டும் ,

 # நபிஸல் அவர்கள் உயிரோடு
 இருந்த காலத்தில் சகாபாக்களுக்கு
 யாருடைய விளக்கமும் தேவைபடவில்லை.... நபிகளாரிடம் தங்களுக்கு தேவையான
 விளக்கங்களை கேட்டு தெரிந்து
 கொண்டார்கள் .

 # அதே காலத்திலேயே சகாபாக்கள்
 பல்கிபெருகிய பல இடங்களில்
 வாழ்ந்த போது ஆங்காங்கே ஒரு சகாபியை
 ஒரு இமாமாக சாதாரண பிற மக்கள் பின்பற்றினார்கள்.

 # சகாபாக்கள் காலத்தை எடுத்துக்கொண்டால்
 ஒட்டுமொத்த மக்காவும் இப்னு அப்பாஸ் (ரலி)
 அவர்களை பின்பற்றியதற்கு ஏறாளமான
 சான்றுகள் உள்ளது .

 # மதீனாவில் ஜைத் இப்னு தாபித்
 அவர்களிடம் எந்த சந்தேகமாக இருந்தாலும்
 கேட்டுகொள்வார்கள்.

 # அதேபோல் கூஃபாவில் அப்துல்லாஹ் இப்னு
 மஸ்வூத் (ரலி) அவர்கள் இருந்தார்கள்

 # பசராவில் ஹஜ்ரத் அனஸ் (ரலி)
 அவர்கள் இதெல்லாம் கூட கிட்டத்தட்ட
 மத்ஹப்கள் தான் .

 சாதாரண மக்கள் அறிந்த சகாபாக்களிடம்
 கேட்டனர்,

 பிறகு தாபியீன் காலம் அதேபோல்
 இமாம் என்ற நிலையில்

 # மக்காவில் அதா இப்னு ரவாஹா
 அவர்கள்

 # மதீனாவில் சயீத் (ரலி) அவர்கள்

 # கூஃபாவில் அல்லாமா இப்ராஹீம் இப்னு
 கலீ (ரஹ்) அவர்கள்

 # பசராவில் அல்லாமா ஹசன் பசரி (ரஹ்)
 அவர்கள் இப்படி காலத்ததொடரில்
 மக்கள் யாரிடமாவது கேட்டு மார்க்க
 விடங்களை பின்பற்றினார்கள்.

 # இதன்பிறகு ஹதீஸ் கலை இமாம்கள்
 வந்தனர் , ஹதீஸ்களை சேகரித்தனர்.
 ஹதீஸ்கள் நூல் வடிவம் பெற்றது

 # இமாம்கள் வந்தனர் மார்க்கம்
 சம்பந்தமான கேள்விகளை திரட்டினர்
 அதற்கான சட்டங்களை குர்ஆன் ,
 ஹதீஸ்கள் மூலம் எடுத்தனர்.
 இதனால் பிக்ஹ் எனும் மார்க்க
 சட்டங்கள் கிடைத்தது, அதன் மூலசட்டங்கள்
 (உசூலுல் பிக்ஹ்) கிடைத்தது ,

 # இதில் பலபேர் வந்தனர் கால
 ஓட்டத்தில் எந்த நான்கு பேரை
 தக்க வைக்க வேண்டும் என
 முடிவெடுத்தானோ அந்த இறையச்சத்தின்
 பாரம்பரியத்திற்கு சொந்தகாரர்களான
 4 இமாகளும், 4 மத்ஹப்களும் நிலை
 பெற்றன.

 வரலாறுகள் கூறுவது நோக்கம் அல்ல
 நாம் பின்பற்றும் மத்ஹப்களின் மீது
 பிடிமானம் வரவேண்டும் என்பதற்காக
 என்ற நோக்கம் தான் .

 # இவர்கள் யாரும் அறிவில்லாதவர்கள்
 அல்ல , அறிவிற்கு அற்பார்பட்ட
 விடயங்களை சட்டமாக கூறவில்லை .

 நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
 "முஸ்லீம்களின் பெரும் கூட்டம்
 ஒரு விஷயத்தை நல்லது என
 முடிவெடுக்குமானால் அது அல்லாஹ்விடமும்
 நல்லது"

 4 மத்ஹப்கள் அல்லாஹ்விடம்
 அங்கீகரிக்கப் பட்டது . அதனால் தான்
 பெரும்பான்மையான முஸ்லிம்கள்
 இதை பின்பற்றுகிறார்கள்.

 இந்த இஸ்லாத்தில் ஒரு விடயம்
 உள்ளது சில ஹதீஸ்களை காட்டினால்
 யாருடைய கவனத்தையும் திருப்பி விடலாம்
 என்பதால் குறிப்பாக இளைஞர்கள்
 வழி தவறுகிறார்கள் . சிலர் ஒரு
 மணிநேரம் தனியாக அழைத்து பேசினால்
 உடனே கொள்கைகளை மாற்றிகொள்கிறார்கள்.

 * இறுதியாக இந்த 25 ஆண்டுகளுக்குமுன்
 அமைதியாக இருந்த தமிழகம் மற்றும்
 இலங்கையில் நாம் நிறைய மாற்றங்களை
 சந்தித்து விட்டோம்

 இளைஞர்களே
 நிதானமாக யோசியுங்கள்!!!

 # எப்போதும் ஒருதரப்பை மட்டும்
 பார்க்காதீர்கள் இருபக்கமும் பாருங்கள்
 அப்போது தான் நீங்கள் நடுநிலையாக
 யோசிக்க முடியும் ...

 -நேர் வழி பெற அழைக்கின்றோம்.....

 என்றும் மார்க்க சேவையில்......
 உஸ்வத்துல் ஹஸனா மாணவர்ள் கூட்டமைப்பு

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அடுத்து முக்கியமான விடயம் என்னவென்றால் சிலர் நாங்கள் 'ஹனபி மத்ஹப் ' என்று கூறி கொண்டு 'இமாம் அபு ஹனிபா' முதலாவது இமாம் அல்லது 'இமாமுல் அக்பர்' என்று பெருமை அடிப்பார்கள் - இஸ்லாத்திற்கு எதிரான 'மத்ஹப்' வெறியுடன்.

    இப்படி கூறுபவர்கள் உணராத விடயம் ஒன்றுண்டு.

    அது என்னவென்றால், சஹீஹான ஹதீஸ்களை மறுக்காத எவரும் 'இமாம் ஷாபியை' தான் பின்பற்றுகின்றனர் என்பதுதான் அந்த உண்மை.

    காரணம் ஹதீஸ் கலை மற்றும் அதன் தொகுக்கும் சட்டதிட்டங்களை வரைமுறை செய்ததே இமாம் ஷாபி தான்.

    இதனால் தான் பெரும்பாலான ஹதீஸ் தொகுப்பாளர்கள் இமாம் ஷாபியை தாங்கள் பின்பற்றுவதாக கூறிக்கொண்டு பதிவும் செய்துள்ளனர்.

    இந்நிலையில் சஹீஹான ஹதீஸ்களை பின்பற்றும் எவரையும் 'ஷாபி மத்ஹப் ' என்று கூற வேண்டுமல்லவா?

    இப்போது புரிகிறதா - மத்கபுகள் பொய் என்பது?

    ReplyDelete