Popular Posts

Wednesday 6 January 2016

ஷபாஅத்

ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 எனது கப்ரை தரிசித்தவனுக்கு எனது “ஷபாஅத்” (பரிந்துரை) கடமையாகிவிட்டது.

 நூல் - தாரகுத்னி, பைஹகீயின் ஷுபுல் ஈமான், ஷெய்குல் இஸ்லாம் ஸுப்கியின் ஷிபாஉஸ் ஸிகாம்,

 இதே ஹதீத் பல்வேறு அறிவிப்பாளர் தொடர்களினூடக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஹதீது ஸஹீஹ் அல்லது ஹஸன் என கூறியோர்:

 ► ஹாபிழ் அப்துல் ஹக் இஷ்பீலீ தமது அஹ்காமில்,
 ► அலீ இப்னு ஸகன் "ஸுனனுஸ் ஸிஹாஹ்" வில்,
 ► ஷெய்குல் இஸ்லாம் ஸுப்கி தமது ஷிபாஉஸ் ஸிகாமில் இந்த ஹதீதின் மொத்த ஸனதையும் கருத்தில் கொண்டு
 ► மேலுள்ள தகவல்களை அல்லாமா ஷவ்கானி தமது நய்ல் அல்-அவ்தாரிலும் இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் தமது தல்கீஸிலும் குறிப்பிடுகின்றனர்
 ► இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமீ தமது ஜவ்ஹர் அல்-முனழ்ழமில்
 ► இமாம் ஸஹாவீ மற்றும் இமாம் தஹபி ஆகியோர் அறிவிப்பாளர் தொடர்கள் அனைத்தும் பலவீனமானமானவை என்றும் அனால் அவை எந்தவொரு பொய்யர்களையும் கொண்டிராததால், அவை ஒன்றையொன்று பலப்படுத்துகின்றன என்றும் கூறுகின்றனர். (மகாஸித் அல்-ஹஸனா லிஸ்ஸஹாவீ)

 அலி (ரழி) அவர்கள் இராக்கில் இருக்கும்போது ஷாம் நாட்டு மக்களைப்பற்றி அவரிடம் கூறப்பட்டது. (அவ்வாறு கூறியவர்கள் அலீ அவர்களிடம்) "அவர்களை சபியுங்கள் அமீருல் மூமினீனே!" எனக் கூறினார்கள். அதற்கு அலி (ரழி) அவர்கள் " இல்லை. ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள்:
 "அப்தால்கள் ஷாம் நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் நாற்பது பேர்களாகும். அவர்களில் ஒருவர் மரணிப்பார்களேயானால் மற்றொருவர் அவர் இடத்தில் நியமனம் செய்யப்படுகிறார். அவர்களின் பொருட்டினாலேயே மழை பொழிகிறது என்றும், அவர்களின் பொருட்டினாலேயே விரோதிகளிடமிருந்து வெற்றி கிடைக்கிறது என்றும் அவர்களினால்தான் ஷாம் நாட்டு மக்களுக்கு வேதனை இறங்காமலிருக்கிறது" என்று கூற நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.

 நூல் - முஸ்னத் அஹ்மத், முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்

 ► இமாம் ஹாபிழ் ஸுயூத்தி ஜாமியுல் அஹாதீதில் அஹ்மதின் அறிவிப்பு ஸஹீஹ் என்று கூறியுள்ளார்
 ► இமாம் ஹாபிழ் ஹைதமீ அவர்கள் மஜ்மஉஸ் ஸவாயிதில் அஹ்மதின் அறிவிப்பாளர்களில் ஷரீஹ் இப்னு உபைத் நம்பிக்கையானவர் என்றும் மற்றவர்கள் ஸஹீஹானவர்கள் என்றும் கூறியுள்ளார். (அதாவது ஹதீத் ஸஹீஹ்)
 ► இமாம் ஹாபிழ் பூசய்ரீ இத்ஹாபுல் ஹைரத்தில் இந்த ஹதீதின் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என கூறியுள்ளார்.

 ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وعلى آله وسلم) அவர்கள் கூறினார்கள்:
 "ஒரு மனிதருடைய ஷபாஅத்தைக் கொண்டு பனூ தமீம் கோத்திரத்தில் உள்ளவர்களை விட அதிகளவானவர்கள் சுவர்க்கம் புகுவார்கள்". அதற்கு ஸஹாபக்கள் "உங்களைத்தவிரவா (வேறொருவரைக் கொண்டா) யா ரஸுலுல்லாஹ்?" எனக் கேட்டனர். அதற்கு ரஸுலுல்லாஹ் "(ஆம்) என்னைத்தவர (வேறொருவரைக் கொண்டே)" எனக் கூறினார்.

 நூல் - ஜாமிஉ திர்மிதீ (ஹஸன் ஸஹீஹ் ஹரீப்), முஸ்தத்ரக் அல்-ஹாகிம் (ஸஹீஹ்).

 ஹாகிமின் அறிவிப்பில் ஷபாஅத்துச் செய்யும் அம்மனிதர் உவைஸ் அல்-கர்ணி என கூறப்படுகிறது

No comments:

Post a Comment