Popular Posts

Tuesday 6 December 2016

நாயகமே_ﷺ_நீங்கள்_எனக்கு_உதவிட_வேண்டும்_என்று_சத்தியம்_செய்கிறேன்_என்று_சொல்லலாமா

#நாயகமே_ﷺ_நீங்கள்_எனக்கு_உதவிட_வேண்டும்_என்று_சத்தியம்_செய்கிறேன்_என்று_சொல்லலாமா?  _________________________________

மௌலித் & மீலாது நபி விழா குற்றச்சாட்டு - தொடர் (29) __________________________________

*♣ 'நாயகமே! யாரஸூலல்லாஹ்! ﷺ நீங்கள் எனக்கு உதவிட வேண்டும் என்று உங்களிடத்தில் நான் சத்தியம் செய்கிறேன்’ என்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?*

"சத்தியம் செய்பவர் யாராக இருந்தாலும் அவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்ய வேண்டும். அல்லது வாய் பொத்தி இருக்க வேண்டும். அல்லாஹ் அல்லாத மற்ற எவர் மீதோ சத்தியம் செய்வது கூடாது. அல்லாஹ் அல்லாதவர்களைக் கொண்டு ஒருவர் சத்தியம் செய்தால் அவர் ஷிர்க் இணை வைத்தவராகி விட்டார்" என்று நபியே கூறி இருக்கும் பொழுது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீது சத்தியம் செய்து இணைவைப்பின் பக்கம் மக்களை அலைகிறார்கள் என்று வழிகெட்ட வஹாபிகள் விமர்சனம் செய்வார்கள். அந்த அடிப்படையில் ஒரு விடையத்துக்காக நாம் சத்தியம் செய்வதாக இருந்தால் அது நமது நிலையை உறுதிப்படுத்துவதற்காகவும் நம் கருத்துக்களின் அல்லது செயலின் உண்மை நிலையினை ஊண்றி நிலைநிறுத்துவதற்காகவும் சத்தியம் செய்கிறோம்.

உதாரணமாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் விபச்சாரத்தினை நெருங்கமாட்டேன் மேற்படிபோன்ற சத்தியம் அல்லாஹ்வின் மீதுதான் செய்யப்பட வேண்டும். இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மௌலிதில் இப்படி தன்னிலையை உறுதிப்படுத்த சத்தியம் செய்யப்பட்டிருக்கிறதா? இல்லவே இல்லை. மாறாக நாயகமே யா றஸூலல்லாஹ்! நீங்கள் எனக்கு உதவிட வேண்டும் என்று உங்களிடத்தில் சத்தியம் செய்கின்றேன் என்பதாக பாடப்பட்டிருக்கிறது. அதாவது எனக்கு நீங்கள் கண்டிப்பாக உதவிட வேண்டும் நாயகமே என்று பெருமனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் உரிமையுடன் கேட்பதாக அற்புதமாக அமைந்திருக்கிறது!

அதற்காகவே நாயகத்தின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நீங்கள் எனக்கு உதவிட வேண்டும் என்று உங்களிடத்தில் சத்தியம் செய்யும் வகையில் வார்த்தைப் பிரயோகம் இங்கு பிரயோகிக்கப்பட்டிருக்கிறது! இதனை புரிந்துகொள்ள பெரியளவிலான அறிவு தேவையில்லை.சாதாரணமாக எல்லோரும் புரிந்து கொள்ளலாம் நபிகள் நாயகத்தின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதவி வேண்டும் என்பதற்காக இங்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சத்தியம் செய்யப்பட்டிருக்கிறதே தவிர நான் இதை செய்வேன் இதை செய்யமாட்டேன் என்று தன்னிலையை உறுதிப்படுத்த சத்தியம் செய்யப்படவில்லை என்பதை புரிந்துகொண்டால் இதில் எந்த ஷிர்க்கோ தவறோ வரமுடியாது.​

எனவே இவ்வரிகள் பிறவற்றின் மீது சத்தியம் செய்யத் தடை என்ற வகைக்குள் கட்டுப்பட்டதல்ல அந்த ஹதீதுகளுக்கும் இந்த மௌலிது வரிகள் ஒருபோதும் முரண்படாது! றஸூல் நாயகத்தின் மஹப்பத்தையும் உதவியையும் வேண்டி எனது நாயகம் என்ற உரிமையில் கவி வடிவில் தன் ஏக்கம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்காகவே சத்தியம் என்ற சொல் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ​கவிநடையில் மஹப்பத்தையும்
நெருக்கத்தையும் காட்ட சொல்லப்பட்ட ஒன்றை இலக்கிய அறிவும் இலக்கண அறிவும் இல்லாது நேரடியாக விளங்கி குதர்க்கம் விளைவிப்பது வழிகெட்ட வஹ்ஹாபிகளின் முட்டால்தனத்தையே காட்டுகின்றது

எனவே நல்ல முறையில் தெளிவாக சிந்தனயோடு நோக்கினால் இதன் தாற்பரியம் புரிய வாய்ப்புண்டு! அப்போதும் கூட புரியவில்லை என்றால் அது அல்லாஹ்வின் நாட்டம்! நாம் ஒன்றும் செய்யமுடியாது! (நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள். ( திருக்குர்ஆன் 15:72) இதில் அல்லாஹ் தெளிவாக நமக்கு விளக்கி கொடுக்கின்றான், குர் ஆனிலிருந்து பெறப்பட்ட வார்த்தைத்தான் ஸுப்ஹான் மவ்லிதில் இடம் பெற்றுள்ளது தவிர. சுயமாக யாரும் கூறவில்லை, திரு குர் ஆன் வசனம் கூட தெரியாமல் ஸுப்ஹான மவ்லித்தில் தவறு இருக்கிறது என்று கூறுவது உங்கள் தவறு. குர் ஆனுக்கும், ஹதிஸிற்கும் மாற்றமாக யாரும் கூறவில்லை.​

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

No comments:

Post a Comment