Popular Posts

Wednesday 7 December 2016

றஹ்மத்_என்றால்_என்ன

*றஹ்மத்_என்றால்_என்ன?*

♣ உங்களை உலகத்தாருக்கு ஒரு ‘றஹ்மத்’ அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை. (திருக்குர்ஆன் 21;107)

​இத்திரு வசனத்தை உரிய முறையில்
ஆராய்ந்தால் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கால் நகம் முதற் கொண்டு தலைமுடிவரையுள்ள சகல உறுப்புக்களிலும் ‘பறகத்’ அருள் உண்டென்பது தெளிவாக விளங்கும். மேலே கூறிய திரு வசனத்தில் ‘உங்களை அருளாக அனுப்பியுள்ளோம்’ என்றுதான் அல்லாஹ் கூறியிருகின்றானேயல்லாமல் உங்களில் அருள் இருக்கிறதென்றோ உங்களுடைய கையில் அருள் இருக்கிறது என்றோ அவன் கூறவில்லை. ​​

‘உங்களை’ என்று அல்லாஹ் முன்னிலைப்படுத்தியது நபிகள் நாயகம்
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையேயன்றி அவர்களின் கையை மட்டுமோ அல்லது காலை மட்டுமோ அல்ல. ‘உங்களை’ என்ற சொல் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை முழுமையாக குறிக்கின்றதேயல்லாமல் அவர்களின் ஒரு சில உறுப்புக்களை மட்டுமோ பாதி உடலை மட்டுமோ குறிக்காது.

எனவே “உங்களை றஹ்மத்தாக அனுப்பினோம்’ என்ற இறை வசனத்தின் அர்த்தம் நீங்கள் முழுமையாகவே உலகத்தாருக்கு றஹ்மத்தாக இருக்கின்றீர்கள் என்தேயாகும். இந்த விபரத்தின்படி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலையுச்சியில் இருந்து உள்ளங்கால் வரையிலான சகல உறுப்புக்ளையும் ஒன்று சேர்த்துக் கொண்ட உடலையே “உங்களை” என்றசொல் குறிப்பதால் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சகல உறுப்புக்களிலும் பறகத்தும், றஹ்மத்தும் உண்டென்பது தெளிவாகிவிட்டது.​​

No comments:

Post a Comment