Popular Posts

Thursday 1 December 2016

#மாநபியின்_ﷺ_மீலாது_அன்று_கவலை_கொண்டு_துக்கம்_அனுஷ்டிப்பதா_அல்லது_சந்தோஷம்_கொள்வதா

#மாநபியின்_ﷺ_மீலாது_அன்று_கவலை_கொண்டு_துக்கம்_அனுஷ்டிப்பதா_அல்லது_சந்தோஷம்_கொள்வதா?
__________________________________

மௌலித் & மீலாது நபி விழா குற்றச்சாட்டு - தொடர் (15) __________________________________

♣ மாநபியின் மீலாது அன்று (மறைந்த நாளை) நினைத்து கவலை கொள்வதா? அல்லது (பிறந்த நாளை)நினைத்து சந்தோஷம் கொள்வதா?

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினத்தில் தான் இவ்வுலகை விட்டு மறைந்தார்கள் என்ற வகையில் அன்றைய தினம் துக்கம் அனுஷ்டிக்க வேண்டிய நாளா? அல்லது அதே தினத்தில் தான் இவ்வுலகில் பிறந்தார்கள் என்ற வகையில் அன்றைய தினம் மகிழ்ச்சிக்குறிய நாளாகவும் இருக்கின்றது. எனவே குறிப்பிட்ட ஒரே தினத்தில் மகிழ்ச்சியைக் காட்டுவதுதான் ஏற்றம் மிகச் சிறந்தது துக்கம் அனுஷ்டிப்பது சாத்தியமான ஒன்றாகும் எனவே ஒருவர் சிக்கலான இரண்டு காரியங்களைக் கொண்டு சோதிக்கப்பட்டு விட்டால் அவ்விரண்டில் இலகுவானத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் இரண்டு காரியங்களிடையே இஷ்டம் கொடுக்கப்பட்டால் அவ்விரண்டில் இலேசானதையே தேர்ந்தெடுப்பார்கள் என்று ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்
(நூல்கள் புகாரி 3560, முஸ்லிம் 2327, அபூதாவுத் 4785,மிஷ்காத் 5817)

♦ எனது ஹயாத்தும் உங்களுக்கு நன்மையானது எனது மரணமும் உங்களுக்கு நன்மையானது ஏனெனில் உங்களுக்குடைய அமல்களை என்மீது எடுத்துக் காட்டப்படுகிறது அது நன்மையானதாக இருந்தால் அல்லாஹ்வைப் புகழ்வேன் தீமையானதாக இருந்தால் உங்களுக்கு பிழை பொறுக்கத் தேடுவேன் என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (நூல் மஜ்மவுஸ்ஸவாயித் பாகம் 9 பக்கம் 24,அல்மிர்ஆத் பாகம் 4 பக்கம் 581)

♦ அல்லாஹ் ஒரு சமூதாயத்திற்கு நன்மையை நாடினால் அந்த சமூகத்தின் நபியை மரணிக்கச் செய்கின்றான்(நூல் முஸ்லிம் 2888, மிஷ்காத் 5977)

♦ மேலும் உங்களில் இறந்தவர்களின் நல்ல அம்சங்களை எடுத்துக் கூறுங்கள் (நூல்கள் அபூதாவூத் 4900,திர்மிதீ 1019,மிஷ்காத் 1678)

♦ மேலும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மண்ணோடு மண்ணாகி மக்கிபோய்
இறந்திருந்தால்தானே மறைந்த நாள் என்று சொல்லமுடியும். ஆனால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் எம்மை விட்டு மறைந்து வாழும் கருணை நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் யதார்தத்தில் இறக்கவில்லை. நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது சொல்லப்படுகிற ஒவ்வொறு ஸலவாத்தையும் ஒரு மலக்கின் மூலம் எத்திவைக்கப்படுகின்றது. ஆகவே மரணித்த ஒருவருக்கு எவ்வாறு எத்திவைக்கப்படும்?

♦ இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள், அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
(அல்குர்ஆன் 2:154)

♦ அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் றப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.(அல்குர்ஆன் 3:169)

♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது.(நூல்கள் அபூதாவுத், நஸாயி, இப்னுமாஜா, தாரமி, பைஹகி, மிஷ்காத்)

♦ நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எம்மைவிட்டும் மறைந்தாலும் எங்களிலேதான் இருக்கிறார்கள்.'நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் உங்களிலேயே இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்'. 
(அல்குர்ஆன் 49:7)

ஆகவே மேற்படி இரண்டு காரியங்களில் எது இலகுவானது என்று கவனிக்கும் போது துக்கம் அனுஷ்டிப்பதை விட மகிழ்ச்சியைக் காட்டுவது தான் அதன் அடிப்படையில் மீதுலாத் நபி விழா கொன்டாடுவது பயன் தரத்தக்கதாகவும் இருக்கின்றது.

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

No comments:

Post a Comment