Popular Posts

Tuesday 6 December 2016

நபிகள்_நாயகம்_ﷺ_அன்னவர்கள_நாளை_நடக்க_இருப்பதை_முன்கூட்டியே_அறிந்து_கொள்வார்கலா

#நபிகள்_நாயகம்_ﷺ_அன்னவர்கள_நாளை_நடக்க_இருப்பதை_முன்கூட்டியே_அறிந்து_கொள்வார்கலா? _________________________________

மௌலித் & மீலாது நபி விழா குற்றச்சாட்டு - தொடர் (26) __________________________________

*♣ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாளை நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிவார்கள் என்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?*​

♦மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பவனாகவுமில்லை ஏனினும் தன் தூதர்களில் தான் நாடியவர்களை இதனை அறிவிக்க தேர்ந்தெடுக்கிறான். ​​அல்குர்ஆன் 3/179, மேலும் பார்க்க
அல்குர்ஆன் 4/ 113)

♦ இன்ஸானை (அல்லாஹ்) படைத்து அவனுக்கு பயானை கற்றுக் கொடுத்தான்' (அல்குர்ஆன் 55: 3,4) என்ற திரு இறைமறைவசனத்திற்கு, இன்ஸான் என்பது நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எனவும், 'பயானைக் கற்றுக் கொடுத்தான்' என்றால் நடந்தவை, நடப்பவற்றை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான். அன்னவர் முன்னோர், பின்னோர் பற்றி அறிபவர்களாக இருந்தனர் எனவும் தப்ஸீர் கலை மேதைகள் கூறுகின்றனர்.(நூல்கள்: தப்ஸீர் மஆலிமுத் தன்ஸீல் பாகம் 7, பக்கம் 1, தப்ஸீர் காஸின் பாகம் 7 பக்கம் 2, தப்ஸீர் ஸாவி பாகம் 4 பக்கம் 129, தப்ஸீர் ஜமல் பாகம் 4 பக்கம் 253)

♦ 'நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ் உங்களுக்கு கற்றுக் கொடுத்தான். உங்கள் மீது அல்லாஹ்வின் வருசை மகாத்தானதாக ஆகிவிட்டது' என்ற திருமறை வசனத்தின் கீழ்,சிருஷ்டிகளின் முடிவான் ஞானங்களும், நடந்தவை, நடப்பவை அனைத்து ஞானங்களும் கற்றுக் கொடுத்தான் என்கிறது தப்ஸீர்அராயிஸுல் பயான் (பாகம் 1, பக்கம்159)​

♦ அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பத்ருப் போரில் கலந்துகொண்டவர்களைப் பற்றி எங்களிடம் கூறலானார்கள்.அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ருப் போர் நடக்கக்கூடிய மைதானத்தில் நடந்து சென்று எங்களிடம் பத்ருப் போரில் எதிரிகள் மாண்டு கிடக்கவிருக்கும் இடங்களைக் இன்ஷா அல்லாஹ்! நாளைய தினம் இன்னார் கொல்லப்படும் இடம் இது... இன்ஷா அல்லாஹ்! நாளைய தினம் இன்னார் கொல்லப்படும் இடம் இது... என்று தாங்கள் விரரால் சுட்டிக் காட்டினார்கள். சத்திய (மார்க்க)த்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அனுப்பியவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் பிசகாமல் சரியாக அவர்கள் மாண்டு கிடந்தனர். (நூல் : முஸ்லிம் 5511, திர்மிதீ)

♦ ஹஸ்ரத் ருபய்யிஃ பின்த் முஅவ்வித் (ரலியல்லாஹு அன்ஹா) கூறினார்கள்:​எனக்கு திருமணம் நடந்த பின்னர், நபிகள்
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் என்னிடம்  
வந்தார்கள். எனக்கருகில் இப்போது நீங்கள் (ஹதீஸின் இரண்டாவது அறிவிப்பாளர்) அமர்ந்து இருப்பது போல் (அத்தகைய தூரத்தில்) என் விரிப்பின் மீது அமர்ந்தார்கள். அப்போது சில சிறுமிகள் பத்ர் போரில் ஸஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி கஞ்சிராக்களை (தஃப்) அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே இறை தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இதை விட்டு விட்டு நீ முன்பு சொல்லி கொண்டிருந்ததை சொல்” என்றார்கள். (நூல்கள் : புகாரி 5147, 3726 இப்னு மாஜா, அபூதாவூத், திர்மிதி) ​

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

No comments:

Post a Comment