Popular Posts

Tuesday 6 December 2016

நாயகமே_ﷺ_நிச்சயமாக_நான்_உங்களின்_இளிவான_சிரிய_அடிமையாவேன_என்று_சொல்லலாமா

#நாயகமே_ﷺ_நிச்சயமாக_நான்_உங்களின்_இளிவான_சிரிய_அடிமையாவேன_என்று_சொல்லலாமா?  _________________________________

மௌலித் & மீலாது நபி விழா குற்றச்சாட்டு - தொடர் (30) __________________________________

*♣ நாயகே யாரஸூலல்லாஹ் நிச்சயமாக நான் உங்களின் இளிவான சிரிய அடிமையாவேன் என்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?*

​அடிமை என்பது அதாவது நாம்
இறைவனுக்கு மட்டும்தானே அடிமை அப்படி இருக்க கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நாம் அடிமை என்று சொல்வது ஷிர்க் என்ற கேள்விக்குறிய பதில். அதாவது (ஹகீகத்) என்ற இலக்கியம் அடிப்படையில் உண்மையில் நாம் அல்லாஹூ தஆலாவுக்குதான் அடிமையாக இருக்கின்றோம். ஆனால் (மஜாஸ் என்ற இலக்கிய மரபின்படி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமை என்று சொல்லப்பட்டுள்ளது. காரணம் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களை வழிகாட்டலை எடுத்து நடப்பதால் எனவே இப்படி ஒரு செயலை அதற்குறியவரின் பால் சேர்க்காமல் அதற்கு காரணமாக இருந்தவரின் பால் சேர்ப்பது குர்ஆன், ஹதீஸ்களில், மேலும் நமது பேச்சு வழக்கிலும் எழுத்திலும் நிறைந்து காணப்படுகிறது.

​​உதாரணமாக: பசியைப் போக்குபவனும்
சுகத்தை தருபவனும் அல்லாஹ்தான் ஆனால் நமது பேச்சு வழக்கில் இன்ன உணவை சாப்பிட்டேன் பசி போய்விட்டது, டாக்டரிடம் சிகிச்சை எடுத்தேன் நோய் சுகமாகி விட்டது என்றுதான் கூறுகின்றோம். அல்லாஹ் என்று கூறுவதில்லை. அதே போன்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும் அடிமைகள் இருந்தார்கள், ஏன் நமது முதலாலியையும் கூட பொஸ் அதாவது எஜமான் என்றுதான் சொல்கிறோம், திருமணத்தின் போது வலியாக மனமகளின் தந்தை வலியாக வருவார் வலி என்றால் பொருப்பு தாரி நமது பொருப்பு தாரி இறைவன்தான் எனவே இதுவெல்லாம் மஜாஸ் என்ற இலக்கிய மரபின்படி குறிப்பிடப்பட்டுள்ளது உண்மையில் எதார்த்தத்தில் இறைவன்தான் எஜமான், என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.​

♦ “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன் மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக (அல்குர்ஆன் : 39:53) ​

♦ உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரு முறை அவர்களின் மகனாரும், இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். பேச்சினூடே ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பார்த்து உங்கள் தந்தை என் பாட்டனார் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அடிமைத்தானே என்று கூற இப்னு உமர் அவர்கள் வேதனையோடு தன் தந்தையிடம் இதை கூறிவிட்டார்கள்.

​​இதனைக்கேட்டதும் தன் மகனையும்
இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் கையைப்பிடித்து கூட்டிக்கொண்டு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ரவ்லாவின் முன் நின்று யா ரஸுலல்லாஹ்! என்னை தங்களுடைய அடிமை என்று தங்களின் அருமை பேரர் கூறிவிட்டார்கள். இது அவரும் சாட்சியாக இங்கு இருக்கிறார். தாங்கள் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் யா ரஸுலல்லாஹ்! தாங்கள் என்னை அடிமையாக ஏற்றுக்கொண்டு விட்டால் நான் ஈருலகிலும் மேன்மை அடைந்து விடுவேனே யா ரஸுலல்லாஹ்! என்று கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்ட தேம்பித் தேம்பி அழுந்துக்கொண்டிருந்தார்கள்.​சுவர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம்
பெற்ற இந்த அருமை ஸஹாபாவின் செய்கை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீதும் அவர்களின் சந்ததிகள் மீதும் காட்டப்படவேண்டிய அன்புக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

No comments:

Post a Comment